PDA

View Full Version : ஒரு சிறிய சந்தேகம்

சூரியன்
19-12-2007, 11:47 AM
நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் hacker என்றால் என்ன?

நான் பயன்படுத்தும் ஒரு தளம் இன்று hacker-ஆல் தாக்கப்பட்டுள்ளது.
இதைபற்றி சற்று விரிவாக யாரேனும் சொல்ல முடியமா?
நான் அந்த தளத்தை பார்வையிட்டபோது ஒரு செய்தி வந்தது,அதில் விதிமுறை மீறல் இல்லாமல் இதை மட்டும் பதிக்கிறேன்
இனி அந்த தளத்தை மீண்டும் உபயோகிக்க முடியுமா?

All the administrators ,Co-admin,Supermods,mods,Members everyone was deleted
All the Forums were deleted
All the topics and posts were deleted
We have identified the hacker but its no point.He was using an elite proxy

ஆதி
19-12-2007, 12:01 PM
சூரியன்,

Hacker'கள் என்று ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது.. இவர்கள் பல வகைப்படுவர்..

WHITE HAT HACKER'S

GRAY HAT HACKER'S

BLACK HAT HACKER'S

முதலில் hacker என்றால் யார் எனச் சொல்லிவிடுகிறேன்..

உங்களின் அனுமதி இல்லாமல் உங்கள் கணினியிலோ, டொமைனிலோ, நெட்வொர்க்கிலோ நுழைந்து அதனுள் உள்ளதைப் பார்ப்பவர்கள், திருடுபவர்கள், அல்லது அழிப்பவர்கள்..

இவர்களே Hacker'கள்..

Black hat hacker's : - இவர்களே நான் மேலே குறிப்பிட்ட வகையைச் செர்ந்தவர்கள்.

White hat hacker's :- இவர்கள்களை ethical hacker என்றும் அழைக்கலாம், தங்கள் நெட்வொர்க்கில் உள்ள பாதுகாப்பு துளைகளை, அகழ்ந்து ஆராய்ந்து, அதை தக்கப் பாதுகாப்பு செய்வதர்காக சில நிறுவணங்கள் இவர்களைப் பணியமர்த்துகிறது.. இவர்களை Nework security consultant என்றும் அழைக்கலாம்.

Gray Hat Hacker's :- Black Hat Hacker's சைவிடக் கொடியவர்கள். இரண்டாம்கெட்டப் பேரொளிகள்.. கதவு திறந்து இருக்கிறது என்றும் சில வேளைகளில் நமக்கு அபாயமணி அடிப்பார்கள்.. சில நேரங்களில் திறந்த கதவினுள் நுழைந்து திருடவும் செய்வார்கள்.. இவர்கள் நம்பத்தக்கவர்கள் அல்லர்..

-ஆதி

சூரியன்
19-12-2007, 12:05 PM
நண்பரே அவர்கள் தாக்கபட்ட தளம் முற்றிலும் அழிந்துவிடுமா?

ஆதி
19-12-2007, 12:12 PM
நண்பரே அவர்கள் தாக்கபட்ட தளம் முற்றிலும் அழிந்துவிடுமா?

அதுத்தாக்குதலைப் பொருத்து உள்ளது.. சிலர் தளங்களுக்குள் நுழைந்து தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துச் செல்வர், இவர்களை நாம் highly skilled Hacker's என அழைக்கிறோம்..

தகுதலுக்கு உள்ளானத்தளம் இவர்களால் தாக்கப்பட்டதெனின் முழுமையும் அழிந்திருக்க வாய்பில்லை.

ஆனால் இன்னொரு வகையினரும் உண்டு..இவர்களை நாம் novice hacker's என்று அழைக்கிறோம்.. இவர்கள் இன்னதுதான் செய்கிறோம் என்று அறியாத சிறு மழலைகள். இவர்களால் தாக்கப்பட்டிருந்தால் யாவும் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

-ஆதி

சூரியன்
19-12-2007, 12:24 PM
நண்பரே அவர்களால் தாக்கப்பட்ட தளம் அழிக்கப்பட்டாலும் மீண்டும் நாம் ஒரு புதிய தளத்தை அதே டோமைனில் தொடங்க முடியுமா?
மீண்டும் அவர்கள் அதை தாக்குவார்களா?

ஆதி
19-12-2007, 12:26 PM
நண்பரே அவர்களால் தாக்கப்பட்ட தளம் அழிக்கப்பட்டாலும் மீண்டும் நாம் ஒரு புதிய தளத்தை அதே டோமைனில் தொடங்க முடியுமா?
மீண்டும் அவர்கள் அதை தாக்குவார்களா?

