PDA

View Full Version : மன்னிக்க வேண்டுகிறேன், நண்பர்களே..!.இராசகுமாரன்
03-01-2008, 04:51 AM
நண்பர்களே,

புதுவருடத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்த முனைந்த போது நமது தகவல்தளம் பெருத்த சேதம் அடைந்து விட்டது. அதை கடந்த 24 மணிநேரமாக முயற்சித்தும் இன்னும் பூரணமாக சரி செய்ய முடியவில்லை.

அதனால், உங்களை அதிகம் காக்க வைக்காமல் நம்மிடம் உள்ள 10 நாளைக்கு முந்தைய "பேக்-அப்" தகவல்தளம் கொண்டு தளம் இயக்கப் படுகிறது. மேலும், இன்னொரு பகுதியில் அந்த பழுதடைந்த "தகவல் தளத்தை" சரி செய்யும் முயற்சி தனியாக நடந்து வருகிறது. அது சரியாக 25% தான் சான்ஸ் உள்ளது. அவ்வாறு அவை கிடைத்தால் மீண்டும் இங்கே சேர்க்கிறேன்.

சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தினால் நமது நண்பர்களின் கடைசி பத்து நாட்களுடைய பங்களிப்புகள் காணாமல் போய்விட்டது, அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது, அதற்காக அவர்களிடம் சிரம் தாழ்த்தி மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே பதித்தவற்றின் நகல் உங்கள் கணனியில் சேமித்து வைத்திருந்தால், மீண்டும் பதிக்கவும்.

இந்தச் சிறு தடையால், மனம் தளர்ச்சி அடையாமல், முன்பு போல் அறிஞரின் தலைமையில் பீடு நடை போடவும்.

நன்றி..!!

.

ஓவியன்
03-01-2008, 05:06 AM
அன்பான அண்ணா..!!

இது ஒரு விபத்துப் போன்றதே, இதனால் பல பதிவுகள் காணாமற் போனாலும் நம் உறவுகள் மீள பண்பால் தமிழ் மேற் கொண்ட அன்பால் ஒன்றாக இணைந்திருப்பார்கள், அதனால் கவலை வேண்டாம்...!!


தடங்கல்களை தடைக்கற்களாகக் கருதாமல் படிக் கற்களாக்குவோம் வாருங்கள் நண்பர்களே...!!

.

சிவா.ஜி
03-01-2008, 05:12 AM
தடைகள் ஏற்படுவது சகஜமே. இதனாலெல்லாம் நாம் தளர்ந்துவிடமாட்டோம். மீண்டும் மன்றத்துக்கு புதுப்பொலிவைக் கூட்டுவோம். நன்றி ராசகுமாரன்.

.

அன்புரசிகன்
03-01-2008, 05:15 AM
பின்னடைவுகள் சகயமே. அனைத்தும் சிறப்பாக முன்வர எனது வாழ்த்துக்கள்.

.

lolluvathiyar
03-01-2008, 05:30 AM
பதிப்புகள் தானே கானாமல் போய்விட்டது உறவுகள் அப்படியேதானே இருக்கிறது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவும் 10 நாள் பதிப்புகள்தானே பாதிப்பு ஏற்படாது. பின்னூட்டங்களை தவிர நமது மக்களிடம் படைப்புகளில் பெக் அப் இருக்கும் என்று கருதுகிறேன்.
இபணம் கனக்கு கூடா மாறி இருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஒரு தனி திரியில் உருப்பினர்கள் தங்களுடைய இபணம் கடைசியாக எவ்வளவு இருந்தது என்றும் குறிப்பிட்டால் அதை சரி செய்யலாம் என்று கருதுகிறேன்

.

அன்புரசிகன்
03-01-2008, 06:00 AM
நண்பர்களே....

பதிவுகள் இபணம் இவையெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. நமது மின்னூல் வெளியீடு தான் இப்போது பிரச்சனையில் உள்ளது. அதை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும். தற்காலிகமாக ஏதாவது ஒரு பகுதியில் தொடங்குங்கள். அறிஞர் அல்லது இராசகுமாரன் அண்ணா வந்ததும் புதிய பகுதி மீள ஆரம்பிக்கப்பட்டு பதிவுகள் அங்கு இடம்மாற்றப்படும்.

