PDA

View Full Version : குளிரோடு கொஞ்சநாள்!(அனுபவக் கட்டுரை)-4சிவா.ஜி
03-01-2008, 06:21 AM
பாகம்-1
நான் ஈடுபட்டுள்ள பணியின் தன்மையால் பல நாடுகளுக்கும் சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.அவற்றில் ஒன்றான கஜகஸ்தான் நாட்டில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு எனக்கு பலவிதமான அனுபங்களை பணியினூடே பனியுடன் கொடுத்தது.

சென்று இறங்கிய இடம் அல்மாட்டி என்றழைக்கப்படும் இந்த நாட்டின் முன்னாள் தலைநகர்.அழகு கொஞ்சும் நகரம்.சாலையோரங்களில் மின்னினைப்பை மண்டை வழியே ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் ஓடித்திரியும் பேருந்துகள் பார்க்கவே அழகு.நகரத்தை இரு கைகளாலும் அணைத்தமாதிரியான பனிமலை.துடைத்துவிட்டதைபோல என்று சொல்வார்களே அதை இங்கு நிஜமாகவே செய்கிறார்கள்.ஆம்...தினமும் அதிகாலையில் சாலைகளை கழுவி விடுகிறார்கள்.அங்கிருந்து என்னுடைய பணியிடம் போவதற்கான விமானம் இரண்டு நாட்களுக்குப் பிறகு என்பதால் நன்றாக சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது.நான் எங்கு போனாலும் என் அழைப்புக்காக காத்திருக்கும் என் வீட்டின் எஜமானிக்கு உடனே அழைத்து பேசுவது வழக்கம்.எனவே கையோடு கொண்டு போயிருந்த அமெரிக்க டாலர்களை அந்த நாட்டு பணமாக(டிங்கே என்பது அந்த பணத்தின் பெயர்)கொஞ்சம் மாற்றிக்கொண்டு,தங்கியிருந்த இடத்துக்கு அருகிலிருந்த தபால் நிலையத்திலிருந்த தொலைபேசி சேவையைப் பயன்படுத்தலாமென்று போனேன்.பேசி முடித்தபிறகுதான் பணம் கொடுக்க வேண்டுமென்பதால் அந்த ஆபத்தை முன்னமே அறிய முடியவில்லை.

பின்ன ஆபத்தில்லாம என்னங்க...இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாய் நான் கொஞ்சியிருந்தாலும் நான் போட்டிருந்த துணியைக் கூட உருவி விட்டு அனுப்பியிருப்பார்கள்.அநியாயத்துக்கு தொலைபேசி கட்டணம்.ஒரு நிமிடத்துக்கு 3 1/2 டாலர் கட்டணம்.ஒரு டாலருக்கு 145 டிங்கே.நான் பந்தாவாக மாற்றி எடுத்துக்கொண்டு போயிருந்த 1450 டிங்கேயில் 3 நிமிடம்கூட பேச முடியாது.எப்போதோ நான் ஏதோ ஒரு தெருநாய்க்கு பொறை வாங்கிப்போட்ட புண்ணியம் இரண்டரை நிமிடத்தில் என் தொலைபேசிப் பேச்சு முடிவடைந்திருந்தது.அதனால் கௌரவத்தோடு திரும்பி வந்தேன்.அதே போலத்தான் உணவுவகைகளின் விலையும்.இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அங்கு எந்த உணவுவிடுதியிலும் தண்ணீரே வைப்பதில்லை.கேட்டால் மட்டும் விலைக்கு கொடுக்கிறார்கள்.அதுவும் CARBONATED WATER என்ற சோடாதான்.அரிசிச் சோறும் கிடைப்பது கஷ்டம்.கிடைத்தாலும் திருமனமான புதிதில் என் மனைவி வடித்துக் கொடுத்த அரைவேக்காட்டு சாதத்தை போலத்தான் கிடைக்கும்.அதற்கு குழம்பு என்ற வஸ்துவெல்லாம் எதுவுமில்லை.தொண்டை விக்குற அளவுக்கு வற வறவென்ற அந்த வெள்ளச் சாதத்தைத்தான் சாப்பிடவேண்டும்.இருப்பதிலேயே மிகக் குறந்த விலைக்குக் கிடைப்பது வோட்காதான்.நம்ம ஊர் பணத்துக்கு 60 ரூபாயில் ஒரு லிட்டர் கிடைக்கும்.அதுக்காக குடிக்கிற தண்ணீருக்கு பதிலா இதையா குடிக்க முடியும்?தண்ணீர்(சோடாதாங்க) ஒரு குப்பி 120 ரூபாய்.நல்லவேளை என்னுடைய நிறுவனமே ஒரு கார்ட்டன் மினரல் வாட்டர் கொடுத்தார்கள். பிழைத்தேன்.

அங்கு இருந்த இரண்டு நாளும் ஆசைதீர அலைந்து திரிந்து அநேக இடங்களைப் பார்த்தேன்.எங்கு பார்த்தாலும் பெண்கள்.எல்லா வேலையிலும் பெண்கள்.ஏன் ஆண்களே இல்லையா என்றால்...இருக்கிறார்கள்...ஆனால் பெண்களைவிட குறைந்த சதவிகிதத்தில்.அவர்களும் எந்த நேரத்திலும் மப்பும் மந்தாரமுமாகவே அலைகிறார்கள்.பெண்கள் கடும் உழைப்பாளிகள்.நம்ம ஊர் கதாநாயகிகளெல்லாம் கறுப்பு என்று சொல்லும்படியான அப்படி ஒரு நிறம்.மஞ்சள் கலந்த,சிவப்பு சேர்ந்த வெள்ளை.முகம்தான் மங்கோலிய முகங்கள்.அதன் கதையை பிறகு சொல்கிறேன்.நம்ம ஊரில் மூலைக்கு மூலை பெட்டிக்கடை இருப்பதைப் போல அங்கே பியர் கடைகள் இருக்கின்றன.வித்தியாசமான முறையில் அமைந்த அந்த கடைகள் ஒரு ஆச்சர்யம்.பூமியில் குழி தோண்டி மரத்தாலான பெரிய சைஸ் பீப்பாயை அதில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.அதனுள் பியரை ஊற்றி வைத்து..மேலே ஒரு மோட்டாரை வைத்து அதில் குழாய் இணைத்து ஈரத்துணி சுற்றி வைத்திருக்கிறார்கள்.கேட்பவர்களுக்கு ஒரு பெரிய MUG-ல் பிடித்துக் கொடுக்கிறார்கள்.அங்கேயும் விற்பனையாளர் பெண்தான்.

