PDA

View Full Version : நமது சிந்தனைக்கு....!செல்வா
16-12-2007, 07:31 PM
நண்பர்களே.... முதலில் இந்த மன்றத்தில் நுழையும்போது எனக்கு ஏதோ சாதாரண மற்ற வலைத்தளங்கள் போல இன்னொன்று என்றே தோன்றியது... ஆனால் சில நாட்களிலேயே... இது சாதாரண தளம் அல்ல.. என்று புரிந்து பூரித்துப் போனேன். நம் தளத்தில் இணைந்திருப்பவர்களின் அறிவும், திறமையும், பாசமும், பணிவும், பிரச்சினைகளை அலசும் ஆழமும்.... கருத்துக்களை தெரிவிக்கும் திறனும்.... கற்பனைவளமும்.... அதோடு கூட ஆழ்ந்த அனுபவமும் ... சேர்ந்து என் மனதில் சில எண்ணங்களைத் தோற்றுவித்தது... அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்...

நமது மன்றத்திலிருக்கும் படைப்புக்கள்.... நமது பொக்கிஷங்கள் அவற்றை எப்படி நாம் பாதுகாத்து... வரும் தலைமுறைக்கு சேர்க்க போகிறோம்.

இணையத்தில் இருக்கும் நமது கருத்துக்களை.... கவிதைகளை ... கதைத் தொகுப்புகளை ஏன் மக்கள் மன்றத்திற்கும் எடுத்து செல்ல கூடாது...

என்ற கோணத்தில் சிந்திக்கும் போது.... என் மனதுக்கு தோன்றியது இதுதான்...

நமது மன்றத்தின்.. சிறந்த படைப்புக்களைத் தெரிவுசெய்து ஏன் புத்தக வடிவில் அவற்றை வெளியிடக்கூடாது....?

இதனால் படைப்புக்கள் தருபவர்களும் இன்னும் பல தரமான... மேலும் சிறந்த பல படைப்புக்கள்... கொடுக்க முயலுவர்.... தமிழ் மன்றம் என்பது இணையத்தில மட்டுமன்றி தரணியிலும் கோலோச்சும்.

நாம் அனைவரும் ஒத்த கருத்தோடு அதற்கேற்ற முயற்சிசெய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பது என் துணிபு.

இது ஒரு விதை... நான் விதைத்துள்ளேன் இதை நமது மனங்களில் இருத்தி நீரூற்றி வளர்த்தால், நிச்சயம் ஒருநாள் கனி கொடுக்கும் ......

மன்ற உறவுகள் சிந்திப்பீர்களா....?

அமரன்
16-12-2007, 07:40 PM
சபாஷ் செல்வா..! சரியான வித்து. சாதக பாதகங்களை அலசி முடிவெடுப்போம்.

ஓவியன்
17-12-2007, 02:15 AM
நல்ல கருத்து செல்வா...!!

இதுவொன்றும் முடியாத காரியமில்லையே...
எல்லோரும் ஒருமித்து செயற்பட்டால் அதனைச் செவ்வனே செய்து முடிக்கலாம்.

மற்றவர்களின் கருத்துக்களையும் பார்ப்போம்....

அன்புரசிகன்
17-12-2007, 02:51 AM
செய்யலாம் செல்வா. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். ஜாம்பவான்களே வாருங்கள். சாதக பாதக நிலைகளை சொல்லுங்கள்.

நுரையீரல்
17-12-2007, 03:34 AM
ஒவ்வொரு எண்ணமும் தீவிர முயற்சிக்குப் பிறகே செயல் வடிவம் பெறுகிறது... அதிலும் பலர் சேர்ந்து முயற்சித்தால், இது ஒரு எளிமையான விஷயம்..

சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுப்பதில் தான் போட்டி (அ) பொறாமை எழ வாய்ப்பிருக்கிறது.. ஆனாலும் உங்கள் கருத்து மிகச் சிறந்தது..

