PDA

View Full Version : தலைநகரம்(தொடர்கதை): நிறைந்தது



சிவா.ஜி
16-12-2007, 07:53 AM
டிசம்பர் மாத டெல்லி....கடுங்குளிராக இருந்தது.ராணுவத்தின் உயரதிகாரிகள் வசிக்கும் அந்த பகுதி ஆள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருந்தது.சூர்யா நின்றிருந்த இடம் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி சந்திரசேகர் அவர்களின் பங்களாவுக்கு எதிரில்.வாசல் கதவு மூடியிருந்தது.செக்யூரிட்டிகளுக்கான கூண்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.வாசலுக்கு அருகிலேயே ஒரு செக்யூரிட்டி கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு மிலிட்டரி விறைப்புடன் கூர்மையான எச்சரிக்கைப் பார்வையுடன் நின்றிருந்தான்.

சூர்யா மெல்ல அவனை நோக்கி நடந்தான்.அருகில் நெருங்கியதும் அவனைப் பார்த்த செக்யூரிடி லேசான பதட்டத்துடன் 'கோன் (file://\\'கோன்) ஹை தும்' என்று கேட்டதும்,'சாப் முஜே மில்னேக்கேலியே புலாயா.மேரா நாம் சூர்யா.ஆப் சாப்ஸே பூச்லீஜியே' சந்திரசேகர் இவனைப் பார்ப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததைச் சொன்னதும், செக்யூரிட்டி உடனே விலகி கூண்டுக்குள் சென்று உள் தொலைபேசியைப் பயன்படுத்தினான்.இரண்டு நிமிடங்களுக்குப் பின் அந்த பெரிய கதவின் கங்காரு வயிற்றைப் போலிருந்த திட்டிக் கதவைத் திறந்துகொண்டே 'ஆப்கோ அந்தர் புலாயா' என்று அனுமதிக் கிடைத்ததைச் சொன்னான்.

அடுத்த மூன்றாவது நிமிடம் சூர்யா சந்திரசேகரின் முன்னாலிருந்தான். அவனைத் தன் பின்னால் வரும்படி சொல்லிவிட்டு, மாடிப்படி ஏறத்தொடங்கினார். மிக வசதியான பங்களா. அழகாய் ஒருவித ராணுவ ஒழுங்குடன் பராமரிக்கப்பட்டு வருவது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. தலைக்கு மேல் தொங்கிய சர விளக்கைப் பார்த்துக்கொண்டே சூர்யாவும் பின் தொடர்ந்தான். வீட்டில் யாருமில்லை. சந்திரசேகர் முன்கூட்டியே அனைவரையும் ஏதோ காரணம் சொல்லி அப்புறப்படுத்தியிருந்தார் என்பது தெரிந்ததும், சூர்யா உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டான். ராணுவ திட்டமிடல்.... எதையும் எச்சரிக்கையோடு அணுகும் அனுபவம்.

மாடியில் சொற்ப வெளிச்சமே இருந்தது.அத்தனை விளக்குகளையும் இட்டால் உள்விளையாட்டரங்கம் போலத்தோன்றுமென்பது அங்கே பொருத்தியிருந்த விளக்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிந்தது. விசாலமான வரவேற்பறை போன்ற ஹாலுக்கு இடது மூலையில் இருந்த கதவை பாதி திறந்த நிலையில் பின்னால் திரும்பிப்பார்த்த சந்திரசேகர் தலையை அசைத்து சூர்யாவை அங்கு வரும்படி அழைத்தார்.

இருவரும் அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டார். ஜன்னல் திரைசீலைகள் முழுதாய் மூடியிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு தோல் சட்டைப் போட்டிருந்த பஞ்சுப்பொதி நாற்காலியில் பாதிப் புதைந்து அமர்ந்தார். எதிரில் இருந்த அதே மாதிரியான நாற்காலியில் சூர்யா அமர்ந்ததும், ஒரு சிகெரெட்டை எடுத்து பற்றவைக்குமுன்... பரவாயில்லையா என்று கேட்பதைப்போல ஒரு பார்வை சூர்யாவைப் பார்த்தார்.'நோ பிராப்ளம் சார்' என்றதும் சிகரெட்டின் முனையை சிவப்பாக்கினார்.ஆழமான ஒரு இழுப்புக்குப் பின் சூர்யாவைப் பார்த்து 'ம்...சொல்லு என்ன திட்டம்?'

சூர்யா தான் கொண்டுவந்திருந்த மடிக்கணிணியை வெளியே எடுத்தான்.


தொடரும்

மயூ
16-12-2007, 08:00 AM
ஆகா.. ஏதோ க்ரைம் நாவல் தொடக்கம் மாதிரி இருக்குது...
இப்படியான கதைகள் வாசித்துப் பல காலம் ஆகிட்டுது... தொடங்குங்க சிவா.ஜி!!!
:)

இதயம்
16-12-2007, 08:05 AM
இள வயதுகளில் நான் மிகவும் விரும்பிப்படித்த க்ரைம் கிங் ராஜேஷ்குமார் நினைவுக்கு வருகிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதிர வைக்கும் சஸ்பென்ஸோடு முடிப்பது அவர் ஸ்டைல். உங்களின் இந்த கதையும் அவரை எனக்கு அப்படியே பிரதிபலிக்கிறது. எழுத்து நடை, உரையாடல் ஏதோ அபாயம் நடக்கப்போவதை உணர்த்துகிறது. அதை உறுதிசெய்யும் வகையில் பெரும் சஸ்பென்ஸோடு தொடரும் போட்டிருக்கிறீர்கள்..!

சிறுகதையிலிருந்து ப்ரொமோஷன் வாங்கியிருக்கும் சிவா தொடர்கதையிலும் கலக்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களை காக்க வைக்காமல் தொடருங்கள்..!!:icon_b::icon_b:

பூமகள்
16-12-2007, 08:22 AM
சிவா அண்ணாவின் சிறுகதைகள் முத்திரை பதித்த நிலையில் இப்போது சூப்பர் சஸ்பென்சான தொடர்கதை..!! :)

தலைநகரத்தில் நடக்கும் சூப்பர் ராணுவ அதிரடி போல் தெரிகிறது. ஆனால், அட்டகாசமான துவக்கம்.
கலக்குங்க சிவா அண்ணா. :)

சிவா.ஜி
16-12-2007, 08:55 AM
மயூ,இதயம்,தங்கை பூ எல்லோருக்கும் நன்றி.முதன் முதலாய் தொடர் ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடிந்தால் நல்லது.இல்லையென்றால் திட்டாதீங்க.

யவனிகா
16-12-2007, 09:18 AM
சின்னச் சின்ன வார்த்தைகளில் நேர்த்தியான சொல்லமைப்பு தெரிகிறது.பிரபல எழுத்தாளர்கள் மட்டும் தான் இப்படி எழுத முடியுமா? இல்லை எங்கள் சிவா அண்ணாவும் எழுதுவார் என்று சொல்லத் தோன்றுகிறது. பலமான கதை கருவைத் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள். சூர்யா தான் கதையின் நாயகனாக இருக்கும் பட்சத்தில் முதலிலேயே சூர்யாவை சிறு குறிப்பு வரைந்து விடுங்களேன். டக்குன்னு எனக்கு கமல் தான் ஞாபகத்திக்கு வர்றார். தொடருங்கள் அண்ணா....என்ன சதித்திட்டமோ தெரியலையே?

இதயம்
16-12-2007, 09:31 AM
டக்குன்னு எனக்கு கமல் தான் ஞாபகத்திக்கு வர்றார்.
இந்த கதைக்கும், உங்களிடம் 500 ரியால் கடன் வாங்கிய (பெங்காலி) கமலுக்கும் என்ன சம்பந்தம்..??:eek::eek: கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காத அந்த கமலுக்கு ஒரு \"ர்\" தேவையா..? சிவா கதைக்கு வந்த சோதனையா இது...??

இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா..? என் புள்ளி ராசா மாப்ளை வந்தா தான் சரியா வரும் போலிருக்கு..!!:D:D

மதி
16-12-2007, 09:42 AM
ஆரம்பமே அசத்தல்... ஒரு க்ரைம் கதைக்கான தொடக்கத்துடன்...
தொடருங்கள்.

சிவா.ஜி
16-12-2007, 12:18 PM
பாகம்-2


சந்திரசேகரும் பார்ப்பதற்கு ஏதுவாக, தன் நாற்காலியை அவருக்கு அருகில் தள்ளிப்போட்டுக்கொண்டு முன்னாலிருந்த டீபாயின் மேல் அந்த கணிணியை வைத்து இயக்கினான் சூர்யா. சென்னை லயாலோவில் அரசியலில் முதுகலைப் பட்டம் வாங்கியவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே மென்பொருள் உருவாக்குதற்கான படிப்பையும் தொடர்ந்தவன். லேசரைவிடக் கூர்மையான மூளை. எந்த விஷயத்தையும் உடனுக்குடன் பற்றிக் கொள்வதில் பாஸ்பரஸ். புதிய கணிணி மென்பொருள்களை எழுதி பல ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றவன். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் மிக பிரமாதமான ப்ரோஜெக்ட்டுகள் செய்து பாராட்டுப் பெற்றவன். ஆனால் ஒன்று கூட செயல்படுத்தப் படவில்லை என்ற ஆழமான ஆதங்கம் அவனுக்கு உண்டு. நல்ல உயரம், மாநிறம் திரைப்படத்தில் ஹீரோவுக்கு தோழனாக வருவதற்கு லாயக்கானவன்.


ஒவ்வொன்றாய் அவன் காட்டிய படங்களும், வரைபடங்களும், அதற்கு அவன் அளித்த விளக்கங்களும் சந்திரசேகரை சிகெரெட் கரைந்து சாம்பலாகி உடையின் மீது விழுவதையும் கவனிக்க விடவில்லை. விளக்கங்களின் முடிவில், அவர் பிரமிப்புடன் சிலையாக அமர்ந்துவிட்டார். மிக அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவின் கண்களில் தெரிந்த சாந்தம், அவனுக்குள் இருந்த வலிமையை அவருக்குக் காட்டியது. சடாரென்று தன் இருக்கையிலிருந்து எழுந்து ஒருவித பரவசத்துடன் அவனைக் கட்டிப் பிடித்து தன் உறுதியான கைகளால் அவன் முதுகில் பலமாகத் தட்டினார்.


