PDA

View Full Version : வித்தியாசமானவர்களின் சந்திப்பு....பென்ஸ்
03-01-2008, 02:06 PM
"பென்ஸ்... ஹோட்டல் ரிச்மண்ட் வந்திருங்க, நமக்காக அவர் காத்திருக்கார்" என்று தாமரை அலைபேசியில் அலற
"சரி, நான் கிளம்புறேன்.. நான் அங்க வாறதுக்கு வழி சொல்லுங்க..."
"ரிச்மண்ட்ரோட்டில்.... " என்று வழியை சொல்ல அதை மனதில் பதித்து கொண்டே, என்னுடைய இ-மெயில் டிராப்டில் இருந்த கடிதங்களை அவுட் பாக்ஸுக்கு அனுப்ப ஆரம்பித்தேன்.

எலக்டிரானிக்ஸ் சிட்டியில் இருந்து ரிச்மண்ட் ரோடு செல்ல கண்டிப்பாக 90 நிமிடங்கள் எடுக்கும் என்பதால் 7 மணி சந்திப்புக்கு 5:30க்கே கிளம்பியாச்சுபோகும் வழியில் வீட்டில் நிறுத்து அலுவலக நுழைவு அட்டை மற்றும் அலுவலக சம்பந்த பட்ட விசயங்களை அவசர அவசரமாக உதறிவிட்டு மதிக்கு போன் போட
நான் ஹோட்டலில் தான் இருக்கிறேன், அவருடன் பேசி கொண்டிருக்கிறேன், சீக்கிரம் வாங்க..என்று அவசரபடுத்தினார்
மன்ற மக்கள் பலர் அவரை சந்திருந்திருந்தாலும், அவரை பற்றி கூறியிருந்தாலும் எனக்கு அவர் எப்படி இருப்பார் ?என்ற கேள்வி குடைந்து கொண்டிருந்தது உண்மைதான்

யார் இவர்..!!???
மன்றத்தின் முன்னோடியான இவர் ...!!!
சுமார் 3000 பதிவுகள் வரை தன் கவி திறனை மூடி மறைத்தவர்...!!!
மன்ற ஆலோசகர்...
மாணிக்க மனிதர்...!!!!
அனுபவ கடல் ஆரென் தான்....

ஹோட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு மதியை மீண்டும் அழைக்க
நாங்கள் வரவேற்பறையில் இருக்கிறோம்என்று அமைதியாக அலறினார்.
வரவேற்பறையில் பவடிவில் சோபாக்கள் இடபட்டிருக்க ஒரு பக்கத்தில் தாமரை , அடுத்தவர் எளும்பி ஆரென்என்று என்னிடம் அறிமுக படுத்தி கொண்டார்... நான் கொடுத்து வைத்திருந்த உருவத்திலிருந்து சிறு வித்தியாசம் இருந்தது.. இருந்தாலும் பழைய உருவத்தை அழித்துவிட்டு புது உருவத்தை மனதில் உடனடியாக சிரமபட்டுதினித்து கொண்டேன். சோபாவின் அடுத்த பக்கம் மதி உக்கார்ந்து கொண்டு ஒரு போடாங்கோசிரிப்பை கொடுத்து இருந்து கொண்டிருந்தார்...
டேய், பிறந்த நாள் வாழ்த்துகள்...டிரீட் கொடுத்திரு..
மதி தொண்டையில் எதோ முள் குத்தியது போல் நீர் விழுங்கி தலையை மட்டும் ஆட்டினார்... அவர் சரி சொல்லுகிறாரா.. இல்லை முடியாது என்று சொல்லுகிறாரா என்று புரியாமலே சோபாவின் அடுத்த பக்கத்தை பார்த்தேன்...

ஒரு இன்ப அதிர்சி இருந்தது....

யவனிகா
03-01-2008, 02:13 PM
அடடா...ஆரம்பிச்சிட்டாங்க...இதைத் தான் ரொம்ப நாளா எதிர் பார்த்துக் காத்திருந்தோம்...ஆரென் அண்ணாவா அந்த வி.ஐ.பி.?3000 பதிவு வரைக்கும் அவர் கவிதை எழுதவே இல்லையா?மதி ட்ரீட் குடுத்தாரா....தொடருங்கள்....ஆவலாய் இருக்கிறோம்.

மதி
03-01-2008, 02:39 PM
என்னத்த பாத்தீங்க..? அத சொல்லுங்க...மொதல்ல.

