PDA

View Full Version : கிருஸ்த்மஸில் பூ வைத்த செ(கே)க்..!

рокрпВроороХро│рпН
03-01-2008, 09:32 AM
கிருஸ்மஸில்பூ வைத்த செ(கே)க்..!

எப்பவுமே பண்டிகை நாளில் வெளியே போனால்Е புத்தாடை அணிந்து விதவிதமாய் நம்ம மக்கள் போகும் அழகு தனி தாங்கЕ! அதிலையும் குட்டீஸ் ஜிகுஜிகுன்னு குட்டியா பட்டி பாவாடையோ அல்லது கவுன் போட்டு, அதுக்கு மேட்சா கேப் போட்டு அப்பா தோளில் தலை சாய்த்து போவாங்க பாருங்க..! அப்படியே நாமும் குழந்தையா அவங்க பின்னாடி போயிடுவோம்Е! இப்படித்தான் நானும் குட்டீஸ் பார்த்தாவே மழலைப்பருவத்துக்கே போயிடுவேங்க..!

அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காக மட்டுமல்ல, தேவை பொருட்டு ஷாப்பிங் செய்ய அப்பாவோடு கிளம்பினேன்.

இரவு ஆகிவிட்டதால், ஆங்காங்கே கிருஸ்மஸுக்காக போடப்பட்ட சீரியல் லைட்ஸ், நட்சத்திர ஒளிப்பான்கள்Е இப்படி சிட்டியே ஜெக ஜோதியாய் காட்சி அளித்தது.

வண்டி நிறுத்த இடம் தேடி, ஒரு வழியாய் நிறுத்தி அப்படியே காலாற வாக்கிங் போக ஆரம்பித்தோம் நானும் அப்பாவும்.

வழியில் ஒரு டைட்டன் சோரூம்..! உடனே, இங்க வாங்கிய என் ஃபாஸ்ட்ரேக் கைக்கடிகாரம் நினைவு வர, அப்பாவிடம் காட்டி, Уஅப்பா, இந்த ஸ்டாப் உரிந்துவிட்டது. மாற்றிடலாமா?Ф என்று கேட்டேன்.

அப்பா சரி என்பது போல் தலையாட்டி உள்ளே வந்தார். அவருக்கும் கண்ணாடி மாத்தனும் என்று சொல்லி சரி வா இருவரும் கொடுப்போம் என்று அழைத்துச் சென்றார்.

கடைக்காரரிடம் என் கடிகாரத்தை நீட்ட, அவர் இதற்கு வயிட் கலர் தான் இருக்கு. இந்த கலர் ஸ்டாப் வர 10 நாள் ஆகும் என்று திருப்பிக் கொடுத்தார்.

அப்பாவின் வாட்ச் கொடுத்து, வேறு கண்ணாடி போடனும். ஏற்கனவே போட்டோம். சரியா வரலை. ஒரிஜினல் போட அனுப்பி மாற்றி தருவீங்களா? என்று அப்பா கேட்டார்.

கடைசியில் இருப்பவர், ஆமாம். மாத்துவோம். இந்த ஸ்டாப் கூட போய்விட்டதே என்று பிய்ந்த பாகத்தைச் சுட்டிக் காட்டினார்.

அப்பா உடனே, Уஅப்போ, ஸ்டாப்பையும் மாத்திருங்கФ என்றார்.

கடைக்காரர், Уவெகு வேகமாய் எழுந்து சோக்கேசில் இருந்த அதே டைப் புது ஸ்டேப்பை எடுத்தார்.Ф

எனக்கு உள்ளே ஒரு பல்பு எரிய, Уஇந்த ஸ்டாப் எவ்வளோங்க??Ф என்று கேட்டேன்.

கடைக்காரர், У550 ரூபாய் ஆகுதுங்கФ என்றார்.

உடனே, நான் மனதுக்குள், Уஎன்ன கொடுமை சார் இது?? யானை வாங்கும் விலையைப் போய் சங்கிலிக்கே சொல்கிறாரேЕ??Ф என்று யோசிக்கலானேன்.

அப்பா கொஞ்சம் அதிர்ந்தார். நான் அப்பாவிடன், அப்பா, இதுக்கு நீங்க புது வாட்சே வாங்கிக்கலாம் என்று கன்வைன்ஸ் செய்ய ஆரம்பித்தேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரர், Уஇது ஒரிஜினல்ங்கЕ. இந்த ஸ்டாபின் சைசுக்கும் அதன் அகலத்துக்கும் இது தான் பொருந்தும்Е வேறு கிடைக்காதுФ என்று பில் டப் சரமாரியாக கொடுத்து எங்களுக்கு பயங்காட்டி, அவர் வியாபார தந்திரத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்.

அப்பா இத்தனையையும் அமைதியா கேட்டுட்டு தலையாட்டிட்டு இருந்தார்.

