PDA

View Full Version : ADSL வயர்லெஸ் (wireless) கனெக்ஷன்



உதயா
03-01-2008, 03:47 AM
வணக்கம்..

என் நண்பனிடம் Al Shamil (ADSL) (Wireless) கனெக்ஷம் உள்ளது. அவன் இருப்பது முதல் மாடி, நான் இருப்பது கீழே. அவனின் அந்த கனெக்ஷனை நானும் உபயோகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதில் பிரச்சனை என்னவென்றால் சிலநேரங்களில் எனக்கும் அந்த சிக்னல் கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைப்பதில்லை. என்ன செய்தால் எனக்கு அந்த சிக்னல் எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும்?

என்னிடம் உள்ள கணிணி விவரம்..

BRAND : Lenova
OS : Vista

உதவி செய்யுங்களே பிலிஸ்...

சிவா.ஜி
03-01-2008, 04:05 AM
அந்த ADSL மோடத்தில் கேபிள் கனெக்ஷனுக்கான வசதியிருந்தால் கேபிளை இணைத்து தொடர்பேற்படுத்திக்கொள்ளலாம்.இல்லையென்றால் சிக்னல் பூஸ்டர் பொருத்த வேண்டி வரும்.எனக்குத் தெரிந்து இங்கு(சவுதியில்)கிடைக்கும் Speed Touch ADSL- ல் நான்கு இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வசதி இருக்கிறது.
கணிணி கடைகளில் விசாரித்துப்பாருங்கள்.அந்த உபகரணத்தைப் பற்றி சொல்வார்கள்.

இதயம்
03-01-2008, 04:17 AM
உங்கள் பிரச்சினைக்கு தீர்வு USB Wireless Adaptor தான். இது போன்ற சிக்னல் அதிகமாக கிடைக்காத தருணங்களில் அந்த கிடைக்கும் குறைந்த சிக்னலையே பெற்று, அதை அதிகமாக்கி கொடுக்கும், மற்றும் தொலைவில் இருப்பதால் சரி வர பெற முடியாத சிக்னல்களை அந்த மோடம் இருக்கும் இடத்தை அடைந்து அதிக சக்தி கொண்டதாக் பெற்றுத்தரும் வேலையை இந்த wireless Adaptor-கள் செய்கின்றன.

இதற்கென்று மற்ற எந்த உபகரணங்களும் தேவையில்லை. உங்கள் கணினியில் USB port அவசியம் இருக்க வேண்டும். இந்த சிறிய சாதனத்தோடு installation CD ஒன்றும் கிடைக்கும். அதை உங்கள் கணினியில் நிறுவி உடன் உபயோகப்படுத்தலாம். உங்களுக்கு தேவைக்கேற்றபடி 50 மீட்டர், 100 மீட்டர் உள்ளிட்ட பலதரப்பட்ட தொலைவுகளில் சிக்னலை பெறும் வகையில் கிடைக்கின்றன. அதன் விலை அடையும் தொலைவு, பெற்றுத்தரும் சக்திக்கு ஏற்றாற் போல் வேறுபடும். உதாரணத்திற்கு 108 M தொலைவுக்கானது 100 ரியாலில் இங்கே கிடைக்கின்றது..!

உதயா
03-01-2008, 04:40 AM
இதயம் இதைதான் நான் எதிர் பார்த்தேன். அந்த Wireless Adaptor பெயர் ஏதேதும் கூற முடியுமா?

இதயம்
03-01-2008, 04:56 AM
இதயம் இதைதான் நான் எதிர் பார்த்தேன். அந்த Wireless Adaptor பெயர் ஏதேதும் கூற முடியுமா?

