PDA

View Full Version : (v)உயிர் வலிக்க வலிக்க



Hayah Roohi
18-12-2007, 05:02 AM
அன்புடன் போட்டியின் காட்சிக்கவிதைப்பிரிவில் முதற் பரிசு எனக்குக்கிடைத்தது,புகழ் இறைவனுக்கே!

அகதி வாழ்வின் அவலம் காட்டும்'உயிர் வலிக்க வலிக்க'எனும் தலைப்பிலான கவிதை.

http://www.youtube.com/watch?v=ONyxpHrstCo

என் வேர்கள்
உயிர்
வலிக்க வலிக்க
பிடுங்கப்பட்டன.

என்
கால்களுக்கு
சிறகு முளைத்த
வீதிக் கரைகள்.

கனவுகளும் உயிரும்
குழைத்து குழைத்து
செய்த
என் வீட்டுத் தாழ்வாரம்.

நான்
தமிழும் கவிதையும்
கற்ற
பாடசாலை.

வேலியோர
வேப்பமரத்து
சிட்டுகுருவியின்
பாடல்.

வான் பார்க்கும்
சடலங்கள் நடுவில்
எதையோ
தேடுகின்றேன்!!

இழந்துபோன
வாழ்க்கையையா
மிச்சமிருக்கும்
நம்பிக்கையின் எச்சத்தையா?

வெறிச்சோடிய
வீதிகளில்
என் மனசு
அழுகிறதே!!!

கொடியவர்களே
தென்றலுக்கு
ஏன்
தீ வைக்கின்றீர்கள்???

இதோ...
............
............

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்...

எனக்குள்
அதிர்கிறது!!

காற்றுக்கூட
உன்னை
சுட்டுவிரல் நீட்டி
தொட்டதில்லை!!

உன்
பனித்துளி முகத்தில்
இன்னும்
காயாத ஈரம்...

என்
உயிர்
நனைகிறதடா!!!

வரண்ட சகாராக்களுக்கு
பூவின் ஈரம்
புரியாது!!

என்
தாய் பூமியே
சென்றுவருகின்றேன்.!!

விடைகொடு
எனக்குமாய்..

முன்னொரு வயதில்
கிளிஞ்சலும்..
பின்னொரு வயதில்
காதலும்..

பொறுக்கிய
கடற்கரை!!

உயிரில்
ஓரிடம்
ஊசியாய்...
வலிக்கிறது!!!

உன்
ஞாபகத்தூரலோடு
நடக்கிறேன்!!

நான்
இன்னும்
நீண்டதூரம்
நடக்கவேண்டி இருக்கிறது!!!

இது
இடம்பெயர்ந்த
அகதிவாழ்வின்..
ஒரு துளித்துயரம்
மட்டுமே!!!!

மன்ற உறவுகளின் கருத்துக்களுக்காக என் இதயக்கதவுகள் திறந்திருக்கின்றன.
நன்றிகளோடு.....

அமரன்
18-12-2007, 10:13 AM
அன்பரே!
கவிதையை விடுத்து சுட்டியைப் பதிந்ததால் திரியைப் பூட்டுகின்றேன்.
கவிதையை எனக்குத் தனிமடலில் அனுப்புங்கள். கவிதையைப் பதிந்து மீளத்திறக்கின்றேன்.

(பிந்தியபதிவு-கவிதையும், காணொளியும் இணைக்கப்பட்டு திரி திறக்கபடுகின்றது.)

-பொறுப்பாளர்.

அறிஞர்
18-12-2007, 02:23 PM
வான் பார்க்கும்
சடலங்கள் நடுவில்
எதையோ
தேடுகின்றேன்!!

இழந்துபோன
வாழ்க்கையையா
மிச்சமிருக்கும்
நம்பிக்கையின் எச்சத்தையா?
;;;;

நான்
இன்னும்
நீண்டதூரம்
நடக்கவேண்டி இருக்கிறது!!!

இது
இடம்பெயர்ந்த
அகதிவாழ்வின்..
ஒரு துளித்துயரம்
மட்டுமே!!!!
.....
வலியின் வலியை
உணரவைக்கும் வரிகள்..

வலிகளை உந்துகோலாக்கி...
நீண்ட தூரத்தை
கடப்போம்...
சாதிப்போம்...

அருமை ஹயா..

மனோஜ்
18-12-2007, 02:40 PM
கவிதை மனதை கொல்லுகிறது
ஆழ்த துயருடன் அருமையாய் வடிக்கபட்டது நலம்

அமரன்
18-12-2007, 03:36 PM
வலிகளைப் பிழிந்து வடித்த வரிகள்.
வடித்த வரிகளில் வழிகின்றன வலிகள்.

அனுபவித்தால்த்தான் முடியும் ஹாயா.

Hayah Roohi
19-12-2007, 08:16 AM
நன்றிகள்!!!

meera
20-12-2007, 02:46 AM
அன்புடன் போட்டியின் காட்சிக்கவிதைப்பிரிவில் முதற் பரிசு எனக்குக்கிடைத்தது,புகழ் இறைவனுக்கே!

அகதி வாழ்வின் அவலம் காட்டும்'உயிர் வலிக்க வலிக்க'எனும் தலைப்பிலான கவிதை.

http://www.youtube.com/watch?v=ONyxpHrstCo

என் வேர்கள்
உயிர்
வலிக்க வலிக்க
பிடுங்கப்பட்டன.


கனவுகளும் உயிரும்
குழைத்து குழைத்து
செய்த
என் வீட்டுத் தாழ்வாரம்.


வான் பார்க்கும்
சடலங்கள் நடுவில்
எதையோ
தேடுகின்றேன்!!

இழந்துபோன
வாழ்க்கையையா
மிச்சமிருக்கும்
நம்பிக்கையின் எச்சத்தையா?


கொடியவர்களே
தென்றலுக்கு
ஏன்
தீ வைக்கின்றீர்கள்???

இதோ...
............
............

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்...




மன்றதில் உங்களின் வருகைக்கு நன்றி.

இந்த கவிதையில் சில கணங்கள் என் மனம் அசைவற்று போனது.வார்த்தை இல்லை.வலி மட்டுமே மிச்சம் இருக்கிறது.

மன்றத்தில் உங்களின் கவிதைகளை தொடர்ந்து எதிர்பார்கிறேன்.

james
20-12-2007, 10:37 AM
ஆழமான கருத்து கவிஞரே.... !
அமைதியான வடிவில் கவிதையாக்கி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
இனிய படைப்புகளை தர அன்புடன் வரவேற்கிறேன்

ஷீ-நிசி
21-12-2007, 03:51 AM
முன்னொரு வயதில்
கிளிஞ்சலும்..
பின்னொரு வயதில்
காதலும்..

பொறுக்கிய
கடற்கரை!!


ஒரு தேர்ந்த கவிஞனுக்கே சிக்கும் வரிகள்...

எளிதில் உங்கள் வரிகளில்....

வாழ்த்துக்கள்!