இரண்டு நாள் ஊர் சுற்றலுக்குப் பிறகு பணியிடத்துக்குப் போவதற்காக விமானநிலையம் போனேன்.டிக்கெட்டைக் கொடுத்து போர்டிங்க் பாஸ் கேட்டதற்கு ரஷ்யன் மொழியில் என்னவோ கதைத்தார் அந்த பேரிளம்பெண்.பக்கதிலிருந்தவர் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்தார்.போர்டிங் பாஸெல்லாம் கிடையாது.விமானத்துக்குள் சென்று விருப்பப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.விமானத்துக்குள் செல்வதற்கான அறிவிப்பு வந்ததும் டவுன் பஸ்ஸில் இருக்கைக்கு அடித்துக்கொள்வதைப் போல அனைவரும் ஓடியதைப் பார்க்கும்போது நாம் போவது நிஜமாகவே விமானம்தானா என்ற சந்தேகம் எழுந்தது.ஆனால் நான் பயணம் செய்யப் போகும் அந்த விமானத்தைப் பார்த்ததும் சந்தேகம் போய் பயம் வந்து விட்டது.

தொடரும்

சிவா.ஜி
03-01-2008, 06:25 AM
பாகம்-2
இரண்டாம் உலகப்போரில் உபயோகித்த விமானமாயிருக்குமென்று நினைக்கிறேன்.அருதப் பழசு.அது மட்டுமல்ல அந்த சமயத்தில்தான் தில்லியிலிருந்து புறப்பட்ட சவுதியா விமானத்தின் மீது கஜகஸ்தான் விமானம் மோதியது நினைவுக்கு வந்து தொலைத்தது.அதுவும் ஆங்கிலம் புரியாததால் ஏற்பட்ட விபத்து என்பது கூடுதல் பீதியைக் கிளப்பியது.சரி நடப்பது நடக்கட்டுமென்று மனதை தைரியப்படுத்திக்கொண்டு ஓடினேன்.அந்த விமானத்துக்கு உள்ளே.போக வழி பின்னால் இருந்தது.விமானத்தின் வால் பகுதி வாயைப் பிளக்க அலிபாபா குகையைப் போல விமானத்தின் உள் தெரிந்தது.நம்ம ஊருல டவுன் பஸ்ல இடம் பிடிச்ச அனுபவம் கைகுடுக்க ஜன்னலோர இருக்கையே கிடைத்தது.விமானம் தாழ்வாகத்தான் பறந்தது.அதனால் அந்த நாட்டின் அழகை கழுகுப் பார்வையில் ரசித்துக்கொண்டே வந்தேன்.கிட்டத்தட்ட நம் இந்தியாவின் பரப்பலவில் அந்த நாடு இருந்தாலும் அதன் மக்கள்தொகை சென்னை அளவு கூட இல்ல.அப்போது 11 மில்லியன் தான் மக்கள்தொகை.பெருமூச்சுதான் விட முடிந்தது.அதன் காரணமாகவே கிலோமீட்டர் கணக்கில் வெற்று நிலங்களாக ஆனால் பச்சைபசேலென்று இருந்தது.

இரண்டரை மணி நேர பறத்தலுக்குப் பிறகு வந்து இறங்கிய(ஒரு வழியா)இடம் உரால்ஸ்க்.அங்கிருந்து நாங்கள் தங்கப்போகும் இடத்துக்குப் போக இன்னும் 160 கிலோமீட்டர் போக வேண்டும்.நிறுவனத்தின் வண்டி வந்திருந்தது.ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் ஒரே நாட்டுக்குள் இருவேறு நேர வித்தியாசம்.அல்மாட்டியை விட ஒரு மணி நேரம் குறைவு இங்கே.உரால்ஸ்க் நகரம் பழைய அதே சமயம் அழகான நகரம்கட்டிடங்களெல்லாம் ரஷ்ய பாணியில் கலையுணர்வோடு கட்டப் பட்டிருந்தது.அகலமான சாலைகள்.ஓரங்களிளெல்லாம் மரங்கள் என்று பார்த்ததுமே மனது பரவசப் பட்டது.நகரம் தாண்டி வந்து எங்கள் இருப்பிடம் சேர்ந்தோம்.நிறுவனத்தார் கட்டிக்கொண்டிருந்த தங்குமிடம் இன்னும் நிறைவு பெறாததால் தற்காலிகமாக அந்த இடத்தில் தங்க வைக்கப் பட்டோம்.அதன் பெயர் செக்-கேம்ப்.இரண்டாம் உலகப்போரின் போது செகோஸ்லோவோகியா படையினர் தங்கியிருந்த இடம்.நல்ல பாதுகாப்புடன் அமைந்திருந்தது.வாசலில் பலத்த காவல் உள்ளே நுழைபவர்களெல்லாம் அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும்.எதற்காக இத்தனை பாதுகாப்பு என்பது பிறகுதான் தெரிந்தது.எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை மிக அழகாக இருந்தது.மூன்று பேர் ஒரு அறையில்.எல்லா வசதிகளுடனும்.ஒரு பக்கத்தில் மினரல் வாட்டர் அடுக்கிவைக்கப் பட்டிருந்தது.எதற்கு இவ்வளவு என்றால்..அங்கே அறைக்குள் ஒட்டிவைக்கப்பட்டிருந்த அறிவிப்பில் பல் துலக்கவும் கூட இந்த நீரைத்தான் உபயோகிக்க வேண்டுமென எழுதியிருந்தது.காரணம் அங்கிருக்கும் அணுக்கதிரின் வீரியம் தண்ணீரிலும் கலந்திருக்கிறதாம்.அதனால் பற்கள் பாதிக்கப் படுமென்று சொன்னார்கள்.