அறிஞர்
03-01-2008, 02:50 PM
அருமை பென்ஸ்... ஆரெனை சந்திப்பவர்களை எண்ணிக்கை அதிகரிக்கிறது... வாழ்த்துக்கள்.....

இன்னும் என்ன நடந்தது.. தொடர்ந்து கொடுங்கள்.

மலர்
03-01-2008, 03:00 PM
கடைசியில மதி டீரீட்டுக்கு சரி சொன்னாரா.. இல்லையா.....???
பென்ஸ்... னா சோபாவின் அடுத்த பக்கத்துல அப்பிடி யாரை தான் பார்த்தீங்க....
ஏன் இப்பிடி சன்பென்ஸா வைக்கிறீங்க..... :icon_rollout:

பூமகள்
03-01-2008, 03:05 PM
அரென் அண்ணாவின் வருகை..!
பிறந்த நாள் டிரீட் மர்மம்..!
இப்படி சந்தோச திகில்களை அள்ளித் தெளித்து பின்பு ஒரு சஸ்பென்ஸ் வைத்து ஓடிட்டீங்களே பென்ஸ் அண்ணா???:icon_ush::icon_ush:
சீக்கிரமா சொல்லுங்க... நீங்க பார்த்தது யார்?? :rolleyes:
எனக்கு புரிந்த மட்டில் அது அனிரூத் ஆகத்தான் இருக்கனும்..!:lachen001::lachen001:

ஏன்னா.. ஏன்னா.. நீங்க அனிரூத் பார்த்து மட்டும் தான் இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..!!:rolleyes: ;) :)

மதி
03-01-2008, 03:09 PM
அரென் அண்ணாவின் வருகை..!
பிறந்த நாள் டிரீட் மர்மம்..!
இப்படி சந்தோச திகில்களை அள்ளித் தெளித்து பின்பு ஒரு சஸ்பென்ஸ் வைத்து ஓடிட்டீங்களே பென்ஸ் அண்ணா???:icon_ush::icon_ush:
சீக்கிரமா சொல்லுங்க... நீங்க பார்த்தது யார்?? :rolleyes:
எனக்கு புரிந்த மட்டில் அது அனிரூத் ஆகத்தான் இருக்கனும்..!:lachen001::lachen001:

ஏன்னா.. ஏன்னா.. நீங்க அனிரூத் பார்த்து மட்டும் தான் இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..!!:rolleyes: ;) :)


அன்னிக்கு அனிருத் வரலியே....
முடிஞ்சா கண்டுபுடிங்க பாக்கலாம்... :D:D:D

மலர்
03-01-2008, 03:10 PM
அன்னிக்கு அனிருத் வரலியே....
முடிஞ்சா கண்டுபுடிங்க பாக்கலாம்... :D:D:D

அப்போ தாமரை அண்ணாவா,,,,,

மதி
03-01-2008, 03:11 PM
அவரை எதிர்பார்த்து தானே பென்ஸ் வந்தார்...

மலர்
03-01-2008, 03:15 PM
சோபாவின் அடுத்த பக்கத்தை பார்த்தேன்...
ஒரு இன்ப அதிர்சி இருந்தது.... ஏன் சோபா காலியா இருந்திச்சா.... :rolleyes::rolleyes:

மதி
03-01-2008, 03:16 PM
ஏன் சோபா காலியா இருந்திச்சா.... :rolleyes::rolleyes:
:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:
பென்ஸ் சொல்லுவார்...

