PDA

View Full Version : விளக்கு



அமரன்
19-12-2007, 07:12 AM
மனித மனங்களின்
உவர்நீர்துளிகளில் எரிகிறது
பிச்சைக்காரன் விளக்கு.

அதற்காக
அதிகமாக அழவிடாதீர்கள்
அணைந்துவிடும்..!

ஆதி
19-12-2007, 07:21 AM
உவர்நீரால் எரிகிறது
யாசகனின்
உயிர்விளக்கு..

ஆஹா! அழகிய சிந்தனை அமர்..

அழுகையின் அடர்த்தியைக் கூட்டி
அக்னியின் அடர்த்தியைக் குழைத்துவிடாதீர்கள்..

கருனை வழியும் வரிகள்..

விளக்காய் எரியும் கவிதைக்கு பாராட்டுகள் அமர்..

-ஆதி

ஓவியன்
19-12-2007, 09:17 AM
அழ வைத்து
அணைக்காது அவரை
அணைத்து
அழுகை போக்குவீர்......

நல்ல வரிகள்+கற்பனை
பாராட்டுக்கள் அமரா.......!!

அமரன்
19-12-2007, 10:11 AM
உவர்நீரால் எரிகிறது
யாசகனின்
உயிர்விளக்கு..
-ஆதி
சுருக்கிலிடாமல் 'சுருக்'கி விட்டீர்கள்.
பாராட்டும், பாராட்டுக்கு நன்றியும் ஆதி.

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:04 PM
நல்ல கவிதை.