PDA

View Full Version : வெடித்த வயல்சிவா.ஜி
03-01-2008, 06:32 AM
முப்போகம் விளைந்து
முன்னவரைக் காத்த
மண்ணவள்.....
ஈரமிழந்து இறுகி...இன்று
கோரமாய்த் தெரிகிறாள்!

சுரந்து வற்றிய மடியாய்
பரந்து கிடக்கும்
வெடித்த வயல்!
பயிர் விளையா பருவத்தில்
காசழுத்தம் குறைந்ததால்
வீட்டிலடிக்கும் புயல்!

விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....
இயற்கையும் மனிதனும்
இணைந்து நடத்திய கொலை!
இதற்கு உழவனின்
உயிர்தானா விலை?

ஆர்.ஈஸ்வரன்
03-01-2008, 08:48 AM
விரும்பிப் பெற்ற விவசாயம்

விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....

என்ன செய்வது

ஆதவா
06-01-2008, 04:38 AM
விவசாயிகளின் தற்கொலைக்கு இயற்கைக் கொலைகளே காரணம்.. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் நன்று.

காசழுத்தம் குறைந்தால் - விவசாயிக்கு மட்டுமல்ல, எல்லாருடைய வீட்டிற்கும் புயல் அடிக்கும்... வயலுக்குப் பதில் வேலைகளை ஒப்பிட்டால்.

மனிதன் முடித்த கொலைகளுக்கு இயற்கை என்ன செய்யும் பாவம்.. முன்னவரைக் காத்த மண்ணவளுக்குத் துணையாக இருந்த வனங்கள் இன்று எங்கே போயினவாம்?

கவிதை சொன்னது மிக அருமையான கரு...

சிவா.ஜி
06-01-2008, 04:43 AM
விரும்பிப் பெற்ற விவசாயம்

விரும்பாது பெற்ற
விவசாயி நிலை....

என்ன செய்வது
விரும்பிப் பெற்றதுதான் விவசாயம்...ஆனால் என்ன செய்ய அது சாயமிழந்த சட்டையாக சவலைப் பிள்ளையாக மாறியதால் காயம் அடைந்தவன் உழவனல்லவா?

நன்றி ஈஸ்வரன்.

சிவா.ஜி
06-01-2008, 04:46 AM
மனிதன் முடித்த கொலைகளுக்கு இயற்கை என்ன செய்யும் பாவம்.. முன்னவரைக் காத்த மண்ணவளுக்குத் துணையாக இருந்த வனங்கள் இன்று எங்கே போயினவாம்?

..

வனங்களை அழித்த மனிதன் கூடவே வளங்களையும் அழித்து அவனுக்கு அவனே கல்லறைக் கட்டிக்கொள்கிறான்.

நாளை இவன் அழிவுக்கு கண்ணீர் விட மழைகூட மண்ணில் விழாது.

நன்றி ஆதவா.

அமரன்
06-01-2008, 08:48 AM
ஞாயமான கேள்வி. போகம் பொய்த்ததால் விவசாயி தற்கொலை. உழைப்புக்கேறப ஊதியமின்மையால் உளைச்சலில் உழவர்கள். கட்டம் கட்டமாக எத்தனை செய்திகள்.

புலவர்கள் பலர் வந்தனை செய்தவர்கள் நிலை கவலைக்கிடம். கவிக்கோ சொன்னார் " மண் தாயின் எதிர்ப்பதம்" என்று. தாயை சீரழிப்பவர்களின் வினைப்பயனை எல்லாரும் அனுபவிக்கின்றார்கள்..

கருச்சிதைவு பற்றி கருச்சிதையாத கவிதை.:icon_b:

சிவா.ஜி
06-01-2008, 09:01 AM
நன்றி அமரன்.நிலம் வெறும் மண் அல்ல தாய் என்று சொன்னது முற்றிலும் உண்மை.பெற்ற தாயையே தவிக்கவிடும் பிள்ளைகள் வாழும் இந்த உலகில் இந்த நிலமாதாவை நினைத்துப் பார்ப்பவர் சிலரே.

