PDA

View Full Version : வலி எழுதிப் போனாய்!!சிவா.ஜி
03-01-2008, 10:11 AM
முன் நேரக் காதலில் தினம்
முன்னூறு முறை பேசினோம்
முக்கால் சம்பளம் முழுதுமாய்
கதைத்தே கரைத்தோம்!

இரவா பகலா
இருவரும் அறியோம்
ஒருவர் மாற்றி ஒருவர்
ஓயாமல் பேசினோம்!

நிகழ்ந்ததென்ன
என்னைப் பிரிய...
என்றைக்குமாய்
எங்கோ மறைய......

குறும் செய்தியில்-உறவு
அறும் செய்தி சொன்னாய்
ஒலியில்லா வரிகளில்
வலி எழுதிப் போனாய்!

முப்பதுகாசு செலவில்
முன்காதல் மறுத்தாய்
முதல் முத்தம்,முதல் ஸ்பரிஸம்
முழுவதையும் மறந்தாய்!

செல் அழைப்பு
செல்லா இடத்துக்கு
சொல்லாமல் போனாய்
செல்லும்போது ஏனெனை
கொல்லாமல் போனாய்.....

அலைபேசியில் இன்று
அலையில்லை
களை போன மனதிலோ
நிலையில்லை!

ஆதி
03-01-2008, 10:21 AM
மீண்டும் மீண்டும்
படித்துப்பார்த்தேன்
முதல் முறை வாசித்ததைவிட
மறுமுறை வாசிக்கையில்
கவிதையின் கனம்
சற்று கூடுகிறது..

அர்ப்புதம் சிவா.ஜி
அவர்களே..

செல் அழைப்பு
செல்லா இடத்துக்கு
சொல்லாமல் போனாய்
செல்லும்போது ஏனெனை
கொல்லாமல் போனாய்.....

இந்த வரிகள்..
கவிதையின் கனத்தை இன்னும்
அதிக்கப்படுத்திவிடுகிறது..

இன்னொருமுறைப் படிக்க
தூண்டும் கவிதை இது..

காதலின் ஈரம்
வற்றாதக் கவிதை..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
03-01-2008, 10:25 AM
ஆழ்ந்த பின்னூட்டம் ஆதி.அனுபவித்து எழுதிய வரிகள் ஒரு அழகுணர் கவிஞனால் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படுவதே எத்தனை சந்தோஷம்.மனம் நிறைந்த நன்றி ஆதி.

மனோஜ்
03-01-2008, 10:25 AM
செல்லிர்க்கு இருக்கும் வலிமையை விட சொல்லிற்கு வலிமை அதிகம் அதனால் தான் இந்நிலை
அழகாக எழதி உள்ளீர்கள் சிவா வாழ்த்துக்கள்

சிவா.ஜி
03-01-2008, 10:26 AM
நன்றி மனோஜ்.நீங்களும் சந்தத்தில் கலக்குறீங்களே....சூப்பர்.

யவனிகா
03-01-2008, 11:04 AM
முப்பதுகாசு செலவில்
முன்காதல் மறுத்தாய்
முதல் முத்தம்,முதல் ஸ்பரிஸம்
முழுவதையும் மறந்தாய்!

செல் அழைப்பு
செல்லா இடத்துக்கு
சொல்லாமல் போனாய்
செல்லும்போது ஏனெனை
கொல்லாமல் போனாய்.....


சான்ஸே இல்லை அண்ணா...சூப்பர்க்கு மேல வார்த்தை இருக்கா?இருந்தா போட்டு நிரப்பிக்கோங்க...ஆனா எனக்குத் தெரிஞ்சு அண்ணி ஆயிரக்கணக்கில செலவு பண்ணி போன் செய்யறாங்க...இன்னைக்கு பால் மேக்க பொங்கிடுச்சு...பேப்பர் காரன் லேட்டு..தண்ணி ஒரு மணி நேரம் அதிகமா விட்டான்...எல்லாத்தையும் தினப்படி கணக்கு ஒப்பிக்கிறாங்க.....
மஹூம் என்ன நடக்குது உலகத்தில? அப்படின்னு கேட்டா...என்னம்மா...கற்பனைல ஒரு கவித எழுதக் கூடாதான்னு கேப்பீங்க சரியா...