நான் பயன்படுத்தியதன் பெயர் TP Link. அதன் படம் கீழே..!
http://www.i-tech.com.au/Library/Image/Product/TL-WN620G.jpg

மேலதிக விபரத்திற்கு கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்.
http://www.i-tech.com.au/products/12529_TP_Link_TL_WN620G_108M_Wireless_USB.aspx

சிவா.ஜி
03-01-2008, 04:57 AM
TOPLINK அல்லது US Robotics ஆனால் US Robotics விலை அதிகம்.நல்ல தரமானது.54 மீட்டர் மற்றும் 108 மீட்டர் ரேஞ்சில் கிடைக்கிறது

உதயா
03-01-2008, 05:10 PM
நான் இன்று விசாரித்தேன், இது சரியாக வருமா?

1) D-LINK - DWA120
2) US ROBOTICS - 5421

இதில் எது வாங்க?

மயூ
04-01-2008, 05:08 AM
என்னைப் போறுத்தவரையில் யு.எஸ் ரொபர்ட்டிக்ஸ் நல்லது என்றே படுகின்றது. கென்பிகர் செய்வது மிக இலகு... மற்ற தயாரிப்புகள் மண்டை காய வைத்துவிடும். எதற்றும் வல்லுனர்களில் பரிந்துரையைக் கேட்டு பொருளை வாங்கவும்.

சிவா.ஜி
04-01-2008, 05:19 AM
யு.எஸ் ரோபோடிக்ஸ் நல்லதுதான் ஆனால் அதிக விலை.D-LINK நல்ல தரமாகத்தானிருக்கிறது.கான்ஃபிகர் செய்வது பிரச்சனையில்லை.உடன் வரும் CD-யை இட்டு இன்ஸ்டால் செய்தாலே போதும்.தானாகவே நெட்வொர்க்கை பிடித்துவிடுகிறது.

மயூ
04-01-2008, 05:21 AM
யு.எஸ் ரோபோடிக்ஸ் நல்லதுதான் ஆனால் அதிக விலை.D-LINK நல்ல தரமாகத்தானிருக்கிறது.கான்ஃபிகர் செய்வது பிரச்சனையில்லை.உடன் வரும் CD-யை இட்டு இன்ஸ்டால் செய்தாலே போதும்.தானாகவே நெட்வொர்க்கை பிடித்துவிடுகிறது.

ஒ..!!
சிவா நன்றி தகவலுக்கு! :) :icon_b:

உதயா
05-01-2008, 05:06 AM
இது வாங்க, ஒரு கடைகாரரை தொடர்பு கொண்டேன்.

அவர் கேட்கின்றார், உங்கள் கணிணியால் பிடிக்கப்படாத சிக்னல், இதனால் (USB ADAPTER) பிக்கப்படுமா? இதை உபயோகப்படுத்துவதுக்கு பதிலாக, எங்கே ரூட்டர் இருக்கிறதோ அதை சிக்னல் பூஸ்ட் செய்தால் லேப்டாப்பில் சிக்னல் கிடைக்குமே என்று கூறுகிறார்.

விளக்கம் தாருங்கள் பிலிஸ்

சிவா.ஜி
05-01-2008, 07:50 AM
ADSL-ல் இரண்டு வகை இருக்கிறது.ஒன்றில் கேபிள் கனெக்ஷன் மட்டுமே இருக்கும்,மற்றொன்றில் வயர்லெஸ் கனெக்ஷனும் இருக்கும்.உங்கள் நன்பர் உபயோகப் ப்டுத்துவதில் இரண்டு வசதியுமிருந்தால் அவரை வயர்லெஸ் கனெக்ஷனை Enable செய்யுமாறு கூறுங்கள்.அப்படியும் சிக்னல் வீக்காயிருந்தால் இந்த அடாப்டர் பயண்படும்.

உதயா
05-01-2008, 08:24 AM
சிவா சார்..

