PDA

View Full Version : மாறுதல்



ஆர்.ஈஸ்வரன்
18-12-2007, 02:01 PM
காதலியே!
நான் அரசியலுக்குள்
நுழைகிறேன்
அதனால் எனக்கு
கட்சி மாறும்
கலையைக்
கொஞ்சம்
கற்றுத்தா!

அமரன்
18-12-2007, 03:14 PM
பெட்டியின் கனத்தை
கவனத்தில் கொள்ளுங்கள்..
வாழ்த்துக்கள்.

IDEALEYE
19-12-2007, 03:48 AM
காதல் எந்தக்கட்சி.....
சட்டை மாற்றுவது போல காதலிலும் கட்சி மாற்றமா??

ஆதி
19-12-2007, 05:19 AM
இக்கவிதையில் உள்குத்து உள்ளதுப் போல் தோன்றுகிறது எனக்கு.
காதலிகள்தான் மாறுவார்களா ? காதலர்கள் மாறமாட்டார்களா ?

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 05:39 AM
இக்கவிதையில் உள்குத்து உள்ளதுப் போல் தோன்றுகிறது எனக்கு.
காதலிகள்தான் மாறுவார்களா ? காதலர்கள் மாறமாட்டார்களா ?

காதலர்களும் மாறுவார்கள்.

பூமகள்
19-12-2007, 06:57 AM
"கட்சி மாற்றம் போல்
காதலி/லன் மனம் மாறினால்
மெய் காதல் நிலையென்ன?

காதல் புரிபவர் செய்யும் தவறு..
காதலுக்கு இழுக்காகுமா??

யோசிக்க வைத்த கவிதை. ஆனால், ஒருதலைப் பட்சமாக காதலியைக் குற்றம் சாட்டுவது ஏற்கமுடியவில்லை.

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:01 PM
"கட்சி மாற்றம் போல்
காதலி/லன் மனம் மாறினால்
மெய் காதல் நிலையென்ன?

காதல் புரிபவர் செய்யும் தவறு..
காதலுக்கு இழுக்காகுமா??

யோசிக்க வைத்த கவிதை. ஆனால், ஒருதலைப் பட்சமாக காதலியைக் குற்றம் சாட்டுவது ஏற்கமுடியவில்லை.


ஒரு ஆண் ஒரு பெண்ணைப்பற்றித்தான் சொல்ல முடியும். ஒரு ஆண், ஒரு ஆணைப்பற்றிச் சொன்னால் நன்றாக இருக்குமா?

ஷீ-நிசி
09-01-2008, 12:51 AM
காதலியே!
நான் அரசியலுக்குள்
நுழைகிறேன்
அதனால் எனக்கு
கட்சி மாறும்
கலையைக்
கொஞ்சம்
கற்றுத்தா!

ஒரு சின்ன திருத்தம் நண்பரே!

என் முன்னாள் காதலியா! அப்படின்னு தொடங்கியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும். வாழ்த்துக்கள்!