என் அறை நன்பர்கள் இரண்டுபேர் ஒருவர் கேரள நன்பர்,மற்றவர் தமிழர் ஆனால் தமிழ் தெரியாதவர்.மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழை மறந்தவர்.சாப்பிட மட்டும் கேம்ப்புக்கு வெளியே போக வேண்டும். டர்னோவா என்ற ஷாப்பிங் மாலில் உள்ள உணவகத்தில் எங்கள் நிறுவனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தார்கள்.இங்கேயும் எல்லா கடைகளிலும் பெண்கள்தான்.அந்த சமயத்தில் அன்று புதிதாய் வந்த எங்கள் மூன்று பேரையும் சேர்த்து மொத்தம் பதினேழே பேர்தான் இந்தியர்கள்.அதனால் உள்ளூர்வாசிகள் எங்களை வியப்புடன் பார்த்தார்கள்.இந்தியர்களென்றால் அத்தனை அன்பு வைத்திருக்கிறார்கள்.முதல் முறையாக இந்தியர்களை மதிக்கும் தேசத்தைப் பார்த்து கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.(இதற்கு முன் இருந்த இடமெல்லாம் அரபு நாடுகள்...அங்கே எப்படி என்று உங்களுக்கே தெரியும்)ஆனால் மொழிதான் மிகப் பெரிய பிரச்சனை.அங்கு இரு இனத்தினர் வாழ்கிறார்கள்.ரஷியர்கள்,கஸாக்கியர்கள்.கஸாக் மொழிதான் அவர்களின் மொழி என்றாலும் அனைவரும் ரஷிய மொழியில்தான் பேசுகிறார்கள். த்ராஸ்த்வீத்தியா என்றே எங்களை முதலி பார்த்தவர்களெல்லாம் கூறினார்கள்.அதற்கு அர்த்தம் வந்தனம் என்பது அன்றே தெரிந்துகொண்டோம்.பின் கக்திலா என்றால் நலமா என்று வினவுவது.அன்றைக்கு இது மட்டும் தான்.

அது செப்டம்பர் மாதமென்பதால் கடுங்குளிர் இன்னும் தொடங்கவில்லை.ஆனால் 18 டிகிரி இருந்தது.சுகமான காலநிலை.அதை அனுபவித்துக்கொண்டே நடந்து தங்குமிடம் திரும்பிக்கொண்டிருந்தோம்.திடீரென்று ஒரு உள்ளூர் ஆசாமி எங்களை வழிமறித்தான்.

தொடரும்

சிவா.ஜி
03-01-2008, 06:26 AM
பாகம்-3

பார்ப்பதற்கு பாவமாக இருந்தான் அந்த கசாக்.அழுக்குக் கோட்டு,முக்கால் பேண்ட்டுடன் பரிதாபமாக இருந்தான்.எங்கள் மூவரையும் பார்த்து முதலில் த்ராஸ்த்வீத்தியா சொல்லிவிட்டு பஜாலுஸ்த்தா..யா நாதா பீவா, தவாய் டிங்கே துரூக். எக்ஸ்க்யூஸ்மி எனக்கு பியர் வேணும்,கொஞ்சம் பனம் தரமுடியுமா நன்பரே என்று கேட்டிருக்கிறார்.எங்களுக்கு ஒரு மண்ணும் புரியல.ஆனா பரிதாபமா பேசினதிலிருந்து அவன் எங்களைத் திட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.நாங்கள் ஆங்கிலத்தில் எங்களுக்கு ரஷ்யன் தெரியாது என்று சொல்வதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.நாங்கள் போவதை கொஞ்ச நேரம் அப்படியே நின்று பார்த்துக்கொண்டிருந்தான்,மனதுக்கு கஷ்டமாக இருந்தது.மக்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில்தான் இருந்தார்கள்.அந்த நாட்டின் அதிபர் உலகமகா ஊழல்வாதி.கிடைக்கும் நிதியில் பெரும் தொகையை தன் சொந்த நிதியில் சேர்த்துக்கொண்டிருந்தார்.அது போதாதென்று பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளையடித்துக்கொண்டிருந்தன.