நான் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, Уஅப்பாவுக்கு இந்த வேலை தெரியுங்க.. ஏற்கனவே செய்தவர் தான்..Ф என்று அமைதியாய் சொன்னேன்.

நான் சொன்னேனோ இல்லையோ, கடைக்காரர், கப் சிப் என்று ஆயிட்டார். அப்போ, அவர் முகத்தைப் பார்க்கனுமேЕ!! УஈЧஆடவில்லைФ என்ற கூற்றின் நிஜ உதாரணத்தை அப்போ தான் பார்த்தேன்.

கடைக்காரர், நான் சொன்னதை கேட்டு, என்னை ஒரு கணம் பார்த்து அதிர்ந்தார்.

இதற்கிடையில் அப்பா, Уஇப்போ செய்வது இல்லீங்கФ என்று சொல்லி சிரித்தார்.

கடைக்காரரின் பாட்சா எங்களிம் பலிக்காததில் ரொம்பவே அவர் நொந்து போனது புரிந்தது. நான் அமைதியாய் இருக்க, Уகண்ணாடி வர பத்து நாள் ஆகும். நீங்க உங்க போன் நம்பரும் பேரும் குடுங்கФ என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

வெளியில் வந்ததும், எனக்கும் அப்பாவுக்கும் சிரிப்பே தாங்கலை..

நான் அப்பாவிடம் கேட்டது, Уஏங்கப்பாЕ அவர் பாட்டுக்கு சொல்லிட்டே போறாருЕ நீங்க ஏன் ஒன்னுமே சொல்லலை??Ф என்று கேட்டேன்.

அப்பா சொன்னார்Е Уநான் சொல்லியிருந்தா நல்லா இருக்காது.. அதான் சொல்லலைФ என்றார்.

நான் சொன்னேன், Уஅப்பா, அவரு விட்ட பில் டப் பார்த்து எனக்கு சிரிப்பு அதிகமாயிட்டதுЕ பாவம்Е ஏன் வீணா பேசி எனர்ஜி வேஸ்ட் பண்றார்னு தான் அப்படி சொல்லி கட் பண்ணினேன்ЕФ என்று சொன்னேன்..

அவர் விட்ட கதையை கேட்டு, வீடு வரும் வரை அப்பாவும் நானும் வெகுநேரம் சிரிச்சிட்டே இருந்தோம்.

இதனால பூவு என்ன கருத்து சொல்ல வர்றேனாЕ.(புத்திசாலி தத்துவம்.. #1)

எந்த பொருளை வாங்கிவதா இருந்தாலும் கடைக்காரர் சொல்வதை அப்படியே நம்பாமல், உண்மையில் தீவிரமாய் விசாரித்து பலரிடம் கேட்டு பின்பு வாங்குங்க..! இதனால் பணம் மிச்சமாகும்Е யோசித்து செய்யுங்க மக்களேЕ!!

எல்லோரும் கிருஸ்மஸுக்கு கேக் தான் வைத்து கொண்டாடுவாங்கЕ பூ பாருங்க செக் வைத்து கொண்டாடியிருக்கேன்..!! ஹீ ஹீЕ(:D:D)

சரி சரிЕ. பூவு நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலின்னு நீங்க புகழ்வது கேக்குதுЕ!! :D:D

ரொம்ப டேங்சுங்கЕ!! :)

роЕрооро░ройрпН
03-01-2008, 09:35 AM
இதைப்படித்த பின்னாடி நானும் குழந்தையானேன்.. பூமகளின் தந்தைக்குப் பாராட்டுகள்..

рооройрпНроородройрпН
03-01-2008, 04:28 PM
ஆக்கா ஆக்கா.. ரொம்ப புத்திசாலிதான் நீங்க..!! :D

рокрпВроороХро│рпН
03-01-2008, 04:42 PM
இதைப்படித்த பின்னாடி நானும் குழந்தையானேன்.. பூமகளின் தந்தைக்குப் பாராட்டுகள்..
மிகுந்த நன்றிகள் அமரன் அண்ணா. :)

рокрпВроороХро│рпН
03-01-2008, 04:43 PM
ஆக்கா ஆக்கா.. ரொம்ப புத்திசாலிதான் நீங்க..!! :D
அப்போ நீங்க தான் மன்மதன் அண்ணா அதிபுத்திசாலி..!! :icon_b:
சத்தமா சொல்லுங்க அண்ணா..! :rolleyes:
இவுக யாருமே நம்ப மாட்டீராங்க..!! :lachen001::lachen001:

родроЩрпНроХро╡рпЗро▓рпН
03-01-2008, 04:57 PM
பதினாறு அடி பாய்ஞ்சிட்டீங்க பூமகள்.