"வெல்டன் மை பாய்...நீதான் இதற்கு மிகப் பொருத்தமான ஆள். உன்னுடைய விளக்கங்களில் எனக்கு பரம திருப்தி. நிச்சயம் நீ சரித்திரத்தில் நிற்கப் போகிறாய். இரு இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஒரு லார்ஜ் எடுத்துக்கொள்கிறேன்".


அருகில் இருந்த சுவரோடு சுவராய்த் தெரிந்த அந்த இடத்தில் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த ஒரு மினி பார் திறந்தது. உள்ளடக்கமாய் வைக்கப்பட்டிருந்த அந்த அலமாரிக்குள், இழுத்தால் வெளியே வருமாறு பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றை இழுத்து, மேலடுக்கிலிருந்து ஒரு ஒற்றை காலில் நிற்கும் U கோப்பையை அந்த பலகையின் மீது வைத்தார். ஒற்றை விரலை நீட்டிக்கொண்டு அலமாரியில் இருந்த பாட்டில்களை விரலாலேயே சுற்றி வந்தவர்... absolute வோட்காவில் நின்று வாத்தை தூக்குவதைப் போல அதன் கழுத்தைப் பிடித்து தூக்கி, திறந்து, ஊற்றி, ஐஸ்கட்டிகளுடன் கலந்து அவனை சம்பிரதாயத்துக்குக் கூடக் கேட்காமல் சியர்ஸ் சொல்லி வாயில் கவிழ்த்துக்கொண்டார்.


"ஐ யம் சாட்டிஸ்ஃபைட். மற்ற இரண்டு பேரையும் எப்படியாவது இங்கே வரவழைக்கிறேன். மிகக் கடினமான ஒன்றுதான், அதுமட்டுமல்ல எங்கள் உயிருக்கே ஆபத்தானது. கோர்ட் மார்ஷல் ஆகிவிடுவோம். இருந்தும் உன்மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த ரிஸ்க்கை எடுப்பதில் எனக்கு சம்மதமே. வொண்டர்ஃபுல் வொர்க்... எப்படி சாதித்தாய் இதை..? எவ்வளவு மெனக்கெட்டிருப்பாய்,... எனி வே... இது ஓட்டையே இல்லாத பக்கா ப்ளான். கண்டிப்பாக நம்மால் இதை செய்ய முடியும். ஓகே... இந்த கணிணி இங்கேயே இருக்கட்டும். அவர்களை கூடிய சீக்கிரத்தில் இங்கு வரவழைக்கிறேன். எங்கள் சந்திப்பு முடிந்ததும் உனக்குத் தெரியப்படுத்துகிறேன். நீ உன் ஆட்களுடன் தயாராய் இரு. அது சரி....நீ தமிழ்நாட்டில் படித்தவன்.... உனக்கு எப்படி வட மாநிலங்களில் இத்தனை நன்பர்கள்? அதுவும் நீ எது சொன்னாலும் கண்ணைமூடிக் கொண்டு செய்பவர்கள்?"


அவருடைய கேள்விக்கு மெலிதான விரக்தி சிரிப்புடன்....


"எல்லோரும் என் கல்லூரி நன்பர்கள், அவர்களின் உள்ளூர் நன்பர்கள். ஒத்தக் கருத்துடையவர்கள். முக்கியமாய் இந்த அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள். அதனாலேயே என்னுடைய இந்த திட்டத்திற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து எப்போதும் உடனிருப்பதாக உறுதி கூறி இருக்கிறார்கள். இந்தத் திட்டம் நிறைவேறியதும் அவர்களுக்கு மிகப் பெரிய பரிசை தரப்போகிறேன்."


சூர்யா சொன்னதும்...


"செய்.எனக்கும் சற்றேறக்குறைய உன் அனுபவங்கள்தான். இந்த பதவிக்கு வருவதற்கு எனக்கு எல்லா தகுதியும் இருந்தும், இதை அடைவதற்குள் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது தெரியுமா.... அசிங்கமான அரசியல்வாதிகள், அவர்களுக்கு ஜால்ரா போடும் அதிகாரிகள், எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் உருப்படாத சட்டங்கள்....."


நிதானமாக சொல்ல ஆரம்பித்து ஆவேசத்தில் முடித்தவர் அடுத்த லார்ஜை உருவாக்கி உள்ளே தள்ளினார். அவரிடமிருந்து விடை பெற்று கன்னாட் ப்ளேசில் அவன் தங்கியிருந்த சிறிய லாட்ஜுக்கு வந்த போது இரவு பதினொன்றாகிவிட்டிருந்தது. கைலிக்கு மாறிக்கொண்டு, கைகால் கழுவிக்கொண்டு, வரும் வழியில் கையேந்தி பவனிலிருந்து பார்சல் கட்டி வாங்கிகொண்டு வந்திருந்த சூடான இட்லிகளை சாப்பிட்டுவிட்டு... கட்டிலில் அமர்ந்தான். இரவுகளில் வெகு நேரம் விழித்திருப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டிருந்தது. மேசையிலிருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்து...சிறிய யோசனையுடன் எழுதத் தொடங்கினான். அப்போது அவன் கைப் பேசி உதறியது.அவன் ரிங்டோன் வைத்துக்கொள்வதில்லை. கூட்டத்தில் அவனை யாரும் கவனித்து விடக்கூடாதென்பதற்காக. எடுத்துப் பெயரைப் பார்த்ததும், ஒரு வினாடி.. இப்பதானே பார்த்துவிட்டு வந்தோம்.... ஏதாவது சிக்கலா... என்ற எண்னம் உள்ளுக்குள் ஓட... எஸ்ஸினான். அந்தப் பக்கத்திலிருந்து சந்திர சேகரின் குரல் கேட்டது....


"நம்மால் இந்த திட்டத்தை இன்னும் மூன்று நாட்களுக்கு செயல்படுத்த முடியாது... நீ இங்கு இருக்க வேண்டாம்... சென்னை போய்விடு... மீண்டும் நானே கூப்பிடுகிறேன்"


காரணம் சொல்லாமல் துண்டித்துவிட்டார். குழப்பத்துடன் அலைபேசியின் திரையையே பார்த்துக் கொண்டிருக்கும்போது.. கதவு தட்டப்பட்டது.



தொடரும்

மயூ
16-12-2007, 03:05 PM
ஓ..ஓ!!! இப்போ புரிகின்றது.... கதை சூடுபிடிக்கின்றது!!! கலக்குங்க சிவாஜி காத்திருக்்கின்றேன்....

மற்றயது ஒரே பந்தியாக எழுதாமல் பந்தி பந்தியாகப் பிரித்து எழுதலாமே!!! வாசிக்கக் கடினமாக உள்ளது!

சிவா.ஜி
16-12-2007, 03:49 PM
மயூ அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க் எப்படி எடிட் செய்தாலும் அப்படித்தான் வருகிறது.ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.மீண்டும் முயற்சிக்கிறேன்.

மதி
16-12-2007, 04:14 PM
சீக்கிரம் தொடருங்கள்...
சஸ்பென்ஸ் தாங்கல...

சிவா.ஜி
16-12-2007, 05:43 PM
சீக்கிரம் தொடருங்கள்...
சஸ்பென்ஸ் தாங்கல...

சரி மதி.(இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்)

செல்வா
16-12-2007, 07:52 PM
ம்ம்..... வாரப்பத்திரிகைகளில் இத்தகைய தொடர்கதைகள்.... படிக்கும் போது ஒவ்வொரு நாளும்... ஒருவித எதிர்பார்ப்பு.... பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்ளும்.. அதுபோலவே... எம்மை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்..சிவா. கிரைம் நாவல் நடை உங்களுக்கு நன்றாகவே வருகிறது... இன்னும் எழுதுங்கள்.... எனது கருத்துக்களை தவறாமல் தருகிறேன்....

சிவா.ஜி
17-12-2007, 03:27 AM
நன்றி செல்வா...முயற்சிக்கிறேன்...உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

lolluvathiyar
17-12-2007, 12:39 PM
ஆகா சிவா ஜி கிரைம் கதை போல ரானுவ கதை எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டாரா, அருமையாக கதை நகர்கிறது. எதோ ஒரு என்கௌன்டர் திட்டம் போல் தெரிகிறதே. சரி நாமாக முன்முடிவு எடுக்க கூடாது தொடருங்கள். படிகிறோம்

சிவா.ஜி
17-12-2007, 03:41 PM
ரொம்ப நன்றி வாத்தியாரே.

சிவா.ஜி
18-12-2007, 04:58 AM
பாகம்-3

உடனடியாக படுக்கையில் கிடந்த குறிப்பேட்டை தலையனைக்கு அடியில் பதுக்கிவிட்டு கைப் பேசியை பைக்குள் போட்டுக்கொண்டு,கதவைத் திறந்தான்.வெளியே ரூம்பாய் கையில் ஒரு உறையுடன் நின்று கொண்டிருந்தான்.
சூர்யா எதுவும் கேட்பதற்கு முன்னமே "சாப் ஆப்கேலியே ஏ சிட்டி சோட்கே கயேன் ஆப்கா தோஸ்த்." என்று சூர்யாவின் நன்பனொருவன் கொடுத்து விட்டுப் போயிருந்த கடிதத்தை அவனிடம் தந்து விட்டுப் போய்விட்டான். குழப்பத்துடன் அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு கதவைத் தாழிட்டுவிட்டு படுக்கைக்கு திரும்பியவன் அவசரமாய் திறந்து பார்த்தான்.

