PDA

View Full Version : மலேசியாஇந்தியர்கள் மீதான வழக்கு ரத்து



தேவிப்ரியா
17-12-2007, 02:34 PM
மலேசியாஇந்தியர்கள் மீதான வழக்கு ரத்து
Monday, 17 December, 2007 11:35 AM
.
கோலாலம்பூர், டிச.17: மலேசியாவில் 31 இந்தியர்கள் மீது போடப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. மலேசியாவில் இந்தியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும், அங்குள்ள கோயில்கள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி ஹின்ட்ராப் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் 25ந் தேதி கோலாலம்பூரில் பேரணி நடைபெற்றது.

.
இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் மீது மலேசிய போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பீரங்கிகளை கொண்டு தண்ணீர் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் இந்த பேரணியில் பங்கேற்ற 31 பேர் பத்துமலை முருகன் கோயில் அருகே காவலர் ஒருவரை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டி அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் ஹின்ட்ராப் அமைப்பின் சட்ட

ஆலோசகர்கள் பி.உதயகுமார், கணபதி ராவ் உள்ளிட்ட 5 பேர் மீது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மலேசிய அரசின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், 31 இந்தியர்கள் மீதான கொலை முயற்சி வழக்கு கைவிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 5 பேர் மீதான அனைத்து வழக்குகளும் கைவிடப்படுவதாகவும், எஞ்சிய 26 பேரின் மீதான கொலை முயற்சி வழக்கும் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 31 இந்தியர்களும் தங்கள் மீது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகார்களையும் மறுத்தனர்.

சர்வதேச அளவில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாகவே மலேசிய அரசு இந்தியர்கள் மீதான வழக்கை கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மலேசிய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியர்கள் பிரச்சனையில் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
http://www.maalaisudar.com/newsindex.php?id=6492%20&%20section=1

மயூ
17-12-2007, 02:37 PM
தமிழனாய்ப் பிறந்தால் துன்பம்தான் போலும்... ஏதோ இவளவில் அவர்களை வெளியே விட்டது புண்ணியம்தான்! :)