роирпБро░рпИропрпАро░ро▓рпН
04-01-2008, 11:31 AM
ஏற்கனவே பின்னூட்டம் போட்டேன், என்ன போட்டேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால், பூ போன்ற அதி புத்திசாலிகள் கோவை கிரஸ்கட்டு ரோடு பக்கம் போகக்கூடாது என்று மிகவிரைவில், கோவை மாவாட்ட வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைக்கப்போவுது. பின்ன டைட்டன் ஷோரூம் காரன் கண்ணுலயே விரல விட்டு ஆட்டிடுச்சுன்னா பாருங்களேன்.

நம்ம மன்றத்திலயும் ரெண்டு மூணு ஆளுக கண்ணுல விரல விட்டு ஆட்டணும் பூவு, அது யாருன்னு உங்களுக்கு தனியா பி.எம் பண்ணுறேன், காரியத்தை கச்சிதமா முடிச்சிருங்க

роирпЗроЪроорпН
04-01-2008, 11:43 AM
அப்படியே என்னை மாதிரி புத்திசாலியாக இருக்கு பூ.அந்த இரண்டு மூணு லிஸ்ட்லே புள்ளியையுன் சேர்த்துங்க...

ропро╡ройро┐роХро╛
04-01-2008, 11:48 AM
நானும் ஏற்கனவே பின்னூட்டம் போட்டுட்டேன். இருந்தாலும் பூவு பொக்குன்னு போகக்கூடாதில்ல...

பூவு நான் ஊருக்கு வர்ற வரை வாச்சுக்கு ஸ்ட்ராப் மாத்தக் கூடாது நீ....இரண்டு பேரும் ஜவ்வு மிட்டாய் ஸ்ட்ராப் போடலாம் பூவு...உனக்கு ஆரஞ்சு கலர்...எனக்கு ரோஸ் கலர்...சரியா?

родро╛рооро░рпИ
04-01-2008, 11:59 AM
கேள்விகள் பல உண்டு பூ!

1. கால் ஏன் சூடாச்சு? வாக்கிங் போனா ஆறிடுமா?

2. உங்களுக்குள்ள எரிஞ்சது குண்டு பல்பா, ட்யூப் லைட்டா, மெர்க்குரி லைட்டா, சோடியம் வேபர் லாம்பா?

3. அதுக்கு எலக்ரிக் கனெக்ஷன், ஸ்விட்ச் எல்லாம் எங்க எப்படி இருக்கு?

4. பில்டப் கடைக்காரர் குடுத்ததை விட நீங்க அதிகமா குடுக்கறீங்களே அதெப்படி?

5. ஒரு கட்டத்தில முடிவெடுத்த நீங்க வட்டத்தில் இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க..?

6. ஈ ஆடறதுக்கு என்ன மியூசிக் போடணும்? இல்லை யார் பாடணும்?

7. அவரு சொன்ன கதை உங்களுக்குத் தெரியும். சரி. விட்டகதை எப்படித் தெரியும்?

8. வீட்டுக்கு வந்தபின் ஏன் சிரிப்பு நின்னு போச்சு?

9. தீவிரமா விசாரிப்பதுன்னா எப்படி? கையில் துப்பாக்கி எல்லாம் கொண்டு போய் விசாரிக்கணுமா??

10. இதுக்கெல்லாம் சரியான பதில் சொன்னீங்கன்னா பூவு ரொம்ப புத்திசாலின்னு மக்கள் ஒத்துக்குவாங்களா?

ропро╡ройро┐роХро╛
04-01-2008, 07:46 PM
அடக் கொடுமயே...இப்படி வேற கிளம்பிட்டாங்களா?பூவு திரி போடறக்கு முன்னாலெ நாலையும் யோசிச்சுத்தான் போடணும் சரியா...கோக்கு மாக்கு பார்ட்டிக அதிகம்...புத்திசாலி கோக்கு மாக்குங்க...எனக்கு ஏனோ பார்த்திபன்** வடிவேலு ஞாபகம் வருது....வாயுள்ள பிள்ளை பிழைக்கும்...நீ குடுக்கற பதிலடில தாமரை நாளை மின்னைக்கு யாரையும் இடக்கு மடக்கா கேள்வி கேட்கக் கூடாது...எங்கே...கமான்...க்விக்...

родро╛рооро░рпИ
04-01-2008, 07:55 PM
இரண்டு வார்த்தைகளை விட்டுட்டீங்களே யவனிகா..

நாராயண நாராயண

роирпБро░рпИропрпАро░ро▓рпН
05-01-2008, 04:21 AM
தங்கை பூவுக்காக இந்த அண்ணன் பதில் கொடுப்பார், அதுவும் பத்தவில்லையென்றால் தங்கையே கொடுப்பார்.

1. கால் ஏன் சூடாச்சு? வாக்கிங் போனா ஆறிடுமா?
தெரியாத்தனமா நீங்க நடத்துற STD பூத்தில கால் (call) பண்ணவந்தேன். நீங்க மீட்டருக்கு வச்ச சூடால call-ம் சூடாச்சு. பில்லுக்கு காசு கொடுக்காம அப்படி கொடிநடையா வாக்கிங் போனா சூடு ஆறிடும்.