சாதிக்கின் கடிதம்.இவன் எப்படி இங்கே...என்று யோசித்துக்கொண்டே மேலே படித்தான். தான் டெல்லி வந்திருப்பதாகவும் சூர்யா ஏற்பாடு செய்யச் சொன்ன எல்லா காரியங்களையும் முடித்து விட்டதாகவும் பழைய டெல்லியில் ஒரு அறையில் தங்கியிருப்பதாகவும் எழுதியிருந்தது. எந்த நேரத்தில் இவன் அறைக்குத் திரும்பினாலும் உடனே அவனைத் தொடர்பு கொள்ளுமாறு அவனுடைய கைப்பேசி எண்ணைக் குறிப்பிட்டிருந்தான். புதிய எண். மனதில் பதிய வைத்துக்கொண்டு அந்தக் காகிதத்தை கிழித்து டாய்லெட் பேசினில் போட்டு ஃப்ளெஷினான்.

சாதிக்கை அழைத்து விவரங்களைக் கேட்டுக்கொண்டு தனது சென்னைப் பயணத்தைப் பற்றிச் சொன்னான். காலையில் சீக்கிரமே எழுந்து சென்னை புறப்பட்டான். இரண்டாவது நாளே சந்திரசேகரிடமிருந்து அழைப்பு வந்தது. மீண்டும் புதுதில்லி. அதே சந்திரசேகர்.. ஆனால் அவர் வீட்டில் சந்திக்காமல் அவருடைய சகோதரி வீட்டில் சந்தித்தார்கள். மற்ர இரண்டு பேரும் சம்மதித்துவிட்டதாகவும், உடனடியாக ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும் சொன்னார்.

"கவனிச்சேன் சார்.நான் சென்னையில இருக்கும் போதே உங்க ஆட்களோட நடமாட்டம் தெரிந்தது. ஃபாரின் டெலிகேட்ஸ் யாருடைய வரவும் இப்போது இல்லை மேடமும் இங்குதான் இருக்கிறார். பெரியவரும் உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருக்கிறார். இதுதான் சரியான சந்தர்ப்பம்."

"ரொம்ப சரி.உன்னோட இந்த கூர்மைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.ஆனா....."

"சொல்லுங்க சார்"

"உன்னால ஏதாவது பிரச்சனை பின்னால ஏற்பட்டா...உனக்கு எதிரா மாறவும் நாங்க தயங்க மாட்டோம்.உன் மேல நம்பிக்கை இல்லாம இதைச் சொல்லல.... ஒரு எச்சரிக்கைக்குத்தான். ஏன்னா நாம செய்யப் போறது இது வரைக்கும் இந்த துணைக்கண்டத்துல நிகழாத ஒன்று. பல இடங்களிலிருந்தும் பலமான எதிர்ப்புகள் வரும். கலவரங்களைக் எதிர்பார்க்கலாம். பட்....அதையெல்லாம் சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தாகிவிட்டது. இனி செயல்பட வேண்டியதுதான்"

"கவலைப் படாதீங்க சார்.என்னால எந்தப் பிரச்சனையும் வராது.... சிறிது மௌனமாகி விட்டு தொடர்ந்தான்... என்னைக்கு வெச்சுக்கலாம்?"

"இன்னையிலருந்து சரியா நாலு நாள்... இன்னைக்கு புதன்... நாலாவது நாள் ஞாயிறு.... அரசாங்கம் ஓய்வெடுக்கற நாள்.ஒரே சமயத்துல பெரியவரையும், மேடத்தையும் சந்திக்கப் போறோம்."

புதிதான ஒரு பரபரப்போடு "ஓகே சார்.நானும் என் நன்பர்களும் தயார்.ஆனால் இதில் உங்கள் மூன்று பேரின் பங்குதான் முக்கியமானது. உங்களின் ஆதரவில்லாமல் இதை செய்யவே முடியாது.... ரொம்ப நன்றி சார்.'

"நோ செண்டிமெண்ட் மை பாய்... நேரம் குறைவா இருக்கு யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வராமல்... வெகு இயல்பான முறையில் மாற்றங்கள் நிகழ வேண்டும். உளவுப் பிரிவுகள் மோப்பம் பிடிச்சிட்டா அவ்வளவுதான்..."

அந்த ஞாயிற்றுக்கிழமை மற்றவர்களுக்கு வெகு சாதாரணமாகத்தான் விடிந்தது. சூர்யாவுக்கு த கிரேட் சண்டேயாக விடிந்தது.
வெகு காலையிலேயே மிலிட்டரி வாகனங்கள் ராஷ்ட்ரபதி பவனுக்கும், பிரதமர் வீட்டுக்கும்... மற்ற மத்திய அமைச்சர்கள் வீடுகளுக்கும் பறந்தன. அவற்றில் எந்த வாகனத்திலும் சூர்யா இல்லை. சந்திரசேகரின் வீட்டில் இருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியை உயிரோடு வைத்திருந்தான்.

இதே நிகழ்வுகள் நாட்டின் எல்லா மாநில தலைநகரங்களிலும் அந்த அதிகாலையில் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.

எஸ்.என்.பட்.... கப்பற்படை தலைமைத் தளபதி குடியர்சுத் தலைவர் மாளிகையில் அந்த அதிகாலையில் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.

சந்திரசேகர் தன் பரிவாரங்களுடன் பிரதமர் வீட்டுக்குள் நுழைந்தார்.

இரண்டு இடங்களிலும் கீழ்கண்ட வாக்கியங்கள் பிரயோகிக்கப்பட்டன.....

"மன்னிக்கவும் மேடம் இந்த வினாடியிலிருந்து நீங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறீர்கள்.இனி இந்த நாட்டை நாங்களே அதாவது ராணுவமே.... ஆளப்போகிறோம்."

"மன்னிக்கவும் சார்................................................................................ஆளப்போகிறோம்"

(தொடரும்)

மதி
18-12-2007, 06:01 AM
அட..அசத்தல் திருப்பம்.. தொடருங்கள்..

நுரையீரல்
18-12-2007, 07:49 AM
ஐ சன்பென்ற் கதையெல்லாம் விடுறீங்க சிவா அண்ணா.. சாரி சன்பென்ஸ் கதையெல்லாம் சொல்றீங்க..

அந்த புளியமரம், அந்த ஆந்தை எல்லாம் எப்ப வரும்..

lolluvathiyar
18-12-2007, 01:44 PM
ஆகா ரானுவ புரட்சி ஏற்பட்டு ரானுவ ஆட்சி எப்படி செயல்படுத்த வேன்டும் என்று அழகாக விளக்கி இருந்தார். அது யாரு அந்த மேடம். பாக்கிஸ்தானை போலவே ரானுவ ஆட்சி வந்தா உன்மையில நாடு மேன்மைதான் அடையும். அரசியவாதிகள விட அவுங்க ஒன்னும் மோசம் இல்லை

பூமகள்
19-12-2007, 06:51 AM
சஸ்பென்ஸ் கதை அசத்தலா இருக்கு னா..!
முன்னர் புரிந்தும் புரியாமல் விழிக்க வைத்து, மூன்றாவது பாகத்தில் ஓரளவு சஸ்பென்ஸ் வெளிப்பட்டிருக்கிறது. நல்ல எழுத்து நடை.

தொடர்ந்து எழுதுங்க சிவா அண்ணா.:icon_rollout:

கிரைம் கதை எழுதறதுல கிங் ஆக கூடிய சீக்கிரம் ஆயிருவீங்க போல இருக்கே..!! :icon_b:
கீப் இட் அப் அண்ணா. :)

சிவா.ஜி
03-01-2008, 04:25 AM
பாகம்-4

அதனையடுத்து எல்லாக் காரியங்களும் ஒருவித ராணுவ ஒழுங்கோடும்,அதிரடியாகவும் நடந்தேறியது.அதிகாரப் பூர்வமாக ராணுவம் ஆட்சியை ஏற்பதாக அறிவித்து,இனி இந்த நாட்டின் அதிபராக சூர்யா இருப்பரென்றும் தெரிவிக்கப்பட்டது.நாடெங்கிலும் நிகழ்ந்த கலவரங்கள் கண்டிப்புடன் அடக்கப்பட்டன.அநாவசியமான உயிர்க்கொலைகள் இல்லாமல் அவை அடக்கப்பட்டதிலிருந்தே மீடியாக்களுக்கு ஏதோ நல்லது இந்த நாட்டுக்கு நடக்கப் போகிறதென்று தெரிந்தது. முதல் வேலையாக சூர்யா அனைத்து மீடியாவினரையும் அழைத்து இன்னும் சிறிது நாட்களுக்கு உள்நாட்டு அரசியல் விவகாரங்களை அதிகமாக வெளியிடவேண்டாமென அன்பான உத்தரவை பிறப்பித்தான்...இப்போதிருந்து ன் -ஐ விடுத்து ர் ஆக்கி அழைப்போம்.

அனைத்து அரசியல் கட்சிகளும் உடனடியாகத் தடை செய்யப் பட்டன.அரசியல் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.காவல்துறை கலைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த சலசலப்புகள் அடக்கப் பட்டன.சரியாக ஒரு வாரத்தில் சற்றேரக்குறைய அமைதி திரும்பியவுடன் சூர்யா தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.