எனக்கு கேபில் மூலம் இயக்க விருப்பம் இல்லை. கேள்வி என்னவென்றால் சில நேரம் சிக்னல் கிடைக்கிறது, சில நேரம் கிடைப்பதில்லை, அப்படி இருக்கும் இந்த தருவாயில், நான் இந்த D-LINK USB ADAPTER உபயோகப்படுத்தினால் சரியாக எனக்கு சிக்னல் கிடைக்குமா? லேப் டாபில் இருக்கும் கருவியால் பிடிக்கப்படாத இந்த சிக்னல் நாம் உபயோகப்படுத்தப்போகும் இந்த adapter பிடிக்குமா என்பது தான்.

இந்த adapter ரை வாங்கிவிட்டால் திருப்பி கொடுக்கமுடியாது. உருதியான ஒரு கருத்து கொடுத்தால் வாங்கி விடுவேன்.

வாங்க சொன்னால், D-LINK கின் DWA-130 வாங்கவா இல்லை USRopotics ன் 5421 வாங்கவா?

இதயம்
05-01-2008, 08:37 AM
உதயா உங்கள் பிரச்சினை இன்னும் தீரவில்லையா..? Wireless USB adapter என்பது மடிக்கணினியில் inbuilt Wireless hardware இல்லாமல் இருப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம். அதுவே சம்பந்தப்பட்ட உபகரணமாக இருந்து அந்த வேலையை செய்யும். ஆனால், உங்களின் மடிக்கணினி அந்த உபகரணம் அல்லது மென்பொருளை சப்போர்ட் செய்யுமா என்பதை நான் சொல்ல முடியாது.

உதயா
05-01-2008, 08:39 AM
இதயம் இன்னும் தீரவில்லையே...

சில நேரம் சிக்னல் கிடைக்கிறது, சில நேரம் கிடைப்பதில்லை. இந்த கிடைக்காத நேரத்தில் பிடிக்கத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

இதயம்
05-01-2008, 08:40 AM
இதயம் இன்னும் தீரவில்லையே...

சில நேரம் சிக்னல் கிடைக்கிறது, சில நேரம் கிடைப்பதில்லை. இந்த கிடைக்காத நேரத்தில் பிடிக்கத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

அதற்கு தான் நான் சொன்ன உபகரணம் தேவைப்படும்..! ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே..!!

சிவா.ஜி
05-01-2008, 08:45 AM
சிவா சார்..

கேள்வி என்னவென்றால் சில நேரம் சிக்னல் கிடைக்கிறது, சில நேரம் கிடைப்பதில்லை, அப்படி இருக்கும் இந்த தருவாயில், நான் இந்த D-LINK USB ADAPTER உபயோகப்படுத்தினால் சரியாக எனக்கு சிக்னல் கிடைக்குமா? லேப் டாபில் இருக்கும் கருவியால் பிடிக்கப்படாத இந்த சிக்னல் நாம் உபயோகப்படுத்தப்போகும் இந்த adapter பிடிக்குமா என்பது தான்.
வாங்க சொன்னால், D-LINK கின் DWA-130 வாங்கவா இல்லை USRopotics ன் 5421 வாங்கவா?

இந்த அடாப்டர் சுற்றுவட்டாரத்திலிருக்கும் வயர்லெஸ் சிக்னல்களைக் கவர்வதற்காகவே பயன்படுவது.நீங்கள் சொல்வதிலிருந்து,சிக்னல் இருக்கிறது,ஆனால் வீக்காக இருக்கிறது என்பது தெரிகிறது.அப்படியானால் இந்த உபகரணம் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

அடுத்து நான் முன்பே சொன்னதைப் போல US Robotics மிக நல்லதுதான் ஆனால் கொஞ்சம் விலை கூடியது.உங்களால் முடியுமென்றால் இதுவே நல்லது.ஆனால் வாங்கும் போது அதன் ஈர்க்கும் பரப்பளவை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 54 மீட்டர் மற்றும் 108 மீட்டர் ரேஞ்சில் கிடைக்கிறது. வாங்கும்போது அதிக ரேஞ்ச் உள்ளது வாங்குவது நல்லது.(54-ஐ விட 108 விலை அதிகம்)

D-LINK-ம் மோசமில்லை.

