PDA

View Full Version : இலங்கை - இங்கிலாந்து மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்



IDEALEYE
19-12-2007, 04:01 AM
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையை தாக்கிய கடற்கோளால் காலி விளையாட்டு மைதானம் சின்னாபின்னமாகியது. இந்த மைதானத்தில் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாதென்றதொரு நிலைகூட ஏற்பட்டிருந்தது.

எனினும், இலங்கை கிரிக்கெட் சபை ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இந்த மைதானத்தை மீளப் புனரமைத்து மூன்று வருடங்களின் பின் இன்றைய போட்டியை நடத்தவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடிய அளவிற்கு இந்த மைதானம் மீளப் புனரமைக்கப்பட்டு முடியாத நிலையிலும் கடும் மழையால் மைதானம் சேறும் சகதியுமான நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மைதானத்தை திறந்து வைத்து போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தப் போட்டியின் போக்கை ஆடுகளமே பெரும்பாலும் தீர்மானிக்கவுள்ளது. கடற்கோள் அனர்த்தத்திற்கு முன் சுழல் பந்து வீச்சுக்கும் மிகவும் சாதகமாயிருந்த இந்த ஆடுகளம் தற்போது எவ்வாறிருக்குமெனத் தெரியவில்லை.

ஆனால், சுழல் பந்து வீச்சாளர்கள் இருவரை இலங்கை அணி களமிறக்குகிறது. முத்தையா முரளிதரன் மற்றும் மலிங்க பண்டாரவுடன் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளராகவும் நடுவரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் விதத்திலும் திலகரட்ன டில்ஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் டில்ஹார பெர்னாண்டோ அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட முடியாத நிலையில் சமிந்த வாஸ், லசித் மாலிங்க, சானக வலிகெதர ஆகியோர் வேகப்பந்து வீச்சில் தங்கள் பங்களிப்பை வழங்குவர்.

துடுப்பாட்டத்தில் உப்புல் தரங்கா, மைக்கல் வன்டொற், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, சாமரசில்வா, திலகரட்ண டில்ஷான் ஆகியோர் அணிக்கு வலுசேர்க்கவுள்ளனர்.

இதேநேரம், முதல் டெஸ்டில் தோல்வியடைந்து 2 ஆவது டெஸ்ட்டை வெற்றி தோல்வியின்றி முடித்த இங்கிலாந்து அணி இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த முனையக்கூடும்.

2 ஆவது டெஸ்டில் விளையாட முடியாது போன மத்யூ ஹோகார்ட் இந்த டெஸ்டில் விளையாடுவதால் அணியின் பந்து வீச்சு மிகவும் வலுவானதாயிருக்குமென எதிர்ப்பாக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையும் வலுவாயிருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாயிருக்குமென எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி தினக்குரல்

அன்புரசிகன்
19-12-2007, 04:58 AM
இந்தப்போட்டி நேற்றே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பருவகால மழை சிற்சில தடங்கல்களை ஏற்படுத்தியிருந்தாலும் போட்டி நடந்தேறுகிறது.

தற்போதய நிலவரம்: இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அழைத்திருந்தது. அதற்கேற்ப இலங்கை 4 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது. மஹேல ஜெயவர்த்தன 53 ஓட்டங்களுடனும் டில்ஷான் 16 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக வான்டொட் 18 ஓட்டங்கள் தறங்க 16 ஓட்டங்கள் சங்ககார 46 ஓட்டங்கள் மற்றும் சாமரசில்வா 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றுள்ளனர்.

16 பந்து பரிமாற்றங்களுக்கு 3 விக்கட்டுக்களை ஹாமர்ஷன் வீழ்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓவியன்
19-12-2007, 05:21 AM
காலி கிரிக்கட் மைதானம் இலங்கை கிறிக்கட் மைதானங்களில் அழகான ஒன்றாக இருந்தது. முன்பு நான் காலியில் வேலை செய்த காலத்தில் இலங்கை, அவுஸ்திரேலிய அணியினருக்கு இடையான டெஸ்ட் போட்டியினை காலி கோட்டை சுவரின் மேல் நின்று கொண்டு பார்த்து இரசித்த அனுபவம் இன்றளவும் பசுமையானது.
பின்னர் அந்த மைதானம் இல்லாது போனது கவலையாகவே இருந்தது...
இப்போது மீள போட்டி தொடங்கியது மகிழ்சியே...

இலங்கை அணித்தலைவர் மகேலவுக்கும் மிக இராசியான மைதானமாக இருந்தது இந்த மைதானம், அதுபோல் இன்றும் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காது ஆடிக் கொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்லப் போகிறார்களென்று....

அமரன்
19-12-2007, 06:39 AM
அப்போ இங்கே இலங்கையில் கில்லி விவேகமாக, வேகமாக சுழலுலுமே?
இப்போ எப்படியோ?