\"அனைத்து குடிமக்களுக்கும் உங்கள் சக குடிமகனின் வணக்கம்.எல்லாமிருந்தும் எதுவுமே கிடைக்காதவர்கள் இந்த நாட்டில் ஏராளம்.பணம் பணத்தோடு சேர்கிறது...ஏழைகள்...ஏழையாகவே வாழ்ந்து சாகிறார்கள்.தொழில்நுட்பத்தில் நாம் கண்ட வளர்ச்சி ஆட்சி நுட்பத்தில் அறவேயில்லை.மக்களாட்சி என்ற மகத்தான வார்த்தை அசிங்கமான அரசியல்வாதிகளால் அழுக்காக்கப்பட்டு வந்தது.
ஒன்றுமேயில்லாமலிருந்த சிங்கப்பூர் இன்று அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவுக்கு இருப்பது மந்திரத்தால் நிகழ்ந்ததல்ல.மக்களை வழிநடத்தி இந்த சாதனையை சாதித்தவர் ஒரு தலைவர்.ஒருவர் எனும்போது ஒரு கருத்துதான்.கேட்பதற்கு இது சர்வாதிகாரமாகத் தோன்றினாலும்...தேவைப்பட்ட அதிகாரம் அது.இங்கோ....வீதிக்கு ஒரு தலைவன்,ஜாதிக்கு ஒரு தலைவன்...மக்கள் அலைக்கழிக்கப்பட்டார்களே தவிர கரையேறும் வழிதெரியவில்லை.
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் திணித்ததுதான் என்றாலும் எந்த விதத்திலும் மக்களுக்கு தொல்லைக் கொடுக்காத மாற்றமாக தொடரவே நாங்கள் முயலுவோம்.அனைத்தும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.அறுவை சிகிச்சைக்கு முன் ஏற்படும் அவசியமான அவஸ்தையாக மட்டுமே இதை நினைக்கவேண்டும்.எனவே இனி நிகழும் எந்த நிகழ்வையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை கொண்டு வந்துவிடுங்கள்.நாட்டை நல்வழிப் படுத்துவோம்.சேர்ந்தே இதனை சாதிப்போம்.ஜெய்ஹிந்த்!\"


உணர்ச்சிகரமான இந்த உரைக்குப் பின் நாடு முழுவதும் சலசலப்பு கொஞ்சம் குறைந்ததென்னவோ உண்மை.அடுத்தடுத்தாய் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.சூர்யா ஏற்கனவே திரட்டி வைத்திருந்த தகவ்ல்களின் துணையுடன் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் வருமானவரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.எந்த குழுவுக்கும் என்ன செய்யப் போகிறோமென்ற தகவல் கடைசி நிமிடத்தில்தான் தெரிவிக்கப் பட்டது.குழுவில் யார் யார் இருப்பார்கள் என்று ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனைக்குப் போவதற்கு சற்றுமுன் அவர்களின் கைப் பேசிகளை அவர்களிடமிருந்து அகற்றிவிட்டார்கள்.ஒரு நகரம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அதிகாரிக்குத் தான் விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.குழுத் தலைவர்களுக்கும் அந்த நேரத்தில்தான் சொல்லப் பட்டது.இதனால் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அனைத்து தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள், திரைப்படத்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனவர் வீடுகளும்,நிறுவனங்களும் சோதனையிடப்பட்டன.சோதனையின் முடிவில் கைப்பற்றிய பணம்,சொத்து மற்றும் நகைகளின் மொத்த தொகையைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர் அனைவரும்.


அத்தனையும் எந்தவித வழக்குமில்லாமல் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது.அடுத்ததாக அனைத்து அரசியல்வாதிகளின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் தோண்டப்பட்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் பட்டது.இந்த பணமீட்பு வைபவங்களுடனேயே அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் நிபுனர்களால் ஆராயப்பட்டன.எதெதெற்கு முன்னுரிமை என்பதை முடிவு செய்துகொண்டு அதையே செய்யவும் தொடங்கினார்கள்.நதிகள் தேசியமயமாக்கப்பட்டன.வேலைக்குதவாத சட்டங்களைத் திருத்த ஒரு நியாயமான குழு அமைக்கப்பட்டது.கல்வி கட்டாயமாக்கப் பட்டது.இலவசங்கள் அறவே நிறுத்தப் பட்டது.மக்கள் சுத்தத்தை கடைபிடிக்க வற்புறுத்தப் பட்டார்கள்.கடைபிடிக்காதவர்கள் கடுமையாய் தண்டிக்கப் பட்டார்கள்.


இவையனைத்தும் நல்ல முறையில் நடந்துகொண்டிருக்கும்போது....ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததைப் போல வல்லரசுகளின் எதிர்ப்பு மிகக் கடுமையாக எழுந்தது.சர்வதேச வியாபாரத் தொடர்பு பாதிக்கப் பட்டது.இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்திருந்த அந்த நாட்டு நிறுவனங்களை மனதில் கொண்டு அந்நாட்டு அரசுகள் கொஞ்சம் அடக்கியே வாசித்தன.அதையும் தாண்டி எந்த விதத்திலாவது போர்மூளும் அபாயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஏற்கனவே சிந்தித்து ஒரு வழிமுறையையும் சூர்யா உண்டாக்கி வைத்திருந்தார்.தொழில்நுட்ப ரீதியில் அமைந்த அந்த பாதுகாப்பு வளையம்...........


தொடரும்

சிவா.ஜி
03-01-2008, 04:31 AM
பாகம்-5

முக்கிய ராணுவ அதிகாரிகள்,பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,விஞ்ஞானிகள் மற்றும் கணிணித் துறை வல்லுனர்கள் கூடியிருந்தார்கள்.அதிபரின் மாளிகையில் கலந்துரையாடல் செய்வதற்கென அமைக்கப்பட்ட அறை அது.நடுநாயகமாக சூர்யா.அவருக்கு முன்னால் ஒரு மடிக்கணிணி திரையிடும் கருவி(ப்ரோஜெக்டர்)யுடன் இணைக்கப்பட்டிருந்தது.கூடியிருந்த அனைவரும் தங்கல் பார்வையில் கொஞ்சம் குழப்பத்தையும்,கொஞ்சம் ஆர்வத்தையும் சேர்த்துக்கொண்டு சூர்யாவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.சந்திரசேகரின் முகத்தில் அவருக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் என்ற தோரனை இருந்தது.
சூர்யா எழுந்தார்.திரை தெளிவாகத் தெரியும்படி சற்று ஒதுங்கி நின்றுகொண்டு பேச ஆரம்பித்தார்.
நமது தேசம் இன்று இருக்கும் சூழ்நிலையில் எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்பார்க்கலாம்.சில வல்லரசு நாடுகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.இந்த துணைக்கண்டத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு ஒரு கண்.எங்கே அவர்களை முந்திவிடுவோமோ என்ற அச்சம்.இப்போதே பக்கத்து நாடுகளில் அவர்களுடைய இராணுவத் தளங்களை அமைத்துக் கொண்டு வருகிறார்கள்.நேரிடையான தரை வழித் தாக்குதல்களை நம்மால் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.ஆனால் அவர்களிடமிருக்கும் பலம் வாய்ந்த வான்வழித் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இப்போதைக்கு நம்மால் முடியாது.அதனால் இப்போது நான் இங்கே காட்டப் போகும் விளக்கங்கள் அவர்களுடைய வான் வழித் தாக்குதல்களை சமாளிக்க உதவும் என்று நினைக்கிறேன்.இதைப் பார்த்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்.

என்று முன்னுரைக் கொடுத்துவிட்டு கணிணியை உயிர்ப்பித்தார்.திரையில் ஒரு மூலையிலிருந்து ஏவுகனை ஒன்று தீயைக் கக்கிகொண்டு உயரே கிளம்பி வந்துகொண்டிருந்தது.திரையின் முக்கால் பாகத்தில் ஒரு குறுக்குக் கோடு வரையப்பட்டிருந்தது.அந்தக் குறுக்குக்கோட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு தொலைத் தொடர்பு டவர் போன்ற தோற்றம் வரையப்பட்டிருந்தது.ஏவுகனை அந்தக் கோட்டை சமீபிக்கும்போது அந்த டவரில் மின்காந்த அலைகளைப் போன்ற கோடுகள் தோன்றியது.அடுத்த வினாடி ஏவுகனை தன் பாதையை மாற்றிக்கொண்டு வந்த வழியே திரும்பியது.புறப்பட்ட இடத்துக்குப் போனதும் வெடித்து சிதறியது.
பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்கள்.என்ன என்பது அவர்களுக்கு உடனே புரிந்தது.மேல் விளக்கம் கேட்கும் ஆவலுடன் அனைவரும் சூர்யாவையே பார்த்தார்கள்.

நீங்கள் பார்த்த இந்த காட்சியிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று...(ஆம் என்பதைப் போல அவர்கள் தலையசைத்தார்கள்)ஆமாம் இது கணிணித் துறையும் பாதுகாப்புத் துறையும் இணைந்து சாதிக்கப் போகும் தற்காப்பு முறை.எந்த ஏவுகனையானாலும் அதன் இயக்கம் மின்னனு முறையில்தானிருக்கும்.அந்த மின்னனு முறைதான் நமக்கு இங்கே பயன்படப்போகிறது.ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அந்த ஏவுகனை வந்ததும் அதன் கட்டளைகள், நாம் உண்டாக்கி வைத்திருக்கும் இந்த தொலைத் தொடர்பு கோபுரத்தின் மூலமாக அனுகப்படும்.அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை கணிணிக்கு அனுப்பப்படும்.வந்து சேர்ந்த தகவல்களைப் படித்து உடனே அதன் தன்மையறிந்து அதே மொழியில் மாற்றுக்கட்டளைப் பிறப்பிக்கப்பட்டு மீண்டும் அந்த ஏவுகனைக்கே அனுப்பப்படும்.அந்தக் கட்டளை அதன் சேருமிடத்தி மாற்றி பூஜ்யம் என்றாக்கிவிடும் அல்லது சேரும் நேரம் குறைவாயிருப்பின் இலக்கை வேறு திசைக்கு மாற்றி விடும்.இவையனைத்தும் வெகு சில வினாடிகளிலேயே நடக்கும்.ஆயுதமேயில்லாமல் ஆயுதத்தை எதிர்க்கும் முறை.இதற்காகவே நானும் என் நன்பர்களும் சேர்ந்து உருவாக்கிய மென்பொருள் இங்கே இருக்கிறது.

சொல்லிமுடித்துவிட்டு அனைவரையும் பார்த்தார் சூர்யா.அதற்குள் அதன் சிறப்பை உணர்ந்துகொண்டவர்கள் தங்கள் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் மேசையை பலமாகத் தட்டி வெளிப்படுத்தினார்கள்.ஓசை அடங்கியதும் ஒரு பாதுகாப்பு அதிகாரி எழுந்து,

அப்படியென்றால் இந்த தொடர்பு கோபுரத்தின் எல்லை மிகப் பெரிதாக வேண்டுமே என்றதும்,

மிக நல்ல கேள்வி...அதற்காகத்தான் நாம் நம் நாட்டின் தொலைத்தொடர்பை விஸ்தரிக்கப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு நாட்டின் எல்லையைச் சுற்றி ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் ஒரு கோபுரத்தை நிறுவப்போகிறோம்.அதன் கீழே கட்டுப்பாட்டு அறை இருக்கும்.பார்ப்பவர்களுக்கு அது ஒரு சாதாரண தொலைத் தொடர்பு சாதனக்களாகத்தான் தெரியும். என்று சூர்யா சொன்னவுடன்,

சந்திரசேகர் எழுந்து.....

