PDA

View Full Version : புதிய தமிழ் ரைட்டர்



பாரதி
03-01-2008, 07:35 AM
புதிய தமிழ் ரைட்டர்
-----------------------------------------------------------------------------

இந்த ஆங்கிலப்புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்களுக்கு ஓர் இனிக்கும் செய்தி.

இ-கலப்பையைப் போன்று, ஆனால் அதனினும் மேம்பட்ட செயலியை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்று கிட்டியது. நியூ ஹாரிஜன் மீடீயா [New Horizon Media] நிறுவனம் வெளியிட்டிருக்கும் ரைட்டர் [Writer] மென்பொருள்தான் அது.

வெறும் 850Kb அளவுள்ள இந்த இலவச மென்பொருளின் உதவி கொண்டு தமிழ்99, தமிழ் ஃபோனெடிக், தமிழ் டைப்ரைட்டர், பாமினி ஆகிய முறைகளில் தட்டச்சு செய்யலாம். பாமினி,டையகிரிடிக்ட்,ஸ்ரீலிபி,சாஃப்ட்வியூ, டேப், டேம், திஸ்கி, யுனிக்கோடு மற்றும் வானவில் ஆகிய என்கோடிங்குகளை ஒத்தியங்குகிறது. இனி தனித்தனி செயலிகளை தேட வேண்டிய வேலை பெரும்பாலான தமிழ்மன்ற உறவுகளுக்கு இருக்காது என்று எண்ணுகிறேன்.

இந்த செயலி விண்டோஸ் 2003, எக்ஸ்-பி, விஸ்டா ஆகிய இயங்குதளங்குகளில் இயங்கக்கூடியது. விண்டோஸ் சி.டி இல்லாமலே "Regional Language Support" ஐ இயங்க வைக்கிறது.

நிறுவியதும் கீழ்க்கண்ட முறைகளில் தட்டச்சு செய்ய இயலும். மேலும் பல முறைகளில் தட்டச்சும் முறையை மேற்கொள்ள டாஸ்க்பாரில் வரும் ஐகானை, வலது புறமாக சொடுக்கி, செட்டிங்குகளில் தேவையான மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

Alt+0 = OFF
Alt+1 = tamil 99
Alt+2 = tamil phonetic
Alt+3 = tamil old type writer
Alt+4 = tamil Bamini

பலவிதப்பட்ட கீபோர்ட் வடிவங்களும் தட்டச்சும் போது சந்தேகம் ஏற்படின் எந்த விசையை தட்ட வேண்டும் என்ற விளக்கத்துடனும் மிக மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது பீட்டா வடிவில் இருக்கிறது. பதிவிறக்கி இந்த பதிவை அதில்தான் பதிவு செய்கிறேன். அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.

இந்த அருமையான மென்பொருளை தயாரித்துள்ள நியூ ஹாரிஜன் மீடீயா - உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை மகிச்சியுடன் தெரிவிக்கிறேன்.

பதிவிறக்க கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டுங்கள்.
http://software.nhm.in/sites/default/files/NHMWriterSetup1511.exe

சுகந்தப்ரீதன்
03-01-2008, 07:51 AM
மிக்க நன்றி அண்ணா...! புத்தாண்டில் மிகவும் பயனுள்ள செய்தி..தமிழ் நெஞ்சங்களுக்கு...! அதை தந்தமைக்கு தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...!

அமரன்
03-01-2008, 07:53 AM
தரவிறக்கிப் பயன்படுத்திப்பார்த்தேன் அண்ணா.. நன்றாக இயங்குகின்றது. என்னால் தொடர்ந்து பயன்படுத்த இயலாதது கவலை தருகின்றது. எனது விசைப்பலகை விசைகளின் இருப்பிட வேறுபாடு ஒத்துழைக்கவில்லை. பயனுள்ள தகவல்களை கண்டெடுத்து எம்முடன் பகிரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மனோஜ்
03-01-2008, 08:20 AM
சிறப்பான தகல் புதிய ஆண்டில் பரிசு தந்த பாரதி அண்ணாவிற்கு மிக்க நன்றி

பாரதி
03-01-2008, 08:59 AM
என்னால் தொடர்ந்து பயன்படுத்த இயலாதது கவலை தருகின்றது. எனது விசைப்பலகை விசைகளின் இருப்பிட வேறுபாடு ஒத்துழைக்கவில்லை.


அன்பு அமரன்,
விசைகளின் இடம் எது என்பதையும், எந்த என்கோடிங்கில் எப்படித்தட்டச்சுவது என்றும் இந்த செயலியின் உதவியில் காண இயலுமே..? பார்த்தீர்களா..? ஒரு வேளை கணினி சம்பந்தப்பட்டது என்றால், இயங்குதளத்தில் விசைகளை UK முறையிலிருந்து US முறைக்கு மாற்றிப்பார்த்தீர்களா..?

