PDA

View Full Version : பல்கலை வாழ்வில்...



தீபன்
17-12-2007, 02:19 PM
பல்கலைக்கழகம் முடித்து வெளியேறும்போது நடைபெறும் ஒன்றுகூடல் வைபவத்தில் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை இப்போது மன்ற நண்பர்களுடன் மீட்டிப் பார்க்கிறேன் - நண்பர்களும் பழைய நினைவுகளை அசைபோட இது வழிசெய்யுமென்ற நம்பிக்கையுடன்.


பல்கலை வாழ்வில்...

தவழ் பருவம் தாண்டி
தத்தி நடைபயின்றபோது
தொடங்கியது...

அன்னையின் கைபிடித்து
அயலவர் துணையெடுத்தபோது
ஆரம்பித்தது...

அப்பொழுதெல்லாம்
அவனும் அவளும்
அவர்களாகவே இருந்தார்கள்..!

காலங்கள்
வித்தைக்கும் விளையாட்டுக்கும் மட்டுமே
விரையாமாகின...!


பதின்ம வயதுகளின் தொடக்கம்...
பள்ளிப்பருவ மயக்கம்...

புள்ளிக்கோலமாயிருந்த வாழ்க்கை
வர்ண்ஜாலமாகி வானவில்லாக்கியது..!
ஆண் பெண் பேதம் கண்டு
தனித்தனி வேதம் வகுத்தது...!

நட்புக்கும் காதலுக்கும்
விளக்கம் தெரியாது
தயக்கம் கொண்டது...

உடற்கவர்ச்சி உயர்வாக
இனக்கவர்ச்சி தினவாக
நிஜமறியா நிழலே நிகழ்வாகியது..!


மயக்கங்களூடே கல்வியில் தேறி
வாலிபத்தின் உச்சத்தில் வளாகத்தை எட்டியபோது
பல்கலை என்ற பதத்தின் அர்த்தங்கள் புரியலானது...!

ஆண் பெண் கலப்பின்றி
தனி தனியாய் கற்றவர்களும்,
ஆணொடு பெண்ணாய்
கலவனாய் பயின்றவர்களும்,
பல்கலை புகுந்தபோது
பலவித உணர்வுகள்�
கூச்சத்தோடு பலர்...
கூட்டமாகச் சிலர்...


மேற்படிப்புக்கென்றுதான் வந்தோம் அன்று...
மேலான வாழ்வையும் படித்துவிட்டோம் இன்று..!

கற்றல் என்பதையும் தாண்டி
சுற்றம் என்பதை உணர்ந்தோம்!
புதிதாக பல உறவுகள்...
புதிராக சில நிகழ்வுகள்..!

தனியாக வந்தவர்களெவரும்
தனியாகச் செல்லவில்லை...
துணையின்றி நுளைந்த எவரும்
துணையின்றி போகவில்லை..!

நாலாண்டு நட்போடு
கரைகடந்த காதலோடு
புதிய உறவுகள்
பூத்துக் குலுங்குகிறது...

அறிமுக காலங்களில்
அனல் தெறிக்க பேசியவர்களும்
இடைப்பட்ட காலங்களில்
இடர்பல புரிந்தவர்களும்
இறுதி நாள் இன்று
கண்ணீரோடுதான் கலந்திருக்கின்றனர்..!
நட்பின் பலம் அது...!

சேர்ந்திருக்கையில் தெரியாத சேதி
பிரியும்போது பதைக்க செய்யும்...

போட்ட சண்டைகள்
பசுமை நினைவுகளாய்
பழசை கிளறும்...

சண்டைகளின் மூலமும்
நட்பில் கொண்ட உரிமையே என்ற
உண்மய் புரியும்...

சமுதாய சாக்கடையில்
மீழாத சமூகத்தில்
ஆண் பெண் நட்பு
ஆட்டங்காணப்போவதை நினைத்து
மருகும்...!

மறுவளமாய்,


நட்பென்று நினைத்த பல
அதைத்தாண்டி நடக்கும்...
தப்பென்று சொல்வதற்கில்லை
தகுந்தவர்கள் செய்வதானால்...

பல்கலைய்யில் ஒரு கலையாய்
காதலையும் பலர் கற்றார்�
பாஸ் பண்ணினதென்னவோ சிலர்தான்!

அரியஸ் வைத்து சிலர்
ஆசையிருந்தும் ஆச்சாரம் பார்த்து இன்னும் சிலர்...
தேர்வுக்கு தோற்றாமலேயே தோற்றுப் பலர்..!

நட்பென்ற பெயரில்
வந்த காதலுக்கு வய்ப்பூட்டு போட்டனர்...
தப்பென்று சொல்லி
கொண்ட காதலை கொன்று போட்டனர்...

துணிந்து சிலர் கிளர்ந்து எளுந்தனர்
கனிந்த காதலை கனியாக்கி மகிழ்ந்தனர்!
வாலிப ஆற்றுக்கு வாய்க்கால் அமைத்தனர்
வாழ்க்கைப் பயிரை வளமாய் வளர்த்தனர்!

நான்காண்டுகளுக்கு முன்னர்,
வரும்ப்போது நாம் ஏழைகள்தான்...
எம்மிடம் எதுவுமில்லைத்தான்...
படிப்பில்லை, பக்குவமில்லை
முதிர்ந்த நட்பில்லை,
கனிந்த காதலில்லை...
இருந்ததெல்லாம்
கோபமும் வேகமும்தான்!

