PDA

View Full Version : அவள் சுவனத்துக்காதலி.....



IDEALEYE
19-12-2007, 11:23 AM
நீ வந்து போனபின்
நீண்ட இடைவெளியில்
தூரத்து விடிவெள்ளியும்
பக்கத்து மின்மினியும்
துக்கம் விசாரித்துச்சென்றன
காதலி வருவாள் என்று
ஆறுதல் சொல்லிச்சென்றன
தூரத்தில் ஒரு அசரீரி
அவள் சுவனத்துக்காதலி.....

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:07 PM
உங்களுக்கு விடிவெள்ளி பிடிக்கிறதா? மின்மினி பிடிக்கிறதா?

IDEALEYE
19-12-2007, 01:27 PM
மின்மினியை நான் பிடிப்பதில்லை
மின்மினி எனக்குப்பிடிக்கும்
விடிவெள்ளியை நான் பிடிக்கின்றேன்
அதனால் அதுவும் எனக்குப்பிடிக்கும்
என்ன குழப்பம் இதில்???
ஐஐ

ஆதி
19-12-2007, 06:52 PM
விடிவெள்ளிப்போல்
நிஜத்தில் தூரமாகவும்
மின்மினிப்போற்
கனவில் அண்மையாகும்
இருக்கிறாய் காதலி..

வாழ்த்துக்கள் ஐஐ..

-ஆதி

அமரன்
11-01-2008, 08:10 AM
விடிவெள்ளிப்போல்
நிஜத்தில் தூரமாகவும்
மின்மினிப்போற்
கனவில் அண்மையாகும்
இருக்கிறாய் காதலி..

வாழ்த்துக்கள் ஐஐ..

-ஆதி

வெளிச்சம் மறைந்தபின்
வழிகாட்டும் விடிவெள்ளியாகவும்
ஒளி தரும் மின்மினியாகவும்
காதலி உன் நினைவுகள்..

சுவனத்துக் காதலி என்ற பதம் எனக்குப் புதிது.. விளக்க முடியுமா ஐடியல் ஐ