உதயா
05-01-2008, 11:04 AM
நல்லது... வாங்கும் படி கூறிவிட்டேன். USROBOTICS 5421 விலை துபாய் நாணயம் : Dhs. 165.00 மட்டும்....:confused:

சிவா.ஜி
05-01-2008, 11:09 AM
நல்லது... வாங்கும் படி கூறிவிட்டேன். USROBOTICS 5421 விலை துபாய் நாணயம் : Dhs. 165.00 மட்டும்....http://www.tamilmantram.com:80/vb/

உதயா இது 54 மீட்டர் ரேஞ்ச் உள்ளது.இங்கும் கிட்டத்தட்ட அதே விலைதான்.
உங்கள் பிரச்சனை தீர வாழ்த்துகள்.

உதயா
05-01-2008, 11:38 AM
அவர்கள் ரேஞ்ச் சொல்லவில்லை, 125Mbps என்று தான் கூறுகிறார்கள். 54Mbps இருக்கிறது, அதைவிட இது பெட்டர் என்பதால் இதை வாங்குகிறேன்.

சிவா.ஜி
05-01-2008, 11:40 AM
அப்ப நல்லதுதான்.நல்ல கவரிங் ரேஞ்ச் இருக்கும்.

உதயா
05-01-2008, 12:53 PM
மொத்ததுல என்னை போட்டு குழப்புறீங்க...

என் லேப்டாப்பில் வைபை இருக்கிறது. சில நேரங்களில் சில wireless network கும் கிடைக்கிறது. சில நேரங்களில் கிடைப்பதில்லை. எப்போதும் wireless networe signal கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்.

மேலே குறிப்பிட்ட USRobicts 5421 வாங்கும் விவரத்தை எங்கள் IT Administrator ரிடம் சொன்னதும், இது நமது தேவைக்கு உபயோகப்படாது. நாம் வாங்கவேண்டியது Wireless Network Signal Booster என்று கூறுகிறார்.. இப்போது நான் என்ன செய்யவேண்டும்?

திரு.சிவா தாங்கள் உபயோகப்படுத்துவது என்னைப்போல் உள்ள பிரச்சனைக்கு தானா?

சாரி நானும் குழம்பி, உங்களையும் குழப்பிப்பதில்.

சிவா.ஜி
05-01-2008, 01:02 PM
மன்னிக்கவும் உதயா.இதயம் அவர்களின் பதிவில் குறிப்பிட்டிருந்த படி உங்களிடம் wireless இல்லையென்று தவறாக நினைத்துக்கொண்டுதான் இந்த சாதனத்தைப் பற்றி சொன்னேன்.அவரும் இதையே குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் லேப்டாப்பில் அந்த வசதி உள்ளதென்றால் உங்கள் IT Administrator சொன்னதைப் போல பூஸ்டர்தான் தேவை.அதைப் பற்றி எனக்கு தற்சமயம் தெரியவில்லை.நன்பரொருவர் உபயோகிக்கிறார்.அவரிடமிருந்து விவரங்கள் பெற்று நாளை பதில் தருகிறேன்.அதில் ஆண்டெனா போன்ற சாதனம் (சிறிய சைஸில்) நிறுவ வேண்டுமென்று நினைக்கிறேன்.
மீண்டும் மன்னிக்கவும்.

உதயா
06-01-2008, 03:39 AM
பரவா இல்லை திரு.சிவா.. இதுக்கேன் மன்னிப்பு அது இதுன்னு..

எப்படியோ எனக்கு ஒரு நல் வழி பிறந்தால் சந்தோஷமே

உதயா
08-01-2008, 05:37 AM
ஒருவரும் இந்த பக்கம் வரவில்லையா?

