PDA

View Full Version : பனித்துளி

ஆதி
03-01-2008, 09:28 AM
சூரியக் கோலம் போட
இரவு மகள்
வானம் தெளித்த நீரா ?

புல்லின் இதழும்
பொழுதின் இதழும்
முத்தமிட்ட
எச்சில் துகளா ?

வானக் கண்ணகி
வைகரையில் உடைத்த
நிலா சிலம்பின்
பனி பரல்களா ?

முகிழ்ந்த முகையும்
முகிலும் புணர்ந்து
பிரிந்தப் போலுதில்
பீறிட்ட கண்ணீரா ?

நித்தலம் அள்ளி
நிலாப் பெண்ணாடிய
சிற்றிலில் இருந்து
சிதறிய மணிகளா?

எவளோ ஒருத்தியை
காதலன் தழுவையில்
சிந்தி தொலைத்த
சிவக்காத நாணங்களா ?

ராத்திரி யாசகன்
பாத்திரத்தில் இருந்து
தவறிய பருக்கைகள்..

புல்லின் மேனியில்
புருவமும் இமையும் இன்றி
இத்தனை விழிகள்
எந்த கௌதம சாபங்கள் ?

விருப்பம் கொண்ட
விண்மீன் இரண்டு
நெருக்கம் கொண்ட
நினைவின் கவிதைகள்..

தேவதை மையலில்
தேவனைக் கூடயில்
சிதறித் தெறித்தக்
காமத் துளிகள்..

எந்த கவிஞனும்
எழுதாத எண்ணங்கள்
அந்தி வானத்தில்
இல்லாத வண்ணங்கள்..

என்ன என்னவோ
எண்ணிப் பார்த்தேன்
என்னையும் அவளையும்
எழுதப் பார்த்தேன்

இருந்தக் கற்பனைத்
தீர்ந்தக் காரணத்தால்..

வானவில் கோட்டையும்
வறுமைக் கோடாய்
காணலுறும் கூளிகளுக்காய்
கடைசிவரிச் சொல்கிறேன்..

விளிம்புநிலை மனிதர்களின்
வியர்வைத் துளிகள்..

-ஆதி

பூமகள்
03-01-2008, 10:10 AM
அற்புதம்...அருமை... ஆதி..!

பனித்துளிக்குள் இருக்கும் ஒவ்வொரு உலகத்தையும் வரிகளில் படைத்த விதத்தில் அசத்திட்டீங்க...!:)

இக்கவியை பனித்துளி படித்தால் அதன் ஆயுள் கூட இன்னும் நீளும்..!

பனித்துளிக்கு இப்படி ஒரு கவிமாலை யாரும் சூடி நான் பார்த்ததில்லை.

வாழ்க உங்கள் கவித்திறமை. வளர்க உங்கள் தமிழ் புலமை..!!
இன்னும் தருக தமிழ் அருவி..!

அமரன்
03-01-2008, 10:13 AM
கவிஞன் கண்படும்
நிலையிலாதவை கூட
நினைவால் சிலை செய்யப்பட்டு
நிலைத்துவிடுகின்றன...

கலக்கிடீங்க ஆதி..:icon_b:

ஆதி
05-01-2008, 04:48 PM
அற்புதம்...அருமை... ஆதி..!

பனித்துளிக்குள் இருக்கும் ஒவ்வொரு உலகத்தையும் வரிகளில் படைத்த விதத்தில் அசத்திட்டீங்க...!:)

இக்கவியை பனித்துளி படித்தால் அதன் ஆயுள் கூட இன்னும் நீளும்..!

பனித்துளிக்கு இப்படி ஒரு கவிமாலை யாரும் சூடி நான் பார்த்ததில்லை.

வாழ்க உங்கள் கவித்திறமை. வளர்க உங்கள் தமிழ் புலமை..!!
இன்னும் தருக தமிழ் அருவி..!

அழகியப் பின்னூட்டமிட்டு என்னையும் என் கவிதையையும் மகிழ்ச்சியில் ஆழ்நத்தியமைக்கு மிக்க நன்றிங்க..

ஆதவா
05-01-2008, 05:08 PM
ஒவ்வொரு இடத்திலிருந்து உயர்த்தியே பேசியிருக்கும் வார்த்தைகளைப் பூசிக் கொண்டது என் கண்கள். கண்ணகியின் சிலம்பை ஒத்து எழுதிய ஒப்பீடு ரசிக்கத் தக்கது. ஒவ்வொரு பத்தியும் பேசும் உயர்வை சொல்ல வார்த்தைகளைச் சிதறவிட்டுத் தேடிப் பார்க்கிறேன்.

சிவாகாத நாணங்கள்???

பொய்களைத் தெளித்துப் போட்டக் கோலங்களை எந்த சாரலால் அழிக்க இயலும்? உமது கோலங்கள் ரசிக்கத் தக்கவை ஆதி.

தீராத அட்சயப் பாத்திரமாய் கற்பனை ஊறிக் கொண்டே இருக்கிறது உம்முள், நிறையாத குடத்தை நெஞ்சில் சுமந்து வைத்திருக்கிறீர்.. வாழ்த்துகள்.

ஆதி
05-01-2008, 05:19 PM

உள்ளத்தைக் குளிரவைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா..வெறும் உவமைகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதியக் கவிதைத்தான் இது.. வார்த்தைகள் வசப்படுகிறதா என முயற்சித்துப் பார்த்தப் பயிற்சிக் கவிதைதான்..

சிவ*க்காத நாணங்கள்.. தான் தட்டச்சுப்பிழையால் சிவாகாத நாணங்கள் ஆகிவிட்டன :D

பின்னூட்ட*த்திற்கும் வாழ்த்துக்க*ளுக்கும் ந*ன்றி ஆத*வா..

*அன்புட*ன் ஆதி

ஆதவா
05-01-2008, 05:37 PM

ஆங்காங்கே சில ஒற்றுப் பிழைகளும் ஒட்டியிருக்கின்றன ஆதி. பெண்கள் முகத்தில் காணப்படும் பருக்களைப் போலத்தான்... (ஷீ கவிதையை எண்ணிக் கொண்டு பருக்களை வளர்த்துவிடப் போகிறீர்கள்!!)

வடிகட்டாத தேனை சுவைப்பதைக் காட்டிலும் சர்க்கரைப் பாகு சிறந்ததெனச் சொல்லுவார்கள். உம் கைவிரல் சொட்டிய தேந்துளிகள் எவ்விதத்தில் நனையச் சிறந்ததே!