PDA

View Full Version : அலை



ஆதி
17-12-2007, 06:48 PM
காற்றில் பறந்துவரும்
கடலின் மாராப்பு..

காற்றின் கைப்பிடித்து
கரையில் நடைப்பயிலும்
அலைக்குழந்தைகள்..


கத்தும்கடல் துவைத்து
காயவைத்த துணிகள்
சோப்பு நுரைகள்..

குருட்டு ஆழியின்
குமுறும் இமைகள்..

எழுத்து இன்றி
பேசும் இதழ்கள்..

மேலெழுந்து மெலிந்து
தாழும் படிக்கட்டுகள்..

எழுந்து பறக்க
எத்தனிக்கும் சிறகுகள்...
விழுந்து முறியும்
வெளுத்த மின்னல்கள்..

நீர்ம வடிவில்
நிலா வெளிச்சம் - நிற
சேர்மம் இல்லா
வானவில் வளையம்..

சட்டமிருந்தும்
தடுக்க முடியா
மணற்கொள்ளையன்..


காட்டுக் குயில்போல்
கத்திக் கத்தி
ஏடேடாய் பறக்கும்
எழுதாதத் தாள்கள்..


எல்லாம் தெரிந்ததுப்போல்
எதிர்த்துப் பேசும்
கள்ள மற்றக்
கடலின் வாய்கள்..

கட்டிப் புரள்ளும்
காம இச்சையற்றக்
காதலர்கள்

முக்தி தேடும்
முழங்கால் ஒடிந்த
முதியவர்கள்..

செத்தப் பொறுங்கள்
செய்திக் கேட்கிறேன்
நித்தம் பொங்கும்
நீர்எரி மலையே
நானும் அவளும்
நனைக்கும் கால்களின்
சுவடுகள் திருடாவோ
சுற்றுகிறாய் கரையில்.. ?

-ஆதி

IDEALEYE
18-12-2007, 04:33 AM
சட்டமிருந்தும்
தடுக்க முடியா
மணற்கொள்ளையன்..

அற்புத வரிகள்
ஆனாலும் காட்டுக்குயில் என்று சொல்லியிருப்பது கற்பனையிலா அல்லது நிஜமாகவே அப்படி ஒரு குயில் இருக்கின்றதா நண்பரே....
அன்புடன் ஐஐ

சிவா.ஜி
18-12-2007, 04:49 AM
அலையலையாய் வந்த அலையின் உவமைகள் அழகு. எல்லாம் தெரிந்ததுப்போல் எதிர்த்துப் பேசும் கள்ள மற்றக் கடலின் வாய்கள்.. மிக அருமையான கற்பனை.அழகு தமிழில் அலைகளைப் பாடிய ஆதிக்கு வாழ்த்துகள்+பாராட்டுகள்.

ஆதி
18-12-2007, 05:40 AM
சட்டமிருந்தும்
தடுக்க முடியா
மணற்கொள்ளையன்..

அற்புத வரிகள்
ஆனாலும் காட்டுக்குயில் என்று சொல்லியிருப்பது கற்பனையிலா அல்லது நிஜமாகவே அப்படி ஒரு குயில் இருக்கின்றதா நண்பரே....
அன்புடன் ஐஐ

காட்டுக்குயில் உண்டு, இல்லையேல் கறுவேளங்காடு, வேப்பங்காடு, இலந்தங்காடு, மாங்காடு இதில் அமர்ந்து பாடும் குயில் எனவும் கொள்ளலாம்..

பின்னூட்டத்திற்கு நன்றி ஐஐ..

அன்பன் ஆதி

IDEALEYE
18-12-2007, 06:44 AM
நன்றி ஆதி அண்ணா
காட்டுக்குயில் என்றவுடன் சற்று வித்தியாசமாக எண்ணிவிட்டேன்
ஆனால் சாதாரண குயில்தான் அது.....
அன்புடன் ஐஐ

அமரன்
18-12-2007, 09:09 AM
பொங்கும் கடலின் வனப்பை ஆதியில் சொல்லி,
ஆர்ப்பரிக்கும் அலைகளிடம் அந்தமாக வினா எழுப்பி,
காட்சியைப் காண வைத்த வர்ணம்குழைந்த கவிதை.
அந்தமாக பறைசாற்றுகின்றது ஆதியில் பொங்கும் தமிழை....

பாராட்ட வார்த்தைகள் வெட்கி வரமறுக்கின்றன ஆதி.

thangasi
18-12-2007, 09:46 AM
நானும் அவளும்
நனைக்கும் கால்களின்
சுவடுகள் திருடாவோ
சுற்றுகிறாய் கரையில்.. ?