2. உங்களுக்குள்ள எரிஞ்சது குண்டு பல்பா, ட்யூப் லைட்டா, மெர்க்குரி லைட்டா, சோடியம் வேபர் லாம்பா?
சீமெண்னை (அ) மண்ணெண்ணை விளக்கு. எது எரிஞ்சாலும் அப்போதைக்கு ஒளி கிடைச்சிருக்கும்.

3. அதுக்கு எலக்ரிக் கனெக்ஷன், ஸ்விட்ச் எல்லாம் எங்க எப்படி இருக்கு?
மண்ணெண்ணை விளக்கு எரிய மின்சாரம் மற்றும் ஸ்விட்சு தேவை என்று எந்த என்ஜினியரிங் காலேஜில் சொல்லிக் குடுத்தாங்க.

4. பில்டப் கடைக்காரர் குடுத்ததை விட நீங்க அதிகமா குடுக்கறீங்களே அதெப்படி?
கடியை கடியால் கவிழ்க்க வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதேபோல் பில்டப்பை பில்டப்பால்.. இதெல்லாம் கோயமுத்தூர் குசும்புல அடங்கும்.

5. ஒரு கட்டத்தில முடிவெடுத்த நீங்க வட்டத்தில் இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க..?
அதையே தான் செஞ்சிருப்பேன். கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு எல்லாம் சரியா வரும்.

6. ஈ ஆடறதுக்கு என்ன மியூசிக் போடணும்? இல்லை யார் பாடணும்?
சிலருக்கு சங்கு ஊதும்போது, ஈ வட்டம் சுத்தி ரீங்காடமிடுமே. அதில் சங்கு தான் மியூசிக், ஈயின் ரீங்காரம் தான் பாடல்.

7. அவரு சொன்ன கதை உங்களுக்குத் தெரியும். சரி. விட்டகதை எப்படித் தெரியும்?
உங்கவீட்டு விட்டத்தைப் பாருங்க அதுல சுருள், சுருளா எழுதியிருக்கும், அது தான் கதை. அப்ப அண்ணி வந்து தடியால அடிச்சு உடம்பெல்லாம் வீங்கிய கதையிருக்கே, அதைத்தானே விட்ட கதை.

8. வீட்டுக்கு வந்தபின் ஏன் சிரிப்பு நின்னு போச்சு?
அண்ணனைப் (தாமரை) போல் தான் வீட்டில் சிரிப்பதில்லை. உங்களுக்கு அண்ணி பயம்.

9. தீவிரமா விசாரிப்பதுன்னா எப்படி? கையில் துப்பாக்கி எல்லாம் கொண்டு போய் விசாரிக்கணுமா??
அண்ணியிடம் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா? இல்லை தீபாவளி துப்பாக்கிக்கே "அந்த ஏழு நாட்களை" உளரிக்கொட்டி விட்டீர்களா?

10. இதுக்கெல்லாம் சரியான பதில் சொன்னீங்கன்னா பூவு ரொம்ப புத்திசாலின்னு மக்கள் ஒத்துக்குவாங்களா?
பதில் சரினு நீங்க ஒத்துக்கிட்டா பூவு புத்திசாலி. ஒத்துக்கிலேனா நீங்க அதி புத்திசாலி.

рооро▓ро░рпН
05-01-2008, 04:25 AM
தங்கை பூவுக்காக இந்த அண்ணன் பதில் கொடுப்பார், அதுவும் பத்தவில்லையென்றால் தங்கையே கொடுப்பார்.
ஹாஹ்ஹா...
பதில் சூப்பருங்கோ.... :lachen001: :lachen001: :lachen001:

роирпБро░рпИропрпАро░ро▓рпН
05-01-2008, 04:29 AM
ஹாஹ்ஹா...
பதில் சூப்பருங்கோ.... :lachen001: :lachen001: :lachen001:
இண்டெலிஜெண்ட் ஆஃப் தெ வண்டலூரே சொல்லியாச்சு, பதில் சூப்பர்னு, தாமரை தலையில துண்ட போட்டுட்டு எங்கே போறீங்க...

நம்ம தங்கச்சி புத்திசாலிங்கிறது நமக்கு பெருமை தானே... வாங்க வாங்க, இன்னிக்கு பூவோட ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு.. அதிலயாவது கலந்துக்கோங்க...

родро╛рооро░рпИ
05-01-2008, 04:50 AM
தங்கை பூவுக்காக இந்த அண்ணன் பதில் கொடுப்பார், அதுவும் பத்தவில்லையென்றால் தங்கையே கொடுப்பார்.

பாவம்.. தங்கை!..

தெரியாத்தனமா நீங்க நடத்துற STD பூத்தில கால் (call) பண்ணவந்தேன். நீங்க மீட்டருக்கு வச்ச சூடால call-ம் சூடாச்சு. பில்லுக்கு காசு கொடுக்காம அப்படி கொடிநடையா வாக்கிங் போனா சூடு ஆறிடும்.