.

இதயம்
03-01-2008, 06:02 AM
இது மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமே..! காரணம், மன்ற நண்பர்கள் தங்கள் பொன்னான நேரத்தை அளித்து படைத்த படைப்புகளை இழப்பது என்பது பெரும் இழப்பே..! அவர்கள் அளித்த படைப்புக்களின் நகல் எல்லோரிடமும் (என்னையும் சேர்த்தே) இருக்குமென்று தோன்றவில்லை. காரணம், மன்றத்தை விட பாதுகாப்பான வேறு இடம் எங்கும் இல்லை என்பது எங்களின் நம்பிக்கை. ஆனாலும், விபத்து என்பது தவிர்க்க முடியாதது என்பதால் தளர்ந்து விடவேண்டாம் இராசகுமாரன்..! இழப்பிற்காக மன்னிப்பு என்பதும் நட்பிற்குள் அவசியமில்லாதது. உங்களால் அதிகபட்சம் முடிந்தவரை இழப்புகளை மீண்டும் பெற முயற்சியுங்கள். அப்படி பெற முடியாது போனாலும் இந்த இழப்பை நாம் எண்ணி தளராமல் மீண்டும் உற்சாகத்துடன் மன்றத்தில் வெற்றிநடை போடவேண்டும் என்பது தான் என் அவா..!

.

நேசம்
03-01-2008, 06:21 AM
வாத்தியார் சொல்வது போல் உறவுகள் அப்படியே தான் இருக்கும்.படைப்புகளின் நகல் இருப்பவர்கள் மிண்டும் பதிக்கவும்.இது போன்ற தடைகள் சில நேரங்களில் தவிர்க்க முடியாது என்பதால் ராசகுமாரன் அண்ணனின் மன்னிப்பு அவரது பெருந்தன்மைதான் காட்டுகிறது.

.

பூமகள்
03-01-2008, 06:37 AM
திடீரென்று ஏற்பட்ட விபத்துக்கு யார் தான் என்ன செய்ய முடியும் அண்ணா.
எங்களின் படைப்புகள் எங்களிடம் பெரும்பாலும் பேக் அப் இருக்கிறது. அதனால் பிரச்சனையே இல்லை. கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு பதிக்கும் பணி தான் பாக்கி இருக்கிறது. அதையும் நம் மன்றத்துக்காய் செய்வதில் யாரும் வருந்தமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
மின்னிதழ் பணிக்கான திரிகள் மட்டும் விரைந்து ஆரம்பித்தால் நலம் என்று கருதுகிறேன்.
விரைவில் பழைய பதிவுகள் மீட்க முடிந்தால் மிகுந்த மகிழ்ச்சி. முயன்று பார்ப்போமே..! :)

மன்னிப்பு என்பது இதயம் அண்ணா சொன்னது போல் நட்புக்கிடையில் தேவையற்ற ஒன்று. பதிவுகள் அழிக்கப்பட்டாலும் சொந்தங்கள் பிரியவே மாட்டோம்..! ஆகவே, கவலை இன்றி இருங்கள் அண்ணா.


.

Mano.G.
03-01-2008, 06:38 AM
விழுவது எழுவதற்கே,
சிறு சருக்குதல்கள் நம்மை செம்மை படுத்தவே,
தலைவரே உங்களும் நமது மன்றத்துக்கும் எங்கள்
ஆதரவு என்றும் உண்டு

மனோ.ஜி

.

ஆதி
03-01-2008, 06:43 AM
வந்தது வரட்டும் போனது போகட்டும் கண்ணதாசன் வார்த்தைகளைத்தான் இந்த மாதிரியான தறுவாயில் எண்ணிக்கொள்ள வேண்டும்..

என் படைப்புகளில் சில காணாமல் போய்விட்டது.. நான் எங்கும் பேக்-அப் வைத்துக்கொள்ளவில்லை.. மனதில் பேக்-அப் இருக்கும் என நம்பிபிபி.. ரீகால் போட்டேன்.. Bad Command என பிழைத் தெறிக்கிறது :D ஒன்னும் செய்ய முடியாது..

