PDA

View Full Version : என் காதல் கடிதம்.ஆதி
03-01-2008, 07:25 AM
மற்றொரு இரவும் கழிகிறது
மாற்றங்களின் ஊடே
எந்த மாற்றமும் இல்லாத
இன்னொரு நாளாய்..

இன்னும் கவனிபாரற்று
உன் இல்ல முகப்பில்
கழட்டிவிடப் பட்ட
காலணிகளின் ஊடே
கிடக்கிறது
என் இதய அஞ்சல்..

..

ஊரெல்லாம் சுற்றிவிட்டு
மீள வருகிற எண்ணங்கள்
உதறிவிட்டுப் போகின்றன
உன் நினைவுகளை..

..

ஒவ்வொரு நினைவுகளும்
உன் முகமூடி அணிந்து கொண்டு
என்னை எதிர்த்துப் பேசுகின்றன..

..

நீ என்னை
எவ்வளவு காயப்படுத்தினாலும்
உனக்கு சாதகமாய்தான்
பேசுகிறது
என் மனம்
என்னிடம்..

..

என்னை மட்டும் காதல்
தன் துட்ட தேவதைகளால்
ஆசீர்வதித்ததா ?

..

என் காதல்
நெருப்பு
நரக குழிகளில் இருந்து
உயிர் கொண்டதா ?

..

நீ
என் மகிழ்ச்சியா ?
கண்ணீரா ?

...

எனக்கு தெரிந்த விதத்தில்
எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
நீ மௌனத்தை மட்டும்
தான் பேசிபோகிறாய்

..

உன்னையும் மீறி
நீ
உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
வந்து விழுகின்றன
உளியும் சுத்தியலுமாய்
என்மீது..

என் சிற்பியே
நீயே கூறு
நான்-
சிலையா ?
அம்மிக்கல்லா ?

-ஆதி

.

சுகந்தப்ரீதன்
03-01-2008, 07:44 AM
எனக்கு தெரிந்த விதத்தில்
எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
நீ மௌனத்தை மட்டும்
தான் பேசிபோகிறாய்

முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!

ஆர்.ஈஸ்வரன்
03-01-2008, 08:50 AM
அது முடியும்போது தொடங்கும்!
நீ தொடங்கும்போது முடியும்...!!

ஆதி
13-02-2008, 12:26 PM
முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!

உண்மைதான் சுகந்தா கைகளைப் பொருத்தான் இருக்கிறது கல்லும் காதலும் சிற்பமாவதும் அம்மியாவது..

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சுகந்தா..

அன்புடன் ஆதி

ஓவியா
13-02-2008, 12:30 PM
முயற்சி அனைத்தும் முடிவின்றி மௌனமாய் போனதோ...?! ஆதியாரே...! சிலையோ அம்மியோ..செதுக்குபவன் சிற்பிதான்..! அதுபோல.. மௌனமோ...வார்த்தையோ.. காதலிப்பவள் காதலிதானே..?! கையில்(காதலில்) சிக்கும் இடத்தை பொருத்துதான் சிலையாவதும் அம்மியாவதும் இல்லையா ஆதியாரே..?! வாழ்த்துக்கள் நண்பரே...!

அடடே சுகந்தா,
இதென்ன மிகவும் முதிர்ச்சியான வரிகள்.
நீர் சின்ன பிள்ளை :icon_rollout: என்றுதான் நான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் படித்ததும் அசந்து போனேன். அசத்துரப்பா. :icon_b:

யவனிகா
13-02-2008, 12:57 PM
மற்றொரு இரவும் கழிகிறது
மாற்றங்களின் ஊடே
எந்த மாற்றமும் இல்லாத
இன்னொரு நாளாய்..


ஒரு நாள் உதிக்கக்கூடும்
உனக்கென்று தனித்த சூரியன்
ஆதி என்று பேரைச் சொல்லி
அசைந்து தழுவும் காற்று...என்னை மட்டும் காதல்
தன் துட்ட தேவதைகளால்
ஆசீர்வதித்ததா ?