நாங்கள் அலுவலக்த்தில் இணைந்த முதல் நாளே எங்களுக்கு கிடைத்த அறிவுரை நமக்கு கிடைக்கும் சம்பளத்தை தவறிக்கூட உள்ளூர் ஆசாமிகளுக்கு சொல்லக் கூடாது என்பதுதான்.அவர்களின் சம்பள விகிதம் மிகக் குறைவாக இருந்ததே காரணம்.கம்யூனிஸ்ட் நாடு என்பதால்(முஸ்லீம் நாடுதான், இருந்தாலும் வெகு காலமாக கம்யூனிசத்தைப் பின்பற்றி வந்ததால் அரசாங்கமும் அதையே நடைமுறை படுத்தி வருகிறது.)அதன் காரணமாக அத்தியாவசிய தொழிலில் இருப்பவர்களுக்கு குறைந்த சம்பளம்(அதாவது மருத்துவர்,ஆசிரியர் போன்றோருக்கு அதிகபட்ச மாதசம்பளமே 250 அமெரிக்கன் டாலர்கள்தான்.)எனவே பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததால்,பல மருத்துவர்கள்,ஆசிரியர்கள் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த தொழிலை விடுத்து கார்பெண்டர்,டைம்கீப்பர் போன்ற சம்பந்த மில்லாத துறைகளில் வேலைக்குச் சேர்ந்திருந்தனர்.எங்கள் நிறுவனத்திலும் அப்படி பலர் இருந்தனர்.ஆனால் அவர்களைப் பார்த்து நான் அதிசயப்பட்டதுமல்லாமல் மிகவும் பெருமைப்பட்டேன்.கிடைக்கும் குறைந்த சம்பளத்திலேயே ஓரளவுக்கு நாகரீகமாகவே வாழ்க்கையை நடத்துகிறார்கள்.அவர்கள் வீடுகளுக்குப் போய் பார்த்தபின்தான் தெரிந்தது,அவர்களின் சிறப்பு.நம்மவர்களில் பலர் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும் சரியான முறையில் வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்வதில்லை.எதிர்காலத்துக்கு சேமிக்கிறேன் பேர்வழியென்று நிகழ்காலத்தில் கிடத்த நல்ல வாழ்க்கையை வாழத்தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

சரி எங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன்.இதற்கு முன் நான் பணிபுரிந்த எல்லா நாடுகளும் அரபு நாடுகளாய் போனதால் மருந்துக்குக் கூட பெண்களை பணியில் பார்க்க முடியாது.ஆனால் இங்கே அதற்கு நேரெதிர்.தேநீர் மங்கையிலிருந்து காரியதரிசி,குமாஸ்தா,எலக்ட்ரீஷியன்,பெயிண்டர் எல்லாமே பெண்கள்.அதிலும் ஐரோப்பிய கலாச்சாரத்தைக் கடைபிடிப்பவர்களாக இருந்ததால் ஆண்,பெண் என்ற பேதமின்றி பழகினார்கள்.பரந்து விரிந்த பெரிய இடத்தில் மிகப் பிரம்மாண்டமான ப்ரோஜெக்ட் எங்களுடையது.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அங்கு இயற்கை எரிவாயுவிலிருந்து பெட்ரோலிய வாயுக்களை பிரித்தெடுக்கும் ஆலை அது. அது மட்டுமின்றி 800 கிலோமீட்டர்களுக்கு பைப்லைன் அமைத்து காஸ்பியன் கடல் வரைக் கொண்டுபோய் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சேர்க்கும் பணியும் இருந்தது.முதல் கொஞ்ச நாட்களுக்கு என்னை அந்த பைப்லைன் வேலையில்தான் அமர்த்தினார்கள்.அதற்காக தினசரி 200 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.வளைகுடா நாடுகளைப் போல சமநிலமாக இல்லாததாலும்,நிறைய ஆறுகள் குறுக்கிட்டதாலும் பணி கொஞ்சம் கடினமாகவே இருந்தது.அதுவும் நவம்பரில் ஆறுகள் உறைய ஆரம்பித்துவிடுமென்பதால் ஆற்றுக்கு குறுக்கே போடவேண்டிய குழாய்களை விரைவாக போட்டு முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் தினமும் 14 மணிநேரம் பணி செய்ய வேண்டியிருந்தது.

இநத பணியில் இருந்த போதுதான் நிறைய கிராமங்களுக்கும் போக முடிந்தது.பரவலாகப் பல இடங்களைப் பார்க்க முடிந்தது.பயணம் செய்வது எனக்கு மிகப் பிடித்த விஷயம் என்பதால் அலுப்பு தெரியாமல் அனைத்தையும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டேன்.
உடன் பணிபுரிய இருப்பவர்கள் உள்ளூர் ஆசாமிகள் என்பதாலும்,அவர்களுடன் உரையாட ரஷ்யன் மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதாலும் எங்கள் நிறுவனமே எங்களுக்கு அந்த மொழியைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.வாரத்துக்கு மூன்றுநாட்கள்.ஒரு மணிநேர வகுப்பு அது.ஆசிரியை ஒரு ரஷ்யப் பெண் பெயர் அனஸ்தாஷியா...பேரிலேயே மயக்கம் வருதா.ஆனால் நல்ல பெண்(பின்னாளில் என் நன்பனொருவனின் மனைவியாகிவிட்டாள் சென்னை நன்பர் அவர்.அவரும் கிறுத்துவர்தான்.அதனால் வீட்டிலும் பிரச்சனையில்லை)நல்ல பெண் மட்டுமல்ல மிகத்திறமையான ஆசிரியரும்கூட.அழகான விளக்கங்களுடன் ஒவ்வொரு எழுத்தாய் அவர் சொல்லித்தந்ததில் மிக விரைவிலேயே எழுதப் படிக்கவும் தெரிந்துகொள்ள முடிந்தது.நன்றாக பேசத்தெரிந்தது நிறைய சந்தர்ப்பங்களில் எங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

அங்கு ஓட்டுநர் உரிமம் வாங்குவது மிகக் கடினம்.ஆனால் நம்ம நாட்டைப் போல அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து சுலபமாக வாங்கி விடலாம்.அப்படி ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது மட்டுமில்லை காவல் நிலையத்துக்கும் போக வேண்டி வந்தது.

aren
04-01-2008, 01:50 AM
அங்கே போயும் நம்ம புத்தியை காட்டிவிட்டீர்கள் என்று தெரிகிறது. ஆனால் நம் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் மாட்டிக்கொள்ள மாட்டோம். அங்கே மாட்டிக் கொண்டீர்கள். அதையும் தைரியமாக வெளியே சொல்கிறீர்கள் (எங்கே போய் என் தலையை முட்டிக்கொள்வதோ, தெரியவில்லை).

