PDA

View Full Version : காகிதப் பூ



ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:50 AM
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை

ஆதி
20-12-2007, 09:54 AM
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை

இக்கவிதையைப் படிகையில் நா.காமராசனின் "காகித மலர்கள்" தொகுப்பே என் ஞாபகத்திற்கு வருகிறது..

அரவானிகளைப் பற்றிய கவிதையின் தலைப்பாய் இட்டிருப்பார்..

காகித மலர்கள் தானே அவர்களும்..

வாழ்த்துக்கள் ஈஸ்வரன்..

-ஆதி

james
20-12-2007, 10:28 AM
ஆழமான வரிகள்..பாராட்டுகள்.

பூமகள்
20-12-2007, 10:33 AM
காகிதப் பூ..!!


மலர்ந்து மணம் காணாத
வண்ண மலர்கள்..
முதிர்கன்னிகளாய்..!

கன்னி மனம்
ஏங்கும் உணர்வு
இங்கு காகிதப்பூவாய்
என் கோணத்தில்..!!

நல்லதொரு கவி.. இதுபோல் சிறு கவிதைகளை குறுங்கவிதைகள் பகுதியில் பதியுங்கள் நண்பரே..!!

பாராட்டுகள் ஈஸ்வரன்.

ஆர்.ஈஸ்வரன்
21-12-2007, 03:19 AM
நன்றி. எழுதுகிறேன். இப்படி கலர் கலராய் எழுத என்ன செய்ய வேண்டும்

ஷீ-நிசி
21-12-2007, 03:37 AM
வெறும் வடிவங்கள்
நிஜம் ஆகிடாதே!

நிழல் என்றறிந்தும்
நிஜங்களுடன் ஒப்பிட்டது ஏனோ?!

நல்ல கற்பனை நண்பரே!

ஓவியன்
21-12-2007, 04:01 AM
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை

வலிக்க வைக்கின்றன வரிகள்.....
வாழ்த்துக்கள் நண்பரே...!!

ஆதவா
05-01-2008, 06:51 PM
மனிதம் ஒரு பூவாக இருப்பின் இது முதிர்கன்னியைப் பற்றியது...

பூக்களோடு பூக்கள் கலந்து இருப்பினும் வித்தியாசங்களாகப் பிரிந்து சமூக நாற்றத்தில் உழன்று தவிக்கிறார்கள்... இது பலதரப்பட்ட மக்களைப் பற்றியது..

காகிதப்பூ!! - செயற்கையாக மனிதனின் கையில் விளைந்த பூ!!! இதற்கு இலைகளோ நீரோ காற்றோ எதுவுமே தேவையில்லை... மணப்பதும் இல்லை.... தீண்டத் தகாதிருப்பதன் ரகசியம் இதுவே!! எந்த நிலையிலும் இயற்கையோடு ஒத்துப் போவதில்லை...

ஷீ யின் அர்த்தப் பிடித்தம்.... இருவருக்கும் பாராட்டுக்கள்...

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 09:22 AM
[QUOTE=ஷீ-நிசி;312942]வெறும் வடிவங்கள்
நிஜம் ஆகிடாதே!

நிழல் என்றறிந்தும்
நிஜங்களுடன் ஒப்பிட்டது ஏனோ?!

QUOTE]

நிஜங்களை விட நிழல்களோடு தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.