நிச்சமாக தளத்தைத் தொடங்க இயலும், அதில் எந்த சச்சரவுகளும் இருக்காது. ஆனால் தகுந்தப் பாதுகாப்புடன் தொடங்குதலே நலம்.

ருசி கண்டப்பூனைத் திரும்பவும் வராமல் போகுமா என்ன ?

-ஆதி

சூரியன்
19-12-2007, 12:51 PM
நிச்சமாக தளத்தைத் தொடங்க இயலும், அதில் எந்த சச்சரவுகளும் இருக்காது. ஆனால் தகுந்தப் பாதுகாப்புடன் தொடங்குதலே நலம்.

ருசி கண்டப்பூனைத் திரும்பவும் வராமல் போகுமா என்ன ?

-ஆதி

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே.

ஆதி
19-12-2007, 12:56 PM
Hacking குறித்து தங்களுக்கு இன்னும் எதேனும் தகவல் தேவைப்பட்டால் தாராலமாக என்னிடம் கேட்கலாம் இத்திரியின் வழியாக..

-ஆதி

சூரியன்
19-12-2007, 01:01 PM
நண்பரே Hacking என்பது என்ன.
எல்லாராலும் Hacking செய்ய முடியுமா.

ஆதி
19-12-2007, 04:27 PM
நண்பரே Hacking என்பது என்ன.
எல்லாராலும் Hacking செய்ய முடியுமா.

Hacking என்பது இ-திருட்டு, இ-திருடர்களை hacker அழைக்கலாம். Virus'கள் கூட hacker'களின் ஒரு மறைமுக ஆயுதம்தான்.

Hacking எல்லோராலும் செய்ய இயலாது, ஆனால் முயற்சி செய்தால் யாரும் செய்யலாம், செய்வது நல்லதுக்கு எனில் தவறுகள் இல்லை, இல்லையேல் தண்டனைகள் நிச்சயம்.

-ஆதி

தீபன்
20-12-2007, 05:20 AM
இதுபற்றி விரிவான கட்டுரையொன்றை இங்கு பதிக்கலாமே ஆதி...?

ஆதி
20-12-2007, 06:10 AM
இதுபற்றி விரிவான கட்டுரையொன்றை இங்கு பதிக்கலாமே ஆதி...?

நிச்சயமாக தீபன் ஒருப் பெரும் கட்டுரையைப் பதிக்கிறேன்..

-ஆதி

praveen
20-12-2007, 07:07 AM
நிச்சயமாக தீபன் ஒருப் பெரும் கட்டுரையைப் பதிக்கிறேன்..

-ஆதி

அப்படியே நீங்கள் ஏதாவது தளத்தை, பிறர் கம்ப்யூட்டரை ஹேக் செய்திருந்தால் அதையும் சொல்லுங்கள் :) :)

ஓவியன்
20-12-2007, 07:18 AM
அப்படியே நீங்கள் ஏதாவது தளத்தை, பிறர் கம்ப்யூட்டரை ஹேக் செய்திருந்தால் அதையும் சொல்லுங்கள் :) :)

ஆதி......!!

இல்லைனா பிரவினுடைய கணினியை ஹேக் பண்ணிட்டு அதைப் பற்றிச் சொல்லுங்க... :D:D:D

praveen
20-12-2007, 07:33 AM
ஆதி......!!

இல்லைனா பிரவினுடைய கணினியை ஹேக் பண்ணிட்டு அதைப் பற்றிச் சொல்லுங்க... :D:D:D

நான் பல மணி நேரம் இனையத்திலே என் கணினியை இனைத்திருப்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எனவே தற்போதைக்கு முடியாது. அதே போல் என்னை நெருங்க முயல்பவர்களை நான் கண்டு கொள்வேன். அவர்கள் இருப்பிடம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ரஷ்யா/சீனா என்றால் விட்டு விடுவேன், வேறு இடம் என்றால் முடிந்தவரை டிரேஸ் செய்து பார்த்து குறித்து வைத்து கொள்வேன்.

வேண்டுமானால் ஒவியனை இன்றைக்குள் உண்டு இல்லை என்று செய்து, பின் ஒவியனையே பதில் பதிக்க வைக்கிறேன் :) :) :)

இது தான் வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பதா?

ஷீ-நிசி
20-12-2007, 08:10 AM
மிக சிறப்பான தகவல்கள் ஆதி! நன்றி!