சிவா.ஜி
04-01-2008, 04:42 AM
சிங்கப்பூர்லேயே ஒரு நல்ல இடமா பாருங்க தப்பித்தவறி சவுதிக்கு வந்துடாதீங்க.இங்க முட்டிக்க முடியாது...வேணுன்னா வெட்டிக்கலாம்.

ஜெயாஸ்தா
04-01-2008, 05:32 AM
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கம்னியூச நாடுகள் மட்டுமே நல்ல வளமாக இருக்கிறது. மற்றவையல்லாம் நசிந்துதான் இருக்கிறது. ஒருவழியாக உங்களை வழிமறித்தவனைபற்றிய சஸ்பென்சை உடைச்சிட்டீங்க..... உலகநாடுகளில் சுற்றுவதும், பல புதிய மொழிகள் கற்றுக்கொள்வதும் நல்ல சந்தோசமான விசயம்தான்..... ஆமா இங்கே ஏதாவது பூனை, குரங்கு சூப்பெல்லாம் உண்டா?

சிவா.ஜி
04-01-2008, 05:50 AM
இங்கே குதிரை மாமிசம் தான் ஸ்பெஷல் ஜெயஸ்தா.விருந்தினருக்கு சிறப்பு விருந்தென்றால் குதிரை மாமிசம்.மற்றபடி மிக நாகரீகமானவர்கள்.100 சதவீதம் படிப்பறிவைக் கொண்ட நாடு.பெண்களால்தான் இந்த நாட்டின் பொருளாதாரமே தடுமாறாமல் இருக்கிறது.கடும் உழைப்பாளிகள்.அவர்களின் அந்த உழைப்பைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறது.

aren
04-01-2008, 05:56 AM
இங்கே குதிரை மாமிசம் தான் ஸ்பெஷல் ஜெயஸ்தா.விருந்தினருக்கு சிறப்பு விருந்தென்றால் குதிரை மாமிசம்.மற்றபடி மிக நாகரீகமானவர்கள்.100 சதவீதம் படிப்பறிவைக் கொண்ட நாடு.பெண்களால்தான் இந்த நாட்டின் பொருளாதாரமே தடுமாறாமல் இருக்கிறது.கடும் உழைப்பாளிகள்.அவர்களின் அந்த உழைப்பைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறது.

பெண்களால்தான் ஒர் நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லமுடியும் என்பதற்கு இந்த நாடும் ஒரு எடுத்துக்காட்டே.

இது மாதிரியாக பல நாடுகளில் பெண்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஈரானி மற்றும் சிரியா ஆகியா நாடுகளில் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்கிறார்கள்.

நம் ஊரில்தான் Housewife or Home maker என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிறார்கள்.

சிவா.ஜி
04-01-2008, 06:05 AM
பெண்களால்தான் ஒர் நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லமுடியும் என்பதற்கு இந்த நாடும் ஒரு எடுத்துக்காட்டே.

இது மாதிரியாக பல நாடுகளில் பெண்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஈரானி மற்றும் சிரியா ஆகியா நாடுகளில் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்கிறார்கள்.

நம் ஊரில்தான் Housewife or Home maker என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிறார்கள்.
அப்படியும் சொல்ல முடியாது ஆரென்.அந்த நாட்டில் ஆண்கள் பெரும்பாலோர் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.நம்நாட்டில் மிக பொறுப்பானவர்களாக அம்மா,சகோதரிகள்,மனைவி,மகள் என்று அனைவரையும் நல்லமுறையில் வைத்துக்கொள்ள மிகுந்த கவனத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

பெரும்பாலான கணவர்கள் தங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்பாததற்கு காரணம் அவர்களை கஷ்டப்படுத்தவேண்டாமே என்றுதான்.குடும்ப சூழ்நிலை பிரச்சனையாக இருக்கும்போது வேலைக்குப் போகத்தான் வேண்டும்.அங்கும் பெண்கள்தான் பாவம் கூடுதல் சுமையால் அவஸ்தை[ப் படுகிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் இதில் பெரும் மாற்றம் வருமென்றே தோன்றுகிறது.இப்போது நம் நாட்டு பெண்களும் மிக மிக திறமையானவர்களாக மாறி வருகிறார்கள்.

யவனிகா
04-01-2008, 06:19 AM
குதிரை மாமிசமா அண்ணா...உங்க குதிரை அவங்க கண்ணில படலியே?

பெண்களும் சேர்ந்து வேலை செய்ற என்விரான்மெண்டில் அதிக மென்ட்டல் ட்ஸ்ரெஸ் இருக்காதாம்...கருத்துக் கணிப்பு சொல்லுது...அதனால் தானோ என்னவோ நிறையப் பேருக்கு சௌவுதியின் வொர்க்கிங் அட்மாஸ்பியர் போரடிச்சுப் போயிடுது...

அழகாக உங்கள் பயணத்தில் கூட வருவது போல உள்ளது.டெரர் ஆவது தெரியுது...நீ கூட வந்தா அழகான பயணமா...அறுவையான பயணம் அப்படின்னு தான சொல்றீங்க...தொடருங்கள் அண்ணா...
சொல்லும் விதமும், சம்பவக் கோர்வையும் நேர்த்தியாக நெய்யப் பட்டுள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா.