ஓ காசு குடுக்காததால தான் கால்ல சூடு போட்டாங்களா? அதென்ன கொடி நடை? ஓ நடக்க முடியாம கொம்பு பிடிச்சிகிட்டு நடந்தீங்களா?

சீமெண்னை (அ) மண்ணெண்ணை விளக்கு. எது எரிஞ்சாலும் அப்போதைக்கு ஒளி கிடைச்சிருக்கும்.

எந்த மண்ணிலிருந்து எடுத்த எண்ணை.. தலைக் களிமண்ணிலிருந்தா?
ஆமாம், பத்த வச்சது யாரு?

மண்ணெண்ணை விளக்கு எரிய மின்சாரம் மற்றும் ஸ்விட்சு தேவை என்று எந்த என்ஜினியரிங் காலேஜில் சொல்லிக் குடுத்தாங்க.

ஆனா மண்ணெண்ணை வேணுமே? ஆற்றல் அழிவின்மை கோட்பாடு படிக்கலையா? மண்ணெண்ணை விளக்க்கைப் பத்தியெல்லாம் எஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சீங்க?

கடியை கடியால் கவிழ்க்க வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதேபோல் பில்டப்பை பில்டப்பால்.. இதெல்லாம் கோயமுத்தூர் குசும்புல அடங்கும்.

ஏனுங்க, சொன்னவரும் கோயமுத்தூரு கேட்டவரும் கோயமுத்தூரு.. முள்ளை முள்ளால் எடுக்கணும்னா முள்ளடுக்கற அந்த முள்ளை எடுக்க இன்னொரு முள்ளை அடுத்த முள்ளால இன்னொரு முள்வச்சு...
யோசிக்கவே மாட்டீங்களா? யவனிகா இனிமே முள்குத்தியிருக்கு பின், இல்லைன்னா ஊசி கொடுன்னு கேட்டா குடுக்காதீங்க.. முள்ளாலயே எடுத்துக்கட்டும்.. பில்டப்புக்கு மேல் பில்டப்பு கொடுத்துக்கிட்டே போனால் இப்படித்தான் ஆகும்.

அதையே தான் செஞ்சிருப்பேன். கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு எல்லாம் சரியா வரும்.

அதாவது கணக்கு பண்ணுனீங்க.. ஆனா வட்டத்தையும் கட்டத்தையும் ஏன் கூட்டறீங்க? வீட்ல செஞ்சாலாவது யவனிகாவிற்கு உதவியா இருக்கும்.

சிலருக்கு சங்கு ஊதும்போது, ஈ வட்டம் சுத்தி ரீங்காடமிடுமே. அதில் சங்கு தான் மியூசிக், ஈயின் ரீங்காரம் தான் பாடல்.

இப்ப உங்க முகத்தில ஈயாடுதே சரியாத்தான் சொன்னீங்க

உங்கவீட்டு விட்டத்தைப் பாருங்க அதுல சுருள், சுருளா எழுதியிருக்கும், அது தான் கதை. அப்ப அண்ணி வந்து தடியால அடிச்சு உடம்பெல்லாம் வீங்கிய கதையிருக்கே, அதைத்தானே விட்ட கதை.

யவனிகா இதையும் கவனிங்க.. மச்சான் மல்லாக்கப் படுத்துகிட்டு விட்டத்தில சுருள் சுருளா புகை விடறார்.. அபார்ட்மெண்ட்ல ஏதய்யா விட்டமும் சட்டமும்.. உம்ம கதையைத்தான் ஏற்கனவே சொன்னீரே.. சொந்தக் கதை சோகக்கதை இப்ப ஏன் மாத்தறீங்க.

அண்ணனைப் (தாமரை) போல் தான் வீட்டில் சிரிப்பதில்லை. உங்களுக்கு அண்ணி பயம்.

சிரிக்கறதுக்கு பயமா? இல்லை சிரிச்சா மத்தவங்களுக்க்குப் பயமா?

அண்ணியிடம் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா? இல்லை தீபாவளி துப்பாக்கிக்கே "அந்த ஏழு நாட்களை" உளரிக்கொட்டி விட்டீர்களா?

இதுக்கு மேல அந்த 7 நாட்கள் வேணாம்னா சொல்லிடுங்க.. நிறுத்திடறேன்.. உம்ம குட்டு வெளிப்படக் கூடாதுங்கறதுக்காக இப்படி வேஷமெல்லாம் போடாதீங்க.. தெரியுது.. பெங்களூர் வரும் போது வீட்டுக்கு வரலாமா இல்லை ஏர்போர்ட்டோட ஓடிறலாமான்னு யோசிக்கிறீங்க.. நான் பொய் சொல்ல் மாட்டேன்,, உண்மையைச் சொல்ற மாதிரி இல்லை. ஏர் போர்ட்ட்லிலிருந்து 10 நிமிஷம் தானே வீடு. தாராளமா வாங்க.