அமரன்
03-01-2008, 09:06 AM
அண்ணா எனது விசைப்பலகை பிரெஞ்சு முறையினாலானது. வழக்கமாக z இருக்கும் இடத்தில் w இருக்கும். a இருக்குமிடத்தில் q இருக்கும். கீழ்வரிசையில் இருக்கவேண்டிய m நடுவரிசையில் இருக்கும். ம தேவைப்படின் என் விசைப்பலகையில் உள்ள m ஐ அழுத்தமுடியாது.. அழுத்தினால் ; கிடைக்கும். இப்படி சில சிக்கல்கள். தொடர்ந்து பழகினால் சரியாகும் என நினைக்கின்றேன்..

பாரதி
03-01-2008, 10:19 AM
அண்ணா எனது விசைப்பலகை பிரெஞ்சு முறையினாலானது. வழக்கமாக z இருக்கும் இடத்தில் w இருக்கும். a இருக்குமிடத்தில் q இருக்கும். கீழ்வரிசையில் இருக்கவேண்டிய m நடுவரிசையில் இருக்கும். ம தேவைப்படின் என் விசைப்பலகையில் உள்ள m ஐ அழுத்தமுடியாது.. அழுத்தினால் ; கிடைக்கும். இப்படி சில சிக்கல்கள்.

அன்பு அமரன்,

அந்த விசைப்பலகை பிரெஞ்சு முறையில் அமைந்தது என்றாலும் நீங்கள் அமெரிக்க விசைப்பலகையை உபயோகிப்பதில் வழக்கமுள்ளவர் எனில் அதை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

Start - Control Panel - Regional and language options - Launguages - Details - Settings - Default Input Language என்பதில் English (United states) - United states international என்பதை தேர்வு செய்து பாருங்களேன். கணினியின் விசைப்பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை பாராமல் வழக்கமான முறையில் தட்டச்சிப்பாருங்கள். வாழ்த்துக்கள்.

அமரன்
03-01-2008, 10:22 AM
அப்படியே செய்கின்றேன் அண்ணா. இப்போது வெளியில் தட்டச்சு செய்து, பிரதி எடுத்து ஒட்டுகின்றேன். உங்கள் உதவியுடன் நேரடி தட்டச்சுதலை மேற்கொள்ளலாம் என நம்புகின்றேன். மிக்க நன்றி அண்ணா..

பாரதி
03-01-2008, 10:40 AM
நன்றி சுகந்தப்பீரிதன், மனோஜ்.

அன்பு அமரன், உங்கள் பிரச்சினை தீர்ந்தால் அறியத்தாருங்கள். நன்றி.

thangasi
03-01-2008, 12:13 PM
தற்போது இ-கலப்பை கொண்டு நேரடியாகத் தட்டச்சு செய்துவருகிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே போதுமானதாகப்படுகிறது. இருந்தாலும் இதையும் முயற்சி செய்துபார்க்கிறேன்...

நல்ல தகவலுக்கு நன்றிகள் பலப்பல...

அன்புரசிகன்
03-01-2008, 03:56 PM
மிகவும் பயனான செயலி. எனக்கு இ-கலப்பை பல இடையூறு தந்தது. இது மிகவும் நன்றாக வேலைசெய்கிறது. நேரடியாகவே உள்ளீடு செய்ய முடிகிறது. அமரா... முயன்றுபாருங்கள். நிச்சயம் வெற்றிபெறும்.

பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

தங்கவேல்
04-01-2008, 02:15 AM
பாரதி, இ கலப்பையை விட எனக்கு இந்த விசை பலகை அதிகம் பிடித்து இருக்கின்றது. உங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி...

உதயசூரியன்
04-01-2008, 04:58 PM
என்னால் இதை உபயோக தெரியாது..
இருந்த போதும் வாழ்த்துக்கள் தமிழின் வளர்ச்சியை இணையம் மூலம் நிறைவேற்றும் நண்பர்களை பெருமிதத்துடன் பார்க்கின்றேன்..

தொடருட்டும் உங்கள் பணி பாரதி....

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அமரன்
04-01-2008, 05:36 PM
அன்பான அண்ணா..
உங்கள் ஆலோசனைகளின் பிரகாரம், இந்த எழுதியின் உதவியுடன் தவழத்தொடங்கிவிட்டேன். விரைவில் வேகமெடுத்து விடுவேன். மனமார்ந்த நன்றி.

பாரதி
04-01-2008, 05:47 PM
தற்போது இ-கலப்பை கொண்டு நேரடியாகத் தட்டச்சு செய்துவருகிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே போதுமானதாகப்படுகிறது. இருந்தாலும் இதையும் முயற்சி செய்துபார்க்கிறேன்...



பாரதி, இ கலப்பையை விட எனக்கு இந்த விசை பலகை அதிகம் பிடித்து இருக்கின்றது.
அன்பு தங்கசி, தங்கவேல் ஆகியோருக்கு நன்றி.