போனால் போகட்டும் போடா.. என்கிற பானிதான்..

மின்னிதழ் பகுதியையாவது மீண்டும் பேக்-அப் செய்ய இயலுமா எனப் பாருங்களேன்.. அல்லது மீண்டும் அதற்கு ஒரு தனியிடம் விரைவில் ஒதுக்குங்கள்..

மற்றபடி எந்த பிரச்சனையையும் சாமாளிப்போம்.. மன்னிப்பு என்கிற வார்த்தை எல்லாம் தேவையற்றது.. என்றும் இணைந்திருப்போம் மன்றத்துடன்..

பி.கு: நம் மன்றத்திற்கு கண்பட்டு விட்டது போலும் யாராவது சுத்திப்போடுங்க சாமியோவ்..

.

பூமகள்
03-01-2008, 07:22 AM
பி.கு: நம் மன்றத்திற்கு கண்பட்டு விட்டாது போலும் யாராவது சுத்துப்போடுங்க சாமியோவ்..
நான் நினைச்சேன்.. நீங்க சொல்லீட்டீங்க ஆதி.
யாரோ கொல்லிக்கண்ணு வைச்சிட்டாங்க...!:icon_ush:
எல்லார் படைப்பும் இப்படி காணாம பண்ணிட்டாங்களே..!!:sauer028::traurig001:

சீக்கிரமா பெரிய பூசணிக்காய் வாங்கி மன்றத்துக்குச் சுத்திப்போடனும்..!:icon_b:

.

aren
03-01-2008, 07:52 AM
பரவாயில்லை தலைவா. முடிந்தால் மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் பரவாயில்லை.

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டு என்று நினைத்துக்கொள்ளலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜெயாஸ்தா
03-01-2008, 08:26 AM
மன்னிப்பு என்பது நட்புக்குள் தேவையில்லாத வார்ததை நண்பரே....! புதிய படைப்புகள் படைத்த நண்பர்கள் நிச்சயம் இதை பொறுத்துக்கொள்வார்கள். தங்கள் கணிணியில் பேக்கப் வைத்திருப்பவர்களும், தங்கள் நினைவினில் பேக்கப் வைத்திருப்பவர்களும் மீண்டும் பதிந்திடுங்கள் உங்கள் படைப்புகளை....! மீண்டும் முன்னை விட தமிழ்மன்றம் இயங்க நம் நண்பர்கள் நிச்சயம் ஒத்துழைப்பார்கள். கவலை வேண்டாம்.

.

மலர்
03-01-2008, 08:36 AM
காலையில் மன்றத்தை பார்க்கும் போது தான் ஷாக்கா இருந்திரிச்சி...
சில வேளைகளில் இது மாதிரி ஆகிவிடும்.. போனால் போகட்டும் .. அதைவிட அழகான பதிவுகளை மறுபடியும் குடுத்துவிடலாம்...
நடப்பதெல்லாம் நன்மைக்கே...

.

அமரன்
03-01-2008, 08:37 AM
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. ஒவ்வொரு தடைக்கல்லும் படிக்கல்லப்பா..

அன்பர்கள் பதிவுகளில் அதே உற்சாகம் இருப்பதை காண்கின்றேன்.. சாதிப்போம்.. நன்றி

.

மயூ
03-01-2008, 08:39 AM
நிசத்தில் நடக்கும் விபத்துகளைப் பார்க்கும் போது இதெல்லாம் என்ன விபத்தா???

இதனால் நம்மவர்கள் மனமுடைய மாட்டார்கள்!

டேட்டா பேஸ் போனால் என்ன நாங்கள் இயங்குவது அன்பை பேசாக வைத்துத்தானே!!!

.

aren
03-01-2008, 08:41 AM
மறுபடியும் என்ன எழுதினோம் என்று நினைத்து திரும்பவும் கொண்டுவரவேண்டும். முயற்சி செய்யலாம்.