இதற்கு மிக அதிக அளவில் செலவாகும்.ஆனால் ஆயுதங்கள் வாங்குவதைவிட,அவற்றை உருவாக்குவதை விட குறைவான செலவே ஆகும்.அதுமட்டுமல்லாமல்.போர் நேரத்தில் மட்டுமே நாம் இவற்றை பாதுகாப்புப் பணிக்கு உபயோகப்படுத்துவோம்.மற்ற சமயங்களில் தகவல் தொலைத் தொடர்புக்கு இவை பயன்படுத்தப்படும்.சொல்லிவிட்டு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு விஞ்ஞானியைப் பார்த்து...கொண்டேல்கர் நீங்களும் உங்கள் குழுவினரும் இந்த வேலையை எடுத்துக்கொண்டு உடனடியாகக் காரியத்தில் இறங்கிவிடுங்கள்.தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சாதிக்கைப் பார்த்து...நீங்க உடனே நம்ம அரசு கட்டுமான நிறுவனத்தைக் கொண்டு கோபுரங்களையும் கட்டுப்பாட்டு அறைகளையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்
என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உத்தரவுகளைப் போட்டுவிட்டு சூர்யாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

எத்தனைதான் கெடுபிடி இருந்தாலும் லஞ்சம் வாங்குபவர்களைக் கட்டுப்படுத்துவதென்பது கடினமாக இருந்ததால்...ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எந்த செலவுக்கும் அட்டைகளையே பயன்படுத்தவேண்டுமென்ற உத்தரவு போடப்பட்டது.அரசு ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் அல்லவென்றும்,அவர்களின் தர சோதிப்பில் தேறாவிட்டால் எந்தவித ஆதாயங்களும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்படுவார்களென்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.புலனாய்வு பத்திரிக்கைகள் சிறிது காலத்துக்கு தடை செய்யப்பட்டது.ஏற்கனவே நிலுவையிலிருந்த முக்கிய வழக்குகள் ஆராயப்பட்டு உடனடி தீர்ப்புகள் வழங்கப்பட்டன.இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் முன்னாள் முதல்வர்களும்,அமைச்சர்களும்தான்.காவல்துறை கலைக்கப்பட்டதால் கிரிமினல்கள் அடங்கியிருந்தனர்.அந்தத்துறை கலைக்கப் பட்டாலும் அதில் இருந்த நேர்மையான அதிகாரிகள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.


இத்தனை நல்ல விஷயங்கள் ஒருபுறம் கெடுபிடியாக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தாலும் வேறு ஒரு புறம் சூர்யாவை வீழ்த்துவதற்கான சதிவேலையும் தொடங்கியது.


தொடரும்

சிவா.ஜி
03-01-2008, 04:35 AM
பாகம்-6


புது தில்லியின் ஒரு நட்சத்திர ஹோட்டல்.நான்காவது மாடியில் இருந்தது அந்த அறை.குளிராய் இருந்த அந்த அறைக்குள் நான்கு பேர்.எல்லோரும் தற்சமயம் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் விசுவாசிகள்.இராணுவத்துக்கு இவர்கள் பெயர்கள் சிக்கவில்லை.இவர்கள் பெயரிலும் எந்த வழக்கோ,சொத்தோ இல்லாதது இவர்களுக்கு சாதகமான அம்சமாகிவிட்டது.மத்திய அமைச்சரின் அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப் பட்டாலும் இவர்கள் வசம் ஒரு மிகப் பெரிய தொகை தங்கிவிட்டிருந்தது.அந்த தெம்பில்தான் இப்போது சூர்யாவைக் கொல்ல சதியாலோசனையில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால் நாட்டின் இப்போதைய நிலை இவர்களுக்கு மிகுந்த அச்சத்தையும் கொடுத்திருப்பதும் உண்மை.அதையும் தாண்டி இந்த ஆபத்தான வேலையில் இவர்களை இறங்க வைத்தது ஆடம்பரமான வாழ்க்கை திரும்பக் கிடைக்க வேண்டுமென்ற வெறி.


இன்னும் ஒரு மாதத்தில் சூர்யா தமிழகம் போவதாய் செய்தி வந்திருந்தது.தன்னுடைய சொந்த கிராமத்துக்கு குடும்ப விழாவிற்காக போகிறார்.அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளமாட்டாரென்று இவர்களுக்குத் தெரியும்.அதனால் அங்குதான் தங்களின் திட்டத்தி செயல்படுத்துவது சுலபமாக இருக்கும் என்று நம்பினார்கள்.வாடகைக் கொலைகாரன் ஒருவனை தயார் செய்திருந்தார்கள்.ஆனால் அவனை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒவ்வொரு முறை அவனைத் தொடர்பு கொள்ளும்போதும் புதிய சிம் கார்டுகளைப் பயன்படுத்தினார்கள்.திட்டம் முழுமையாக்கப் பட்டு அதன் செயலாக்கத்துக்கு தயாராய் இருந்தது.ஒரு மாதம் முன்பாகவே அந்த கொலைகாரன் சூர்யாவின் கிராமத்துக்குப் போய் அங்கிருக்கும் மக்களுடன் கலந்து தன் மேல் எந்த சந்தேகமும் வராதவாறு நடந்துகொள்வது என்று தீர்மானிக்கப் பட்டு,இன்று அவன் புறப்படும் நாள்.அதனைப் பற்றி பேசவே அவர்கள் இப்போது கூடியிருந்தார்கள்.

ஒருவன் தொள தொளத்த உடல் வாகுடன் இருந்தான்.தன் சட்டைப் பையிலிருந்து புதிய சிம் கார்ட் ஒன்றை எடுத்து கைப்பேசியில் இட்டான்.கொலைகாரனின் எண்ணைத் தட்டினான்.பேசினான்.இடையில் இன்னொருவனும் அந்த கைப்பேசியை வாங்கி அவன் பங்குக்கு சில யோசனைகளைச் சொன்னான்.திட்டம் முழுமையானதாகத் திருப்திபட்டுக்கொண்டு அந்த சிம்மையும் அழித்தார்கள்.


தமிழகத்தின் தென் கோடியில் இருந்தது அந்த கிராமம்.அதை கிராமம் என்று சொல்வதை விட ஒரு சிற்றூர் என்பதே சரியானதாய் இருக்கும்.சூர்யாவின் சொந்தங்கள் நிறையபேர் இருந்தார்கள்.அங்கிருந்த வீடுகளில் கொஞ்சம் பெரிதாய் இருந்த அந்த வீட்டில்தான் விஷேசம் நடைபெறுவதாக இருக்கிறது.சூர்யா நாட்டின் அதிபராக ஆனபிறகு அவருடைய சொந்தங்களுக்கு மிகப் பெரிய மரியாதைக் கிடைத்திருந்தது.அதன் காரணமாகவும்,சூர்யாவே நேரில் வருவதாலும் நிறைய ஆட்கள் தாங்களாகவே முன் வந்து அந்த விஷேசத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.அந்த பரபரப்பில் புதிதாய் ஒருவன் வந்ததை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.அவனும் மிகச் சாதாரணமானவாகவே தன்னைக் காட்டிக்கொண்டான்.அதே ஊரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொந்தான்.தனியாய் இருந்தால் சந்தேகம் வருமென்பதால் ஒரு வாடகை மணைவியை ஏற்பாடு செய்துகொண்டான்.தன்னை ஒரு நாட்டுவைத்தியனாகக் காட்டியிருந்தான்.நாட்டு மருந்து கடையிலிருந்து சேகரித்து வைத்திருந்த சில மருந்துகளை வைத்தும் அதனுடன் கலந்த ஆங்கில மருந்துகளாலும் சின்னச் சின்ன வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்தான்.


இந்த ஒருமாதத்தில் அவனுடன் அந்த ஊர் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத் தொடங்கியிருந்தனர்.அதுதான் அவனுக்குத் தேவைப் பட்டது.விஷேஷத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போகிறவர்களுடன் இவனும் போய் வந்து கொண்டிருந்தான்.சில வேலைகளை அவனே வலியச் சென்று செய்தான்.
எல்லாம் பக்காவாக நடக்கிறது என்று மனதுக்குள் திருப்திபட்டுக்கொண்டான்.வேட்டி கட்டி அதன் இடுப்பு மடிப்பில் அந்த கறுப்பு சனியனை கட்டிக்கொண்டே அலைந்தான்.ஜெர்மன் பெற்றெடுத்த உலோக உயிர்வாங்கி அது.சக்தி வாய்ந்தது.ஆசையோடு அதனை தடவிப்பார்த்துக்கொள்வது அவனுக்குப் பிடித்தமான செயல்.அன்று அப்படித்தான் அதை மடியில் கட்டிக்கொண்டு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த சமயம் அவனைக் கடந்து போனவனின் கையில் வைத்திருந்த நீண்ட கம்பு போன்ற சாதனம் இவன் வேட்டியை இழுத்துவிட்டது.இன்னும் ஒரு நொடியில் அந்த உலோகம் விழுந்து ஓசையை உண்டாக்கியிருக்கும்.மின்னல் வேகத்தில் அதனை இடுப்போடு சேர்த்து இறுக்கிப் ப்டித்துக்கொண்டான்.ஒரு நிமிடம் அவனுடைய சர்வமும் ஆடிவிட்டது.உடனடியாக அவன் வீட்டுக்குப் போய் அதனை வைத்துவிட்டான்.இனி சூர்யா வருமன்றுதான் இதனை வெளியில் எடுக்கவேண்டுமென தீர்மானித்துக் கொண்டு மீண்டும் அந்த வீட்டுக்குத் திரும்பினான்.