இன்று,
எல்லாம் அடைந்த
ஏற்றம் மிகுந்தவர்களானோம்!

புதிய நட்புகள்
புதிய உறவுகள்
வாழ்க்கை நீட்டிப்பிற்கும்
வரமாயமைந்த துணைகள்...!


வாழ்வேட்டின்
முதன்மை அத்தியாயம் முடிவடைகிறது...

காலப்பயணத்தின் பிரதனபாதை
நிறைவடைகிறது..!

வளங்களும் வசந்தங்களும் நிறைந்த
வாழ்வை விட்டு
வம்புகளும் வன்மங்களும் நிறைந்த எதிர்காலத்தில்
நுழைகிறோம்..!

இந்நாளில்
மீட்டிப் பார்ப்போம் நம்
வசந்த காலங்களை...
ஆய்ந்து பார்ப்போம் நம்
பல்கலைப் பேறுகளை...!

ஓவியன்
17-12-2007, 03:05 PM
மீண்டும் என்னை பழைய நினைவுகளில் சிக்கிச் சுழல வைத்துவிட்டது உங்கள் வரிகள் தீபன்...
நான் அடிக்கடி நினைக்க விரும்பாத நாட்களிலொன்று அது.....
ஏனென்றால் அதுபோன்ற நாட்களையோ அல்லது அந்த நாட்களின் நினைவுகளையோ மீள அசைபோடும் திராணி ஏனோ எனக்கு இல்லை...

வார்த்தைகளைத் தேடி, வாத்தைகளே கிடைக்காது உணர்வுகளால் விடை கொடுத்த நாளது.......

அமரன்
17-12-2007, 03:15 PM
அனுபவித்து எழுதி அனுபவிக்க வைத்து விட்டு விட்டீர்கள் தீபன்..
பல்கலைப் பயில்வுக்கு அத்திவாரமிடும் உயர்தரப் பருவத்தையும் சேர்த்திருக்கலாமோ?
பாராட்டுக்கள்...

ஆதி
17-12-2007, 04:42 PM
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்க விரும்பாதக் காலம் பற்றியக் கவிதை.. பழைய காலங்களுக்குச் சென்று மீளத்திரும்பாமல் இன்னும் இருக்கிறேன் தீபன்..

பாராட்டுக்கள் தீபன்..

கலகலப்பான காலங்களில் மிதந்த வண்ணம் கனத்த இதயத்தோடு ஆதி.

தீபா
09-07-2008, 06:56 AM
ஒரு கல்லூரி வளாகத்தினுள் போய்வந்த உணர்வு.. தவள் என்றால் என்னங்க? தவழ் ? இந்த வசந்த காலம் ஒருமுறை மட்டுமேதானா ஒருவனின் வாழ்க்கைக்கு? கடவுளின் கஞ்சத்தனம்

பின்னுங்க....!!!

தீபன்
09-07-2008, 02:52 PM
ஒரு கல்லூரி வளாகத்தினுள் போய்வந்த உணர்வு.. தவள் என்றால் என்னங்க? தவழ் ?

எழுத்துபிழை இருக்கான்னு தெரியல...
தவள்னா தவளுதல் என்று அர்த்தம். இத எப்படி புரிய வைக்கிறது... தவண்டுதான் காட்டணும்...!

நாலு காலில் நடத்தல்னு சொல்லலாம்!

இளசு
13-07-2008, 03:58 PM
வழியை வளி என்றும் தவழை தவள் என்றும் விரயம் விரையமாயும் (உண்மை உண்மய் எனவும் ) பேச்சு நடையில் எழுதியிருக்கிறீர்கள்..


கல்லூரிப் பருவத்தின் முழுமையான மீள்பார்வை..

மிக அழகாய் ஆழமாய்ச் சொன்னதன் மொத்த வீச்சும் படிப்பவர் மனதில்..

பாராட்டுகள்!

(தென்றல் - தவண்டு என்றால் தவழ்ந்து. புரியுதுங்களா?)

mukilan
13-07-2008, 04:22 PM
கல்லூரி நட்புகளும் சாகா வரம் பெற்றவை. முதுநிலைக் கல்வி நட்பிலும் இளநிலைக் கல்வி நட்புக்கே இனிப்பு அதிகம். என்னவோ செய்து மனதைக் கலக்கிவிட்டது இந்தக் கவிதை. இதோ என் நண்பனுடன் பேச அலை பேசி எடுக்கிறேன். படைத்த உங்களுக்குப் பாரட்டுக்கள் தீபன். மீள எடுத்துக் கொடுத்த தென்றலுக்கு நன்றி.

தீபன்
15-07-2008, 09:06 AM
நன்றி இளசு, முகிலன் அண்ணாக்களே...
எவ்வளவுதான் முயன்றாலும் இந்த ள ழ பிரச்சினை எனக்கு தீர்வதாக இல்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணா. திருத்திவிட்டேன்.

அதுசரி முகில்ஸ், என் காதோடு சொல்லுங்க... யாருக்கு தொடர்பெடுத்திங்க... நண்பனுக்கா நண்பிக்கா...!!?:sprachlos020: