PDA

View Full Version : பிரித்தல்



ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:53 AM
காம்புள்ள பூவைக்
கிள்ளினேன்
அடடா
காம்பிலும் தண்ணீர்
பூவிலும் தண்ணீர்

james
20-12-2007, 10:26 AM
எத்தனை வலி நிறைந்த விசயம்..
ஆழமான கருத்து கவிஞரே.... ! வாழ்த்துக்கள்.... !

ஓவியன்
20-12-2007, 02:53 PM
காம்புக்கும் பூவுக்கும்
தண்ணீர்
காதல் கொண்ட உள்ளங்களுக்கு
கண்ணீர்........!!

சின்ன வரிகள்
ஆனால், ஆழமானவை.....!! :icon_b:

அமரன்
11-01-2008, 08:07 AM
ஆனந்த கண்ணீரில் பூ..
பிரிவுத்துயரில் காம்பு...


ஆழமாக கருத்துச் செறிவு..

ஆர்.ஈஸ்வரன்
11-01-2008, 10:08 AM
அனைவருக்கும் என் நன்றி

aren
11-01-2008, 10:12 AM
இதிலிருந்து தெரிந்துகொள்வது எதையும் கிள்ளாதீர்கள்.

உள்ளத்தைக் கிள்ளாதே என்கிறீர்கள்.

sarcharan
11-01-2008, 12:45 PM
அவள் கன்னத்தை கிள்ளினேன்
அவள் கன்னம் சிவந்தது
கூடவே என் கன்னமும்..

aren
11-01-2008, 03:04 PM
அவள் கன்னத்தை கிள்ளினேன்
அவள் கன்னமும் சிவந்தது
கூடவே என் கன்னமும்..

அதான் மன்றம் பக்கம் வருவதேயில்லையோ!!!