காதலின் பழக்கம் அது..
முதலில் அது துட்ட தேவதைகளைத் தான் அனுப்பும்...
அப்புறம் வெண்ணிற தேவதைகள் எதிர்பாராத விடியலில்
உன் வாசல் கதவு தட்டும்...என் காதல்
நெருப்பு
நரக குழிகளில் இருந்து
உயிர் கொண்டதா ?

காதல் நெருப்பு...தொட்டுபார்...
தீக்குள் விரலை விட்டால்
தீண்டும் இன்பம் தோன்றும்,,
வடு கூட சுகமாய் ஏதோ சொல்லிச்செல்லும்...


உன்னையும் மீறி
நீ
உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
வந்து விழுகின்றன
உளியும் சுத்தியலுமாய்
என்மீது..


-ஆதி

இன்னும் உடைந்து போகாமல் இருக்கிறாயே
ஒருநாள் அடைந்து தீருவதற்கு முதல் படி இதுதான்...

என் சிற்பியே
நீயே கூறு
நான்-
சிலையா ?
அம்மிக்கல்லா ?

-ஆதி

அவள் சொன்னாள் ஆதி...
நீ அம்மிக்கல்லாய் ஆனால் கூட
அவள் கால் மிதித்து அருந்ததி பார்க்கும்
தருணம் சிற்பமாய் போவாயாம்...

சிவா.ஜி
13-02-2008, 01:07 PM
கொடுத்து வைத்தவரய்யா இந்த கவிதையின் நாயகன்.
வந்து விழும் வார்த்தைகளெல்லாம் உளியாய் அவரை செதுக்கியிருக்கிறதே...அதனால்தான் இன்னும் உடைந்து போகாமல்...வரும் விடியலுக்கு காத்திருக்கும் உறுதி வாய்த்திருக்கிறது.

அழகான இந்த கவிதையும்,அதற்கான சுபி,யவனிகா இவர்களின் பின்னூட்டங்களும்..ஆஹா...ரசிக்க வைத்து விட்டது.ரசித்து வாழ்த்துகிறேன்.பாராட்டுகள் ஆதி.

பூமகள்
13-02-2008, 04:13 PM
ஆதியின் அற்புத
கவித்தேரில்
அழங்கார தோரணமாய்
சுகந்தப்ரீதன், யவனியக்கா
பின்னூட்டம்.. நெஞ்சில்
தேனூட்டம்..
பேச்சிழந்து நான்..!

அம்மி மிதிக்க :D:D
அரிவை வந்து
இல்லறம் அமைய
வாழ்த்துகள்..!! :)

அமரன்
14-02-2008, 07:35 AM
இன்னும் கவனிபாரற்று
உன் இல்ல முகப்பில்
கழட்டிவிடப் பட்ட
காலணிகளின் ஊடே
கிடக்கிறது
என் இதய அஞ்சல்..

தபால்காரன் சரியில்லையோ.
வாசலில் வீசி சென்றுவிட்டானே..
சாத்வீகமாக
நுழைத்து சென்றிருக்ககூடாதோ

வீட்டுக்குள் யாருமில்லையென்ற
அனுபவம் இல்லாதவனோ?
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இதய அஞ்சல் பிரிப்பதற்காக?

(யாருக்கு தெரியும்
செருப்புகள் மறைத்தும் இருக்கலாம்
அஞ்சலை)

அனுராகவன்
16-02-2008, 10:17 AM
மற்றொரு இரவும் கழிகிறது
மாற்றங்களின் ஊடே
எந்த மாற்றமும் இல்லாத
இன்னொரு நாளாய்..

இன்னும் கவனிபாரற்று
உன் இல்ல முகப்பில்
கழட்டிவிடப் பட்ட
காலணிகளின் ஊடே
கிடக்கிறது
என் இதய அஞ்சல்..
அஞ்சல் அனுப்ப தபால் காரான் வரவில்லையோ..
அது சற்று முற்பட்ட காலமோ..ஊரெல்லாம் சுற்றிவிட்டு
மீள வருகிற எண்ணங்கள்
உதறிவிட்டுப் போகின்றன
உன் நினைவுகளை..