என்னால் இதை உபயோகிக்கத் தெரியாது..
இருந்த போதும் வாழ்த்துக்கள் தமிழின் வளர்ச்சியை இணையம் மூலம் நிறைவேற்றும் நண்பர்களை பெருமிதத்துடன் பார்க்கின்றேன்..


அன்பு சூரியன், இதை பயன்படுத்துவது மிக எளிதானது. இ*கலப்பை போன்ற செயலி இது. ஆனால் அதனினும் மேம்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போது முயற்சித்துப்பாருங்கள். நன்றி.


அன்பான அண்ணா..
உங்கள் ஆலோசனைகளின் பிரகாரம், இந்த எழுதியின் உதவியுடன் தவழத்தொடங்கிவிட்டேன். விரைவில் வேகமெடுத்து விடுவேன்.

அருமை அமரன். உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
05-01-2008, 07:28 PM
அன்பு நண்பர் பாரதியின் வழக்கமான பயனுள்ள பதிவு.

மிக்க நன்றி நண்பரே. உங்கள் உதவியால் மீண்டும் மன்றம் வந்துள்ளேன்.

பாரதி
05-01-2008, 09:07 PM
அன்பு நண்பர் பாரதியின் வழக்கமான பயனுள்ள பதிவு.
உங்கள் உதவியால் மீண்டும் மன்றம் வந்துள்ளேன்.

வாங்க இ.த.செ.!! நலமா..?
இப்பதிவிட்டதையும் விட மன்றத்தில் உங்களைக் காண்பதில் பேருவகை அடைகிறேன்.
மிக்க மகிழ்ச்சி.

இளந்தமிழ்ச்செல்வன்
06-01-2008, 06:50 PM
நலம் நண்பரே. மீண்டும் வரமுடிந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

சாலைஜெயராமன்
07-01-2008, 03:54 PM
அன்பு நண்பர் திரு பாரதி அவர்களுக்கு.

மிகப் பயனுள்ள ஒரு தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி. நான் வழக்கமாக பழைய தமிழ் தட்டச்சு முறையில் அதிகம் பழகியிருப்பதால் எனக்கு புதிய முறைகளான E-kalappai போன்ற தட்டச்சு முறை மிகவும் தடுமாற்றத்தைத் தந்தது. ஆனால் பழைய தட்டச்சு முறையின் அனைத்து வசதிகளும் இதில் கிடைப்பதால் என்னால் மிக வேகமாக இணையத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. தட்டச்சும் செய்ய முடிகிறது. மேலும் பாமினி. தமிழ்99 போன்ற அனைத்து எழுத்துருக்களும் ஒரே மென்பொருளில் கிடைக்குமாறு அமைத்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. முன்மாதிரியாக எழுத்துக்களின் இடவரிசையையும் பார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் அதிவிரைவில் தட்டச்சு செய்ய மிக ஏதுவாக இருக்கிறது.

புதிய வருடத்திற்கான மிகச் சிறந்த பரிசாக இதைக் கருதுகிறேன். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

அன்பன் சாலைஜெயராமன்

பாரதி
07-01-2008, 04:29 PM
இந்த மென்பொருள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக்கண்டு மிக்க மகிழ்ச்சி. ஊக்கம் தரும் இனிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெயராமன்.

arsvasan16
08-01-2008, 06:47 AM
கண்டிப்பாக என் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.......

நானும் முயற்சி செய்கிறேன் ....

என் நண்பர்களுக்கும் சொல்லுவேன்.....

இது போன்ற மிகுந்த பயனுள்ள தகவல்கள் இங்கு மட்டுமே கிடைக்கிறது எனக்கு தெரிந்து.....

கம்யுட்டர் பற்றியும் அதில் தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும் நிறைய தகவல்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பதால்.....

என்றும் அன்புடன்......
உங்கள் நண்பன்........

ka.dhanasekar
24-01-2008, 05:46 PM
பயன்படும் மென்பொருள்

அரசன்
29-01-2008, 09:51 PM
பாரதி அண்ணா ரொம்ப நன்றி! இ-கலப்பை பிரச்சனை செய்த போது தமிழில் டைப் செய்ய முடியாமல் தவியாய் தவிச்சு போயிட்டேன். இப்போது இந்த மென்பொருள் மிகவும் வசதியாக இருக்கிறது. ரொம்ப நன்றி

Vanambadi
30-01-2008, 08:52 AM
ரொம்ப நன்றிங்க உங்களுக்கு! கூடுதலாக வைத்துக்கொள்கின்றேன்!

அக்னி
31-01-2008, 12:20 AM
இன்றுதான் இதனை தரவிறக்கி (அன்புரசிகன் சிபாரிசில்) வெள்ளோட்டம் பார்த்தேன்.
மிகவும் நன்றாக இயங்குகின்றது.

அமரன் பிரச்சினையே எனக்கும்...
எழுத்துக்கள் இடம் மாறி இல்லை. ஆனால் குறியீடுகள் இடம் மாறி இருப்பதனால், ஆரம்பத்தில் கடினமாக இருந்தது.
US-English தேர்வு செய்தே பாவிக்கின்றேன். தற்போது பழக்கமாகிவிட்டது.

பகிர்தலுக்கு மிக்க நன்றி பாரதி அண்ணா...

அன்புரசிகன்
31-01-2008, 06:12 AM
இதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது அந்த மணி போன்ன ஐகன் ஐ (startup bar) right click செய்து பார்த்தால் அதில் key preview என்று ஒன்று இருக்கும். அதன் மூலம் நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு key ற்கும் அது சம்பந்தமாக வரும் எழுத்துக்களை காட்டும்.

அக்னி
31-01-2008, 11:03 PM
இதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அதாவது அந்த மணி போன்ன ஐகன் ஐ (startup bar) right click செய்து பார்த்தால் அதில் key preview என்று ஒன்று இருக்கும். அதன் மூலம் நீங்கள் அழுத்தும் ஒவ்வொரு key ற்கும் அது சம்பந்தமாக வரும் எழுத்துக்களை காட்டும்.
இது (எனக்கு) முற்றிலும் புதிய தகவல்...
நன்றி ரசிகரே...

அன்புரசிகன்
01-02-2008, 06:23 AM
இ-கலப்பைக்கும் இந்த செயலிக்கும் சில வேறுபாடுகள் உண்டு. (பாமினி எழுத்துருவை கொண்டு சொல்கிறேன்) இ-கலப்பையில் யூ என்ற எழுத்திற்கு யு ஐயும் ா (h அரவு) அழுத்தினால் போதும். ஆனால்
இந்த செயலியை பொறுத்தவரை அவ்வாறு அல்ல. இந்த செயலி அச்சொட்டாக பாமினி எழுத்துருவை சார்ந்துள்ளது.

எல்லாம் தெரிந்து வருவதில்லை. ஒன்று கிடைத்தால் பிச்சு பிடுங்கவேண்டும். (குரங்கு கையில் பூமாலை போல்) எனக்கு இதனை அறிமுகப்படுத்தியவர் பாரதி அண்ணலே.... நன்றி அவருக்கு.

மயூ
01-02-2008, 07:58 PM
ஆமாம் இரசிகரே.. அத்துடன் எழுத்துக்களை மாற்றுவதானால் முழு எழுத்தையும் மாற்ற வேண்டும்!

அனுராகவன்
02-02-2008, 11:11 AM
நன்றி நண்பர் திரு பாரதி அவர்களுக்கு.
மிகவும் நன்றாக இயங்குகின்றது.

ஜெகதீசன்
07-02-2008, 03:48 PM
தகவலுக்கு நன்றி

kamalii
17-02-2008, 04:47 PM
மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள்...

அமரன்
17-02-2008, 06:55 PM
மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள்...
வாங்க தோழி! நல்வரவு!
உங்களைப் பற்றிய சிறுவிபரக்கோவையை உறுப்பினர் அறிமுகப்பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுத்து தொடர்ந்து இணைந்திருந்து மகிழ்வியுங்கள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

அமரன்
14-05-2008, 11:14 AM
இந்த செயலியை உபயோகிப்பதில் இருந்த சிரமங்கள், விஸ்டாவுக்கு மாறியதும் மறைந்து விட்டன. பிரென்சு, டச்சு என எல்லா விசைப்பலகைக்கும் ஒத்துழைக்கும் வகையில் விஸ்டா அமைந்துள்ளது. நெடுநாளைய யுனிக்கோட் தட்டச்சுச் சிரமம் தீர்ந்தது. மீண்டும் நன்றி அண்ணா.

அன்புரசிகன்
14-05-2008, 02:19 PM
இந்த செயலியை உபயோகிப்பதில் இருந்த சிரமங்கள், விஸ்டாவுக்கு மாறியதும் மறைந்து விட்டன. பிரென்சு, டச்சு என எல்லா விசைப்பலகைக்கும் ஒத்துழைக்கும் வகையில் விஸ்டா அமைந்துள்ளது. நெடுநாளைய யுனிக்கோட் தட்டச்சுச் சிரமம் தீர்ந்தது. மீண்டும் நன்றி அண்ணா.

East or West, VISTA is the BEST என்ற றேஞ்சுக்கு வந்திட்டீங்களே... உண்மைதான். ஆனால் இந்த செயலி எனக்கு XP ற்கும் திறம்பட செயற்பட்டது.... எனக்கு இ-கலப்பை விஸ்டாவில் மக்கர் பண்ணியது. ஆனால் பாரதி அண்ணாவின் தயவால் அது துலைந்துவிட்டது.

பாரதி
08-09-2008, 07:58 AM
நண்பர்கள் கூகிளின் குரோம் உலாவியில் தமிழை தட்டச்சுவதில் பிரச்சினை உள்ளது எனக்கூறி இருந்தார்கள். நியூ ஹாரிஜான் மீடியா நிறுவனத்தாரின் இப்போதைய பதிப்பு என்.ஹெச்.எம் ரைட்டர் மிகுந்த பயனளிக்கக்கூடியதாக உள்ளது.

1. இது கூகிள் குரோம், ஃபயர் ஃபாக்ஸ், சஃபாரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா முதலான உலாவிகளில் செயல்படக்கூடியது.

2. கோப்பின் அளவு 1 எம்.பிக்கும் குறைவாகத்தான் உள்ளது.

3. விண்டோஸ் 2003, எக்ஸ்பி, விஸ்டா இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது.

ஏற்கனவே முந்தைய பதிப்பு ரைட்டர் நிறுவப்பட்டுக்குமெனில் அதை நிறுத்தி, நீக்கி விட்டு புதிய ரைட்டரை நிறுவவும்.

பதிவிறக்க விரும்புபவர்கள்
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
சுட்டியைத் தட்டுங்கள்.

நன்றி: நியூ ஹாரிஜான் மீடியா

தீபா
08-09-2008, 08:41 AM
இன்று தரவிறக்கினேன். ஓபரா உலவியில் வேகமாக தட்டச்ச இயலாது. இ்ில் ஓரளவு பரவாயில்லை.

நன்றி திரு.பாரதி.

தீபன்
11-09-2008, 04:44 PM
நானும் இப்ப இதத்தான் பயன்படுத்துகிறேன். முன்னர் ஈ கலப்பை பயன்படுத்தியபோது முகவரி சட்டத்துள்ளோ அல்லது skype அரட்டையின்போதோ தமிழில் தட்டச்ச முடிந்தது... ஆனால் இப்போ அங்கு கேள்வி அடையாளம்தான் வருகிறது. ஆனால் மன்றத்திலோ word ஆவணங்களிலோ இலகுவாக இதை பயன்படுத்த முடிகிறது. என் பிரச்சினைக்கு தீர்வுண்டா...?

தீபா
12-09-2008, 04:41 AM
நானும் இப்ப இதத்தான் பயன்படுத்துகிறேன். முன்னர் ஈ கலப்பை பயன்படுத்தியபோது முகவரி சட்டத்துள்ளோ அல்லது skype அரட்டையின்போதோ தமிழில் தட்டச்ச முடிந்தது... ஆனால் இப்போ அங்கு கேள்வி அடையாளம்தான் வருகிறது. ஆனால் மன்றத்திலோ word ஆவணங்களிலோ இலகுவாக இதை பயன்படுத்த முடிகிறது. என் பிரச்சினைக்கு தீர்வுண்டா...?

இது உண்மையிலேயே தண்டம்.

இதில் இருவகை ஷார்ட்கட் கீகள் உண்டு. Alt வகை, Function Key வகை. இதில் எதைத் தேர்வு செய்தாலும் அவை மற்ற தொகுப்புகளில் வேலை செய்வதில்லை.

உதாரணத்திற்கு F3 ஒரு ஷார்ட்கட் என்றால் மற்ற Application களில் வழங்கியிருக்கும் F3 ஷார்ட்கட் வேலை செய்வதில்லை. சரி, Alt கீயை செலக்ட் செய்யலாம் என்றால், Alt சம்பந்தமான எந்த கீகளும் வேலை செய்வதில்லை.. வெறுத்துப் போய் மீண்டும் இ-கலப்பைக்கே வந்துவிட்டேன்.

நான் ஆப்பரா பயன்படுத்துகிறேன். அதில் "தமிழ்மன்றம்" என்று தட்டச்சினால் "டதமமஅழ்மன்றம்" என்று தான் இ-கலப்பையில் வரும். அந்த தொந்தரவு இந்த புதிய ரைட்டரில் இல்லை. ஆனால் அதற்காக மற்ற தொகுப்புகளின் ஷார்ட்கட் கீயை நான் விட்டுத்தருவதாக இல்லை.

ரவிசங்கர்
24-06-2010, 05:42 PM
நான் இ-கலப்பை கொண்டு தமிழ் 99 தட்டச்சு செய்கிறேன்.

இதில் முயன்று பார்க்கிறேன்.

நன்றி....நன்றி......நன்றி.

வாழ்த்துக்கள்.

ரவிசங்கர்
24-06-2010, 06:03 PM
உடனே முயற்சி செய்து பார்த்தேன்.

அருமை.....அருமை.....அருமை.

நன்றி,

வாழ்த்துக்கள்.

பால்ராஜ்
09-07-2010, 02:37 PM
பல ஆண்டுகளாக இ-கலப்பையிலேயே தமிழில் உழவு செய்து கொண்டு வருகிறேன்.. வெற்றியுடன்...!

தவறாகப் பயன்படுத்தினால் எந்த கருவியும் தவறான தீர்வுகளையும் தரக் கூடும்..
எனவே அவரவருக்கு ஏற்ற கருவிகளைப் பயன் படுத்தி மகிழ்வோம்.

அன்புரசிகன்
10-07-2010, 05:07 AM
இகலப்பை நல்லதொன்று தான். ஆனால் எனக்கு விஸ்டாவில் மக்கர் பண்ணியது. ஆனால் NHM நன்றாக வேலைசெய்தது.

அமரன்
10-07-2010, 09:50 AM
இந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.

பாரதி
10-07-2010, 03:39 PM
இந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.

அன்பு அமரன்,
பாமினி தட்டச்சு குறித்து நானறியேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாமினி தட்டச்சு முறையில் என்ன என்ன பிழைகள் நேருகின்றன என்ற பட்டியலைக் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றை சரி செய்யக் கோருகிறேன். நன்றி.

அமரன்
10-07-2010, 03:59 PM
அண்ணா..

உங்களிடம் இந்தச் செயலி உள்ளதல்லவா. அதில் தமிழ் பொனட்டிக்----->பாமினி தட்டச்சை தெரிவு செய்து வெர்டி 2007 ல் தட்டச்சிப் பாருங்கள். என்னால் விளக்கமாகச் சொல்ல இயலுமோ தெரியவில்லை.

தட்டச்சும் போது எனக்கு சில நேரங்களில் சரியாகிறது. பல நேரங்களில் க் என்ற எழுத்தில் க ஓரிடத்திலும் குற்று கொஞ்சம் தள்ளியும் இழுபட்டு வருகிறது.

இதேபோல கா வும் க தனியாகவும் அரவு தனியாகவும் பிஞ்சு வருது.

இதேபோல் அவ்வப்போது எல்லா எழுத்துகளும் வருது.

அன்புரசிகன்
10-07-2010, 05:21 PM
இந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.
எனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை. நீங்கள் ஏன் பொனடிக் -பாமினி முறையை வேர்ட்டில் பாவிக்கிறீர்கள்??? என்ன விசேட காரணம். உங்கள் தேவையை விளக்க கூறினால் உதவலாம்.

அமரன்
10-07-2010, 05:23 PM
எனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை. நீங்கள் ஏன் பொனடிக் -பாமினி முறையை வேர்ட்டில் பாவிக்கிறீர்கள்??? என்ன விசேட காரணம். உங்கள் தேவையை விளக்க கூறினால் உதவலாம்.

தனிமடலில் விபரமாகச் சொல்லுறேன்.

பாரதி
11-07-2010, 03:30 PM
பணி இடத்தில் என்னிடத்தில் ஆபிஸ் தொகுப்பு 2007 இல்லை அமரன். என்ன எழுத்துருவை தேர்ந்தெடுத்து தட்டச்சுகிறீர்கள்..? பிரச்சினை வரும் சமயத்தில் திரையை ஒரு படம் எடுத்து இணைக்க முடியுமெனில் நன்று.

அமரன்
16-07-2010, 10:57 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=18&pictureid=233

இதோ அண்ணா..

அதை விட எனது பிரெஞ்சு விசைப்பலகையில் எழுத்துகள் சரியாக தட்டச்ச இயன்றாலும் நிறுத்தற் குறிகள் முடிவதில்லை. அவை ஆங்கில விசைப்பலகை முறைமையில் இயங்குகின்றன. அக்னிக்கும் இந்தப் பிரச்சினைஉள்ளதென்றே எண்ணுகிறேன்.

அதாவது, எனது விசைப்பலகையில் இருக்கும் வினாக்குறியை அழுத்தினால் கால் புள்ளி தட்டச்சப்படுகிறது.

பாரதி
17-07-2010, 01:39 AM
மிக்க நன்றி அமரன்.

இப்பிரச்சினையை மென்பொருள் தயாரிப்பாளரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். அவரிடமிருந்து பதில் வரும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன்.

அன்புரசிகன்
17-07-2010, 01:53 AM
என்னுடைய கேள்விக்கு பதில் இன்னும் கிட்டவில்லை. வேர்டில் ஏன் பொனட்டிக்----->பாமினி முறையை தெரிவுசெய்ய வேண்டும்? காரணம் சொன்னால் அதற்கான மாற்றீடு முறையை சொல்லமுடிந்தால் சொல்வேன். யுனிக்கோடில் என்றால் பரவரயில்லை. என்ன மாதிரியான தேவைக்காக அந்த செயலியை பாவிக்கிறீர்கள்???

சுகந்தப்ரீதன்
03-08-2010, 12:37 PM
அண்ணா..