பென்ஸ்
03-01-2008, 03:33 PM
தாமரை, ஆரெனுக்கு எதிராக இரண்டு அழகான சீன வம்சவழி பெண்கள் இருந்தார்கள்.... என்ன ஆரென் அலுவலக நண்பர்களையும் மன்றத்தில் அழைத்து வருகிறாரா???? நம்ம சேரனை விட இவர் அதிக சீனர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்திடுவார் போல இருக்கே, என்று மனதிற்குள் நினைத்து கொண்டாலும் எங்கோ இருந்த இரு நாற்காலியை எடுத்து மதிக்கு எதிராக போட்டுகொண்டு இருந்தேன்....
ஒவ்வொருவரும் தன்னுடைய பணியை பற்றி சொல்ல தாமரை வழக்கம் போல் தன் டெல் அலுவலகத்தை பற்றி சொல்ல
ஆரென் தான் வாங்கிய டெல் கணினியின் பிரச்சினையால் பட்ட கஸ்டத்தின் மனசிரமத்தை முழுவதும் தாமரை மீது கொட்டி தீர்த்தார்....
ஹீ ஹீ.. நான் லேப்டாப் டிவிசன் கிடையாது.. நான் சர்வர் மட்டும் தான்என்று வழக்கம் போல் தாமரை எஸ்கேப் ஆக முயற்சிக்க
சரி, அப்போ எனக்கு ஒரு காபி மட்டும் கொடுங்கஎன்று டைமிங்காய் கடிக்க
இந்த சின்ன ஜோக் கூட உடனடியாக புரியாமல் நான் முளிக்க....
மற்றவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள்....
இதன் இடையில் ஒரு சீன இளைஞன் வந்து அந்த சீன பெண்களிடம் பேச அவர்கள் இருவரும் இடத்தை காலி செய்தார்கள்.. என் யூகம் தப்பாக நான் அதையும் யாரிடமும் கேட்க்காமல் அப்படியே அடக்கி வாசித்துவிட்டேன்...
பேச்சு மெல்ல மன்றத்தை பற்றி செல்ல ஆரம்பிக்க, அட போங்கையா எனக்கு பசிக்குதுஎன்று மனதிற்க்குள் திட்ட ஆரம்பித்தேன்....
தாமரைதான் என் மனசாட்சி ஆச்சே...
சாப்பிட போகலாமாஎன்று கேட்க்க சரி என்று உள்ளே புகுந்தோம்...

சர்வர் வந்து மெளுகை பற்ற வைத்து குடிக்க வேண்டியவற்றை பற்றி கேட்க நான் மட்டும் பருப்பு மாதிரி பூச்சிகொல்லி மருந்து சொல்ல மற்றவர்கள் பழரசம் சொல்ல .. பேச்சு மீண்டும் மன்றம் பற்றியும், மன்ற நண்பர்கள் பற்றியும் செல்ல ஆரம்பித்தது. எலோரும் வந்த கதை சொல்ல ஆரம்பித்தார்கள்... தாமரையின் தமிழும் நானும்..பற்றி சொல்லி முடிக்க , ஆரென் தன் தமிழ் எதனால் என்று சொல்ல சொல்ல எங்கள் அனைவரின் புருவமும் ஆச்சரியத்தில் உயர்ந்தது....

அன்புரசிகன்
03-01-2008, 04:20 PM
ம்.... பல விசயங்கள் வரூது.... வரட்டும் வரட்டும்.

மலர்
03-01-2008, 04:22 PM
ஹீ ஹீ.. நான் லேப்டாப் டிவிசன் கிடையாது.. நான் சர்வர் மட்டும் தான்என்று வழக்கம் போல் தாமரை எஸ்கேப் ஆக முயற்சிக்க
சரி, அப்போ எனக்கு ஒரு காபி மட்டும் கொடுங்கஎன்று டைமிங்காய் கடிக்க ஹீ....ஹீ....
நல்ல டைமிங்கான கடி..
பென்ஸ்..னா.. இந்த கடியை கடிச்சது யாரு...................????
சர்வர் வந்து மெளுகை பற்ற வைத்து குடிக்க வேண்டியவற்றை பற்றி கேட்க நான் மட்டும் பருப்பு மாதிரி பூச்சிகொல்லி மருந்து சொல்ல மற்றவர்கள் பழரசம் சொல்ல ..அதென்ன நீங்க பூச்சிகொல்லி மருந்து..
அப்படின்னா..... :confused::confused:

யவனிகா
03-01-2008, 04:38 PM
FONT=Latha]அதென்ன நீங்க பூச்சிகொல்லி மருந்து..
அப்படின்னா..... :confused::confused:

இது தெரியாதா...அவர் வயித்தில இருக்கிற குட்டிப் பூச்சியெல்லாம் பருப்பு சாப்பிட்டா பரலோகம் போயிடுமாம்....பூச்சிய வயித்தில வெச்சிருக்கிற பூச்சிக்கு ஏதும் ஆகாதா?

அன்புரசிகன்
03-01-2008, 04:42 PM
இது தெரியாதா...அவர் வயித்தில இருக்கிற குட்டிப் பூச்சியெல்லாம் பருப்பு சாப்பிட்டா பரலோகம் போயிடுமாம்....பூச்சிய வயித்தில வெச்சிருக்கிற பூச்சிக்கு ஏதும் ஆகாதா?