IDEALEYE
17-12-2007, 03:39 AM
நல்ல ஆரோக்கியமான கருத்து,
இக்கருத்துப்பற்றி பேசும்போது அதன் நடைமுறைவடிவம் கூறித்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தேவை என நினைக்கின்றேன்: புத்தகம் என்பது ஒருவழிமுறையாக இருப்பினும், அதைவிடவும் எளிய முறையில் இருவட்டுகளாக அமைத்துவிட்டால் அதன் உள்ளடக்கமும் அதிகமாக இருக்கும் அத்துடன் எளிதாக விநியோகிக்கவும் முடியுமல்லவா, இது எனது தாழ்மையான அபிப்பிராயம்,
அன்புடன் ஐஐ

ஜெயாஸ்தா
17-12-2007, 03:59 AM
நான் கூட சில சமயங்களில் இது போன்று நினைத்தது உண்டு. காலத்தால் அழிக்க முடியாத கவிதைகள், சிறுகதைகள், விவாதங்களை நம் மன்றத்தினர் பிரசவித்துள்ளனர். அவை வெகுஜன வார மற்றும் மாத இதழ்களில் வரும் படைப்புகளை விட தரமும், சுவையும் அதிகமுள்ளவை. நம் மன்றத்தாருடைய அருமையான படைப்புகளை நிச்சயம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம். முதலில் நம்முடைய பதிப்புகளை பதிப்பகத்தார் (மணிமேகலை பிரசுரம், இலக்கியசோலை) கண்களுக்கு தெரியும் வண்ணம் செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை தெரிவியுங்கள் நண்பர்களே...!

இதயம்
17-12-2007, 04:15 AM
ஆஹா.. அசத்தல் ஐடியா செல்வா..! எனக்கும் உள் மனதில் இந்த ஆதங்கம் நெடுநாட்களாய் உண்டு. நம் நண்பர்களின் அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கருத்துக்கள் நம்மில் சிலர் படிப்பதோடு நின்று விடக்கூடாது. அவர்கள் தங்கள் பெரும் உழைப்பை அளித்து உருவாக்கும் படைப்புக்கள் நம்மோடு மட்டும் நின்று விடாமல் அதிகபட்ச மக்களை சென்றடைய வேண்டும். ஒரு புத்தகமாக உருவாவதற்கான அனைத்து தகுதிகளும் நம்மவர்களின் படைப்புக்களுக்கு உண்டு.

எத்தனையோ குப்பை எழுத்தாளர்கள்(!)களின் எழுத்துக்கள் அச்சேறுகின்றன (அந்த வரிசையில் என் பெயரும் உண்டு..! ஆமாம்.. என் படைப்பும்(!) புத்தகமாக வந்துள்ளது..!! என்ன கொடுமை செல்வா இது.?!!). நம்மவர்களுக்கு என்ன குறைச்சல்..?! காத்திருப்போம், காலம் கனியும் வரை..!!

செல்வா
17-12-2007, 09:22 AM
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே நாம் அனைவருமே இதைப்பற்றி சிந்தித்துள்ளோம் எனவே ஆக்க பூர்வமாக இதைச் செயல்படுத்தும் திட்டங்களைப் பற்றி விவாதிக்கலாம். என் மனதிற்கு எட்டிய திட்டம் இது.

முதலில் இரண்டு குழுக்களை அமைக்க வேண்டும்
o பதிப்புக் குழு
(எனது தெரிவு நமது தலைமையாசிரியரை (இதயம்) தலைவராகக் கொள்ளலாம். அவருக்கு முன் அனுபவம் இருக்கிறது )
o படைப்புக்கள் தெரிவுக்குழு
(எனது தெரிவு.. சாம்பவி, தாமரை, இளசு மற்றும் நண்பர்களின் தேர்வுப்படி)
பதிப்புக் குழுவின் பணிகளாவன
o பதிப்பு வெளியிடுதல் தேவையான தகவல்களைத் திரட்டுதல்
o தகவல்களின் அடிப்படையில் தேவையான செயல்திட்டம் அமைத்தல் செயல்படுத்துதல்
படைப்புக்கள் தெரிவுக்குழு
o முதலில் எத்தகைய படைப்புக்களை (கதை , கவிதை கட்டுரைகளா?) அச்சேற்றுவது என முடிவுசெய்தல்
o அத்தகைய படைப்புக்களை சீர்தூக்கிப்பார்க்க அளவுகோல்களை உருவாக்கல்
o அளவுகோலின் அடிப்படையில் படைப்புக்களுக்கு மதிப்பிட்டு தேர்வுசெய்யலாம்
o தேவைப்பட்டால் ஏதேனும் மாற்றங்களுக்காக படைப்பாளிகளையே அணுகலாம்
o தெரிவுசெய்த படைப்புக்களை தொகுத்து வழங்குவதோடு இவர்கள் பணி முடிகிறது.
மன்ற நிர்வாகத்தின் பணிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம்
o இரு குழுக்களில் இருப்போரையும் வழிநடத்தும் தலயாய பணி உங்களுடையது
o அதோடு குழுக்களுக்கும் குழுக்களின் முடிவுகளுக்கு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டைக் காப்பதிலும் உம்பணி தேவை
o இத்தகைய பணிகளுக்கென்று தனி பிரிவு அமைக்கலாம்
o அங்கே குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான திரிகளை அமைக்கலாம்