ஆனா கற்பனைக் கவிதை இவ்வளவு டச்சிங்கா வருமா?எப்பவோ அனுபவிச்சத இப்ப கொட்டறீங்க போல...அண்ணி கிட்ட போட்டுத் தரமாட்டேன்....எனக்கு பயந்திட்டு உங்க கலக்கல் காதல் கவிதைகளை நிறுத்திடாதீங்க அண்ணா....

உங்க கவிதை படிச்சதும் எனக்கு ஒரு பாடல் ஞாபகம் வந்தது...."என் வீட்டில் இரவு...அங்கே இரவா...இல்லே பகலா....எனக்கும் தயக்கம்....?" மம்முட்டி, பானுப்பிரியாவின் நடிப்பில் அசத்தலான பாடல்....

நல்ல கவிதை அண்ணா...எளிமையும், எதார்த்தமும்,உணர்ச்சிகளும் கலந்த கவிதை நடை உங்களுடையது....வாழ்த்துக்கள்.

அமரன்
03-01-2008, 12:31 PM
கொஞ்சும் சந்தங்களைக் கவிதை சிந்த, சந்தங்களோ சுகத்தையும் சோகத்தையும் சிந்துகின்றன..

இரண்டே வார்த்தையை வைத்து இரண்டு மணி நேரம் பேசுவார்கள். அலை அலையாய் இதயங்கள் பேசுகையில் வார்த்தைகளுக்கு என்ன வேலை என்பார்கள்.. கேட்கையிலும் புன்னகை மலரும்.. உணர்கையிலும் புன்னகை மலரும்..

காதல்கடலில் முக்கி முகிழ்ந்து முத்தெடுத்தவன்மேல் யார் கண்பட்டதோ, பிரிவுச்சுழலில் சிக்குண்டான். இருமணிநேரங்கள் காட்சியில் சொல்வதில் தோற்றுபோகும் பலருக்கு மத்தியில், தோல்வியான காதல் கதையை அழகாக, தெளிவாக கவிதையில் சொல்லி வென்று விட்டார் கவிஞர்..:icon_b:

காதலனையும் செல்லையும்
தூர வீசுபவர்களுக்கு
காதலிருக்கும் செல்களை
வீச முடிவதில்லை..

சும்மா ஒன்று..

அலைபேசியில் இன்று
அலையில்லை
களை போன மனதிலோ
நிலையில்லை!

செல்லின் பில்லை செட்டில் பண்ணுங்க.:)

பாரதி
03-01-2008, 04:17 PM
உடனிருந்து பேசாமல் இருந்ததைப்பற்றி பக்கம்பக்கமாயும், மணிக்கணக்கில் பேசியது குறித்து குறள் வடிவிலும் எழுத வைக்கும் சாத்தியம் அந்த ஒன்றிற்கே உண்டு. நல்ல நடை சிவா. வாழ்த்துக்கள்.

பூமகள்
03-01-2008, 05:30 PM
என்ன அலைபேசியில் உறவு முறிவா??
ஆச்சரியம் ஆனாலும், இன்று நடப்பது தான் என்று ஒரு புறம்.. விஞ்ஞானம் என்னைப் பார்த்து சிரிக்கிறது.

அலைபேசியில் இன்று
அலையில்லை
களை போன மனதிலோ
நிலையில்லை!
இந்த வரிகள் முதல் எல்லா வரிகளும் அருமை சிவா அண்ணா.
செதுக்கிட்டீங்க..!!

கலக்கல் கவிதை.
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். :)

ஷீ-நிசி
03-01-2008, 06:26 PM
குறும் செய்தியில்-உறவு
அறும் செய்தி சொன்னாய்
ஒலியில்லா வரிகளில்
வலி எழுதிப் போனாய்!

குறுஞ்செய்தியில் அருஞ்செய்திகள் பல சொன்னவள்தான்..
இன்று நெஞ்சம் அறுஞ்செய்திகளை சொல்லிவிட்டாள்!

ரொம்ப நல்லாருக்கு சிவா....

ரொம்ப ஆச்சரியபடவைக்கறீங்க..

வன்முறை நன்முறை.. குறுஞ்செய்தி, நெஞ்சம் அறும் செய்தி..
ரொம்ப வித்தியாசமான வார்த்தைகள்.. வாழ்த்துக்கள்!