மனோஜ்
03-01-2008, 09:12 AM
பழையவை கழிதலும் புதுயவை புகுதலும் புதிய வருடத்தில் நடைபெற்றுள்ளது இது நல்ல வர்ச்சிக்கு வித்தாக அமையும்

ஆர்.ஈஸ்வரன்
03-01-2008, 09:43 AM
பத்து நாட்கள்தானே. போனால் போகட்டும் விடுங்கள். மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படலாம்.

அக்னி
03-01-2008, 09:49 AM
இதனைத் தடைக்கல்லாக எண்ணாமல், படிக்கல்லாக எண்ணி, இலக்கு நோக்கி ஏறிச் செல்வோம்...

ஷீ-நிசி
03-01-2008, 10:28 AM
நமக்குள் மன்னிப்புகள் தேவையில்லை நண்பரே!

10 நாள் பதிவுகள் தானே.. மீண்டும் பதித்துவிடலாம்..

சீக்கிரம் பட்டாடை உடுத்திக்கொண்டு வரட்டும் நம் மன்றம்...

.

lolluvathiyar
03-01-2008, 10:53 AM
படைப்புக்களின் நகல் எல்லோரிடமும் (என்னையும் சேர்த்தே) இருக்குமென்று தோன்றவில்லை.

இதன் மூலம் நம் அனைவரும் ஒரு நல்ல பாடம் கற்போம். புதிய திரி தொடங்கி அதில் ஏதாவது டைப் அடித்து படைக்கும் போது அதை சேமித்து வைத்து கொள்ள பழகி கொள்ள வேண்டும். சிறிய பின்னூட்டங்களை சேமிக்க வேண்டாம். சேமிக்கும் போது ஸ்டார்களை நீக்கிய பிறகு சேமியுங்கள்

பிரௌசிங் சென்டரில் மன்றம் இனைபவர்கள் பென் டிரைவ் இருந்தால், அதில் சேமிக்கலாம் அல்லது யாகூ பிரிப்கேஸ் இல் சேமிக்கலாம் ( நான் அந்த மாதிரிதான் செய்கிறேன்)

.

IDEALEYE
03-01-2008, 11:00 AM
மன்றத்திற்கு 10 வயது குறைந்தது போல இருக்கின்றது....
கவலைகள் வேண்டாம்
தொடர்வோம்......
அன்புடன் ஐஐ

.

thangasi
03-01-2008, 01:46 PM
படைப்புகளை நகல் எடுத்துவிட்டே பதிக்கவேண்டும் என்ற பாடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி இது சற்று அதிர்ச்சி தகவல் என்றாலும் உறைந்துவிடத் தேவையில்லை.

மன்னிப்பு கோரும் உங்கள் மாண்பு மதிக்கத்தக்கது தலைவரே....
மன்னிக்க மாட்டோம், மறந்துவிட்டு புதிதாகத் தொடர்வோம்...

.

வசீகரன்
03-01-2008, 02:04 PM
எதிர்பாரா விபத்து.... நிறைய பதிவுகள் காணாமல் போய்விட்டன..! எனது புத்தாண்டு கவிதையும் கூட...! அதை சேமித்து வைத்திருக்கிறேன்.... மீண்டும் மன்றத்தில் பதிக்க முயல்கிறேன்...... இதை நாம் பெரிய அளவில்
துயரமாக கருதாமல்... மின்னிதழை கொண்டு வருவதற்கான ஆயத்த பணியில் நமது
கவனத்தை செலுத்துவோம்..... தமிழ் மன்றின் தரத்தை தரணி எங்கும் நிரப்புவோம்....!

அறிஞர்
03-01-2008, 02:08 PM
எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்த செய்தி.

10 நாட்களில் மன்றத்தில் நடைபெற்ற வேலைகள் மிக அதிகம்...

என்னுடைய நேரம், பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், புதிய இதழ் தொகுப்பாளர்கள் நேரம் ஒவ்வொன்றும் இப்படி போய்விட்டதே என வருத்தமாக உள்ளது.

நாளைக்குள் பழைய பதிவுகளை மீட்டுத்தரும்படி கேட்டுள்ளோம். அப்படி அமைந்தால் நன்றாக இருக்கும்.. எல்லாம் கடவுள் விட்ட வழி...

