PDA

View Full Version : காத்திருக்கிறேன் அந்த ஒரு நாளுக்காய்....ஓவியன்
20-12-2007, 08:28 PM
சொல்ல நினைத்ததை
சொல்லாமலும்
செய்ய நினைத்ததை
செய்யாமலுமிருந்த
காலங்களை காதலால்
இழுத்து மூடியவளே...

வீடு தொலைத்து கடத்தியும்
வீடு தேடி ஓடி வரும்
நாய்க்குட்டியாய்
மறுபடி, மறுபடி
உன்னிடம் வருகிறதே
என் நினைவுகள்....

உன் அஞ்சன விழிகளை
நேரே நான் சந்தித்ததில்லை
ஆயினும் என் ஒவ்வொரு
விழித்தெழுகையிலும்
நிழலாடுகிறது
நின் சொர்ண விம்பம்....

காய்ந்து போன
கடந்த காலங்களால்
என் தூரிகை
காய்ந்திருக்கையில்
வர்ணங்களை வானவில்லாய்
நீ விசிறி வந்த போது
கை(ப்)பற்ற வந்தும்
கைதாகிப்போனேன் என்
விருப்புடனேயே...

வானம் விட்டு
ஒழியா மேகம் போல்
உன் தேகம் விட்டகலா
நிழலாய் நானாக
நினைவுகளையும்
கனவுகளையும்
நிஜமாக்கி நனவாக்க
காத்திருக்கிறேன் அந்த
ஒரு நாளுக்காய்.......

அறிஞர்
20-12-2007, 08:43 PM
வானம் விட்டு
ஒழியா மேகம் போல்
உன் தேகம் விட்டகலா
நிழலாய் நானாக
நினைவுகளையும்
கனவுகளையும்
நிஜமாக்கி நனவாக்க
காத்திருக்கிறேன் அந்த
ஒரு நாளுக்காய்.......
கனவுகள் நிஜமாகட்டும்..

அருமை.. ஓவியன்..

செல்வா
20-12-2007, 09:04 PM
என்னத்த சொல்ல... இப்படி தேடிப்போய் மாட்டிக்குறவங்கள என்னாண்ணு சொல்லுறது.... மனச அலய விடாதீங்கப்பூண்ணு சொன்னா கேக்குறீங்களா?.... ஏதோ இப்படி எல்லாம் ஒருமாதிரியா ஆனதால.. நம்ம மன்றத்துக்கு நல்ல பல கவிதைகள்.. கெடைக்குதுங்குற ஒரேகாரணத்துக்காக.... சும்மா விடுறன் உங்கள... ஹி...ஹி..... சும்மா..

நல்லாருக்கு ஓவியன்.....

"சொல்ல நினைத்ததை
சொல்லாமலும்
செய்ய நினைத்ததை
செய்யாமலுமிருந்த
காலங்களை காதலால்
இழுத்து மூடியவளே..."

உண்மை உண்மை... உண்மையைத் தவிர வேறில்லை...

வாழ்த்துக்கள்....... வேற என்னத்துக்கு... ஏதோ ஆரம்பிச்சுட்டீங்க நல்லபடியா முடிச்சுருங்க.... முடிப்பீங்க... :)

மதி
20-12-2007, 10:49 PM
அட.. வாழ்த்துக்கள் ஓவியன்...
காத்திருத்தலும் சுகம் தான்..
அந்த நாளுக்காக..!
கலக்குங்க...

RRaja
21-12-2007, 02:43 AM
காய்ந்து போன
கடந்த காலங்களால்
என் தூரிகை
காய்ந்திருக்கையில்
வர்ணங்களை வானவில்லாய்
நீ விசிறி வந்த போது
கை(ப்)பற்ற வந்தும்
கைதாகிப்போனேன் என்
விருப்பத்துடனேயே... நல்ல வரிகள். தாமாய் தொலைவதுதானே காதல்.

ஷீ-நிசி
21-12-2007, 04:06 AM
சிறகடிக்கும் மனதை கண்டேன்
உன் கவிதையில்...

அடிமனதிலிருக்கும் இந்த
தூரமான காதலும்
ஈரமான அன்பும் என்றும் உறைந்திடாமலும்!
மறைந்திடாமலும்!

காலங்களை கடந்து இருந்திட
வாழ்த்துக்கள் ஓவியன்!

பூமகள்
21-12-2007, 05:53 AM
நீண்ட நாளுக்கு பின் ஓவியன் அண்ணாவின் அடிமனம் சொல்லும் கவிதை..!!
எல்லா வரிகளும் அற்புதம்.. ரசித்தேன்.. நெகிழ்ந்தேன்.. மகிழ்ந்தேன்..!
எதைக் குறிப்பிடுவது என்றே தெரியவில்லை.

"கைப்பற்ற நினைத்தவர்.
கைதான விந்தை..!
பாரதிகள் பல வந்தாலும்
முத்தமிழுக்கு
ஓர் பாரதி தான்..!!
வருவார்..!!
விடுதலை தருவார்..!!"

உங்களின் ஓவியத்தினை "பா" கொண்டு மிளிர வரும் தேவதைக்கான கவிதை அசத்தல்.. அற்புதம்.. அருமை.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஓவியன் அண்ணா.

விகடன்
07-02-2008, 10:10 AM
படித்த்தேன் ஓவியன் உன் கவிதைகளை. எளிமை கொஞ்சும் அழகான வரிகள்.

இத்தோடு விடைபெறுகிறேன் இங்கிருந்து...

இளசு
07-02-2008, 06:11 PM
விழிகளைச் சந்தித்ததில்லை..ஆனால்
விழித்தவுடன் ஆக்கிரமிக்கும் பிம்பம்..

இனிய காதல் முரண்..

ஷீ சொன்னதுபோல் தூரமானாலும் ஈரமாய் இருக்கும் காதல் வெல்லும்..

வாழ்த்துகள் ஓவியன்!

அமரன்
07-02-2008, 08:53 PM
நாளைய விடியல் சொல்லும் ஓவியரே
காத்திருந்து சுவைக்கும் இன்பத்"தை"..

aren
07-02-2008, 09:49 PM
நேற்று முழுவதும் ஓவியன் தூங்கவில்லை என்று கேள்வி. காலை எப்போது விடியும் என்று காத்திருப்பதாக தகவல்.

எல்லாம் சிறப்பாக நடந்தேறிட என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அனுராகவன்
09-02-2008, 02:10 AM
காதல் சுகமே தனிதான்.
அதை ஒருமுறை ஒவ்வொருவரும் அனுபவமாகதான் உணரமுடியும்.
ம்ம் என் நன்றி ஓவியா!!!

நேசம்
09-02-2008, 05:24 AM
நிச்சயமாய் கனவுகளௌம் ஒருநாளும் நிஜமாக ஆக வாழ்த்துகள் ஒவியன்