நான் ரசித்த வரிகள் இவை.

கவிஞனின் கவியுள்ளம் வெளிப்படும் வரிகள்.

நல்ல கவிதைக்கு நன்றி நண்பரே...

ஆதி
18-12-2007, 10:36 AM
அலையலையாய் வந்த அலையின் உவமைகள் அழகு. எல்லாம் தெரிந்ததுப்போல் எதிர்த்துப் பேசும் கள்ள மற்றக் கடலின் வாய்கள்.. மிக அருமையான கற்பனை.அழகு தமிழில் அலைகளைப் பாடிய ஆதிக்கு வாழ்த்துகள்+பாராட்டுகள்.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சிவா..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
18-12-2007, 10:47 AM
சுவடுகள் திருடுவதற்காக இருக்காது.
காலடி சுவட்டிலும் சுவடு பதிக்கலாம் என்று நினைத்திருக்கும்.

ஆதி
18-12-2007, 03:18 PM
நன்றி ஆதி அண்ணா
காட்டுக்குயில் என்றவுடன் சற்று வித்தியாசமாக எண்ணிவிட்டேன்
ஆனால் சாதாரண குயில்தான் அது.....
அன்புடன் ஐஐ

நன்றி ஐஐ..

ஆதி
18-12-2007, 04:46 PM
பொங்கும் கடலின் வனப்பை ஆதியில் சொல்லி,
ஆர்ப்பரிக்கும் அலைகளிடம் அந்தமாக வினா எழுப்பி,
காட்சியைப் காண வைத்த வர்ணம்குழைந்த கவிதை.
அந்தமாக பறைசாற்றுகின்றது ஆதியில் பொங்கும் தமிழை....

பாராட்ட வார்த்தைகள் வெட்கி வரமறுக்கின்றன ஆதி.


சொற்சிலம்பத்தைவிடவா இங்கு தமிழ் பொங்கிவிட்டது ?

மனதை நெகிழ வைத்தப் பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி அமர்..

ஆதி
19-12-2007, 07:48 AM
நானும் அவளும்
நனைக்கும் கால்களின்
சுவடுகள் திருடாவோ
சுற்றுகிறாய் கரையில்.. ?

நான் ரசித்த வரிகள் இவை.

கவிஞனின் கவியுள்ளம் வெளிப்படும் வரிகள்.

நல்ல கவிதைக்கு நன்றி நண்பரே...

நன்றி தங்கசி.. உங்கள் பின்னூட்டத்திற்கு..

-ஆதி

தம்பி
19-12-2007, 09:11 AM
மாராப்பு பறப்பது
தெரியாத மங்கைகள்.

கண்ணி வைக்கப்படுவது
தெரியாமல்
கண்மூடிக் காத்து வாங்கும்
சீ'மான்கள்'..

மழலைகளுக்கு நடைபயில்விக்கும்
எதிர்கால நடைபாதை வாசிகள்.

சோப்புவாங்கி
வழுக்கிவிழும் காதலர்கள்..

எல்லாருக்கும்
நல்லது சொல்லவே
வருகின்றேன்..

எழுந்து போவோருக்கு
எடுத்துச்சொல்லவே
எம்பி எம்பி கத்துகின்றேன்..

கேட்பார்த்தான் யாருமில்லை.

ஆதி
19-12-2007, 09:56 AM
சுவடுகள் திருடுவதற்காக இருக்காது.
காலடி சுவட்டிலும் சுவடு பதிக்கலாம் என்று நினைத்திருக்கும்.

வருடுவதற்காகவும் இருக்கலாம்.. வியப்பில்லை..

நன்றி..

-ஆதி

ஆதி
20-12-2007, 02:15 PM
மாராப்பு பறப்பது
தெரியாத மங்கைகள்.

கண்ணி வைக்கப்படுவது
தெரியாமல்
கண்மூடிக் காத்து வாங்கும்
சீ'மான்கள்'..

மழலைகளுக்கு நடைபயில்விக்கும்
எதிர்கால நடைபாதை வாசிகள்.

சோப்புவாங்கி
வழுக்கிவிழும் காதலர்கள்..

எல்லாருக்கும்
நல்லது சொல்லவே
வருகின்றேன்..

எழுந்து போவோருக்கு
எடுத்துச்சொல்லவே
எம்பி எம்பி கத்துகின்றேன்..