நுரையீரல்
20-01-2008, 04:12 AM
உதயா நான் இங்கு வந்துவிட்டேன். பாஸ்போர்ட் பிரச்சினை சரியாயிடுச்சா?

உங்களுடைய பிரச்சினை என்னவென்றால், முதல்மாடியில் இருக்கும் நண்பர் ADSL லைன் வைத்திருக்கிறார். அதை wireless மூலமாக share செய்து, அதை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்பதே..

முதலாவதாக ADSL வைத்திருக்கும் நபரிடம் கேளுங்கள், அவர் wireless ADSL Modem வைத்திருப்பார். அந்த wireless ADSL Modem ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள் மட்டுமே Internet connection-ஐ wireless மூலம் share செய்யும்.

எந்தவித Magnetic waves interaction இல்லாத சூழல் மற்றும் ஒலியை தடைசெய்யும் தட்பவெப்பம் இல்லாத நிலைகளில் நன்றாக வேலை செய்யும். இந்தக் காரணிகள் ஒவ்வாத பலநேரம் படுத்துவிடுகிறது என்பது தான் உங்கள் பிரச்சினை.

Limitation of the particular wireless ADSL Modem குறைவு என்பதால் தான் இப்பிரச்சினை. wireless ADSL Modem with enhanced limit பொருத்தினால், பிரச்சினை ஓவர், போயேபோச்சு, போயிந்தே, இட்ஸ் கான்...

வேறொரு முறையிலும் உங்கள் Internet connection-ஐ share செய்யலாம். அதாவது தனியாக ADSL Modem வாங்கி, அதன் output-ஐ ஒரு High Quality wireless hub / router-க்கு கொடுத்து Internet connection-ஐ share செய்யலாம்.

புதிய பிரச்சினை ஒன்று இருக்கிறது -> முதல் மாடியில் இருக்கும் shared connection, ஐந்தாம் மாடி வரைப் போகும், அப்புறம் No. of shared users அதிகமாகி, First Come First Serve (Carrier Detect Multiple Access) என்ற விதிப்படி, பயன்பட்டு ரோட்டில் போறவன், வாறவனுக்கெல்லாம் பயன்படலாம்.

ஆகவே, Manually configurable wireless modem வாங்கி, அதில் Firewall / security features / static routing நிறுவி, அதன் பின்னர் குறிப்பிட்ட WiFi மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் Wireless connection shared Internet Accessible Network உருவாக்கலாம்.

எவ்வளவு செய்றோம், இதைச் செய்யமாட்டோமா?

உதயா
20-01-2008, 05:22 PM
எந்தவித Magnetic waves interaction இல்லாத சூழல் மற்றும் ஒலியை தடைசெய்யும் தட்பவெப்பம் இல்லாத நிலைகளில் நன்றாக வேலை செய்யும். இந்தக் காரணிகள் ஒவ்வாத பலநேரம் படுத்துவிடுகிறது என்பது தான் உங்கள் பிரச்சினை.

இதை எங்கே பொருத்தவேண்டும்?


ADSL Modem என்று தாங்கள் குறிப்பிடுவது, ADSL Router ரையா?

என் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய ஏதாவது ஒரு Products டின் பெயர் தறமுடியுமா? அதை வைத்து தேடிப்பார்க்கிறேனே.

பாஸ்போர்ட் பிரச்சனை இன்னும் தீரவில்லை. ( இந்தியா போனதும் மாற்றிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் )

அன்புரசிகன்
20-01-2008, 06:25 PM
எனக்கு தெரிந்தவரை ADSL Modem என்பது ஒரு பாவனைக்குரியது. அதிலிருந்து 2-3 ஆக பிரிக்க இயலாது. உங்களது இணையவழங்குனர் உங்கள் வீட்டில் தொலைபேசியின் இணைப்பு முனை போன்ற ஒரு இடத்தினை ஏற்படுத்தி விடுவர். பின்னர் அதனை ADSL Modem உடன் இணைத்த்தால் மறுமுனை USP முறையில் உங்கள் கணினியுடன் இணைக்க ஏதுவாக இருக்கும்.
http://www.bizsyscon.com/pics/WESTELL-ADSL_MODEM-2100_WITH_CABLES.jpg

ஆனால் ADSL router ல் இருவகை உண்டு. ஒன்று wireless. மற்றது அந்த இணைப்பு முறை அற்றது.