சூர்யா வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒரு பாதுகாப்புக் குழு வந்து இறங்கியது.சூர்யா தங்கப்போகும் இடத்தை சல்லடை போட்டு சலித்து விட்டார்கள்.நிகழ்ச்சியன்று அந்த வீடில் ஒத்தாசைக்கு இருக்கப் போகிறவர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.இவனும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தான்.உள்ளுக்குள் ஒரு உதைப்பு இருந்தது.அதற்குத் தகுந்தார்போல அந்த குழுவினரும் பட்டியலில் இருந்தவர்களை வெகு விளாவரியாக விசாரித்தார்கள்.அதில் ஒரு அதிகாரிக்கு இவனுடைய சமீபத்திய வரவு கொஞ்சமாக சந்தேகத்தை வரவழைத்தது.அவனுடைய வீட்டுக்கே சென்று அவனுடைய மனைவி மற்றும் இவனிடம் சில விவரங்களைத் தெரிந்து கொண்டார்.இதனை எதிர்பார்த்திருந்ததால் இவனும் சரியானபடி தயார் நிலையில் இருந்தான்.


சூர்யா வந்துவிட்டார்.முன்பே வந்திருந்த பாதுகாப்புக் குழுவினரோடு புதிதாய் கொஞ்சம் ஆட்களும் அவருடன் வந்திருந்தார்கள்.எப்போதும் சூர்யாவுடனெயே இருந்தார்கள்.ஒரு கட்டத்தில் இவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.நம்மால் இந்த காரியத்தை செய்ய முடியுமா என்று.துணிவை வரவழைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.அவனுக்கும் அதிர்ஷ்டம் இருந்தது.சூர்யா குறந்த பாதுகாப்போடு அவருடைய பள்ளியாசிரியர் ஒருவரைப் பார்க்க அவருடைய வீட்டுக்குப் போனபோது.அவருக்கு முன்பாகவே இவன் அந்த வீட்டுக்குப் போய்விட்டான்.வாடகை மனைவியை திரும்ப அனுப்பிவிட்டான்.காரியம் முடியப்போகிறது.இதற்காக இவனுக்குக் கிடைக்கப்போகும் பெருந்தொகை அவனை சந்தோஷப் படுத்தி வெறியூட்டியது.


பள்ளியாசிரியர் தன் பழைய மாணவனை வரவேற்கும் ஆவலுடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.இவன் அவருக்குப் பின்னால் கையை தயாராய் அந்த உலோக சனியனின் மீதுவைத்துக்கொண்டான்.சூர்யா வருவதற்கு முன் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே வந்தார்கள்.கதவுக்கு இருபுறமும் நின்றுகொண்டார்கள்.சூர்யா உள்ளே நுழைந்தார்.அதுதான் சரியான சந்தர்ப்பம்...துப்பாக்கியை சடாரென்று எடுத்து சுட்டான்.


தொடரும்

சிவா.ஜி
07-01-2008, 07:21 AM
நிறைவுப் பகுதி

வாசல் வரை வந்த சூர்யா சரியாக அந்த நேரம் பார்த்து தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழும் அந்த வீட்டின் வாசலைக் குனிந்து கும்பிட்டார்.சீறிப் பாய்ந்து வந்த தோட்டா அவரைக் கடந்து பின்னால் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரியின் தோள்பட்டையில் பாய்ந்தது.வினாடி நேரத்துக்குள் வீட்டுக்குள் இருந்த கமாண்டோ வீரர்கள் மின்னலாகப் பாய்ந்து துப்பாக்கியோடு அவனை மடக்கினார்கள்.இந்த களேபரத்தால் ஆசிரியருடனான சந்திப்பு தடைபடவேண்டாமென்று நினைத்து அவர்களே அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு இராணுவத்தினரின் தீவிர சோதனையில் அந்த சதியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.நாடெங்கிலும் மீண்டுமொரு தேடுதல் வேட்டை நிகழ்ந்தது.குறிப்பாக முன்னாள் அரசியல்வாதிகளின் தொடர்புகள் அலசப்பட்டு ஆணிவேர்வரைத் தோண்டி களையெடுத்தார்கள்.

அரசு அலுவலகங்கள் ஆச்சர்யப்படத்தக்க முறையில் கார்ப்பொரேட் அலுவலகங்களின் தரத்தில் இயங்கியது.மக்கள் சுயமாகவே சுத்தத்தை கண்டிப்புடன் கடைபிடித்தார்கள்.ஊழலும், லஞ்சமும் பெருமளவில் குறைந்து...கொஞ்ச நாளில் காணாமல் போனது.மாற்றியமைக்கப்பட்ட சில சட்டப் பிரிவுகளால் சின்ன சலசலப்பு இருந்தது.அதுவும் கொஞ்ச நாட்களிலேயே அமைதியாய் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

இத்தனைக் காலமாய் உல்ஃபாவினரின் ஆக்கிரமிப்பிலிருந்த அஸ்ஸாமின் எண்ணை வளமிக்க பிரதேசம் அரசாங்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால்..நாட்டின் பெரும்பகுதி பெட்ரோலியத்தேவை உள்நாட்டிலேயே கிடைக்கும் கச்சா எண்ணையால் தீர்த்துக்கொள்ளப்பட்டது.இதனால் கணிசமான செலவு குறைந்து...இந்தியரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மேல்நாட்டுக் குளிர்பான மோகத்திலிருந்து மக்கள் விடுபட,அவர்களின் வியாபாரம் படுத்துவிட்டது.கொள்ளையடிக்க வந்தவர்கள் கூடாரத்தை காலி செய்து கொண்டு போய்விட்டார்கள்.மீண்டும் டொரீனோவும்,காளிமார்க்கும் சந்தையில் புழங்குவதைக் கண்ட மக்கள் ஆனந்தப்பட்டார்கள்.வறுத்த கோழியும்,இனிப்பு பன்னும் இந்திய மொழியில் பேசின.

தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு கோபுரங்கள்,அந்த தேவை இல்லாததால் முழு வீச்சில் சேவையை வழங்கத் தொடங்கியதில் இந்தியா முழுவதும் தொலைபேசி இலவசமாக்கப் பட்டது.திறமையிருந்தும் அரசியலால் ஒதுக்கப்பட்ட விஞ்ஞானிகள் தங்கள் முழுத்திறமையையும் காட்டியதால் பல அறிவியல் சாதனைகள் நிகழ்ந்தது.எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா திகழத்தொடங்கியது.பாம்புப்பிடாரர்களின் தேசம் என்று கேலி செய்யப்பட்ட தேசத்தைப் பார்த்து மேலைநாட்டினருக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது.

பிரித்து விளையாடும் அரசியல் அயோக்கியர்கள் இல்லாத காரணத்தால் தீவிரவாதம் தானாகவே தொலந்தது.அப்படியும் ஆங்காங்கே தலைதூக்கியவைகள் தலை வெட்டப் பட்டன.எந்த தனி சலுகைகளும் எந்த மதத்தினருக்கும் மறுக்கப்பட்டது.எல்லோரும் இந்தியர் என்ற கோட்பாடு கண்டிப்புடன் செயல்படுத்தப் பட்டது.

ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில்,அன்று சூர்யா மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினார்.

இந்திய குடிமக்களுக்கு வந்தனங்கள்.நாம் கனவுகண்ட தலைசிறந்த தாய்நாட்டை நம்மால் இன்று காணமுடிகிறது.இந்த மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் ஒரு சிறு கருவியாகத்தான் செயலாற்றினோம்.அதனை சரித்திரமாக்கியது பொதுமக்களாகிய நீங்கள்தான்.இதனால் பலவகையான அல்லல்களுக்கு ஆளாகியிருப்பீர்கள்.ஆனால் அதனால் நீங்கள் அடைந்திருக்கும் இந்த நிலையை நினைத்து நிச்சயமாய் நீங்கள் அனைவரும் ஆனந்த படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தற்சமயம் பொருளாதாரத்திலும்,இராணுவ சக்தியிலும்,அறிவியல் தன்னிறைவிலும் நாம் மற்ற மேலை நாடுகளுக்கு சற்றும் குறைந்தவர்களாயில்லை.இந்த நிலையை எட்ட நாம் இழந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வரும் காலம் வந்துவிட்டது.ஆம் இன்னும் ஒரு மாதத்தில் பொதுத்தேர்தல் நிகழவிருக்கிறது.ஆனால் பழைய முறையில் அல்ல.இரண்டு கட்சி அரசியல்முறை.நாட்டின் அதிபரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.மாநிலங்களின் முதல்வர்களையும் நேரிடை தேர்தலில்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.சட்டமன்ற உறுப்பினர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்கானிக்கப் படுவார்கள்.அவர்களின் செயல் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப் பட்டு,அதே தேர்தலில் அவருக்கு இரண்டாமிடத்தைப் பெற்றவர் பதவியடைவார்.இந்த விதி நாட்டின் பிரதமருக்கும்,மாநிலத்தின் முதல்வர்களுக்கும் பொருந்தும்.
முக்கியமான ஒன்று ஏற்கனவே இந்த ஆட்சி வருவதற்கு முன் பதவி வகித்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.இப்படி மிக பாதுகாப்பானதொரு தேர்தல் சட்டங்கள் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் நறுமலராய் வாழ்ந்து பழகியவர்கள் மீண்டும் நாற்றத்தை விரும்பமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் விலகுகிறோம்.வாழ்க பாரதம்!

மக்கள் உன்மையாகவே கலங்கினார்கள்.

குறிப்பு : என் தேசம் எப்படியெல்லாமிருந்தால் நன்றாக இருக்குமென்று நான் கனவு கொண்டு வருகிறேனோ அவற்றை இங்கே கதையாக்கி கொடுத்திருக்கிறேன்.என்றாவது ஒருநாள் இந்த கனவு பலிக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.பலிக்காவிட்டாலுமென்ன....
கற்பனையில் அந்த சந்தோஷத்தை அடைய ஏது தடை?