ஆதி
07-01-2008, 06:25 AM
வெடித்த வயல்கண்டு
வெடிக்கும் நெஞ்சு
நீட்டும் சுட்டுவிரல்
இயற்கையையும்
அரசியல் அரங்கத்தையும்
நோக்கி..

தேசியக் கொடியும்
உழவனும் ஒன்றுதான்
அவன் விளைத்தப்
பயிர்ப் பச்சை
அவன் மனது வெண்மை
அவன் வறுமை நெருப்பின்
நிறம் காவி..

அதற்காக உழவனை
தேசியக் கொடிப்போல்
தூக்கில் தொங்க விடாதீர்கள்..

முதுகு எழும்பை..
வறுமை அடுப்பில்
விறகு ஆக்கிவிடாதீர்கள்..

அருமை சிவா.ஜி அண்ணா..

உங்கள் கவிதையில் நான்
பாவேந்தரையும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும்
பார்க்கிறேன்..

பாராட்டுக்களும்..
விவசாயிகளின் கண்ணீர் தீர
பிராதனைகளும்..

தை அவர்களுக்கு
இனிதாய் பிறக்கட்டும்..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
07-01-2008, 06:31 AM
ஆம் ஆதி இந்த தையாவது அவர்களின் கிழிந்த வாழ்வை தைக்கட்டும்.
நன்றி ஆதி.

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:32 AM
வயலோடு சேர்த்து வாழ்க்கையும் வெடித்த கொடுமை..!! அதை கருவாக்கி கவிதையாய் உருவாக்கியது அருமை அண்ணா..!!

நாட்டின் முதுகெலும்பு முறிந்து கொண்டிருக்கிறது... இப்போதும் கவனிக்காவிட்டால் நாளை நாடே முடமாகத்தான் போகும்..!!

பின் உண்ணும் உணவுக்கே அயலானிடம் அழுது பிச்சை எடுக்க வேண்டிவரும் அவலநிலை..!! இனியாவது உணரப்படுமா விவசாயின் வேதனையையும் அவசியத்தையும் இங்கே.. ஏக்கத்துடன் நானும்..!!

அனுராகவன்
03-02-2008, 03:34 AM
ம்ம் நல்ல கவி தோழரே..
என்ன செய்வது இயற்கை வழிக்காட்டும்..
பொருத்திருந்து பார்ப்போம்..

சிவா.ஜி
03-02-2008, 03:38 AM
இயற்கை என்றுமே ஈகை குணம் உள்ளது.ஆனால் அதனையும் கெடுப்பதில் மனிதன் முன்னிலை வகிக்கிறான்.மனிதன் இயற்கைக்கு செய்யும் துரோகத்துக்கு ஈடாகத்தான் இயற்கையும் சில சமயங்களில் தன் கோர முகத்தைக் காட்டிவிடுகிறது.
நீங்கள் சொல்வதைப்போல அடுத்த தலைமுறையாவது இதை உணர்ந்து செயல்படுமா என காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.நன்றி அனு.

இளசு
12-02-2008, 10:05 PM
என்னை முணுக்கென கண்ணில் நீர் கோர்க்க வைக்கும் கோரக்காட்சிகளில்
நீர் வற்றி வெடித்த விளைநிலக் காட்சி தலையானது..

இங்கே சிவாவின் கவிதையால் மீண்டும் அக்காட்சி மனதில் வந்து.....

கண்ணீரால் மட்டும் நிலத்தைக் குளிரவைக்க முடியுமானால்????

சிவா.ஜி
13-02-2008, 03:31 AM
கண்ணீரால் மட்டும் நிலத்தைக் குளிரவைக்க முடியுமானால்????

கழனி கண்ணீரில் முழுகும்....அதில் அந்த கழனியிட்ட உப்பே உரமாக இருக்கும்.

M.Jagadeesan
20-01-2013, 02:42 PM
எப்போதோ எழுதிய கவிதை என்றாலும், இப்போதும் பொருந்துகிறது. பாராட்டுக்கள் சிவா.ஜி !