இவை என் சிற்றறிவுக்கு எட்டியது.. இன்னும் விரிவாக எழுத நினைத்தேன் ஆனால் ஆரம்பத்திற்கு இது போதும் எனத்தோன்றியது.

உடனே நடைபெற வேண்டும் என்பது அல்ல என் அவா!
எல்லோருக்கும் பிடித்த ஒன்று
நமக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒன்று
ஏன் தள்ளிப்போட வேண்டும் என்பதே என் வினா?

சிவா.ஜி
17-12-2007, 09:32 AM
எந்த பெரிய சாதனையும் சிறிய முயற்சியில் தானே துங்குகிறது.அந்த வகையில் செல்வாவின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது.ஊர் கூடி தேரிழுத்தால் நகராமலா போய்விடும்? நல்ல முயற்சி.நாமும் துணையிருப்போம்.செல்வா உங்களின் பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக உள்ளன.அதில் ஏதாவது மாற்றமென்றால், ஈடுபடும் நன்பர்களின் இசைவு கிடைப்பதில்தானிருக்கிறது.தொடங்கி விட்டீர்களல்லவா....நடத்திக் காட்டிவிடுவோம்.பாராட்டுகள் செல்வா.

மனோஜ்
17-12-2007, 04:50 PM
தமிழ்மன்றத்தில் கவிதை கதைகள் படைபாளர்களை சிறப்பிக்க சிறந்த வழி
பிராத்தனைகள் சிறப்பாய் அனைத்தும் அமைய:icon_b:
தொடங்கிய செல்வா அவர்களுக்கு நன்றி

அறிஞர்
17-12-2007, 05:06 PM
தங்களின் எண்ணத்திற்கு நன்றி நண்பரே.

இங்கு வருகிற பல படைப்பாளிகள் பல இடங்களில் எழுதுகிறவர்கள். ஒரே படைப்பு, வேறு தளங்களில் தோன்றும். சிலர் தங்களுக்கு என தனி வலைத்தளங்கள் வைத்துள்ளனர். மேலும் சிலர் தங்களின் கவிதைகளை தொகுத்து தனிப்புத்தகமாக வெளியிடுகிறார்கள். பதிவுகளுடைய உரிமை.. படைப்பாளிக்கு உரியது.

நாம் புத்தகம் வெளியிடும்பொழுது... படைத்தவர்களின் உரிமை பெற்று வெளியிடலாம்.
----
இதற்கு அடிப்படையாக நாம் ஒரு மின்னதழை அமைக்கலாம். இரண்டு அல்லது மூன்று மாதத்தில் தமிழ்மன்றத்தில் வந்த சிறந்த தொகுப்புக்களை பிடிஎப் பைலாக மாற்றி... மின்னஞ்சலில் அனுப்பலாம். முடிந்தால் பிறகு மாத வெளியீடாக மாற்றுவோம்.

செலவற்ற வேலை.. அதே நேரத்தில் தொகுப்பாக சேர்த்து வைக்கலாம்.

காலமும், பொருளாதாரமும் அனுமதித்தால் பிறகு நூலாக வெளியிடலாம்.

தமிழர் திருநாளுக்குள் முதல் இதழை படைக்க முயற்சி செய்வோமா...
----
இது பற்றி மற்றவர்கள் கருத்து தேவை...

அறிஞர்
17-12-2007, 05:07 PM
மற்ற ஆலோசகர் கருத்து அறிந்து... இதற்கு எனத் தனிக்குழு அமைப்போம்....