பென்ஸ்
03-01-2008, 02:10 PM
எல்லாம் நல்லபடியாக நடக்கும் அறிஞரே...

யவனிகா
03-01-2008, 02:17 PM
எல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கிடைக்காவிட்டால் என்ன செய்வது. கிட்டாதாயின் வெட்டென மற.
நடப்பவைக்கள் நல்லதாகட்டும்.

நுரையீரல்
03-01-2008, 09:05 PM
மின்னணு உலகத்தில் மனித தவறுகள் சகஜமே. இந்த தவறுகள் மீண்டும் நிகழாது என்று உறுதியாக கூற முடியாது.

நம் மன்ற மக்கள் இதன் மூலம் படித்துக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், தங்களது My Documents பகுதியில், தமிழ்மன்றம் என்றொரு folder உருவாக்கி, atleast தங்களது படைப்புகள் அடங்கிய webpage-ஐயாவது save செய்து வைக்கவும். இம்மாதிரி சூழ்நிலைகளில் உங்களுடைய பதிவுகளை restore செய்யவாவது உதவும்.

இளசு
04-01-2008, 12:07 AM
தலைவருக்கு

உடல்,பொருள், ஆர்வம் என உங்கள் பங்களிப்பை முழுமையாய் அறிந்தவர்கள் நாங்கள்..

இந்த சிறு விபத்தைத் தாங்கி வளரும் வண்ணமே எங்களை நீங்கள் தயார்படுத்தி இருக்கிறீர்கள்...

தம்பிகளின் உழைப்பும் ஆர்வமும் இந்த நஷ்டங்களை இரடிப்பாய் ஈடுசெய்யும். மனம் வருந்த வேண்டாம்.

praveen
04-01-2008, 07:52 AM
நம்மை மீறி நடக்கும் விசயத்தை நாம் என்ன செய்ய இயலும். அந்த இயற்கை சதிக்கும் பொறுப்பேற்கும் நீங்கள் பெருந்தண்மையானவர்.

நான் இங்கு பதியும் எதையும் நேரிடையாக டைப் செய்வதில்லை, நான் நோட்பேடில் டைப் செய்து தான் பின்னர் அதை எடுத்து இங்கே பதிப்பேன். பதித்த பின் ஒப்புக்கு நோட்பேடை சேவ் செய்து குளோஸ் செய்வேன். எனவே நான் பதிந்ததை உடனே திரும்ப இங்கே பதிக்க இயலும்.

ஏன் நேரடியாக பிரவுசரில் டைப் செய்வதில்லை என்றால், சமயத்தில் எழுத்துக்கள் ஒன்றுக்கு இரண்டு என ஓட ஆரம்பித்து தொல்லை கொடுக்கும் என்பதால் தான்.

வாத்தியாரே, ஒரு விசயத்தை மனதில் கொள்ளுங்கள், பதிந்த பதிப்புகளுக்கு தான் இபணமே. அந்த பதிப்புகளே போய்விட்ட பின் இபணத்தை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.

விகடன்
05-01-2008, 09:20 AM
இவையெல்லாம் எதிர்பாராமல் நடைபெறுபவை அண்ணா.
ஆக்கங்களை நகலின்றி பதிந்து வைத்த நண்பர்களுக்குத்தான் சற்று மனவேதனையை அளிக்கும்.
தற்செயலாக நடந்த இந்த நிகழ்வை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.

சூரியன்
06-01-2008, 01:57 PM
பரவாயில்லை அண்ணா.
10 நாளைய பதிவுகள் தானே போனது.
மீண்டும் அதை பதித்தால் முடிந்து போகிறது.