பதில் சரினு நீங்க ஒத்துக்கிட்டா பூவு புத்திசாலி. ஒத்துக்கிலேனா நீங்க அதி புத்திசாலி.[/QUOTE]

ஒத்துகிட்டனா? ஒத்துகிட்டதா நீங்க ஒத்துக்கிறீங்களா?

роирпБро░рпИропрпАро░ро▓рпН
05-01-2008, 05:01 AM
தாமரை அவர்களின் பதிலுக்குப் பதில் படித்து சிரிப்புத்தான் வந்தது, புத்தி வேலை செய்யவில்லை. (உனக்கு எப்ப வேலை செஞ்சது என்று பின்னூட்டம் போடக்கூடாது).

அதனால் பதிலுக்கும் பதிலளித்த உமக்கு எனது குட்டித்தங்கை மலர் வந்து பதிலளிப்பார். ஏங்க அண்ணி மன்றத்தில எல்லாம் சுத்தறது இல்லையா? அவங்க வந்தா தான் உங்களுக்கு பயம் வரும். (உடனே இதுக்கும் ஒரு பின்னூட்டம் கொடுப்பீங்களே)

ропро╡ройро┐роХро╛
05-01-2008, 05:37 AM
என்ன இது கேள்வியின் நாயகர்களே....இதெல்லாம் அதிகமா இல்லை...பாசமலர்க கூட்டம் ஒரு புறம்...கேள்வியும் நானே...பதிலும் நானேன்னு தாமரை ஒரு புறம்...இடையில நாங்கெல்லாம் யாரு?
மலரு நீ வா.....நீ ஒரு நாலு கேள்வி நச்சுன்னு கேளும்மா...

родро╛рооро░рпИ
05-01-2008, 06:51 AM
தாமரை அவர்களின் பதிலுக்குப் பதில் படித்து சிரிப்புத்தான் வந்தது, புத்தி வேலை செய்யவில்லை. (உனக்கு எப்ப வேலை செஞ்சது என்று பின்னூட்டம் போடக்கூடாது).

அதனால் பதிலுக்கும் பதிலளித்த உமக்கு எனது குட்டித்தங்கை மலர் வந்து பதிலளிப்பார். ஏங்க அண்ணி மன்றத்தில எல்லாம் சுத்தறது இல்லையா? அவங்க வந்தா தான் உங்களுக்கு பயம் வரும். (உடனே இதுக்கும் ஒரு பின்னூட்டம் கொடுப்பீங்களே)

அண்ணிக்கு இதெல்லாம் பழகிப் போச்சி ராஜா.

ஆனால் பாவம் என் மாமியார் மாமனாரெல்லாம் தான். நான் என்ன சொன்னேன்னே தெரியாம முழிப்பாங்க பாருங்க... :icon_rollout:

ஒரு தெளிவு என்ன தெரிஞ்சது...

மலர் உங்க குட்டித் தங்கை...

இண்டெலிஜெண்ட் ஆஃப் தி வண்டலூர்..

பரிணாம வளர்ச்சிப் படி பார்த்தா..
(சார்லஸ் டார்வின் சொன்ன சான்ஸ்லஸ் தியரி)

நீங்க ஒன் அமாங்க் தி டம்ப்ஸ் ஆஃப் வண்டலூர்..

நம்ம சேலஞ்ச் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..:lachen001::lachen001:

ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதிய ஒண்ணு ஞாபகத்திற்கு வருது..

விவரம் - ல ரம் இருக்கு.:D விவகாரம் ல காரம் இருக்கு, :D

ஆனா விவரத்திற்கு விவகாரத்தை தொட்டுக்கலாமா?:lachen001::D

рооро▓ро░рпН
05-01-2008, 06:52 AM
மலரு நீ வா.....நீ ஒரு நாலு கேள்வி நச்சுன்னு கேளும்மா...
தோ வந்துட்டேன்....க்கா
அக்கா கூப்பிட்டு வராமலா...
கேள்வி1: நச்
கேள்வி2: நச்
கேள்வி3: நச்
கேள்வி4: நச்

родро╛рооро░рпИ
05-01-2008, 06:54 AM
தோ வந்துட்டேன்....க்கா
அக்கா கூப்பிட்டு வராமலா...
கேள்வி1: நச்
கேள்வி2: நச்
கேள்வி3: நச்
கேள்வி4: நச்

கேள்விக் குறி போட மறந்துட்ட மலரு..