செல்வா
03-01-2008, 08:19 PM
ஓகோ..... கூகிள் சாட்டுல... மாத்தி கூப்பிட்டப்போ எந்தப் பதிலும் வராம இருக்கும் போதே... நெனச்சன் என்னமோ ஆயிடுச்சு அண்ணாக்குண்ணு..... ஆனா இந்தளவுக்கு ஆகும்ணு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

ம்.......... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது
குறுஞ்செய்தி சுட்ட வடு
என்று சொல்லவைத்து விட்டார் சிவா அண்ணா.

ம்... நடந்து போனத நெனச்சு என்ன பண்ணப் போறோம் அண்ணா? இப்படி எல்லாம் கன்னா பின்னாண்ணு யோசிப்பீங்கண்ணு தான் கிளம்பி ஜித்தா வாங்கண்ணு சொன்னா கேக்க மாட்டிங்குறீங்க... சரி சரி மன்றத்துக்கு அருமையான ஒரு கவிதை கெடச்சதால சும்மா விடுறன்.

மிக அருமை அண்ணா... அதும் ஒலியில்லா வரிகளில் வலிஎழுதிப் போனாய்....... ஹம்.............. என்ன சொல்ல நெனச்சு நெனச்சு நம்ம மனசுதான் வலிக்குது......

சிவா.ஜி
04-01-2008, 04:31 AM
நல்ல கவிதை அண்ணா...எளிமையும், எதார்த்தமும்,உணர்ச்சிகளும் கலந்த கவிதை நடை உங்களுடையது....வாழ்த்துக்கள்.
இது அனுபவத்தில் உதித்த கவிதை இல்லம்மா....அனுபவிச்சா அந்த வலி எப்படி வெளிப்படும்னு ஒரு கவிஞனா கற்பனை பண்ணிப்பார்த்ததால் வந்த வரிகள். பாராட்டுக்கு நன்றி தங்கையே.

சிவா.ஜி
04-01-2008, 04:33 AM
கொஞ்சும் சந்தங்களைக் கவிதை சிந்த, சந்தங்களோ சுகத்தையும் சோகத்தையும் சிந்துகின்றன..


காதலனையும் செல்லையும்
தூர வீசுபவர்களுக்கு
காதலிருக்கும் செல்களை
வீச முடிவதில்லை..

சும்மா ஒன்று..

அலைபேசியில் இன்று
அலையில்லை
களை போன மனதிலோ
நிலையில்லை!

செல்லின் பில்லை செட்டில் பண்ணுங்க.http://www.tamilmantram.com:80/vb/
ஆஹா அருமை அமரன்.காதல் செல்களை தூர வீச முயன்றாலும் அது செல்லாமல் காதல் சொல்லிக்கொண்டேதானிருக்கும்.வீரியமான வைரஸ்.

செல்லின் பில்லை கம்பெனியே செட்டில் பண்ணிக்குமில்ல..ஹி...ஹி..

சிவா.ஜி
04-01-2008, 04:34 AM
உடனிருந்து பேசாமல் இருந்ததைப்பற்றி பக்கம்பக்கமாயும், மணிக்கணக்கில் பேசியது குறித்து குறள் வடிவிலும் எழுத வைக்கும் சாத்தியம் அந்த ஒன்றிற்கே உண்டு. நல்ல நடை சிவா. வாழ்த்துக்கள்.

ஆம்..அந்த ஒன்றிற்கு அத்தனை சக்தி இருக்கிறது பாரதி.மிக்க நன்றி.

சிவா.ஜி
04-01-2008, 04:35 AM
என்ன அலைபேசியில் உறவு முறிவா??
கலக்கல் கவிதை.
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். http://www.tamilmantram.com:80/vb/


ஆம் முகம் காட்ட மறுத்தோ அல்லது இயலாமலோ முறிவை வரிகளில் காட்டிவிட்டு பிரிந்துதான் போனாள்.பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்மா பூ.

சிவா.ஜி
04-01-2008, 04:37 AM
குறுஞ்செய்தியில் அருஞ்செய்திகள் பல சொன்னவள்தான்..
இன்று நெஞ்சம் அறுஞ்செய்திகளை சொல்லிவிட்டாள்!


இது சூப்பர்.ஆனால் இந்த காதலனுக்கு உறவு அறும் செய்தியே ஒரு அருஞ்செய்தியாகிவிட்டது.
மிக்க நன்றி ஷி--நிசி.மனதை படித்து விடுகிறீர்கள்.விரும்பிய வரிகளை மேற்கோள் காட்டி.