இப்படி சொன்னா மலர் வந்து பரலோகம் என்றால் என்ன? பூச்சிய வைத்தில வைச்சிருக்கிற பூச்சி என்றால் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்கும். வேணுமுன்னா பாருங்க. இங்கு வெட்க்கப்பட்டாலும் தனிமடலிலும் அனுப்பும். பாருங்க.... :D

மலருக்கு புரியுற மாதிரி உங்க பதில போடுங்க அக்கோய்... :icon_b:

யவனிகா
03-01-2008, 04:47 PM
அடக் கொடுமையே...அப்படியா மலரு?

மலர்
03-01-2008, 04:56 PM
அடக் கொடுமையே...அப்படியா மலரு?இப்பிடி தான்க்கா....
அன்பு கொஞ்சநாளா..
திரி திரியா போட்டுட்டு திரியுதாரு...

மன்மதன்
03-01-2008, 04:57 PM
நான் சர்வர் மட்டும் தான்என்று வழக்கம் போல் தாமரை எஸ்கேப் ஆக முயற்சிக்க
சரி, அப்போ எனக்கு ஒரு காபி மட்டும் கொடுங்கஎன்று டைமிங்காய் கடிக்க

அதானே.. ஆரென் அவர்களுக்கு கடிக்க சொல்லியா கொடுக்கணும்.. :D:D

மன்மதன்
03-01-2008, 04:59 PM
நான் மட்டும் பருப்பு மாதிரி பூச்சிகொல்லி மருந்து சொல்ல மற்றவர்கள் பழரசம் சொல்ல .. பேச்சு மீண்டும் மன்றம் பற்றியும்,.

ம்ம்ம்.. :D பழரசம் , பருப்பு காம்பினேஷன் புதுசா இருக்கே..:rolleyes::D

மனோஜ்
03-01-2008, 05:11 PM
அட பெப்சி தானெ பென்ஸ் அண்ணா சொன்னது
சரி தொடருங்கள்

ஓவியன்
03-01-2008, 05:39 PM
அருமை பென்ஸ்... ஆரெனை சந்திப்பவர்களை எண்ணிக்கை அதிகரிக்கிறது... வாழ்த்துக்கள்......

அதிகரிக்கட்டும், அதிகரிக்கட்டும் - வாழ்த்துக்கள்...!! :)

தங்கவேல்
03-01-2008, 06:00 PM
ஆரென் .. தாமரை , மதி .... வாழ்த்துக்கள்..

இளசு
03-01-2008, 11:55 PM
இனிய பொறாமை கிளம்பியது - இரு சீனப்பெண்களும் கிளம்பியதால் கொஞ்சம் அடங்கியது.

அன்பின் ஆரெனை முதலில் சந்திக்க இருந்தது நான்தான்... நழுவிய வாய்ப்பு மறுபடி வரும்வரை காத்திருக்கிறேன்..

அமைதியான அலறல், சர்வர்-காப்பி - பொருத்தமான நறுக்கடிகளுடன்
கொறிக்கச் சுவையான பதிவு..

இனிய பென்ஸிடம் இருந்து புதுப்பதிவு வாங்க
இப்படி நேரா பெங்களூரு போனாத்தான் உண்டு போல...

தாமரை
04-01-2008, 01:02 AM
இப்படி சொன்னா மலர் வந்து பரலோகம் என்றால் என்ன? பூச்சிய வைத்தில வைச்சிருக்கிற பூச்சி என்றால் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்கும். வேணுமுன்னா பாருங்க. இங்கு வெட்க்கப்பட்டாலும் தனிமடலிலும் அனுப்பும். பாருங்க.... :D

மலருக்கு புரியுற மாதிரி உங்க பதில போடுங்க அக்கோய்... :icon_b:

ஏதோ இவருக்குப் புரிஞ்சிட்ட மாதிரி,, பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பதை நிறுத்தும் ஓய்.. கூச்சப்படாம தைரியமா கேளுங்க.:lachen001:

ஏன் இப்படி

பூமகள்
04-01-2008, 03:28 AM
தாமரை, ஆரெனுக்கு எதிராக இரண்டு அழகான சீன வம்சவழி பெண்கள் இருந்தார்கள்...
நினைச்சேன்...:p ஜஸ்டு மிஸ்..! :rolleyes::icon_p:
இப்படி எல்லாம் யோசிப்பீங்கன்னு எனக்கு முன்னமே தெரியாம போச்சே பென்ஸ் அண்ணா...! :icon_rollout:

சர்வர் வந்து மெளுகை பற்ற வைத்து குடிக்க வேண்டியவற்றை பற்றி கேட்க நான் மட்டும் பருப்பு மாதிரி பூச்சிகொல்லி மருந்து சொல்ல மற்றவர்கள்பழரசம்சொல்ல ..பூச்சிகொல்லி மருந்து - முக்காவாசி திரவங்கள் பூச்சிகொல்லி போல விஷமாக இருக்க,
நீங்க குறிப்பா எதைச் சொல்றீங்கன்னு புரியலையே..!:confused:

சரி... ஜில்லா...?? ஹாட்டா?? சொல்லுங்க.. புரிஞ்சிக்கிறோம்..!! :rolleyes::icon_ush::lachen001:

aren
04-01-2008, 03:41 AM
நன்றி பென்ஸ். என்ன இது யாருமே எழுத ஆரம்பிக்கவில்லை, ஒவ்வொரு தடவையும் போல இந்த தடவையும் நாம் தான் ஆரம்பிக்கவேண்டுமா என்று நினைத்தேன். பென்ஸ் ஆரம்பித்துவிட்டார்.

புல்லட் புரூஃப் என்று கேள்விப்பட்டிருக்கோம், புல்லட்டிலேயே வலம் வருபவம் நம்ம பென்ஸ். அவருக்குத் தோதாக அவருடைய வண்டியும்.

aren
04-01-2008, 03:42 AM
அந்த சீனப்பெண் எங்களுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு பென்ஸால் ஒன்றும் பார்க்கமுடியாமல், அவருடைய வருத்தத்தை அவர் முகத்தில் பார்த்திருக்கவேண்டுமே?

அதனால்தான் எங்களை சீக்கிரமே சாப்பிடப்போகலாமா என்று எழுப்பிவிட்டார்.

அமரன்
04-01-2008, 09:43 AM
என்னமோ தெரியவில்லை.. மன்றத்து உறவுகளின் சந்திப்பை படிக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. அதிலும் சில சந்திப்புகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் சந்திப்பும்.... இப்படி யாராச்சும் பென்சண்ணாவை சந்தித்தால்த்தான் உண்டு அவர்தர்தம் பாணித்தமிழ்.


ஏதோ இவருக்குப் புரிஞ்சிட்ட மாதிரி,, பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பதை நிறுத்தும் ஓய்.. கூச்சப்படாம தைரியமா கேளுங்க.:lachen001:

ஏன் இப்படி

இதுக்கெல்லாம் அவர் கூச்சப்படுவது இல்லீங்கோ

நுரையீரல்
04-01-2008, 11:55 AM
பேச்சு மீண்டும் மன்றம் பற்றியும், மன்ற நண்பர்கள் பற்றியும் செல்ல ஆரம்பித்தது. எலோரும் வந்த கதை சொல்ல ஆரம்பித்தார்கள்... தாமரையின் தமிழும் நானும்..பற்றி சொல்லி முடிக்க , ஆரென் தன் தமிழ் எதனால் என்று சொல்ல சொல்ல எங்கள் அனைவரின் புருவமும் ஆச்சரியத்தில் உயர்ந்தது....
புருவம் gaurd எதுவாவது போட்டுத்தான் உங்ககிட்ட பேசணும் போல, ஏன் கதை சொல்லும்போது கேட்குறவங்க புருவத்தை பிச்சு வைப்பீங்களா ஆரென் அண்ணா.

ஏன் ஆரென் அண்ணா இப்படி செய்றீங்க... இனிமேல் நான் எப்படி உங்களை நம்பி பார்க்க வர்றது? இப்படியெல்லாம் உங்களை தப்பா நினைக்கிற அளவுக்கு பென்ஸ் எழுதுறாரு பாருங்க...

அடுத்த பகுதியை தொடரும்போதாவது, சஸ் பென்ஸ் வைக்காம எழுதச் சொல்லுங்க..

aren
05-01-2008, 04:04 PM
நான் ஒன்னுமே சொல்லவில்லை ராஜா. பென்ஸ்தான் ஏதோ சொல்ல நினைக்கிறார்.

மயூ
05-01-2008, 05:01 PM
எங்கே எங்கே??? மிகுதி எங்கே?

நுரையீரல்
06-01-2008, 04:12 AM
நான் ஒன்னுமே சொல்லவில்லை ராஜா. பென்ஸ்தான் ஏதோ சொல்ல நினைக்கிறார்.
நீங்க ஒன்னும் செய்யலையா? அப்ப அவராத்தான் எல்லாம் சொல்றாரா? பென்ஸ் போதும் உங்க சஸ் பென்ஸ் (இரண்டு நாளாவா சஸ்பென்ஸ் வைப்பாங்க)

ஆதவா
06-01-2008, 04:52 AM
ஆரென் அண்ணாவோடு சந்திப்பா... பலே! அடிக்கடி கடியும் அனுபவ வடியும் அவர் சந்திப்பை என்றென்றும் மறக்க இயலாது.. இம்முறை பெங்களூரிலா? பெங்களூருவில் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்கின்றனவே!!