рооро▓ро░рпН
05-01-2008, 07:02 AM
கேள்விக் குறி போட மறந்துட்ட மலரு..
இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே.... :confused: :confused:

рооро▓ро░рпН
05-01-2008, 07:15 AM
ஆனால் பாவம் என் மாமியார் மாமனாரெல்லாம் தான். நான் என்ன சொன்னேன்னே தெரியாம முழிப்பாங்க பாருங்க... :icon_rollout: பாவம்.... நம்ம மருமவனுக்கு என்னம்மோ ஆயிப்போச்சின்னு மனசுக்குள்ள நினைச்சி கவலைப்பட்டிருப்பாங்க... :sprachlos020: :sprachlos020:

மலர் உங்க குட்டித் தங்கை...
இண்டெலிஜெண்ட் ஆஃப் தி வண்டலூர்..
பரிணாம வளர்ச்சிப் படி பார்த்தா..
(சார்லஸ் டார்வின் சொன்ன சான்ஸ்லஸ் தியரி) குட்டி தங்கை மலருக்கு ஒரு பெரிய அண்ணன்..
அவரு தான் பரிணாம வளர்ச்சிக்கு நல்ல உதாரணம்...
பேரு தாமரை...
உங்களுக்கு தைரியம் இருந்தா ஒரு முறை
என் அண்ணன்கிட்ட பேசிப்பாருங்க..

роирпБро░рпИропрпАро░ро▓рпН
05-01-2008, 07:36 AM
உங்களுக்கு தைரியம் இருந்தா ஒரு முறை
என் அண்ணன்கிட்ட பேசிப்பாருங்க..
யாரைச் சொல்ற மலரு. புரிஞ்சி போச்சி, எனக்கும் அவருக்கும் உள்ள சேலஞ்சில நீ தானு புரிஞ்சி போச்சி. சேலஞ்ச் என்ன தெரியலையா? இது தானே அவரோட ஸ்டைல். ஆனா எனக்குத் தெரியுமே அது எதுன்னு? எதுன்னு சொன்னா அது ஆகிடுமானு அன்னாத்த கேப்பாரே?

рооро▓ро░рпН
05-01-2008, 07:41 AM
இண்டெலிஜெண்ட் ஆஃப் தெ வண்டலூரே சொல்லியாச்சு,
ஏற்கனவே உள்ள பேரெல்லாம் பத்தாதுன்னு இது வேறவா.. :traurig001: :traurig001:
நற..நற.... :sauer028: :sauer028:
என் மருமவபுள்ளைங்ககிட்ட சொல்லி உங்களை தனியா கவனிக்க சொல்றேன்.... :D :D

родро╛рооро░рпИ
05-01-2008, 07:45 AM
பாவம்.... நம்ம மருமவனுக்கு என்னம்மோ ஆயிப்போச்சின்னு மனசுக்குள்ள நினைச்சி கவலைப்பட்டிருப்பாங்க... :sprachlos020: :sprachlos020: குட்டி தங்கை மலருக்கு ஒரு பெரிய அண்ணன்..
அவரு தான் பரிணாம வளர்ச்சிக்கு நல்ல உதாரணம்...
பேரு தாமரை...
உங்களுக்கு தைரியம் இருந்தா ஒரு முறை
என் அண்ணன்கிட்ட பேசிப்பாருங்க..

மலருக்கு அண்ணன் தாமரையா?

அப்ப தாமரை மலரில்லையா?

உங்க அண்ணன்கிட்ட நான் பேசினதைப் பலமுறைப் பார்த்திருப்பீங்களே! :icon_ush:

ஞாபகம் இருக்கா?:icon_ush:

ропро╡ройро┐роХро╛
05-01-2008, 08:22 AM
தாமரை...அதி புத்திசாலி வேசம் எல்லாம் அவங்கவங்க மனைவிகிட்ட செல்லாது தான்...இதில அண்ணிக்குப் பழகிப் போச்சுன்னு எங்களை டபாய்க்க வேண்டாம்.
அது சரி, உங்க மாமனார் மாமியார் கிட்டயும் சொற்சிலம்பம் பாணில தான் பதில் பேசுவீங்களா....உங்க எல்லாருக்கும் அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்து...அடுத்த பிறவியிலயும் அண்ணியையே நீங்க பொண்ணுப் பாக்கப் போயி...அந்த நேரம் பாத்து உங்க மாமனாருக்கு பூர்வ ஜென்ம நினைப்பு வந்தா எப்படி இருக்கும்?

"இந்தாளுக்கு என் பொண்ணைக் குடுக்க மாட்டேன்....கையில கோனார் தமிழ் உரை வெச்சிட்டு, கட்டின பாவத்துக்கு என் பொண்ணு தான் குடும்பம் நடத்தனும்னாக்கூட*....ஒரு நேரம் மக வீட்டுக்குப் போனா...பேசுறது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...நானும் தோராயமா தலைய இடம் வலமா ஆட்டி வைக்கிறேன்..."அப்படின்னு புலம்பிட்டே
தட்டில வெச்சிருந்த மிக்சர், பூந்தியெல்லாம் புடுங்கிட்டு உங்களை தொரத்தி
விடப் போறார் பாருங்க...