முற்றும்

இதயம்
07-01-2008, 07:35 AM
அன்பு சிவா...
இந்தக்கதையின் முடிவு வரை படித்து பின்னூட்டம் இடவே இத்தனை நாளும் காத்திருந்தேன். சுதந்திரம் என்ற பெயரில் ஜனநாயக தேசத்தை நம் மக்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தி, சந்தி சிரிக்க வைக்கிறார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே..! சுதந்திரம் என்பது எப்போதும் வரையறுக்கப்படவேண்டியவை. அப்படியில்லை என்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாக மாறி எளியவர்கள் ஏய்க்கப்படுவதும், மாய்க்கப்படுவதும் சர்வ சாதாரணமாகி தேசம் சிதைந்து போகும். என் தேசத்தைப்பொறுத்த வரை எனக்கென்று சில கனவுகள் உண்டு.

அந்த கனவு தேசத்தில் என் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், நாகரீகமானவர்கள், பண்பாட்டினை உடையவர்கள், படித்தவர்கள், அன்பானவர்கள், மதவெறியற்றவர்கள்..! இத்தனை நற்குணங்களை உள்ளடக்கிய குடிமக்கள் இருக்கிற தேசத்தில் வறுமையும், அழிவும் வர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த நாட்டுக்கு இப்போதைய தேவை தேசத்தின் மீது பெரும் காதல் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியாளன். அவன் மட்டுமே இப்போது சீழ் பிடித்து புரையோடிக்கிடக்கும் தேசப்புண்களை ஆற்றுவான். அதை விடுத்து சுதந்திரம், ஜனநாயகம் என்று சொல்லி தேசத்தை சுரண்டிக்கொண்டிருந்தால் இறுதியில் நம் நாடு உகாண்டா, எத்தியோப்பியா போன்று ஆகும் நிலை வெகு விரைவில் வரும் என்பது கசக்கும் உண்மை..!

தேசத்தின் மீது அன்பும், அக்கறையும் கொண்ட இந்திய குடிமகனின் கனவுகளை கதை மூலம் நிஜம் போன்ற தோற்றத்தை உருவாக்கி காட்டியிருக்கிறீர்கள். இன்று கதையில் நிகழ்ந்தது என்றாவது நிஜத்தில் நிகழ்ந்து என் தேசம் வல்லரசாய் நிமிர்ந்து நிற்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.. ஒரு உண்மையான இந்தியக்குடிமகனாய்..!!

நல்லதொரு தேசப்பற்று கதையை எழுதி அளித்த உங்களுக்கு என் ராயல் சல்யூட்...!! :icon_b::icon_b:

lolluvathiyar
07-01-2008, 07:42 AM
அற்புதமாக கதை சென்றது சிவாஜி, இந்த கதை நிஜமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். மீன்டும் ஜனநாயகம் வந்தால் எல்லாம் மறுபடியும் வீனாக போய் விடும். காரனம் இன்று மக்களிடம் செல்வாக்கு பெற நல்லவனாக இருப்பதைவிட வல்லவனாக இருப்பவனால் மட்டுமே முடியும். அதே சமயம் ரானுவ ஆட்சியில் கூட ஊழல் மலிந்து கானபடுகினறன பல நாடுகளில்.
காத்திருப்போம் நம்பிக்கையோடு.

சிவா.ஜி
07-01-2008, 07:47 AM
மிக்க நன்றி இதயம். ஊர்கூடி தேரிழுத்தால் திருவிழா நடக்காமலா போய்விடும்?ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குள்ளும் உங்களுக்கு தோன்றியது தோன்றாமலா போய்விடும்?எதை விதைக்கிறோமோ அது விளைகிறது.ஆனால் இன்று நம் கையில் நல்ல விதைகளே இல்லை அப்படி இருந்தாலும் விளைநிலம் வீரியமிழந்திருக்கிறது.
உரமிடுவோம்
தரமுயர்த்துவோம்
உங்கள் சல்யூட்டுக்கு சிரந்தாழ்த்திய நன்றி.

சிவா.ஜி
07-01-2008, 07:52 AM
மிக்க நன்றி வாத்தியார்.நீங்கள் சொல்வது சரிதான்.திரும்பவும் ஜனநாயகம் வந்தால் பழைய குருடி கதைதான்.இருந்தாலும் அடக்கப் படுகிறோம் என்று மக்களுக்கு தோன்றாமல் ஒரு சர்வாதிகாரியால். அவர் எத்தனை நல்லவராக இருந்தாலும் ஆளமுடியுமா எனத் தெரியவில்லை.அப்படி மட்டும் நிகழ்ந்தால்...ம்.ஆசை மட்டும்தான் பட முடிகிறது.

அமரன்
07-01-2008, 08:47 AM
இந்தியா எல்லாவிதத்திலும் முதாலாமிடத்தை அடைய சிறந்த வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சாத்தியமா என்ற குதர்க்கம் ஏனோ துயில் கலைக்கவில்லை. நம்பிக்கை என்ற அச்சாணி பழுதடையாதவர்கள் நாம்.

நடைமுறை நிகழ்வுகளை உள்வாங்கி கதை செதுக்கப்பட்டுள்ளது. அண்டை நாட்ட்டில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு முண்டி அடிப்பது நிகழ்கால நிதர்சனம்.

நாட்டின் தலை, தலையின் ஒருமைப்பாட்டுக் கொள்கையுள்ள கரங்கள், இவர்கள் கட்டளைகளை ஆராய்ந்து சரியெனத்தோன்றுபவற்றை சிரமம் பார்க்காது, சிரமேற்கொண்டு செய்துமுடிக்கும் கரசேவகர்கள்... இந்த மூன்று அணியும் போதும் பாரதமாதாவின் உடலை அலங்கார அணியாக்க. அதை உணர்ந்த, உணர்த்திய எழுத்து (ஆளர்).

இப்போதுள்ள சூழ்நிலையில் நல்லதைச் செய்ய நாலுபேர். மற்றவர்கள் எல்லாம் மறைந்து அல்லது மறைக்கப்பட்டு.. மேற்சொன்ன மூன்றும் அப்பழுக்கற்ற விதத்தில் இருக்கும் தேசத்தில் தீயனவுக்கு நால்வர். காரணம் வெளிப்படை.. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி-ஔவை. ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளே ஒளிந்திருக்கும், இந்தியனை நுண்ணறிவால் அகழ்ந்தெடுத்த கடப்பாரை இக்கதையும் எழுத்தாளனும்.

பஞ்சமில்லை, பஞ்சமாபாதங்களில்லை, அதனால் அவசரகாலப் பிரகடனம் தேவை இல்லை. அப்புறம் எதற்கு காவல்துறை. பூனை இல்லாத பட்சத்தில் எலிகளுக்கு கொண்டாட்டம் என்பது இங்கே பொய்யாகிவிட்டதே. குற்றவளிகள், தீவிரவாதிகள் உருவாவதில்லை; உருவாக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாட்டின் மீதான அதீத பற்று, என்னைப் போலவே ஆசிரியருக்கும். ஐம்புலனடக்கம் கைவரப் பெற்றால் தீமை எல்லாம் தூரமாகிடும். ஐப்பூதங்கள் பற்றி ஏதாச்சும் சொல்லி இருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஆறுகள் இணைக்கப்பட்டு, பொதுவுடமை ஆக்கப்பட்ட இடத்தில் புனல் மட்டும் தெளிக்கப்பட்டுள்ளது. செழிப்பு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. ஏராள்பவர்களே பாராளும் மன்னர்க்கெல்லாம் மன்னன் என்ற கோட்பாடு வரையறுக்கப் பட்டுள்ளது.

ஒருநாள் முதல்வன் பாணியிலமைந்த, இயக்குனர் சங்கரின் திரைப்படத்தின் சாயலைக்கொண்ட அதிரடி மாற்றங்கள், சுறுசுறுப்பான ஒரு நாட்டை கண்முன் நிறுத்துகின்றன. ஆதே அதிரடிக்கும் வேகம் கதையில் போக்கில் இருக்கிறது. இவ்வளவும் நிறைவேறினால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்தியனாகப் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொருவனும் நினைத்துவிடுவான்..

சிவா! உங்கள் படைப்புகளை தவறாது படித்து வருபவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், நான் எட்டமுடியாத இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றீர்கள்.. ஒருவரைப் பாராட்ட, உலக மொழிகள் எல்லாவற்றிலும் என்னென்னெ வார்த்தைகள் இருக்கோ அத்தனையும் உங்களுக்கு காணிக்கை.

மதி
07-01-2008, 11:00 AM
சிவா...
நல்ல கதை. சில திருப்பங்கள்.. உங்கள் மன எண்ணங்களை கதையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். சில நெருடல்கள்...
முதல் மூன்று நான்கு பாகங்களில் இருந்த விறுவிறுப்பு இறுதிவரை தொடரவில்லை. சில இடங்களில் தொய்வு ஏற்பட்டது. மேலும் முடிவு யூகிக்கக்கூடியதாய் இருந்தது. இன்னும் சில அதிரடி திருப்பங்களைக் கொண்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். ஏற்கனவே எதிர்பார்த்ததை படிக்கையில் இறுதியில் சுவாரஸ்யம் குன்றியது. இதில் தவறிருந்தால் மன்னிக்க.

ஆயினும் உங்கள் முதல் தொடர் என்ற வகையில் நல்லதொரு தொடக்கம். மேலும் சில பாத்திரங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டு எழுதுங்கள்.. க்ரைம் நாவல் போட்டுடலாம்..

