PDA

View Full Version : சிந்திப்போம்



ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:42 PM
இளைஞனே! வரதட்சணை வாங்கித்தான்
நம் வாழ்வை வளமாக்க முடியுமென்றால்
அவ்வாழ்வு நமக்குத் தேவைதானா?
ஒரு படகு நீரில் மிதக்க
இன்னொரு படகு நீரில் மூழ்க வேண்டுமா?
இன்று நித்ய கன்னியாய்
காலந்தள்ளும் கன்னிகளெத்தனை?
கேட்டால் குருபலம் அமையவேண்டுமேயென்பீர்
குருபலம் எங்கே அமையும்
கையில் பணமும், கழுத்தில் நகையும்
இருந்தால்தானே குருபலம் அமையும்
நமக்குப் பெண் வேண்டும்
திருமணமாகும்வரை அம்மா,பின் மனைவி
ஆனால் தனக்குப் பிறக்கும் குழந்தைமட்டும்
பெண்ணாய் இருக்கக்கூடாது - இது
எந்தவகையில் நியாயம் - இளைஞனே!
சிந்திப்போம், சபதமேற்போம்
வரதட்சணை வாங்குவதில்லையென்று!

அமரன்
19-12-2007, 05:13 PM
மாண்டாகலத்திலும், வாழும்காலத்திலும் கேட்டுக்கொண்டிருக்கும் முழக்கம்.
சற்று மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் முற்றிலும் அறவில்லை.
செதுக்கவேண்டும் கவிஞரே..

ஆதி
19-12-2007, 05:59 PM
அழகியக் கரு
அருமையானக் கவிதை..

கட்டமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டினால் கவிதைச் சிறக்கும்.. சில வரிகளில் வசனங்களின் குறுக்கீடு உள்ளது..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 03:14 AM
இவையெல்லாம் முன்பே எழுதி, இதழ்களில் வெளியாகியுள்ளது. அதனால் இப்பொழுது மாற்றம் செய்யவில்லை.

பென்ஸ்
20-12-2007, 04:49 AM
நல்ல முயற்ச்சி ஈஸ்வரன்...
மன்ரத்தில் பலமுறை அலசப்பட்ட கரு...
லொள்ளுவாத்தியார் இதற்கு அருமையாக சொல்லியிருந்தார்... வரதச்சினை தவறில்லை, வரதச்சினை கொடுமையே தவறு என்று....
ஆதி கூறியது போல் கட்டமைப்பையும் வார்த்தை உபயோகங்களையும் இன்னும் செதுக்கலாம்....

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:38 AM
நல்ல முயற்ச்சி ஈஸ்வரன்...
மன்ரத்தில் பலமுறை அலசப்பட்ட கரு...
லொள்ளுவாத்தியார் இதற்கு அருமையாக சொல்லியிருந்தார்... வரதச்சினை தவறில்லை, வரதச்சினை கொடுமையே தவறு என்று....
ஆதி கூறியது போல் கட்டமைப்பையும் வார்த்தை உபயோகங்களையும் இன்னும் செதுக்கலாம்....


கல்லும் ஒரு நாள் சிலையாகும்