роирпБро░рпИропрпАро░ро▓рпН
05-01-2008, 08:32 AM
யவனிகாவுக்கு பதில் சொல்லுங்க! உங்க பாணியில. இப்ப கூட்டணியில பூ, மலரு, நான், யவனிகா. யாருக்கு பின்னூட்டம் கொடுத்தாலும் பதில் யாரோ ஒருத்தர்கிட்ட இருந்து வரும். அதுக்கும் அடங்கலேனா, அண்ணிகிட்ட சொல்லிக் கொடுப்போம்.

அண்ணியைப் பார்த்தா உங்களுக்கு வார்த்தையே வராதாமே உண்மையா? அந்தக் குறைப்போக்கத்தான் மன்றத்தில பேசுறீங்களாமா?

родро╛рооро░рпИ
06-01-2008, 04:01 AM
தாமரை...அதி புத்திசாலி வேசம் எல்லாம் அவங்கவங்க மனைவிகிட்ட செல்லாது தான்...இதில அண்ணிக்குப் பழகிப் போச்சுன்னு எங்களை டபாய்க்க வேண்டாம்.
அது சரி, உங்க மாமனார் மாமியார் கிட்டயும் சொற்சிலம்பம் பாணில தான் பதில் பேசுவீங்களா....உங்க எல்லாருக்கும் அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்து...அடுத்த பிறவியிலயும் அண்ணியையே நீங்க பொண்ணுப் பாக்கப் போயி...அந்த நேரம் பாத்து உங்க மாமனாருக்கு பூர்வ ஜென்ம நினைப்பு வந்தா எப்படி இருக்கும்?

"இந்தாளுக்கு என் பொண்ணைக் குடுக்க மாட்டேன்....கையில கோனார் தமிழ் உரை வெச்சிட்டு, கட்டின பாவத்துக்கு என் பொண்ணு தான் குடும்பம் நடத்தனும்னாக்கூட*....ஒரு நேரம் மக வீட்டுக்குப் போனா...பேசுறது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...நானும் தோராயமா தலைய இடம் வலமா ஆட்டி வைக்கிறேன்..."அப்படின்னு புலம்பிட்டே
தட்டில வெச்சிருந்த மிக்சர், பூந்தியெல்லாம் புடுங்கிட்டு உங்களை தொரத்தி
விடப் போறார் பாருங்க...

யவனிகா, சிந்தனையைக் கொஞ்சம் விசாலப்படுத்தணும்.. என் பேச்சு நினைவு வந்தவங்களுக்கு அனிருத், ஸ்வேதா நினைவும் வரணுமே! அப்போ அந்த பேரப் புள்ளை பாசத்தில உடனே தலையாட்டிடுவாங்க இல்லையா?:icon_rollout::icon_rollout:

பாசத்துக்கு பலிகடா ஆயிருவாங்க..

யவனிகா தங்கச்சி, நான் கொஞ்சம் அப்பாவி.. எதாவது பில்டப் குடுத்துட்டா அண்ணிகிட்ட பின்னால ஒரு நாள் இப்படித்தான் பில்டப் கொடுத்தேன்.. இப்படித்தான் சமாளிச்சேன்னு சொல்லிருவேன்.

ஒரு சந்தேகம், சொற்சிலம்பத்துக்கு கோனார் நோட்ஸ் போட்டுட்டாங்களா? என்ன விலை? எந்தப் பதிப்பகம்?:sprachlos020:

சொல்லுங்க சிலம்பம் புரிஞ்ச அவங்களை பாராட்டியே ஆகணும. அப்படியே எனக்கும் ஒரு பிரதி அனுப்பி வைங்க..

அண்ணிகிட்டே சொல்லிக் கொடுக்கறதுக்கு பதிலா எப்படி சமாளிக்கிறீங்கன்னு கேட்டுப் பாடம் படிக்கலாமே.. அதுதான் புத்திசாலித்தனம்.:lachen001:

அதுசரி.. அனிருத்திற்கு சொல்லிர வேண்டியதுதான்

ராஜா அங்கிளும் பென்ஸ் அங்கிள் மாதிரிதான்.. ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவருன்னு..

மலர் - யவனிகா உங்களை வச்சு ரெண்டக்க ரெண்டக்க ன்னு இன்னொரு திரி ஓடிகிட்டு இருக்கே கவனிக்கலையா?:lachen001:

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=314112&postcount=98

எனது 5000 ஆவது திரியை மறுபடி மலரோட 3000 ஆவது திரியோட திரும்ப ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்..

அதனால் அதிக பதிவுகள் பாக்கி இல்லை.. நீங்கபாட்டுக்கு உங்க கேள்விகளைப் போடுங்க.. ஆனால் 5000 பதிவு முடிஞ்ச உடன் பதில் வரும்..:icon_b:

ஆமாம் இப்ப யாராரு எந்தக் கட்சி?