ஆதி
20-12-2007, 08:37 AM
அப்படியே நீங்கள் ஏதாவது தளத்தை, பிறர் கம்ப்யூட்டரை ஹேக் செய்திருந்தால் அதையும் சொல்லுங்கள் :) :)

Praveen hacking எனது இன்னொருத் தொழில், அதை மற்றவர் நலனுக்காக பயன் படுதுவதே என் குணம், நானும் hacking செய்திருக்கிறேன், எதற்கு எனில் எந்த எந்த வழியில் அந்த கணினியின், அந்த நெட்வொர்க்கின் பாதுகாப்பு வலையில் ஓட்டை இருக்கிறது என்பதை அறிந்து அதைச் செம்மைப் படுத்த..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 08:38 AM
திருடனே பார்த்து திருந்தினால்தான் திருட்டு ஒழியும்

ஆதி
20-12-2007, 09:00 AM
நான் பல மணி நேரம் இனையத்திலே என் கணினியை இனைத்திருப்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எனவே தற்போதைக்கு முடியாது. அதே போல் என்னை நெருங்க முயல்பவர்களை நான் கண்டு கொள்வேன். அவர்கள் இருப்பிடம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ரஷ்யா/சீனா என்றால் விட்டு விடுவேன், வேறு இடம் என்றால் முடிந்தவரை டிரேஸ் செய்து பார்த்து குறித்து வைத்து கொள்வேன்.

வேண்டுமானால் ஒவியனை இன்றைக்குள் உண்டு இல்லை என்று செய்து, பின் ஒவியனையே பதில் பதிக்க வைக்கிறேன் :) :) :)

இது தான் வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பதா?

உங்களால் novice hacker's என்கிறத் தரப்பையே அப்படி track செய்ய முடியும் ஆனால் hacking'கே தொழிலாக உள்ளவர்களை அப்படி அறிந்துவிட முடியாது.. அதற்காக நாங்கள் பயன்படுத்துகிற உத்திகள் பல இதில் ஒன்று IP Address இதுப்போதும் இதை எனது IP யாய் மாற்றி மற்றவற்றை சாதித்துவிட முடியும்..

என்னதான் நீங்கள் பாதுகாப்பு செய்திருந்தாலும் ஒன்றை மனதில் கொள்க, எல்லாம் மனிதனால் படைக்கப்பட்டவை எப்படியும் எங்காகவது ஒரு துளை இருக்கும் உள் நுழைய நீங்கள் அறியாமல்.. இதுதான் hacker's இன் தாரக மந்திரம்..

அதனால் உங்கள் கணினியின் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுதுக..

-ஆதி

praveen
20-12-2007, 01:36 PM

நான் அடிப்படையில் வன்பொருள் விற்பனை/பழுதுபார்ப்பவன், இந்த மாதிரி இனைய தொழில் நுட்பம் எல்லாம் 5 வருடத்திற்கு முன் தான் நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். கடந்த 2 வருடமாக தான் இதில் ஒரளவு ஈடுபாட்டுடன் இருக்கிறேன்.

எனக்கு அப்படி ஒரு ஆபத்து நேர்ந்தால் எப்படி ஒருவன் உள் நுழைய ஒரு துளை(போர்ட்) இருந்து வருவானே அது போல அவனை கண்டறிய எனக்கும் (திருடன் தன்னையறியாமலே ஒரு தடயத்தை விட்டு செல்வான் என்ற கூற்றுப்படி) ஒரு வழி இருக்கும்.

எப்போதவது அசந்த நேரம், ஏதாவது ஒரு நச்சு மென்பொருள் மூலம் வந்தாலும், இனையத்தொடர்பை துண்டித்து விட்டு தான் அந்த புராசஸ் வேட்டை நடக்கும். ஒன்றும் முடியாவிட்டால் இமேஜை ரீஸ்டோர் செய்து 10 நிமிடத்தில் பழைய நிலைக்கு சென்று விடுவேன்.

அதனால் உங்கள் கணினியின் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுதுக..

எனது கணினியை யார் நிரடினாலும் ஒன்றும் (ஏனென்றால் அதில் ஹார்ட் டிஸ்க் என்பது இல்லை) கிடைக்காது, ஏனென்றால் பாதி நேரம் நான் லைவ் சி.டி யில் தான் இனையத்தில் வலம் வருவேன் அதில் அபூர்வமாக தான் USB ஹார்ட் டிஸ்க் உடன் இனையத்தில் உலா வருவேன். மீதி நேரம் அடுத்தவர் (சர்வீஸிற்கு வரும்) கணினியில் தான் வருவேன். இரண்டு நாளில் அதில் உள்ள எனது யூசர் பெயரை நீக்கி பின் அவர்களிடம் தந்து விடுவேன்.

பொதுவாக, இந்த ஹேக்கர்ஸ் எல்லாம் பிடிபட்டு சிறைச்சாலை செல்லும் வரை தங்களை யாரும் பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலி என்றே நினைத்து கொண்டிருப்பார்கள் என்பதையும் அறிவேன்.

ஆதி
20-12-2007, 02:10 PM
kevin mitnick பற்றி கேள்விப்பட்டு இருக்குறீர்களா ? விக்கிப்பீடியாவில் தேடுங்கள் நிறையத் தகவல்கள் கிடைக்கும்.. உங்கள் கணினியில் எதாவது தேவையான பொருள் இருந்தால்தான் அதை ஹேக் செய்ய வேண்டும் என்பது இல்லை, உங்கள் கணினியை ஹேக் செய்து பின் அதன் வழியில் தன் இலக்கை ஹேக்கர்கள் நெருங்குவார்கள்..

உ.ம்:- ஆமேரிக்காவில் இருக்கிற ஒருவர் குறைந்தது ஒருப் பத்து பதினைந்து கணினி அல்லது ரொட்டர்களை ஹேக் செய்தப்பின் தான் தன் இலக்கை சீந்துவார்.. நானும் ஒரு ஹேக்கர் என்கிற அனுபவத்தில்தான் இதைச் சொல்கிறேன்...

Kevin mitnick பென்டகனையே ஹேக் செய்தவன், ராணுவத்தின் பல ரகசியத் தகவல்களைத் திருடி ஆமேகிரிகாவுக்கு ஒரு சிம்ம சொர்ப்பனமாக இருந்தவன்.. அவனை அடக்கமுடியாத ஆமெரிக்க அவனை தன் செக்யூரிட்டி கன்ஸல்டண்டாக பணி நியமனம் செய்தது..

ஹேக்கிங்கில் கெவிண்தான் என் துரோணர்.. நிறையக்கற்றுக் கொண்டுள்ளேன் அவரிடமிருந்து.. என் நெட்வொர்க்கை நெருங்க முடியாது என்று மார்தட்டிய பல நிறுவனங்களின் செக்யூரிட்டியை உடைத்து மூக்கின் மேல் அவர்களையும் விரல் வைக்க வைத்திருக்கிறேன்..

ஹேக்கிங் ஓழிக்க முடியாத ஒரு தொழில் எல்லா நாட்டு ராணுவங்களும் ஹேக்கர்களை பணி நியமிக்கிறது எதிரி நாட்டைக் கண்காணிக்க..

-ஆதி

ஓவியன்
20-12-2007, 02:31 PM
வேண்டுமானால் ஒவியனை இன்றைக்குள் உண்டு இல்லை என்று செய்து, பின் ஒவியனையே பதில் பதிக்க வைக்கிறேன் :) :) :)

இது தான் வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பதா?

ஏம்பா இந்த வில்லத்தனம்..........!! :traurig001:
ஒரு பேச்சுக்குத் தானே சொன்னேன்.......!! :icon_rollout:

praveen
20-12-2007, 02:35 PM
ஏம்பா இந்த வில்லத்தனம்..........!! :traurig001:
ஒரு பேச்சுக்குத் தானே சொன்னேன்.......!! :icon_rollout:

சும்மா ஓவியன், என்றைக்காவது ஒரு நாள் தளம் வந்தால் இப்படித்தான் ஓவியனை வம்புக்கிழுப்பது, அப்பத்தானே ஓவியன் மறக்க மாட்டார் :)

எனக்கு தேவையில்லாத விவரங்கள், இந்த திரியில் பதிந்தே இருக்க கூடாதோ என்று தோனுகிறது.

ஓவியன்
20-12-2007, 02:41 PM
சும்மா ஓவியன், என்றைக்காவது ஒரு நாள் தளம் வந்தால் இப்படித்தான் ஓவியனை வம்புக்கிழுப்பது, அப்பத்தானே ஓவியன் மறக்க மாட்டார் :)

எனக்கு தேவையில்லாத விவரங்கள், இந்த திரியில் பதிந்தே இருக்க கூடாதோ என்று தோனுகிறது.

என்ன இது பிரவின்..

எனக்கு உம்மைப் பற்றித் தெரியாதா என்ன.......
நானும் சும்மாதான் கூறினேன்
சீரியசாக வேண்டியதில்லை, எனக்கும் உங்களைக் கண்டால் வம்புக்கு இழுக்க வேண்டும் போலிருப்பதாலேயே இப்படி...... :)

தீபன்
20-12-2007, 05:15 PM
ஆகா... இங்கும் சண்டையா...

நடத்துங்க... நமக்கு எதாவது பொறுக்க முடியுதான்னு பாப்பம்..!