ஏம்பா! சென்னையில ஏதாவது கூட்டம் போடறீங்களா?

சிவா.ஜி
06-01-2008, 05:40 AM
ஆரென் என்ன விளக்கினார் உங்க புருவம் உச்சிக்குப் போனதுன்னு சீக்க்ரம் சொல்லுங்க பென்ஸ்.இந்த ராஜா வேற அடிகடி உங்க பேரை பச்சை எழுத்துல போட்டு சஸ் பென்ஸ் உடைக்கச் சொல்லுதாரு.

நுரையீரல்
06-01-2008, 06:29 AM
ஆரென் என்ன விளக்கினார் உங்க புருவம் உச்சிக்குப் போனதுன்னு சீக்க்ரம் சொல்லுங்க பென்ஸ்.இந்த ராஜா வேற அடிகடி உங்க பேரை பச்சை எழுத்துல போட்டு சஸ் பென்ஸ் உடைக்கச் சொல்லுதாரு.
அதென்ன அடிகடி என்று எழுதியிருக்கீங்க. வேணும்னு தானே க் போடலை, எனக்கு தெரியும் யாரையோ உள்குத்து குத்துறீங்கனு...

எங்க அண்ணனை எதாவது சொன்னீங்க.. அப்புறம் குகைக்குள்ள வச்சு பூட்டிடுவோம். சரிங்களாண்ணா... அண்ணா என்ன நம்புங்ண்ணா... சீக்கிரம் என்னை உங்க மானசீக சிஷ்யனா ஏத்துக்கோங்ணா...

சூரியன்
06-01-2008, 03:22 PM
நல்ல சந்திப்பு போல இருக்கு.

பென்ஸ்
08-01-2008, 11:43 AM
ஹி ஹி கதை கேட்ட எல்லாருக்கும் நன்ரி... சீக்கிரமா மீதி நிகழ்வுகளையும் சொல்லி முடிக்கிறேன்...

mania
09-01-2008, 04:58 AM
அட நமக்கு தெரியாம இப்படியெல்லாம் நடக்குதா.....???? என்ன ஆரென் சத்தமே இல்லாமல் இப்படி வந்திட்டு போயிருக்கீங்க....!!!!!பழிக்கு பழியா...??? வாங்க கவனிச்சிக்கிறேன்....:D:D .....உங்க சைட் விவரங்களையெல்லாம்....???? எப்போ....???ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சென்னை வந்தீர்களா....??
அன்புடன்
மணியா...:D:D

பென்ஸ்
09-01-2008, 05:59 AM
அட நமக்கு தெரியாம இப்படியெல்லாம் நடக்குதா.....???? என்ன ஆரென் சத்தமே இல்லாமல் இப்படி வந்திட்டு போயிருக்கீங்க....!!!!!பழிக்கு பழியா...??? வாங்க கவனிச்சிக்கிறேன்....:D:D .....உங்க சைட் விவரங்களையெல்லாம்....???? எப்போ....???ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சென்னை வந்தீர்களா....??
அன்புடன்
மணியா...:D:D
தலை..

சந்திப்பு..
மன்றம்..
என்று எது வந்தாலும் உங்களை தொந்தரவு செய்யாமலா...

அன்று ஆரென் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பார்த்தார்
பதில் இல்லை... :confused:
அழைத்து பார்த்தார் பதில் இல்லை... :eek:

நீங்க ரொம்...ம்ப பிசியோ ..!!???:D:D

தாமரை
09-01-2008, 06:49 AM
தலை..

சந்திப்பு..
மன்றம்..
என்று எது வந்தாலும் உங்களை தொந்தரவு செய்யாமலா...

அன்று ஆரென் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பார்த்தார்
பதில் இல்லை... :confused:
அழைத்து பார்த்தார் பதில் இல்லை... :eek:

நீங்க ரொம்...ம்ப பிசியோ ..!!???:D:D

பிரதீப்போட பேசினமே மறந்திட்டீரோ? :icon_rollout:

மதி
09-01-2008, 07:51 AM
பிரதீப் மட்டுமா..?
இன்னும் இருவரோடயும் பேசினோமே!