சிவா.ஜி
07-01-2008, 11:01 AM
அடடா...அமரன்.கதை படித்து வெறுமனே நன்றாக உள்ளது,அருமை,பிரமாதம் இப்படி அச்சடித்த எழுத்துக்களை தூவிவிட்டு போகாமல்...என்னவொரு அழகான பின்னூட்டம்.முடியுமா,முடியாதா,வெறுங்கனவு...இப்படியெல்லாம் யோசிக்காமல் வெகுநாளாய் நான் காண விழையும்,பேராசை இது.முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படலாமா என்று கேட்கலாம்.அவையங்கள் எல்லாம் சிறப்பாக இருப்பவர்கள் செய்யாத சாதனைகளையெல்லாம் அங்கம் சிறிது குறைந்தவர்கள் வெகு சிறப்பாக செய்துகாட்டி சாதித்திருக்கிறார்கள்.
தற்சமயம் உத்வேகம்,ஒற்றுமை,தேசநலன்,கடும் உழைப்பு என்ற முக்கிய அங்கங்கள் செயலிழந்த நிலையில் பெரும்பான்மையான இந்திய சகோதரர்கள் இருந்தாலும்...என்றைக்காவது ஒருநாள் ஒரு தன்னலமில்லா தலைவன் தேவமைந்தனாய் தோன்றி முடவர்களை நடக்கவைக்கப் போகிறான்.அன்று என்தேசம் வீறுநடை போடும் என்ற நம்பிக்கை மட்டும் கடல் போல இருக்கிறது.
மிக்க நன்றி அமரன்.

யவனிகா
07-01-2008, 11:42 AM
அண்ணா...மீண்டும் முதலில் இருந்து ஒரு முறை ஆற அமர படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்...

சிவா.ஜி
07-01-2008, 11:52 AM
சிவா...
நல்ல கதை. சில திருப்பங்கள்.. உங்கள் மன எண்ணங்களை கதையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். சில நெருடல்கள்...
முதல் மூன்று நான்கு பாகங்களில் இருந்த விறுவிறுப்பு இறுதிவரை தொடரவில்லை. சில இடங்களில் தொய்வு ஏற்பட்டது. மேலும் முடிவு யூகிக்கக்கூடியதாய் இருந்தது. இன்னும் சில அதிரடி திருப்பங்களைக் கொண்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். ஏற்கனவே எதிர்பார்த்ததை படிக்கையில் இறுதியில் சுவாரஸ்யம் குன்றியது. இதில் தவறிருந்தால் மன்னிக்க.

ஆயினும் உங்கள் முதல் தொடர் என்ற வகையில் நல்லதொரு தொடக்கம். மேலும் சில பாத்திரங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டு எழுதுங்கள்.. க்ரைம் நாவல் போட்டுடலாம்..
மதி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அதற்கு முக்கிய காரணம்...நான் இந்தக் கதையை விரைவில் முடித்துவிடவேண்டுமென நினைத்ததுதான்.ஷங்கர் படத்தைப் பார்த்தது போல் இருக்கிறது என்று நன்பர்கள் சொன்னது எனக்கு பாராட்டாக தோன்றவில்லை.நான் மேலும் சொல்ல நினைத்ததை சொல்லியிருந்தாலும் அப்படித்தான் தோன்றியிருக்கும்.
அதனால்தான் முடிவை நீங்கள் யூகித்ததைப் போலவே கொடுத்துவிட்டேன்.நீங்கள் சொன்ன மாதிரியே அடுத்ததாக அதிரடி ஆக்ஷன் கதைக்கு கருவொன்று தோன்றியிருக்கிறது.ஆனால் இதைப் போல ஒரு பாகத்துக்கும் அடுத்த பாகத்துக்கும் அதிக இடைவெளியில்லாமல் கொடுக்கவேண்டுமென நினைத்துக்கொண்டிருப்பதால் முக்கால் பாகம் எழுதிவிட்டு பிறகு பதிக்கிறேன்.
மிக்க நன்றி மதி.

மயூ
07-01-2008, 12:00 PM
இதில் தளர்வடைய எதுவும் இல்லை சிவா.. அருமையான தொடா் கதை!!! சிறுகதையில் பழம் தின்ற கொட்டை பொட்டுள்ள நீங்கள் விரைவில் இந்தத் துறையிலும் சக்கைபோடுவீா்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது!!!!

தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் கோரிக்ககை!!!

சிவா.ஜி
07-01-2008, 12:04 PM
மிக்க நன்றி மயூ.தொடர் எழுத முக்கியத்தேவை மதி சொன்னதைப் போல அதிரடி திருப்பங்களும்,யூகிக்க முடியாத அடுத்த பாகங்களும்தான்.அதற்கான ஸ்கோப் இந்த கதைக்கு குறைவாகவே இருந்தது.அடுத்தமுறை நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முய்ற்சிப்பேன்.ஆதரவுக்கு மிக்க நன்றி மயூ.

மதி
07-01-2008, 12:17 PM
சிவாண்ணா..
புரிந்து கொண்டமைக்கு நன்றி..அடுத்ததாக இன்னுமோர் விறுவிறுப்பு தொடரா..? சீக்கிரம் பதியுங்க.. காத்திருக்கிறோம்.

யவனிகா
07-01-2008, 03:17 PM
அண்ணா...கதை ஆரம்பத்தில் விறு விறுப்பாகப் போனது...ஒரே திசையில் பயணிக்காததால் சற்றே தொய்வடைந்து விட்டது. அவசரமாக முடித்து விட்டீர்கள் என்பது என் எண்ணம்.

ஆசை தான் இப்படி எல்லாம் நடக்க...என்ன செய்ய முடியும்...எல்லாம் தலை விதிப்படி தான் என்று போவோர் மத்தியில் நீங்கள் வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்கள்...ரொம்ப நாள் முன்னே உங்கள் உள்ளே சூர்யா ஒளிந்திருந்ததை உணர முடிகிறது.

தொடர் கதை எழுத கட்டாயம் திறமை வேண்டும். ஆனால் உங்கள் கதை சொல்லும் பாணியை இங்கே புகுத்தியிருக்கலாம்.ஒரேடியாக சீரியஸாகப் புகுந்து விளையாண்டு விட்டீர்கள்.

நான் மூவர்ணக் கொடி ஏத்தி சல்யூட் அடித்து மிட்டாய் கொடுக்காத குறைதான். ஹாஸ்பிட்டல் இன்பேசண்ட் எல்லாருக்கும் சௌதி அல்வா குடுத்து விட்டேன்.அண்ணா கதையை கொண்டாடும் விதமாக...

அண்ணா உங்களிடம் இன்னுமொரு...சுவாரசியம் நிறைந்த...திடுக் திடுக் பள்ளங்கள் நிறைந்த...கதையை எதிர் பார்க்கிறேன்....உங்கள் பாணியில்.

அவதாரை ஏன்னா மாத்தினீங்க...சிவாஜிக்கு ஏத்தது முதல் குதிரை தான்...அது தான் சாம்ராட் சிவாஜியோட குதிரை...இரண்டாவது குதிரையும் சரியில்ல...யாருக்காவது செகண்ஸ்ல தள்ளிடுங்க...இப்ப புலியும் எனக்குப் பிடிக்கல.
பழைய குதிரைக்கு உடம்பு சரியில்லையா?இல்ல தீனி அதிகம் கேக்குதா?

செல்வா
07-01-2008, 07:23 PM
அதற்குள் கதையை முடித்து விட்டீர்களா அண்ணா?:eek:

இத்தகைய மனவோட்டம் கண்டிப்பாக எல்லோரிடமும் இருக்கும் என எண்ணுகிறேன். கதையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பம் மிக அருமை... திடுக்கிடும் திருப்பங்களுடன் இராக்கட் வேக துவக்கம். எனக்கு மனதிற்கு ஒவ்வாத கருவாக இருந்ததை முடிவுப் பகுதியில் வந்து மாற்றிக் கொள்ள வைத்தீர்கள்.:icon_b: கற்பனையாக இருந்தாலும் நம் அனைவரது கனவு என்பதால் மிகுந்த உணர்ச்சியொடே கதையை படிக்க முடிந்நது.:)

இறுதியாக அண்ணாவின் மண்டையில் சில செல்லக் கொட்டுகள்
எப்படியாவது முடிக்கவேண்டும் என்ற ஓரு வேகம் தெரிகிறது போல் இருக்கிறது.
கதையின் ஆரம்பத்திலிருந்த ஈடுபாடு காணாமல் போய்விட்டது போல் தோன்றுகிறது (என்ன அண்ணா கடும் வேலைப் பளுவா?)

எனினும் சிறந்த முயற்சி..... இதன் தொடர்ச்சியாக என் மனம் கொள்ளை கொள்ளும் படியாக இரண்டாம் பாகம் எதிர்பார்க்கிறேன்.

(திரைப்படங்களின் பாதிப்பு சற்று அதிகமாகத் தெரிவதாக உணர்ந்தேன்)

சிவா.ஜி
08-01-2008, 03:32 AM
கொட்டுக்களை மனமுவந்து பெற்றுக்கொள்கிறேன்.ஆமாம் இது அவசரமாய் முடிப்பதற்காகவே முடித்தேன்.வழக்கமான நடையிலிருந்து மாறிவிட்டது சறுக்கல்தான்.அடுத்ததில் சரியாக்கிவிடுகிறேன்.நன்றி செல்வா.

மனோஜ்
08-01-2008, 04:01 PM
கதையின் வோகம் அதிகம் மிக விருவிருப்பாக இருந்தது சிவா எழுதிய நடையில் தங்களின் மனம் வெளிபடுத்தியது அருமை நல்ல ஒரு பாரதம் அமைய வித்தாய் அமையட்டும் தங்களின் இந்த கதை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

samuthraselvam
18-04-2009, 07:00 AM
ஆஹா... அருமை... கதையாய் இருக்கும் போதே மனம் குதூகலிக்கிறதே....!
நிஜமாய் நடந்துவிட்டால்.....?
இவ்வளவு மாறாவிட்டாலும் வருங்காலங்களில் ஓரளவிற்காவது நிச்சயமாய் மாறும் நம் பாரதம்.....
உங்களின் கற்பனை மிக அழகு அண்ணா..
அரசியல் வாதிகளும் லஞ்சம் வாங்கும் அரசாங்க அதிகாரிகளும் ஒழிந்தாலே நாடு உருப்பட்டுவிடும்..

முடிவில் தான் எதோ ஒரு அவசரம் தெரிகிறது... கொஞ்சம் நிறுத்தி அமைத்திருக்கலாம்.. மற்றபடி அருமையாய் இருக்கு....

பாராட்டுக்கள் அண்ணா...:icon_b::icon_b: