PDA

View Full Version : உலகின் முன்னோடியாய் நமது இந்தியா...............

saguni
16-12-2007, 08:07 AM
உலகின் முன்னோடியாய் நமது இந்தியா...............
விரைவில் உலகின் முன்னோடி வரிசையில் முதலிடம் பிடிக்கப்போகிறோம் நாம்.

ஆம்... சீனாவிற்கு அடுத்தபடியாய் வளர்ச்சியில் இரண்டாவது இடத்திலுள்ள நாம் விரைவில் முதலிடம் பிடிக்கப்போவதாய் வணிகச் செய்திகள் கூறுகின்றன.

பல நாடுகளிலிருந்தும் வரும் அந்நிய முதலீடு மற்றும் அபரித தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி. இதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் தற்போது அதிரடியாய் இந்தியாவில் இறங்கி முதலீடு செய்யும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இதை உறுதி செய்கின்றன.

குவைத் நாட்டின் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராய் இருப்பதும் செவ்ரான் நிறுவனமும் புதிய ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைக்குவிப்பதும் முக்கிய திருப்புமுனை. இதுமட்டுமில்லாமல் ஸ்டீல் துறையில் டாட்டா ஸ்டீல் உலகின் ஐந்தாவது இடத்தைப்பிடித்தது மட்டுமின்றி இன்னும் விரைவாக முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. செய்ல் நிறுவனமும், ஐசிஐசிஐ ஆகியவையும் தொடர்கின்றன. வெளிநாட்டுகம்பெனிகள் இங்கு வந்து முதலீடு செய்வதும் நாம் அன்னிய கம்பெனிகளை வாங்குவதும் கவனிக்கப் படவேண்டியவை. விரைவில் முதலிடத்தை நோக்கி முகேஷ்...

உலகின் குறைந்த விலை மொபைல் சேவை மற்றும் பல துறைகளில் வளர்ச்சி பெறுவது நாம் உலகின் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம் என்பதை உறுதி செய்கிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

மயூ
16-12-2007, 08:12 AM
வாவ்... உண்மைதான்..
எனது பல்கலைக்கழகப் பேராசிரியரின் கூற்றுப்படி சீனாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாடுகளில் கடுமையாகத் தங்கியுள்ளது. நாடுகளின் வெளியுறவுக் கொள்கையின் தாக்கம் அதன் பொருளாதாரத்தில் கடும் மாற்றத்தை ஏற்படுத்துமாம். ஆனால் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டிலேயே கடுமையாகத் தங்கியிருப்பதால் வளர்ச்சி நிதானமானதும் உறுதியானதுமாகுமாம்!

ஜெகதீசன்
30-01-2008, 02:21 PM
உலகின் முன்னோடியாய் நமது இந்தியா...............
விரைவில் உலகின் முன்னோடி வரிசையில் முதலிடம் பிடிக்கப்போகிறோம் நாம்.

ஆம்... சீனாவிற்கு அடுத்தபடியாய் வளர்ச்சியில் இரண்டாவது இடத்திலுள்ள நாம் விரைவில் முதலிடம் பிடிக்கப்போவதாய் வணிகச் செய்திகள் கூறுகின்றன.

பல நாடுகளிலிருந்தும் வரும் அந்நிய முதலீடு மற்றும் அபரித தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி. இதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் தற்போது அதிரடியாய் இந்தியாவில் இறங்கி முதலீடு செய்யும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இதை உறுதி செய்கின்றன.

குவைத் நாட்டின் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராய் இருப்பதும் செவ்ரான் நிறுவனமும் புதிய ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைக்குவிப்பதும் முக்கிய திருப்புமுனை. இதுமட்டுமில்லாமல் ஸ்டீல் துறையில் டாட்டா ஸ்டீல் உலகின் ஐந்தாவது இடத்தைப்பிடித்தது மட்டுமின்றி இன்னும் விரைவாக முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. செய்ல் நிறுவனமும், ஐசிஐசிஐ ஆகியவையும் தொடர்கின்றன. வெளிநாட்டுகம்பெனிகள் இங்கு வந்து முதலீடு செய்வதும் நாம் அன்னிய கம்பெனிகளை வாங்குவதும் கவனிக்கப் படவேண்டியவை. விரைவில் முதலிடத்தை நோக்கி முகேஷ்...

உலகின் குறைந்த விலை மொபைல் சேவை மற்றும் பல துறைகளில் வளர்ச்சி பெறுவது நாம் உலகின் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம் என்பதை உறுதி செய்கிறது என்பது என் கருத்து. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

நல்ல் தகவ்ல் நண்பரே:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

நன்றி

aren
31-01-2008, 04:28 AM
முதலில் அரசியல்வாதிகள் மாறவேண்டும், அப்பொழுதுதான் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்லமுடியும்.

எல்லாம் இலவசம் அல்லது subsidized rates என்ற நிலைமாறவேண்டும்.

அனைத்தும் உலகத்தரத்துடன் கிடைக்கவேண்டும்.

பின்னரே இந்தியா முதலிடமா அல்லது பின்னடைவா என்பதைப் பற்றி பேச முடியும்.