செல்வா
17-12-2007, 08:18 PM
கண்டிப்பாக செய்யலாம் அறிஞர் அவர்களே! நல்ல யோசனை. இதனால் நமது அனுபவமும் வளரும் அதோடு பதிப்பகம் செல்லுமுன்னர் சிறந்த படைப்புக்களோடு செல்ல இது நல்ல அடித்தளம் அமைக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

எனவே அந்த அடிப்படையில் எனது கருத்துக்கள்.
இதை நல்ல பல்சுவை மாதஇதழ் (மாதம் ஒருமுறை அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை. ஏனென்றால் உறுப்பினர் அனைவரும் வேறு வேறு இடங்களில் வேறு வேறு சூழல்களில் பணிபுரிபவர்கள்) போன்று கொண்டுவரலாம் என்பது எனது எண்ணம்
பகுதிகள்
செய்திகள் அவற்றின் விமர்சனங்கள்
கவிதைகள்

o மரபு
o புதுக்கவிதைகள்
o ஹைகூ
கதைகள்

o சிறு கதைகள்
o தொடர்கதைகள்
கட்டுரைகள்

o சிறுகட்டுரைகள்
o தெடர்கட்டுரைகள்
போட்டிகள்
o
மன்றம் அறிவிக்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் அவற்றின் முடிவுகள்
o போட்டிகளில் பங்குபெற்ற படைப்புக்கள்
திரைத்துறை
o
விமர்சனங்கள்
o செய்திகள் கருத்துரைகள்

குழுக்கள் பற்றிய எனது கருத்துக்கள்
நிர்வாகக் குழு
o
அட்டைப்படம் அமைப்பதிலிருந்து pdf ஆக்குவது வரையிலான வேலைகளை கண்காணித்தல்
o குறிப்பிட்ட நேரத்தில பதிப்பு வெளியாவதற்குரிய செயல்திட்டங்களை வகுத்து பணிகளை பகிர்ந்தளித்தல்
o அனுப்பவேண்டிய மின்னஞசல்களுக்கு இதழை அனுப்புதல்

ஆசிரியர் குழு
(ஆசிரியர் குழுதான் இதழின் உள்ளடக்கத்திற்கு முழுப்பொறுப்பு. ஆகவே பணிச்சுமை கருதி நாம் அமைக்கப்போகும் பகுதிகளுக்கு ஏற்ப குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்)
o
கவிதை
o கட்டுரை
o கதை
o செய்தி (மற்றும்.பல..)


என்மனதிற்கு தமிழர் திருநாளில் முதல் இதழ் வெளியீடு என்பது பொருத்தமானதாகவே தோன்றுகிறது அத்தோடு உடனே பணிகளை ஆரம்பித்தால் நம்மால் முடியக்கூடிய செயலாகவும் உள்ளது. ஆவன செய்யுங்கள் அன்பர்களே

அறிஞர்
17-12-2007, 10:27 PM
நல்லது செல்வா....

ஆசிரியர் குழு... விரைவில் அமைப்போம்.
இன்னும் 2 நாளில் குழுவில் பங்கு பெறுபவர்களின் பெயர்களை முடிவுசெய்வோம்..

சாம்பவி
19-12-2007, 07:04 PM
வாவ்...... !!!!!! கலக்கிடலாம் வாங்கோ...... !!!!!
சோடா புட்டி கண்ணாடி.,
வெள்ளெழுத்து லென்ஸ்..,
இன்னும் வேறென்ன ......
ரெட் இங்க் பென்....
எல்லாம் தயார் நிலையில்..... !!!!!!
ப்ரூஃப் ரீடிங் பண்ண அணில் ரெடி...... ( ஏதோ நமக்கு தெரிஞ்சது... )!!!!!!!!

வானம் தொட்டு விடும் தூரம் தான்....
பாலம் கட்டிடலாம் வாருங்கள்....!!!!!!!!

ஓவியன்
19-12-2007, 07:42 PM
நல்லது சாம்பவி , நாமனைவரும் ஒரு மனதுடனிணைந்தால், வானத்திற்கென்ன, அந்த செவ்வாய்க்கிரகத்துக்கே
பாலம் கட்டிடலாம்....

என்னே தைத் திரு நாளுக்கு வெளியிடுவதெனின் நமக்குள்ள அவகாசம் மிகச் சிறிதே, ஆகையினால் நாம் அனைவரும் இணைந்து கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அக்னி
19-12-2007, 08:06 PM
அழகிய சிந்தனை. செயல்வடிவம் கொடுப்போம்.
அனைவரின் ஈடுபாட்டோடும் நானும் இணைந்து கொள்கின்றேன்...