உங்களிடம் இந்தச் செயலி உள்ளதல்லவா. அதில் தமிழ் பொனட்டிக்----->பாமினி தட்டச்சை தெரிவு செய்து வெர்டி 2007 ல் தட்டச்சிப் பாருங்கள். என்னால் விளக்கமாகச் சொல்ல இயலுமோ தெரியவில்லை.

தட்டச்சும் போது எனக்கு சில நேரங்களில் சரியாகிறது. பல நேரங்களில் க் என்ற எழுத்தில் க ஓரிடத்திலும் குற்று கொஞ்சம் தள்ளியும் இழுபட்டு வருகிறது.

இதேபோல கா வும் க தனியாகவும் அரவு தனியாகவும் பிஞ்சு வருது.

இதேபோல் அவ்வப்போது எல்லா எழுத்துகளும் வருது.
அமரனுக்கு இருக்கும் அதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது ஆனால் வேறு வடிவில்..!! அதாவது இந்த செயலியை கொண்டு தட்டச்சும்போது ’தமிழ் பொனட்டிக்’ எனக்கு சரியாக வேலை செய்கிறது.. இப்போது அதை கொண்டுதான் தட்டச்சுகிறேன்..!! ஆனால் மற்ற எழுத்துருக்கள் ஏனோ எடக்குமுடக்காக ஏதேதோ வடிவில் வந்து விழுகிறது..!!

mojahun
13-08-2010, 04:22 PM
நான் குறள் தமிழ் செயலியை உபயோகிக்கிறேன். தாங்கள் பரிந்துரை செய்த உள்ளீடு மென்பொருளையும் உபயோகித்துப் பார்க்கிறேன். நன்றி.

mojahun
13-08-2010, 11:47 PM
தாங்கள் பரிந்துரை செய்த செயலி யுனிகோட் எழுத்துருவில் நன்கு தட்டச்சு செய்ய உதவுகிறது. ஆனால் குற்ள் தமிழ்ச் செயலியில் எந்த தட்டச்சு முறையையும், எந்த எழுத்துருவிற்கும் செயல் படுத்த இயல்கிறது.

அமரன்
13-08-2010, 11:51 PM
இந்தச் செயலியிலும் அனைத்து வகைத் தட்டச்சும் உண்டே ஹுசைன்.

rvijaychandar
01-01-2011, 05:54 PM
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்

அமரன்
03-10-2011, 08:57 PM
என் பிரச்சினை தீர்ந்தது.

நியம மொழி பிரெஞ்சு என இருப்பதால் எழுத்துகள் இழுபட்டு வருது. ஆங்கிலம் என நியமித்தால் தமிழ் இழுபடாமல் வருது.

vseenu
04-10-2011, 02:52 PM
நான் மைக்ரோசாப்ட்இன்டிக் language இன்புட் டூல் பயன்படுத்துகிறேன். உபயோகிப்பது மிகவும் எளிது.

rawangjohnson
06-10-2011, 06:40 AM
அண்ணா..

உங்களிடம் இந்தச் செயலி உள்ளதல்லவா. அதில் தமிழ் பொனட்டிக்----->பாமினி தட்டச்சை தெரிவு செய்து வெர்டி 2007 ல் தட்டச்சிப் பாருங்கள். என்னால் விளக்கமாகச் சொல்ல இயலுமோ தெரியவில்லை.

தட்டச்சும் போது எனக்கு சில நேரங்களில் சரியாகிறது. பல நேரங்களில் க் என்ற எழுத்தில் க ஓரிடத்திலும் குற்று கொஞ்சம் தள்ளியும் இழுபட்டு வருகிறது.

இதேபோல கா வும் க தனியாகவும் அரவு தனியாகவும் பிஞ்சு வருது.

இதேபோல் அவ்வப்போது எல்லா எழுத்துகளும் வருது.


பலருக்கு எழுத்துரு குழுமங்களுக்கும் தமிழ் விசை இயக்கிகளுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. இதற்கிடையில் இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தும்போது உண்டாகிற குளறுபடிகளுக்கு வேறு நாம் விடை தெரியாமல் தவிக்கிறோம்.

எழுத்துரு குழுமங்களைப் பொதுவாக இப்படிப் பிரக்கலாம்...

TAM
TAB
TSC
TSCII
BAMINI
UNICODE


நீங்கள் பாமினி எழுத்துரு வகைகளைப் பயன்படுத்தினால், தமிழ் எழுத்துக்கள் உடைந்தும் பிரந்தும் வருவதில் வியப்பில்லை. நீங்கள் பதிப்பில் இணைத்துள்ள திரையும் இதை நிரூபிக்கிறது. பாமினி எழுத்துருக்களைப் பொருத்த வரை ‘க்’ என்ற எழுத்து இரண்டு வடிவம் ஆகும். ஒன்று ‘க‘, மற்றொன்று ‘புள்ளி’. Format --> Font --> Advanced சென்று Character Spacing ஐ 90% அல்லது அதற்குக் குறைவாகவோ தேர்வு செய்து OK தட்டினால் பிரச்சனை ஓரளவு தீர்ந்த மாதிரி இருக்கும்.

ஆனால், இப்பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும் என்றால் நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களைத் தரவிரக்கம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் பாமினி விசைப் பலகை முறையைப் பயன்படுத்துகிறவர்கள் என்றுறு அனுமானிக்கிறேன். என்.எச்.எம் தமிழ் எழுதியைப் பயன்படுத்தி பாமினி முறையில் டைப் செய்யலாம். http://website.informer.com/visit?domain=azhagi.com என்ற தொடுப்புக்குச் சென்று உங்களுக்கு வேண்டிய யுனிகோட் எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த யுனிகோட் எழுத்துருவில் என்ன பிரச்சனை என்றால், அடோபி மற்றுறம் கோரல் செயலிகளில் பயன்படுத்த முடியாமைதான். எனவே, நீங்கள் இதன் பயன்பாட்டுக்கு TAM எழுத்துரக்களைப் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட தொடுப்பில் அந்த எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிறிது மனமாற்றமும முயற்சியும் இருந்தால் திருப்தியடையும் அளவில் தமிழ் கணிம வேலைகளைச் செய்யலாம். நன்றி

rawangjohnson
06-10-2011, 06:58 AM
அமரனுக்கு இருக்கும் அதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது ஆனால் வேறு வடிவில்..!! அதாவது இந்த செயலியை கொண்டு தட்டச்சும்போது ’தமிழ் பொனட்டிக்’ எனக்கு சரியாக வேலை செய்கிறது.. இப்போது அதை கொண்டுதான் தட்டச்சுகிறேன்..!! ஆனால் மற்ற எழுத்துருக்கள் ஏனோ எடக்குமுடக்காக ஏதேதோ வடிவில் வந்து விழுகிறது..!!

சுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ் உள்ளீட்டு முறையையும் வித்தியாசம் காண முடியாமல் குழப்படைகிறார். உங்கள் குழப்பம் இன்னதென்று புரிய வைக்க இப்படி ஒரு உவமானத்தைக் கூறுகிறேன்.

உதாரணமாக நீங்கள் என்ன இயங்கு தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், ஒருவேளை ‘விண்டோஸ் எக்ஸ்பி‘, ‘விண்டோஸ் விஸ்தா’, அல்லது ‘விண்டோ 7’ என்று பதிலுறைக்க வேண்டும். ஆனால், நீங்கள் ‘ஆபிஸ் 2001’ என்று பதிலுரைத்தால், இயங்கு தளத்திற்கும் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்), செயலிக்கும் (சாஃப்ட்வேர்) வேறுபாடு தெரியவில்லை அர்த்தம். உங்களுக்கு இந்த உவமானம் புரிகிறது என்றால், நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று அர்த்தம்.

நீங்கள் எந்த எழுத்துருவைப் பயன்படுத்தினாலும் (TAM, TAB, TSC, TSCII, BAMINI, UNICODE) Phonetic முறையில் டைப் செய்யலாம். மணிச் சின்னத்தில் (என்.எச்.எம்) கிளிக் செய்து தேவையான தேர்வை எடுத்துக் கொள்வதோடு, எழுத்துருவைக் காண்பிக்கும் பெட்டியில் தேர்வுக்கேற்ற எழுத்துருவையும் தேர்வு செய்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் டைப் செய்யலாம். உதாரணமாக Phonetic + Bamiini என்று மணிச்சின்னத்தில் தேர்வு செய்து கொண்டு, எழுத்துரு பெட்டியில் Tamil Canadianஐ தேர்வு செய்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் டைப் செய்யலாம். அதே போல் Phonetic + Unicodeஐ தேர்வு செய்து கொண்டு, எழுத்துருப் பெட்டியில் TAU Elango Barathiஐ தேர்வு செய்தால் யுனிகோட் எழுத்துருக்களை பாமினி விசைப்பலகை முறைமையில் டைப் செய்யலாம்.

நான் தமிழில் டைப் செய்வதற்கு டைப்ரைட்டர் முறையைப் பயன்படுத்துகிறேன். என் கணினியில் நூற்றுக் கணக்கான (சுமார் 1000) தமிழ் எழுத்துருக்கள் இருக்கின்றன. TAM, TAB, TSCII, Bamini, Unicode என்று எல்லா எழுத்துருக்களையும் இணையத்தில் இருந்து பதிவிறக்கிப் பயன்படுத்துகிறேன். எதிலும் பிரச்சனை ஏற்படவில்லை. எனவே, நான் எழுதிய வழிமுறையைப் பயன்படுத்திப் பாருங்கள். பிரச்சனை ஏற்பட்டால் இங்கே எழுதுங்கள். முடிந்தால் மேலும் ஆலோசனை கூறுகிறேன்.