சிவா.ஜி
04-01-2008, 06:27 AM
மன்றம் வந்தப்பறம்தானே குதிரை வாங்கினேன்.அப்ப என்கிட்ட குதிரை இல்லியே அதான் தப்பிச்சிடிச்சி.

அது என்னவோ உண்மைதாம்மா.நிஜமா ஒரு பொண்ணுக்கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சா ரொம்ப அருமையா செய்றாங்க.நீட்டான வொர்க்.அதேசமயம் ரொம்ப சின்ஸியரா இருக்காங்க.

நன்றிம்மா...இன்னும் பயணிக்கலாம்.

ஜெயாஸ்தா
04-01-2008, 06:35 AM
குதிரை மாமிசமா அண்ணா...உங்க குதிரை அவங்க கண்ணில படலியே?

அங்க ஆரம்பித்த சிவாவின் குதிரையோட்டம் இன்னும் நிற்கவில்லை....அது அவரின் அவதாரைப் பார்த்தாலே நன்றாக தெரிகிறது. ஹா...ஹா...ஹா!

சிவா.ஜி
04-01-2008, 06:46 AM
அங்க ஆரம்பித்த சிவாவின் குதிரையோட்டம் இன்னும் நிற்கவில்லை....அது அவரின் அவதாரைப் பார்த்தாலே நன்றாக தெரிகிறது. ஹா...ஹா...ஹா!
அட ஆமால்ல....என்னையறியாமலேயே அந்த குதிரை எனக்குள்ள உக்காந்திடிச்சி போலருக்கு...ஹி..ஹி..

நுரையீரல்
04-01-2008, 11:07 AM
அட ஆமால்ல....என்னையறியாமலேயே அந்த குதிரை எனக்குள்ள உக்காந்திடிச்சி போலருக்கு...ஹி..ஹி..
உங்க அவதாருக்கான உள்ளர்த்தம் எனக்கு மட்டுமே தெரியும் என்பதை வேற யாருக்கும் சொல்லாதீங்க சிவாண்ணா. ஆரென் அண்ணாக்கு எல்லாம் தெரியாது அவரு பெரிய தலை. குதிரைக்கு குடுப்பதப் போய் ஆரென் அண்ணா எப்படி.... சேச்சே, அவரு பெரிய தலை. ஸ்காட்லாந்து போலீஸ்னா சும்மாவா?

ஷீ-நிசி
04-01-2008, 01:08 PM
உங்கள் பயணக் கட்டுரை மிக சிறப்பாக இருக்கிறது சிவா. ஜி..

பல நாடுகளின் தகவல்களும் அறிந்துகொள்ள முடிகிறது.. நன்றி!

aren
04-01-2008, 01:10 PM
அட ஆமால்ல....என்னையறியாமலேயே அந்த குதிரை எனக்குள்ள உக்காந்திடிச்சி போலருக்கு...ஹி..ஹி..

இவ்வளவு ஓடியும் குதிரை இன்னும் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லையே. உங்க குதிரை என்ன செக்கு இழுக்கிறதா?

நேசம்
04-01-2008, 01:13 PM
இவ்வளவு ஓடியும் குதிரை இன்னும் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லையே. உங்க குதிரை என்ன செக்கு இழுக்கிறதா?

குதிரையா செக்கு இழுக்கும்.நான் புள்ளி தான் இழுப்பார்ன்னு நினைத்தென்

ஜெயாஸ்தா
04-01-2008, 01:40 PM
குதிரையா செக்கு இழுக்கும்.நான் புள்ளி தான் இழுப்பார்ன்னு நினைத்தென்

புள்ளி மேலே கோபம் இருந்தாலும் இந்த அளவுக்கு திட்டக்கூடாது நேசம்.... என் ஆருயிர் நண்பர் புள்ளியை தாக்கிப் பேசிய உங்களை வன்மையாக (சும்மா...லுலுவாயி-(வார்த்தைக்கடன்-நன்றி-மலர்))கண்டிக்கிறேன். (ஹி...ஹி..ஹி... பத்தவச்சிட்டேயே பரட்ட)

mukilan
05-01-2008, 12:29 AM
குளிரோடு கொஞ்சும் நாள்னு சொல்லுங்க. அருமையான பயணக்கட்டுரை சிவா ஜி! நிறைய உண்மைத்தகவல்களை அளித்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.ஆங்கிலத்தில் "போராட்" (BORAT) என்றொரு நகைச்சுவைத்திரைப்படம் இருக்கிறது. அதில் சித்தரிக்கப்பட்ட கஜகஸ்தான் வேறு நீங்கள் நேரில் கண்ட கஜகஸ்தான் வேறு என்பது புரிகிறது.

சிவா.ஜி
05-01-2008, 03:44 AM
உங்கள் பயணக் கட்டுரை மிக சிறப்பாக இருக்கிறது சிவா. ஜி..

பல நாடுகளின் தகவல்களும் அறிந்துகொள்ள முடிகிறது.. நன்றி!

நன்றி ஷீ.முடிந்தவரை அனுபவத்தோடு சில தகவல்களையும்(உண்மையான) அளிக்கலாமென்றிருக்கிறேன்.

சிவா.ஜி
05-01-2008, 03:45 AM
குதிரையா செக்கு இழுக்கும்.நான் புள்ளி தான் இழுப்பார்ன்னு நினைத்தென்

புள்ளியைப் பாத்தா இப்புடி சொல்லிப்புட்டீங்க நேசம்.அவரு என்னென்னல்லாம் இழுத்திருக்காருன்னு தெரிஞ்சா இந்த ஜுஜூபி மேட்டரை பெருசா சொல்ல மாட்டீங்க....ஹி..ஹி..

