PDA

View Full Version : தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்???



மயூ
19-12-2007, 02:06 PM
http://www.google.com/intl/en/images/translate_beta_res.gif
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.

தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.

உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது? என்று தேடித்தரும்.

இந்த தளத்திற்குச் (http://translate.google.com/translate_s?hl=ta) சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும்

அன்புடன்,
மயூரேசன்

சூரியன்
19-12-2007, 02:20 PM
நல்ல பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மயூ .

அறிஞர்
19-12-2007, 02:29 PM
விரைவில் இது சாத்தியமாக வாழ்த்துக்கள்..

தகவலுக்கு நன்றி நண்பா...

ஓவியன்
19-12-2007, 02:29 PM
கூகிள் நிறுவனம் விரைவில் தமிழினையும் இந்த சேவையில் சேர்க்குமென நம்புவோம்....

அப்படித் தமிழ் சேர்க்கப் பட்டால், அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்...