சிவா.ஜி
04-01-2008, 04:40 AM
ஓகோ..... கூகிள் சாட்டுல... மாத்தி கூப்பிட்டப்போ எந்தப் பதிலும் வராம இருக்கும் போதே... நெனச்சன் என்னமோ ஆயிடுச்சு அண்ணாக்குண்ணு..... ஆனா இந்தளவுக்கு ஆகும்ணு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

ம்.......... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது
குறுஞ்செய்தி சுட்ட வடு
என்று சொல்லவைத்து விட்டார் சிவா அண்ணா.


எனக்கு ஒண்ணுமே ஆகல செல்வா...இன்னும் அதிக காதலால் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருக்கிறேன்.இது கற்பனை.

புதுக்குறள் அருமை.இலக்கியச்சோலையின் சொந்தக்காரருக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.
நன்றி செல்வா

ஆதவா
05-01-2008, 06:18 PM
வலி எழுதவில்லை, அழுத்திச் சூடாக இழுத்த இரும்புத் துண்டின் சூடு இடப்பட்டிருக்கிறது.

அலைபேசியில் பேசி ஓய்வெடுத்த எம் செவிகளை மீண்டும் துளிர்க்கச் செய்த கவிதை இது. ஓயாமல் பேசிய எம் காதற் மொழிகளை இப்போதுதான் எழுதி முடிக்கிறேன்; அதற்கு முன்னரே கவிதை தீட்டியிருக்கிறீர்கள். எனது தாமதத்தின் விளைவுகளைக் கண்டு வருகிறேன்.

நவீன யுகத்தில் அத்தியாவசியத்தேவையான செல்லிடைப்பேசி காதலர்களுக்கு ஆறாம் விரல். குறுஞ்செய்திகள் விஞ்ஞான இறகு முளைத்த பறவைகள். வெகு சிக்கனமாக அவள் மறுத்துவிட்டாள்... இன்றைய காதல், ஞாயிறு புலரும்போது புலர்ந்து மறையும் போது மறைந்து ஒருநாளில் இறந்துவிடும் ஈசலைப் போல இருக்கிறது.

அலைபேசியில் அலையில்லை... இறந்துபோன அந்த தொலைத்தொடர்பு சாதனத்தைப் போலத்தான் இவ்வகைக் காதலும் இறந்துவிடுகிறது... நிலையாமைப் படகை அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்.

வலியை மீண்டும் தீண்டியிருக்கிறீர்கள்... வாழ்த்துகள்

சிவா.ஜி
06-01-2008, 03:56 AM
வலி எழுதவில்லை, அழுத்திச் சூடாக இழுத்த இரும்புத் துண்டின் சூடு இடப்பட்டிருக்கிறது.

இன்றைய காதல், ஞாயிறு புலரும்போது புலர்ந்து மறையும் போது மறைந்து ஒருநாளில் இறந்துவிடும் ஈசலைப் போல இருக்கிறது.


வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.காதல் என்பது எது என்று தெரியாமல் வெறும் இனக்கவர்ச்சியில் தோன்றும் காளான் காதல் இப்படித்தான் சிக்கனமாய் முடிந்துவிடும்.
எதிர்பார்த்த பின்னூட்டம்.மிக்க நன்றி ஆதவா.

lolluvathiyar
10-01-2008, 05:44 AM
ம் என்ன செய்வது 90 சதவீத காதல் இப்படிதான் முடிகிறது. அதற்க்கு ஏன் இந்த காதலை இரைவன் படைத்தன் என்று கூட தோன்றுகிறது

திவ்யா
10-01-2008, 06:24 AM
மிகவும் அருமை சிவா. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் கவிதையின் வரிகள்.

சிவா.ஜி
10-01-2008, 06:26 AM
ம் என்ன செய்வது 90 சதவீத காதல் இப்படிதான் முடிகிறது. அதற்க்கு ஏன் இந்த காதலை இரைவன் படைத்தன் என்று கூட தோன்றுகிறது
நன்றி வாத்தியார்.காதல் நல்லதுதான்...ஆனால் அதை இந்த காதலர்கள் படுத்தும்பாடு இருக்கிறதே.....ரொம்பவே காதலிக்கறாங்க......சின்ன ஏமாற்றத்தைக்கூட தாங்கிக்க முடியறதில்ல அவங்களால.

சிவா.ஜி
10-01-2008, 06:27 AM
மிகவும் அருமை சிவா. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் கவிதையின் வரிகள்.

மிக்க நன்றி திவ்யா.