Wireless உள்ளதில் நீங்கள் இருமுறையாலும் இணைக்கலாம்.

http://www.netkatonline.com/images/dlink%20router.jpg

மற்றயதை வயர் மூலம் மட்டும் தான் நீங்கள் இணைக்க முடியும்.
http://www.topachat.com/boutique/ressources/in/inh382/inh382z.jpg

Wireless முறையில் இணைப்பதற்கு உங்கள் கணினியில் அதற்குரிய வன்பொருள் இருத்தல் அவசியம். அநேக மடிக்கணினியில் அந்த வசதி உண்டு.

இவற்றில் ஒன்றில் தொலைபேசி முனையை இணைக்க ஏதுவாக ஒரு முனை இருக்கும். அதிலிருந்து நீங்கள் மற்றய சில வெளிஇணைப்புக்களை ஏற்படுத்தலாம்.
http://www.dreambox-receivers.com/dreambox-fta-receivers/product-images/d_9.jpg

நீங்கள் இணைத்துவிட்டு மற்றய முனைகளில் வலையமைப்பு இணைப்பை ஏற்படுத்தவல்ல வயர் முனைகளை செலுத்தமுடியும். பொதுவாக வயர் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் இணைய இணைப்பில் தேவையற்ற தடங்கல்களை தடுக்கலாம்.

பொதுவாக Router ஐ உங்கள் கணினிக்கு இணைத்துவிட்டு இணைய உலாவியில் 192.168.1.1 என பதித்தால் router இன் Username and password கேட்கும். எப்போதும் புதியதாயின் இரண்டுமே admin என்பதாக தான் இருக்கும். பின்னர் நீங்கள் உள்ளே சென்று இவற்றை மாற்றலாம்.
http://www.johnbatdorf.net/blog/content/binary/login.jpg

http://www.simplehelp.net/images/sockso/router01a.jpg

User name password கொடுத்ததும் மேலேவாறு வரும். அதில் Run wizard அனேக விடையங்களை அவ்வாறே விடலாம். இணைய இணைப்பு User name and password இல் உங்கள் இணையவழங்குனர் தந்ததை இட்டால் போதும். பின்னர் உங்கள் மேல்மாடி + கீழ்மாடிக்கு ஒரு தொடர்பு இந்த router மூலம் வந்துவிடும்.

Router வாங்குவதென்றால் என்னைப்பொறுத்தவரை Wireless ஐ தவிர்த்து வாங்கலாம். இல்லை அதை வாங்கினால் Wireless ஐ மறக்காது பாதுகாத்திட வேண்டும். இல்லாவிட்டால் வேறு எவனாவது உங்கள் இணைப்பை இலவசமாக பாவிக்க ஏதுவாகிவிடும். வாங்கும் பொருட்கள் DLINK or LINKSYS போன்றவற்றை வாங்கலாம்.

DLINK அனாது கத்தாரில் 150 றியாலுக்கு கிடைக்கும்.

இதுசம்பந்தமாக நீங்கள்

http://www.dlink.com
http://www.linksys.com/
ஆகிய இணையங்களிலும் மேலதிக தகவல்களை பெறலாம்.

நீங்கள் ஒரு router ஐ எவ்வாறு செயற்படுத்துவது என்பது சம்பந்தமான விடையங்களை இந்த (ftp://ftp.dlink.com/Gateway/di524/Manual/DI-524_manual_06292005.zip)கோப்பிலிருந்து பெறமுடியும்.