ஆர்.ஈஸ்வரன்
07-01-2008, 10:52 AM
தமிழ் மன்றின் தரத்தை தரணி எங்கும் நிரப்புவோம்

தீபன்
17-01-2008, 04:57 PM
அடடா... மன்றத்துக்கு இப்படியொரு சோதனையா... நானில்லாத நேரத்தில் யார் கண்பட்டதோ...! இது தெரியாமல் மீண்டும் வந்து பார்த்த நான் சற்று குழம்பித்தான் போனேன். சரி, சரி, இதென்ன பெரிய விடயமா... நாங்க பாக்காத விபத்தா... தொடர்வோம் நம் பணி..!

vynrael
04-11-2020, 04:09 PM
audiobookkeeper.ru (http://audiobookkeeper.ru)cottagenet.ru (http://cottagenet.ru)eyesvision.ru (http://eyesvision.ru)eyesvisions.com (http://eyesvisions.com)factoringfee.ru (http://factoringfee.ru)filmzones.ru (http://filmzones.ru)gadwall.ru (http://gadwall.ru)gaffertape.ru (http://gaffertape.ru)gageboard.ru (http://gageboard.ru)gagrule.ru (http://gagrule.ru)gallduct.ru (http://gallduct.ru)galvanometric.ru (http://galvanometric.ru)gangforeman.ru (http://gangforeman.ru)gangwayplatform.ru (http://gangwayplatform.ru)garbagechute.ru (http://garbagechute.ru)gardeningleave.ru (http://gardeningleave.ru)gascautery.ru (http://gascautery.ru)gashbucket.ru (http://gashbucket.ru)gasreturn.ru (http://gasreturn.ru)gatedsweep.ru (http://gatedsweep.ru)
gaugemodel.ru (http://gaugemodel.ru)gaussianfilter.ru (http://gaussianfilter.ru)gearpitchdiameter.ru (http://gearpitchdiameter.ru)geartreating.ru (http://geartreating.ru)generalizedanalysis.ru (http://generalizedanalysis.ru)generalprovisions.ru (http://generalprovisions.ru)geophysicalprobe.ru (http://geophysicalprobe.ru)geriatricnurse.ru (http://geriatricnurse.ru)getintoaflap.ru (http://getintoaflap.ru)getthebounce.ru (http://getthebounce.ru)habeascorpus.ru (http://habeascorpus.ru)habituate.ru (http://habituate.ru)hackedbolt.ru (http://hackedbolt.ru)hackworker.ru (http://hackworker.ru)hadronicannihilation.ru (http://hadronicannihilation.ru)haemagglutinin.ru (http://haemagglutinin.ru)hailsquall.ru (http://hailsquall.ru)hairysphere.ru (http://hairysphere.ru)halforderfringe.ru (http://halforderfringe.ru)halfsiblings.ru (http://halfsiblings.ru)
hallofresidence.ru (http://hallofresidence.ru)haltstate.ru (http://haltstate.ru)handcoding.ru (http://handcoding.ru)handportedhead.ru (http://handportedhead.ru)handradar.ru (http://handradar.ru)handsfreetelephone.ru (http://handsfreetelephone.ru)hangonpart.ru (http://hangonpart.ru)haphazardwinding.ru (http://haphazardwinding.ru)hardalloyteeth.ru (http://hardalloyteeth.ru)hardasiron.ru (http://hardasiron.ru)hardenedconcrete.ru (http://hardenedconcrete.ru)harmonicinteraction.ru (http://harmonicinteraction.ru)hartlaubgoose.ru (http://hartlaubgoose.ru)hatchholddown.ru (http://hatchholddown.ru)haveafinetime.ru (http://haveafinetime.ru)hazardousatmosphere.ru (http://hazardousatmosphere.ru)headregulator.ru (http://headregulator.ru)heartofgold.ru (http://heartofgold.ru)heatageingresistance.ru (http://heatageingresistance.ru)heatinggas.ru (http://heatinggas.ru)
heavydutymetalcutting.ru (http://heavydutymetalcutting.ru)jacketedwall.ru (http://jacketedwall.ru)japanesecedar.ru (http://japanesecedar.ru)jibtypecrane.ru (http://jibtypecrane.ru)jobabandonment.ru (http://jobabandonment.ru)jobstress.ru (http://jobstress.ru)jogformation.ru (http://jogformation.ru)jointcapsule.ru (http://jointcapsule.ru)jointsealingmaterial.ru (http://jointsealingmaterial.ru)journallubricator.ru (http://journallubricator.ru)juicecatcher.ru (http://juicecatcher.ru)junctionofchannels.ru (http://junctionofchannels.ru)justiciablehomicide.ru (http://justiciablehomicide.ru)juxtapositiontwin.ru (http://juxtapositiontwin.ru)kaposidisease.ru (http://kaposidisease.ru)keepagoodoffing.ru (http://keepagoodoffing.ru)keepsmthinhand.ru (http://keepsmthinhand.ru)kentishglory.ru (http://kentishglory.ru)kerbweight.ru (http://kerbweight.ru)kerrrotation.ru (http://kerrrotation.ru)