..

ஒவ்வொரு நினைவுகளும்
உன் முகமூடி அணிந்து கொண்டு
என்னை எதிர்த்துப் பேசுகின்றன..

ஓ எண்ணத்திற்கு அவ்வளவு வலிமையோ..
அப்ப எண்ணத்தை காக்க வேண்டும் போல..

..


நீ என்னை
எவ்வளவு காயப்படுத்தினாலும்
உனக்கு சாதகமாய்தான்
பேசுகிறது
என் மனம்
என்னிடம்..

..

என்னை மட்டும் காதல்
தன் துட்ட தேவதைகளால்
ஆசீர்வதித்ததா ?

..

என் காதல்
நெருப்பு
நரக குழிகளில் இருந்து
உயிர் கொண்டதா ?

..

நீ
என் மகிழ்ச்சியா ?
கண்ணீரா ?

...

எனக்கு தெரிந்த விதத்தில்
எல்லாம் பேசிப் பார்த்துவிட்டேன்
நீ மௌனத்தை மட்டும்
தான் பேசிபோகிறாய்

..

உன்னையும் மீறி
நீ
உதிர்த்துப்போகிற சில வார்த்தைகள்
வந்து விழுகின்றன
உளியும் சுத்தியலுமாய்
என்மீது..

என் சிற்பியே
நீயே கூறு
நான்-
சிலையா ?
அம்மிக்கல்லா ?

-ஆதி

ஆகா ஆதியே..
காதலுக்கு உள்ள சக்தி மிக வலிமையானது..
உங்கள் காதல் நிறைவேறி
கரம் பிடிக்க என் வாழ்த்துக்கள்..

ஆதி
18-02-2008, 02:09 AM
அது முடியும்போது தொடங்கும்!
நீ தொடங்கும்போது முடியும்...!!

நீ முடிக்கும் இடத்தில்
நான் துவங்கிறேன்..

அப்துல் ரகுமானின் வரிகளை ஞாபகமூட்டி செல்கின்றன் உங்கள் பின்னூட்டம்..

நன்றி ஈஸ்வரன்


அன்புடன் ஆதி

ஆதி
19-02-2008, 05:30 AM
ஒரு நாள் உதிக்கக்கூடும்
உனக்கென்று தனித்த சூரியன்
ஆதி என்று பேரைச் சொல்லி
அசைந்து தழுவும் காற்று...காதலின் பழக்கம் அது..
முதலில் அது துட்ட தேவதைகளைத் தான் அனுப்பும்...
அப்புறம் வெண்ணிற தேவதைகள் எதிர்பாராத விடியலில்
உன் வாசல் கதவு தட்டும்...காதல் நெருப்பு...தொட்டுபார்...
தீக்குள் விரலை விட்டால்
தீண்டும் இன்பம் தோன்றும்,,
வடு கூட சுகமாய் ஏதோ சொல்லிச்செல்லும்...
இன்னும் உடைந்து போகாமல் இருக்கிறாயே
ஒருநாள் அடைந்து தீருவதற்கு முதல் படி இதுதான்...


அவள் சொன்னாள் ஆதி...
நீ அம்மிக்கல்லாய் ஆனால் கூட
அவள் கால் மிதித்து அருந்ததி பார்க்கும்
தருணம் சிற்பமாய் போவாயாம்...

அக்கா நெகிழ வைச்சிடீங்கா உங்கள் பின்னூட்டதால்.. படிக்கும் பொழுது சரம் சரமாய் கண்களில் கண்ணீர்.. கடைசி வரி உருகிபோனேன் அக்கா.. அம்மி ஆனாலும் சிற்பமானலும் கவலையில்லை அவள் கை தொடும் கல்லாய் பிறந்ததில் மகிழ்ச்சியே..

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா..

அன்புடன் ஆதி