நுரையீரல்
21-01-2008, 05:27 AM
அன்புரசிகனின் தகவல்கள் படுசூப்பரப்பு.. எள்ளுனா எண்ணையா வந்தில்ல நிக்குது பயபுள்ள..

அன்புரசிகன்
21-01-2008, 05:32 AM
ஒரு விடையம் தெரியுமா... கத்தாரில் இந்த பாழாய்ப்போன விடையம் செய்துமுடிக்க எனது நண்பர் ஒருவரின் நண்பர்கள் 500 றியால் செலவழித்திருக்கிறார்கள். (கணினி வல்லுனர்கள் அதை நிறுவுவதற்கு. இணைய வழங்குனரின் இணைப்பு செலவு வேறு). அதுவும் உருப்படியாக செய்துமுடிக்காது. கேட்டவுடன் எனக்கு தலையே சுற்றியது. இந்த வேலைக்கு 500. பின் நான் ஒருமுறை சென்று இதை மீள செய்துகொடுத்தேன். எனக்கு மரக்கறி புரியாணியும் ஜாங்கிரியும் தான் தந்தார்கள். :(
:D :D :D :D

நுரையீரல்
21-01-2008, 05:39 AM
நாங்கெல்லாம் ஓசி வேலைக்குப் போறதில்ல தெரியுமா?

உதயா
21-01-2008, 06:26 AM
என் பிரச்சனை என்னவென்று உங்களுக்கு புறியவில்லையா?

என் நண்பரிடம் ADSL Wireless Intenet Connection இருக்கிறது. அதன் Signal சில நேரங்களில் எனக்கு கிடைக்கிறது சில நேரங்களில் எனக்கு கிடைப்பதில்லை. எப்போதும் அந்த signal கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்.

அவரிடம் உள்ள router name Aztech DSL 60J EW( http://www.aztech.com/prod_adsl_dsl605ew.html )

என் கணிணி : Lenova
ஓபி. : Vista

அன்புரசிகன்
24-01-2008, 06:58 AM
ADSL Modem என்று தாங்கள் குறிப்பிடுவது, ADSL Router ரையா?
என் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய ஏதாவது ஒரு Products டின் பெயர் தறமுடியுமா? அதை வைத்து தேடிப்பார்க்கிறேனே.
பாஸ்போர்ட் பிரச்சனை இன்னும் தீரவில்லை. ( இந்தியா போனதும் மாற்றிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் )


என் பிரச்சனை என்னவென்று உங்களுக்கு புறியவில்லையா?
என் நண்பரிடம் ADSL Wireless Intenet Connection இருக்கிறது. அதன் Signal சில நேரங்களில் எனக்கு கிடைக்கிறது சில நேரங்களில் எனக்கு கிடைப்பதில்லை. எப்போதும் அந்த signal கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்.
அவரிடம் உள்ள router name Aztech DSL 60J EW( http://www.aztech.com/prod_adsl_dsl605ew.html )
என் கணிணி : Lenova
ஓபி. : Vista

நான் தந்த பதில் நீங்கள் மேலு கேட்ட கேள்விக்கானது.

ஆனாலும் உங்களின் தேவைக்கான பதில் சிவா மற்றும் இதயம் தந்திருக்கிறார்கள். உங்கள் router ன் strength போதாது ஏனின் அதை அதிகரிக்க ஏதும் உள்ளதாக எனக்கு தெரியாது. அதாவது அலையை படியேற்றம் செய்து உங்கள் கணினிக்கு இணைக்க கேட்குறீர்கள். அவ்வகையான வன்பொருட்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பிரவீன் - மோகன் .... இவ்வகையான வன்பொருட்கள் உள்ளனவா?

1 மாடி தான் வித்தியாசம் எனின் wire க்கு மாறுங்கள்.
எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்.