தாமரை
20-12-2007, 12:58 AM
வாவ்...... !!!!!! கலக்கிடலாம் வாங்கோ...... !!!!!
சோடா புட்டி கண்ணாடி.,
வெள்ளெழுத்து லென்ஸ்..,
இன்னும் வேறென்ன ......
ரெட் இங்க் பென்....
எல்லாம் தயார் நிலையில்..... !!!!!!
ப்ரூஃப் ரீடிங் பண்ண அணில் ரெடி...... ( ஏதோ நமக்கு தெரிஞ்சது... )!!!!!!!!

வானம் தொட்டு விடும் தூரம் தான்....
பாலம் கட்டிடலாம் வாருங்கள்....!!!!!!!!

என்னது தோடும் தூரத்திற்குப் பாலமா?
பெரிய அரசியல்வாதியா இருப்பீங்க போலரிருக்கே!

சரி சரி வேலையை ஆரம்பிக்க

1. முன் அட்டை, பின் அட்டை
2. முன் அட்டை பின் அட்டை உள்புறம் - காலி???
3. மன்றத்திலிருந்து - சங்கம் நோக்கி - ஆசிரியர் கடிதம்
4. வித்தியாசமான பொருளடக்கம் - சுட்டிகளுடன்
6. வெளியீட்டுத் தரம் வாய்ந்த படைப்புகள்
7. இரு பத்தி லே-அவுட்
8. மொத்த பக்கங்கள் 32
9. பக்க அளவு - A4??, அதில் பாதி??

ஆரம்பிங்க ஆரம்பிங்க

மதி
20-12-2007, 01:19 AM
வரவேற்கத்தக்க முயற்சி.. நானும் ஏதாச்சும் பண்ணனுமாங்கோ...?!

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 08:53 AM
நல்ல சிந்தனை. வரவேற்கிறேன்.

praveen
20-12-2007, 12:59 PM
முன்பபக்க அட்டை சரியா?

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantramfordummiescopy.jpg

அறிஞர்
20-12-2007, 02:13 PM
பிரவீன் அருமை.
-------
முதல் பதிப்பிற்கு.. முழு பொறுப்பையும் ஏற்க தாமரையை கேட்டுள்ளோம்.

அவர் வழியில் முதல் பதிவு வரட்டும். மற்ற குழுவை அவர் ஆயத்தப்படுத்துவார் என எண்ணுகிறோம்.

மயூ
20-12-2007, 02:51 PM
அட.. அட.. நம் மக்கள் அடுத்த கட்டத்திற்குப் போகின்றார்கள்!!! என்னால் முடிந்த உதவியை செய்யக் காத்திருக்கீன்றேன்! :)

அறிஞர்
20-12-2007, 04:16 PM
அட.. அட.. நம் மக்கள் அடுத்த கட்டத்திற்குப் போகின்றார்கள்!!! என்னால் முடிந்த உதவியை செய்யக் காத்திருக்கீன்றேன்! :)
உங்க உதவி அவசியம் தேவை நண்பா...

மனோஜ்
03-01-2008, 08:17 AM
விளையாட்டு பகுதியை தொகுத்து நான் தருகிறொன்

அறிஞர்
04-01-2008, 01:41 PM
விளையாட்டு பகுதியை தொகுத்து நான் தருகிறொன்
ஓவியன், அமரனிடம் கொடுங்கள்.

மனோஜ்
04-01-2008, 03:38 PM
ஓவியன், அமரனிடம் கொடுங்கள்.
ஓகே அண்ணா எத்தனை கேள்வி விடைகள் வேண்டும்

இளந்தமிழ்ச்செல்வன்
05-01-2008, 07:38 PM
அறிஞரின் யோசனை மிக அருமை. மக்கள் வேகமாக வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் போல. வாழ்த்துக்கள்.

இயன்ற உதவி செய்ய காத்திருக்கிறேன்

அறிஞர்
07-01-2008, 01:38 PM
அறிஞரின் யோசனை மிக அருமை. மக்கள் வேகமாக வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் போல. வாழ்த்துக்கள்.

இயன்ற உதவி செய்ய காத்திருக்கிறேன்
தங்கள் உதவி.. அவசியம் தேவை....

தொடர்ந்து வந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான்....

சூரியன்
16-01-2008, 08:01 AM
இதை இவ்வளவு தாமதமாக பார்க்கிறேன்.
யோசனை சொன்ன செல்வா அவருக்கு நன்றிகள்.