PDA

View Full Version : மனிதர்கள்!!!

aren
03-01-2008, 07:32 AM
வேர்கள்
தண்ணீரை நோக்கியே
தன் கவனத்தைச்
செலுத்தும்!!!

துளிர்கள்
வானத்தை நோக்கியே
தன் கவனத்தைச்
செலுத்தும்!!!

தண்டுகள்
தன் பரப்பளவை அதிகரிப்பதிலேயே
தன் கவனத்தைச்
செலுத்தும்!!!

பூக்கள்
வளர்ந்து காயாகி, கணியாவதிலேயே
தன் கவனத்தைச்
செலுத்தும்!!!

மரம் முழுவதுமாக
மற்றவர்களுக்கு
குறிப்பாக மனிதர்களுக்கு
ஏதாவது உதவிகள்
செய்வதிலேயே
தன் கவனத்தைச்
செலுத்தும்!!!

ஏன் மனிதன் மட்டும்
அதை அழிப்பதிலேயே
தன் கவனத்தைச்
செலுத்துகிறான்!!!

aren
03-01-2008, 07:33 AM
இந்த இரண்டு வாரத்தில் எழுதியவைகளில் இது ஒன்றே என் கணிணியில் சேமித்துவைத்திருந்தேன். மற்றது எல்லாம் போய்விட்டது. யாராவது சேமித்து வைத்திருந்தால் இங்கே பதிவு செய்யவும்.

அமரன்
11-01-2008, 08:41 AM
மரங்கள் மற்றவர்களுக்காக வாழ்கின்றன.
மனிதன் தனக்காவே அதிகம் வாழ்கின்றான்..

தன்னை விட உயர்ந்தவை உலகில் இருக்கக்கூடாது என்ற மனப்பாங்கு காரணமாக இருக்கலாம்..

நல்ல கவிதைக்கு பாராட்டுகள் அண்ணா.

சிவா.ஜி
12-01-2008, 07:10 AM
ஆம் அமரன் சொன்னதைப் போல தன்னைவிட உயர்ந்த ஒன்றை அழிப்பதில் மனிதனுக்கு பெரும் சந்தோஷம்தான்.சொன்ன விதம் அருமை ஆரென்.வாழ்த்துகள்.

செல்வா
12-01-2008, 07:29 AM
நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா....... நன்றாக வந்திருக்கிறது ஆனால் கருத்து எனக்கு உடன் படவில்லை. மரமும் தான் வாழ்வதற்காக நீரையும், தாதுக்களையும் மண்ணிலிருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. பெரியமரங்களின் நிழலில் வாழ முடியாமல் அழிந்து போன சிறுமரங்களும் இருக்கின்றன. மனிதன் மரம் வெட்டுவதை குறை சொல்ல முடியாது வெட்டியபின் நடாமல் போவதுதான் தவறு. கவிதை மிக எளிமையாக இருக்கிறது ஆரென் அண்ணா. சற்று சந்த நயங்களிலும் சிந்திக்கலாமே...

மனோஜ்
12-01-2008, 08:07 AM
மனிதன் மரங்களுக்கு உதவ அவற்றை வெட்டினாலும் அதற்கு பதிலாய் ஒன்றை வளர்க்க வேண்டும் வெட்டுவது தோவைக்கு அந்த தோவை அழியாமல் இருக்க இந்த உதவி
கவிதை அருமை அண்ணா நன்றி:icon_b:

aren
12-01-2008, 02:03 PM
நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா....... நன்றாக வந்திருக்கிறது ஆனால் கருத்து எனக்கு உடன் படவில்லை. மரமும் தான் வாழ்வதற்காக நீரையும், தாதுக்களையும் மண்ணிலிருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. பெரியமரங்களின் நிழலில் வாழ முடியாமல் அழிந்து போன சிறுமரங்களும் இருக்கின்றன. மனிதன் மரம் வெட்டுவதை குறை சொல்ல முடியாது வெட்டியபின் நடாமல் போவதுதான் தவறு. கவிதை மிக எளிமையாக இருக்கிறது ஆரென் அண்ணா. சற்று சந்த நயங்களிலும் சிந்திக்கலாமே...

நன்றி செல்வா.

மரம் இன்னொரு மரத்தை அழித்தால் அது சர்வைவல் நிலை, அப்படி செய்யவில்லையானால் அது அழிந்துவிடும், ஆனால் மனிதர்களுக்கு அந்த நிலையில்லை.

சந்த நயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்தால் நான் ஏன் இப்படி எழுதுகிறேன். அந்த அளவிற்கெல்லாம் அறிவுகிடையாதுசாமி எனக்கு.

அறிஞர்
12-01-2008, 05:01 PM
ஒரு பக்கம் வளர்ச்சியில் கவனம்..
மறு பக்கம் அழிப்பதில் கவனம்...
இது தான் வாழ்க்கை.....

அருமை.. ஆரென்