PDA

View Full Version : வந்துவிட்டது செயற்கை சிறுநீரகம்



mgandhi
17-12-2007, 05:22 PM
வந்துவிட்டது செயற்கை சிறுநீரகம்

லண்டன்: சிறுநீரகம் பழுதுபட்டவர்கள், உடலில் அணிந்து கொள்ளும் வகையில், செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், மொத்தம் 13 லட்சம் பேர் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று சிறுநீரகம் தானம் கிடைக்காதவர்கள், வாரத்துக்கு ஒரு முறை ரத்தத்தை சுத்தப்படுத்தும், டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயற்கை சிறுநீரகம் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் செயல்படும் இந்த செயற்கை சிறுநீரகம், நோயாளிகளின் உடலில் அணிவிக்கப்பட்டு, நான்கு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை பரிசோதித்து பார்க்கப்பட்டது. தற்போது அதிகபட்சம் எட்டு மணி நேரம் மட்டுமே இந்த செயற்கை சிறுநீரகம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடர்ந்து செயல்படும் செயற்கை சிறுநீரகம் வடிவமைக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். செயற்கை சிறுநீரகத்தை உடலில் அணிந்து கொள்ளலாம். இதில் இருக்கும் கருவி, ரத்தத்தில் உள்ள நச்சு ரசாயனங்களை பிரித்துவிடுகிறது. நுறு சதவீதம் சிறப்பாக செயல்படும் இந்த செயற்கை சிறுநீரகத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கார்பொரியல் இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நீண்ட காலம் செயல்படும் வகையில், இது வடிவமைக்கப்பட்டு விட்டால், சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

அறிஞர்
17-12-2007, 05:24 PM
8 மணி நேரம்... நீண்ட காலமாக மாறினால் மிக்க பயனே....

நன்றி காந்தி..

நுரையீரல்
18-12-2007, 04:00 AM
மோகன்காந்தி அவர்களே மிகச்சிறப்பாக செய்தி சேகரித்து தருகிறீர்கள் மிக்க நன்றி... உங்க சேவை ரொம்பத் தேவை..

சிவா.ஜி
18-12-2007, 04:18 AM
அரசாங்கமே இந்த மாதிரியான உயிர்காக்கும் கருவிகளுக்கு மான்யம் அளித்து குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் வசதி குறைந்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தகவலுக்கு நன்றி மோகன்காந்தி.

இதயம்
18-12-2007, 04:20 AM
மிகவும் பயனுள்ள தகவல். அறிஞர் சொன்னது போல் கால அவகாசம் நீடித்தால் இன்னும் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். தகவலுக்கு நன்றி மோகன் காந்தி..!:icon_b:

பூமகள்
18-12-2007, 06:10 AM
நல்லதொரு தகவல். 8 மணி நேரம் அதிகமாகி, எல்லா நோயாளிகளும் வாங்கும் விதத்தில் விலை குறைவாய் வந்தால்.. அருமை தான்.
கண்டுபிடிப்புகள் இன்னும் வளர வேண்டுவோம்.
நல்லதொரு தகவலுக்கு நன்றிகள் காந்தி அண்ணா. :)

மனோஜ்
18-12-2007, 07:03 AM
எனது பெரியப்பா பயனுக்கு இப்பபொழுது அவர்கள் அம்மா சிறுநீரகத்தை பொருத்தினார்கள் கிடைக்காதவர்கள் பாவம் அவர்களுக்கு இது ஒரு பொக்கிஹமாய் அமையும்
தகவலுக்கு நன்றி காந்தி அண்ணா

அமரன்
18-12-2007, 07:13 AM
மகிழ்வு தரும் விசயம். பயனுள்ள பகிர்வு.
இனி என்ன கவலை என்று யாரும் அதிகப்படியாக ஆட்டம் போடாதீங்கப்பு.:)