அன்புரசிகன்
24-01-2008, 07:05 AM
wifi antennas - booster என்று ஒன்று உள்ளதாக அண்ணன் கூறினான். முயன்று பாருங்கள். இணையத்தில் தேடியபோது கிடைத்த சில படங்கள்.

http://www.cantenna.com/cantenna_images/city03.gif

இதோ இன்னொன்று.
Quicky FP
27 dBm USB Transceiver
For PowerMacs, MacMinis, etc.

$225.00 USD

Purpose
Poor signal strength is common and must be dealt with, so why settle for less? The Quicky USB is an elegant solution for Mac users that demand wireless performance that is as great as their Macs have. In a very small package, the Quicky makes the wireless signal going into the Mac ten times as strong. Design
The case of the Quicky is made of aluminum for lightweight and high strength. This also lends itself to the Apple aesthetic of brushed metal making it appear appropriate to the 'Book.
Functionality
The Quicky as stated before takes the existing wireless signal and amplifies it to the point that there is 10x the original signal strength. The Quicky contains a 500 milliwatt transceiver built in. To further its capability there is a fully removable antenna.
http://www.quickertek.com/products/images/iquicky_2.jpg

praveen
24-01-2008, 09:58 AM
இந்த திரி முழுதும் விரைவாக படித்ததில் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது, உதயா சிக்னல் வீக் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதவ நண்பர்கள் வயர்லெஸ் நெட்வொர்கின் அனைத்து டெக்னாலஜிகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக உதயாவிற்கு உதவ நான் கூகிள் டாக்-ல் தயாராக இருக்கிறேன். உதயா உங்கள் PM பாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் நண்பரை அந்த ADSL+Wireless டிவைஸை காற்றோட்டம் அல்லது அறையின் ஓரத்திற்கு சுவரை விட்டு சற்று தள்ளி அந்த ஆண்டெனாவை மேல்பக்கம் பார்க்கும்படி நன்கு உயர்த்தி வையுங்கள். முடிந்தால் அந்த வயர்லெஸ் அக்ஸஸ் பாயிண்ட்-ன் ஒலிபரப்பை உச்சத்தில் வைக்க மேனுவலை பாருங்கள்.

உதயா
26-01-2008, 03:37 AM
இப்போது நான் அலுவலகத்தில் இருப்பதால் voice செய்யமுடியாது. முயன்று பார்த்துவிட்டு தெறியப்படுத்துகிறேன்.

அறிஞர்
01-02-2008, 04:16 PM
அவரிடம் உள்ல இணணப்பு, wireless router நல்லதாக இருந்தால், கூடிய தொலைவு வரை எடுக்கும்.

உதயா
18-02-2008, 08:40 AM
பதிலும் விளக்கங்களும் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

ஆக மொத்தத்தில் நான் புதிய கனெக்ஷகுக்கு விண்ணப்பித்துவிட்டேன்.

இராசகுமாரன்
18-03-2008, 09:42 AM
Etisalat வழங்கும் இந்த ரோவ்டர் மிக மட்ட ரகமானது. அதனால், சிக்னல் போதிய அளவு கிடைக்கவில்லை.

இனி புதிய கனெக்ஷனுக்காவது நல்ல ரோவ்டர் வாங்குங்கள். நான் உபயோகிப்பது LinkSys WAG200G, நன்றாக உள்ளது.


அவரிடம் உள்ள router name Aztech DSL 60J EW( http://www.aztech.com/prod_adsl_dsl605ew.html )

என் கணிணி : Lenova
ஓபி. : Vista

உதயா
19-03-2008, 12:12 PM
இன்று எனக்கு புதிய இணைப்பு கிடைத்துவிட்டது. SIEMENS சின் Gigaset SE568 WLAN dsl டோவ்டர் கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி இருக்கும்? யாரேனும் Siemens உபயோகப்படுத்தி இருக்கிறீர்களா?