சிவா.ஜி
05-01-2008, 03:48 AM
குளிரோடு கொஞ்சும் நாள்னு சொல்லுங்க. அருமையான பயணக்கட்டுரை சிவா ஜி! நிறைய உண்மைத்தகவல்களை அளித்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.ஆங்கிலத்தில் \"போராட்\" (BORAT) என்றொரு நகைச்சுவைத்திரைப்படம் இருக்கிறது. அதில் சித்தரிக்கப்பட்ட கஜகஸ்தான் வேறு நீங்கள் நேரில் கண்ட கஜகஸ்தான் வேறு என்பது புரிகிறது.

நான் அந்த படம் பார்க்கவில்லை முகிலன்.ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.பார்க்கவேண்டும்.நான் பார்த்தவரை என்னால் உணரமுடிந்தவைகளை,அனுபவித்ததை என் பார்வையில் சொல்கிறேன்.
மிக்க நன்றி முகிலன்.நீங்களும் கனடா பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.நன்பர்கள் பலர் கனடா செல்ல விருப்பமாய் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இருக்குமே.

நுரையீரல்
05-01-2008, 03:55 AM
குதிரையா செக்கு இழுக்கும்.நான் புள்ளி தான் இழுப்பார்ன்னு நினைத்தென்
ஆமாய்யா நான் உன்னை வச்சுத்தான் இழுப்பேன். அப்ப நீர் என்ன செக்கா? மனுஷன் மிருகமா கூட இருக்கலாம், உம்மப் போல கல்லா இருக்கக்கூடாதுய்யா? கள்ளா இருந்தாக் கூட ரெண்டு மொடக்கு குடிக்கலாம். அதென்ன செக்குக் கல்லாட்டம்...

சிவா.ஜி
27-01-2008, 12:49 PM
சின்னச் சின்ன விளையாட்டுபொம்மையைப் போல இருக்கும் லாடா என்ற ரஷ்யன் தயாரிப்புக் கார்களைப் பார்த்ததும்...அதைக் கையாள ஆசை வந்தது.நிறுவனமும் கார் கொடுக்க தயார்தான்.ஆனால் ஓட்டுநர் உரிமம் வாங்குவதுதான் மிகப்பெரிய பிரச்சனை.ஆனால் அதற்கும் எங்களுடன் பணிபுரிந்த ஒரு உள்ளூர் ஆசாமி வழி சொன்னார்.உரிமம் வழங்கும் அதிகாரிக்கு 100 அமெரிக்கன் டாலர்கள் கொடுத்தால் உரிமம் கையில் கிடைத்துவிடுமென்று சர்வசாதாரணமாக சொன்னார்.உடனே இந்திய மதிப்பில் மாற்றிப்பார்க்கும் குணம் எட்டிப்பார்த்து...5000 ரூபாயா(அப்போது ஒரு டாலருக்கு 50 ரூபாய்)என்று கொஞ்சம் மலைத்து....சரி பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு,சரியென்றேன்.என்னோடு மற்றும் இரண்டு வாடிக்கையாளர்களும் சேர்ந்து கொள்ள இடைத்தரகாக கிடைக்கப்போகும் பணத்தை நினைத்து அந்த குடி மகனும் ஆனந்தப்பட்டார்.அதன்படி முதல் தவனையாக ஆளுக்கு 50 டாலர்கள் வீதம் அவரிடம் கொடுத்தோம்.(அந்த ஆசாமியின் மாத சம்பளமே 70 டாலர்கள்தான்)கர்மசிரத்தையாக விண்ணப்ப படிவங்களெல்லாம் வாங்கிவந்து கையெழுத்தும் வாங்கிப்போனார்.10 நாட்கள் கழித்து வந்து எங்கள் மூன்று பேரையும் கூடவே அழைத்துப்போய் அந்த அதிகாரியை சந்திக்க வைத்தார்.அவரும்,கவலைப் படவேண்டாம்.இன்னும் இரண்டுநாளில் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட்டு...மீதமுள்ள பணத்தையும் வாங்கிக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழிந்தது...அந்த ஆசாமியைக் காண முடியவில்லை....ஒரு வாரமாகியும் அந்த ஆள் எங்கள் கண்களில் சிக்கவேயில்லை.ஆஹா...ஏதோ சிக்கல் என்று நினைத்துக்கொண்டு...அந்த அதிகாரியைத்தான் பார்த்திருக்கிறோமே அவரிடமே போய்க் கேட்கலாமென்று அந்த அலுவலகம் போனோம்.உரிமம் வழங்கும் அதிகாரி யார் என்று விசாரித்து அவரிடம் போனால்....அங்கு அவருக்குப் பதிலாக வேறொருவர் இருந்தார்.என்ன என்று விசாரித்தவரிடம் தெரிந்த ரஷ மொழியில் சொன்னோம்.அடுத்த வினாடி தொலைபேசியை சுழற்றினார்...போலீஸ் வந்தது...என்ன ஏது என்று கேட்பதற்குள்...வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு காவல் நிலையம் போய்விட்டார்கள்.என்னுடன் இருந்த மற்ற இரண்டு பேருக்கும் கிலி உண்டாகிவிட்டது.நான் ஏற்கனவே ஒரு முறை மும்பையில் காவல் நிலையம் போனவன் என்பதால் அந்த பயம் ஏற்படவில்லை.எப்படியாயினும்....காசாத்தா இருக்கிறாள் காப்பாற்றிவிடுவாள் என்ற தைரியம்தான் காரணம்.(இதைப் போன்ற நாடுகளில் காவல் நிலையத்தின் பொதுமொழி பணம் தானே)அங்கிருந்த இன்னொரு ஆபீசருக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்ததால்...ஆளுக்கு 50 டாலர் தண்டமழுதுவிட்டுத் திரும்பினோம்.