keymanassurance.ru (http://keymanassurance.ru)keyserum.ru (http://keyserum.ru)kickplate.ru (http://kickplate.ru)killthefattedcalf.ru (http://killthefattedcalf.ru)kilowattsecond.ru (http://kilowattsecond.ru)kingweakfish.ru (http://kingweakfish.ru)kinozones.ru (http://kinozones.ru)kleinbottle.ru (http://kleinbottle.ru)kneejoint.ru (http://kneejoint.ru)knifesethouse.ru (http://knifesethouse.ru)knockonatom.ru (http://knockonatom.ru)knowledgestate.ru (http://knowledgestate.ru)kondoferromagnet.ru (http://kondoferromagnet.ru)labeledgraph.ru (http://labeledgraph.ru)laborracket.ru (http://laborracket.ru)labourearnings.ru (http://labourearnings.ru)labourleasing.ru (http://labourleasing.ru)laburnumtree.ru (http://laburnumtree.ru)lacingcourse.ru (http://lacingcourse.ru)lacrimalpoint.ru (http://lacrimalpoint.ru)
lactogenicfactor.ru (http://lactogenicfactor.ru)lacunarycoefficient.ru (http://lacunarycoefficient.ru)ladletreatediron.ru (http://ladletreatediron.ru)laggingload.ru (http://laggingload.ru)laissezaller.ru (http://laissezaller.ru)lambdatransition.ru (http://lambdatransition.ru)laminatedmaterial.ru (http://laminatedmaterial.ru)lammasshoot.ru (http://lammasshoot.ru)lamphouse.ru (http://lamphouse.ru)lancecorporal.ru (http://lancecorporal.ru)lancingdie.ru (http://lancingdie.ru)landingdoor.ru (http://landingdoor.ru)landmarksensor.ru (http://landmarksensor.ru)landreform.ru (http://landreform.ru)landuseratio.ru (http://landuseratio.ru)languagelaboratory.ru (http://languagelaboratory.ru)largeheart.ru (http://largeheart.ru)lasercalibration.ru (http://lasercalibration.ru)laserlens.ru (http://laserlens.ru)laserpulse.ru (http://laserpulse.ru)
laterevent.ru (http://laterevent.ru)latrinesergeant.ru (http://latrinesergeant.ru)layabout.ru (http://layabout.ru)leadcoating.ru (http://leadcoating.ru)leadingfirm.ru (http://leadingfirm.ru)learningcurve.ru (http://learningcurve.ru)leaveword.ru (http://leaveword.ru)machinesensible.ru (http://machinesensible.ru)magneticequator.ru (http://magneticequator.ru)magnetotelluricfield.ru (http://magnetotelluricfield.ru)mailinghouse.ru (http://mailinghouse.ru)majorconcern.ru (http://majorconcern.ru)mammasdarling.ru (http://mammasdarling.ru)managerialstaff.ru (http://managerialstaff.ru)manipulatinghand.ru (http://manipulatinghand.ru)manualchoke.ru (http://manualchoke.ru)medinfobooks.ru (http://medinfobooks.ru)mp3lists.ru (http://mp3lists.ru)nameresolution.ru (http://nameresolution.ru)naphtheneseries.ru (http://naphtheneseries.ru)
narrowmouthed.ru (http://narrowmouthed.ru)nationalcensus.ru (http://nationalcensus.ru)naturalfunctor.ru (http://naturalfunctor.ru)navelseed.ru (http://navelseed.ru)neatplaster.ru (http://neatplaster.ru)necroticcaries.ru (http://necroticcaries.ru)negativefibration.ru (http://negativefibration.ru)neighbouringrights.ru (http://neighbouringrights.ru)objectmodule.ru (http://objectmodule.ru)observationballoon.ru (http://observationballoon.ru)obstructivepatent.ru (http://obstructivepatent.ru)oceanmining.ru (http://oceanmining.ru)octupolephonon.ru (http://octupolephonon.ru)offlinesystem.ru (http://offlinesystem.ru)offsetholder.ru (http://offsetholder.ru)olibanumresinoid.ru (http://olibanumresinoid.ru)onesticket.ru (http://onesticket.ru)packedspheres.ru (http://packedspheres.ru)pagingterminal.ru (http://pagingterminal.ru)palatinebones.ru (http://palatinebones.ru)
palmberry.ru (http://palmberry.ru)papercoating.ru (http://papercoating.ru)paraconvexgroup.ru (http://paraconvexgroup.ru)parasolmonoplane.ru (http://parasolmonoplane.ru)parkingbrake.ru (http://parkingbrake.ru)partfamily.ru (http://partfamily.ru)partialmajorant.ru (http://partialmajorant.ru)quadrupleworm.ru (http://quadrupleworm.ru)qualitybooster.ru (http://qualitybooster.ru)quasimoney.ru (http://quasimoney.ru)quenchedspark.ru (http://quenchedspark.ru)quodrecuperet.ru (http://quodrecuperet.ru)rabbetledge.ru (http://rabbetledge.ru)radialchaser.ru (http://radialchaser.ru)radiationestimator.ru (http://radiationestimator.ru)railwaybridge.ru (http://railwaybridge.ru)randomcoloration.ru (http://randomcoloration.ru)rapidgrowth.ru (http://rapidgrowth.ru)rattlesnakemaster.ru (http://rattlesnakemaster.ru)reachthroughregion.ru (http://reachthroughregion.ru)
readingmagnifier.ru (http://readingmagnifier.ru)rearchain.ru (http://rearchain.ru)recessioncone.ru (http://recessioncone.ru)recordedassignment.ru (http://recordedassignment.ru)rectifiersubstation.ru (http://rectifiersubstation.ru)redemptionvalue.ru (http://redemptionvalue.ru)reducingflange.ru (http://reducingflange.ru)referenceantigen.ru (http://referenceantigen.ru)regeneratedprotein.ru (http://regeneratedprotein.ru)reinvestmentplan.ru (http://reinvestmentplan.ru)safedrilling.ru (http://safedrilling.ru)sagprofile.ru (http://sagprofile.ru)salestypelease.ru (http://salestypelease.ru)samplinginterval.ru (http://samplinginterval.ru)satellitehydrology.ru (http://satellitehydrology.ru)scarcecommodity.ru (http://scarcecommodity.ru)scrapermat.ru (http://scrapermat.ru)screwingunit.ru (http://screwingunit.ru)seawaterpump.ru (http://seawaterpump.ru)secondaryblock.ru (http://secondaryblock.ru)
secularclergy.ru (http://secularclergy.ru)seismicefficiency.ru (http://seismicefficiency.ru)selectivediffuser.ru (http://selectivediffuser.ru)semiasphalticflux.ru (http://semiasphalticflux.ru)semifinishmachining.ru (http://semifinishmachining.ru)spicetrade.ru (http://spicetrade.ru)spysale.ru (http://spysale.ru)stungun.ru (http://stungun.ru)tacticaldiameter.ru (http://tacticaldiameter.ru)tailstockcenter.ru (http://tailstockcenter.ru)tamecurve.ru (http://tamecurve.ru)tapecorrection.ru (http://tapecorrection.ru)tappingchuck.ru (http://tappingchuck.ru)taskreasoning.ru (http://taskreasoning.ru)technicalgrade.ru (http://technicalgrade.ru)telangiectaticlipoma.ru (http://telangiectaticlipoma.ru)telescopicdamper.ru (http://telescopicdamper.ru)temperateclimate.ru (http://temperateclimate.ru)temperedmeasure.ru (http://temperedmeasure.ru)tenementbuilding.ru (http://tenementbuilding.ru)
tuchkas (http://tuchkas.ru/)ultramaficrock.ru (http://ultramaficrock.ru)ultraviolettesting.ru (http://ultraviolettesting.ru)