கேட்பார்த்தான் யாருமில்லை.


அருமையான கவிதைப் பின்னூட்டத்திற்கு நன்றி தம்பி அவர்களே..

-ஆதி

ஷீ-நிசி
20-12-2007, 04:52 PM
செத்தப் பொறுங்கள்
செய்திக் கேட்கிறேன்
நித்தம் பொங்கும்
நீர்எரி மலையே
நானும் அவளும்
நனைக்கும் கால்களின்
சுவடுகள் திருடாவோ
சுற்றுகிறாய் கரையில்.. ?

கவிதைத்தனம் கொஞ்சுகிறது இந்த வரிகளில்...

வாழ்த்துக்கள் ஆதி!

செல்வா
20-12-2007, 05:26 PM
காற்றின் கைப்பிடித்து
கரையில் நடைப்பயிலும்
அலைக்குழந்தைகள்..

கத்தும்கடல் துவைத்து
காயவைத்த துணிகள்
சோப்பு நுரைகள்..

குருட்டு ஆழியின்
குமுறும் இமைகள்..

எழுத்து இன்றி
பேசும் இதழ்கள்..

மேலெழுந்து மெலிந்து
தாழும் படிக்கட்டுகள்..

எழுந்து பறக்க
எத்தனிக்கும் சிறகுகள்...
விழுந்து முறியும்
வெளுத்த மின்னல்கள்..

நீர்ம வடிவில்
நிலா வெளிச்சம் - நிற
சேர்மம் இல்லா
வானவில் வளையம்..

சட்டமிருந்தும்
தடுக்க முடியா
மணற்கொள்ளையன்..

நான் மிக இரசித்த வரிகள்.... நல்ல கற்பனை கவிஞரே.. அதிலும் நிலவு மற்றும் வானவில் மிக மிக அருமை

நானும் அவளும்
நனைக்கும் கால்களின்
சுவடுகள் திருடாவோ
சுற்றுகிறாய் கரையில்.. ?

உமது காதலை வாழ்த்தினால் போதுமா கவிஞரே...
பிற காதலரையும் வாழ்த்தி அவர்கள் கால்களையும்
வருடி அனுப்புவதற்காக கரையில் சுற்றுகிறது..
அதைப் புரிந்து கொள்ளாமல்
இப்படி சுயநலமாய் கேள்வி கேட்கிறீரே... ;)

kavitha
21-12-2007, 05:44 AM
வெகு நாளைக்குப்பின் நன்கு விளைந்த கவிதையை நயத்துடன் வாசிக்கிறேன்.
கடல்கரையில் நின்று கால் நனைத்த பரமதிருப்தி எனக்கு.
நன்றி ஆதி!

ஆதி
03-01-2008, 10:51 AM
கவிதைத்தனம் கொஞ்சுகிறது இந்த வரிகளில்...

வாழ்த்துக்கள் ஆதி!

பின்னூட்டத்திற்கு நன்றி ஷீ

-அன்புடன் ஆதி

யவனிகா
03-01-2008, 11:21 AM
வாசிக்க ஆரம்பித்தவுடன், சுருட்டி உள்ளிழுத்து ஒன்ற வைத்து விடும் ஆதியின் கவிதைகள்...எப்போதும் வேகமாகவும்,வரி தாண்டியும் வாசிக்கும் பழக்கும் எனக்கு உள்ளது....ஆனால் ஆதியின் கவிதைகள் இரண்டாம் வரியிலேயே உள்ளிழுத்து ஒரு வகை நிதானத்தையும்,ரசிப்பையும்,இதழோரப் புன்னகைகயையும் தந்து விடும்...வாழ்த்துக்கள் ஆதி.

ஆதி
10-01-2008, 07:50 AM
உமது காதலை வாழ்த்தினால் போதுமா கவிஞரே...
பிற காதலரையும் வாழ்த்தி அவர்கள் கால்களையும்
வருடி அனுப்புவதற்காக கரையில் சுற்றுகிறது..
அதைப் புரிந்து கொள்ளாமல்
இப்படி சுயநலமாய் கேள்வி கேட்கிறீரே... ;)


பின்னூட்டத்திற்கு மிக நன்றி செல்வா.. கற்பனைக்காகத்தேன் அப்படி எழுதினேன்.. சுயநலம் எல்லாம் ஒன்றுமில்லை..

அலைகளே மற்றவர்கள் காதலையும் வாழ்த்திப் போ.. குறிப்பாய் செல்வாவின் காதலையும்.. ;)


நட்புடன் ஆதி