அதோடு எங்கள் ஓட்டுநர் உரிம ஆசையும் காலியாகிவிட்டது.திடீரென்று ஏற்பட்ட மாறுதலால் தனி நாடாக சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து வந்துவிட்டதால்...ஒரு தெளிவான பொருளாதாரக் கொள்கையோ,அரசியல் ஸ்திரத்தன்மையோ அப்போது இருக்கவில்லை.அதைப் பயண்படுத்தி அந்த நாட்டின் அதிபர் மக்களின் வரிப்பணம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அள்ளித்தரும் கோடிகோடியான பணம் அனைத்தையும் அவரே ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்.அந்த வருடத்தின் மிக மோசமான ஊழல்வாதிகளின் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.இந்த காரணங்களால் மக்கள் பணப்புழக்கமில்லாமல் வறுமையை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.அதன் ஒரு பாதிப்புதான்,பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவருக்கு அந்த நாட்டின் பெண்கள் தங்களை சல்லிசாக விற்றதும்.அதன் விளைவாக மோசமான உயிர்க்கொல்லி வியாதிகளையும் தங்களுடன் வைத்திருந்தார்கள்.

அதற்காகவே எங்கள் நிறுவனத்தில்,புதிதாக இணையும் அனைவருக்கும் எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள்.உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்....உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று.(அதையும் சட்டை செய்யாத சிலர் சீரழிந்தது தனிக்கதை)அந்த நாட்டுமக்களின் கலாச்சாரம் நமக்கெல்லாம் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாகத்தானிருக்கும்.உதாரணத்திற்கு...ஒரு கசாக் என்னைப் பார்த்து திருமணமாகி எத்தனை வருடம் ஆகிறது என்று கேட்டான். 16 வருடமென்று நான் பதில் சொன்னதும்...இப்போதிருப்பது எத்தனையாவது மனைவி என்று கேட்டானே ஒரு கேள்வி....ஆடிப்புட்டேன்.ஒரே மனைவிதான்....அதே மனைவிதான் என்று சொன்னதும் என்னை ஆச்சர்யத்தோடு பார்த்து...16 வருடமாக ஒரே மனைவிதானா எனக்கேட்கிறான் அந்த படுபாவி.

ஆனால் ஒரு விஷயம்...சோவியத் யூனியனில் பலகாலம் இருந்ததால் அடிப்படை கட்டுமானவசதிகள் பக்காவாக இருக்கிறது. ஆறு மாதங்கள் -40 டிகிரி குளிரில் வாழ வேண்டுமென்பதால்,வீடுகள் அனைத்தும் நீராவிக்குழாய்கள் பொருத்தப்பட்டு சூடாக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.அவையனைத்துக்கும் நீராவி செலுத்த ஆங்காங்கே கொதி உலைகள்(பாய்லர்) அமைக்கப்பட்டிருக்கிறது.
உணவுப்பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கிறது.மருத்துவம்,கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகள் மிகக் குறைந்த செலவில் செய்து கொடுக்கப்படுகிறது.100 சதவீதம் மக்கள் கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.அவர்களில் ஒர் பெண்தான் எங்கள் அலுவலக தேநீர் மங்கை மரீனா.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவள்.முதலில் எங்கள் நிறுவனத்தில் சேரும்போது கழிவறை சுத்தம் செய்பவளாகத்தான் சேர்ந்தாள்.இரண்டு மாதத்தில் டீ கேர்ளாக பணி உயர்வு பெற்றாள்.அடுத்த ஒரு வருடத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு சம்பந்த படிப்பை முடித்து அதே நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பதவியடைந்தாள்.என்னுடைய நல்ல தோழி.அந்த நகரத்தின் நன்மை தீமைகளை தேவைப்பட்ட சமயங்களிலெல்லாம் எனக்கு விளக்கி உதவி செய்தாள்.அந்த நாட்டைப் பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டது அவள் மூலமாகத்தான்.

அவள் ஒரு தோழி என்றால்...எனக்கு ஒரு தங்கையும் அங்கு கிடைத்தாள்....அவள் குல்நாரா...

அனுராகவன்
27-01-2008, 02:48 PM
நல்ல அனுபவம் நண்பர் சிவா.ஜி அவர்களே
ம்ம் தொடர்ந்து அழைத்து செல்லுங்கள்..

சிவா.ஜி
28-01-2008, 03:28 AM
மிக்க நன்றி அனு.தொடர்கிறேன்....தொடர்ந்து வாருங்கள்.

aren
28-01-2008, 04:28 AM
குல்நரா தங்கை என்றால், அந்த தேநீர் கொடுத்த பெண் - சரி விடுங்கள், நான் எதுவும் பேசமாட்டேன்!!!

சிவா.ஜி
28-01-2008, 06:17 AM
குல்நரா தங்கை என்றால், அந்த தேநீர் கொடுத்த பெண் - சரி விடுங்கள், நான் எதுவும் பேசமாட்டேன்!!!

அதுதான் நல்ல தோழி என்று சொல்லிவிட்டேனே ஆரென்.
நான் தெளிவாக சொல்லியிருப்பதைப் பார்த்தாலே தெரியும்...அங்கு பெண்களை எந்த உறவில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.ஆனால் தோழி என்றால் நான் கொடுத்திருக்கும் அர்த்தம் மிக உயர்வானது.

ஆரென் நீங்க ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி....அனுபவத்தில் எதையெல்லாம் எழுத முடியுமோ அதை மட்டும்தான் நான் எழுதுவேன்.
(எத்தனை நாரதருங்கப்பா இந்த மன்றத்துல.....சூதனமா இல்லாட்டி குடும்பத்துல கொழப்பத்தை உண்டுபண்ணிப்புடுவாங்க.....)