PDA

View Full Version : வேரைத் தே(நா)டி-01 (குமரபுரம்)..!!



ஓவியன்
15-12-2007, 03:15 PM
வேரைத் தே(நா)டி-01 (குமரபுரம்)..!!

குமரபுரம்; குமரன் என்றாலே அழகு என்று அர்த்தமாமே, அதாவது அங்கே உள்ளவர்கள் எல்லாமே அழகாக இருப்பார்களாம் என்று என்னோட பாட்டி அடிக்கடி சொல்லுவா. அதனாலோ என்னவோ ஓவியன் பிறந்து வளர்ந்தது இலங்கையின் குமரபுரம் என்ற கிராமத்திலே தான் :D. ஊரின் பெயருக்கு காரணமான குமரன் ஊரின் நடுவே ஒரு கோயில் கொண்டு எழுந்தருளி குமரபுர மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருப்பார். வவுனியா ஏ-09 நெடுஞ்சாலை வழியே யாழ்ப்பாணம் சென்று கொண்டிருக்கையில் பரந்தன் சந்தியில் சட்டென வண்டியை இடப்பக்கமாக ஒரு வெட்டு வெட்டித் திருப்பினால் "சிறிதாய் வளரும் சின்னக் கிராமம் சிந்திக்க வைப்போம் அது எங்கள் இதயம்" என்ற வரவேற்பு வாசகத்துடன் என் பூர்வீகக் கிராமம் கைதட்டி அழைக்கும்.

ஊரின் உள்ளே நுளைத்ததும் ஒரு சிறிய சிவன் கோவிலும் அதனுடன் இணைந்த விளையாட்டு மைதானமும் நம்மை வரவேற்கும், தொடர்ந்து கல் நிறைந்த வீதியால் நடந்தால் பாடசாலை, வீடுகள், முருகன் கோவில், வாசிக சாலை, சங்கக் கடை என ஒரு அக்மார்க் கிராமமாக காட்சியளிக்கும். ஒருதடவை வீதிக்கு தார் ஊற்றி செப்பனிடும் எண்ணத்துடன் வந்த வீதி அபிவிருத்தி சபையினர் கல்லை மாத்திரம் போட்டு விட்டு இவங்களுக்கு கல்லே போதும் என்று விட்டு விட்டதால், தார்வீதியாக இருக்க வேண்டிய குமரபுர பிரதானவீதி எனக்கு தெரிந்த காலத்திலிருந்து கல் வீதியாகவே இருந்திருக்கிறது. அப்போது நான் சிறுவனாக இருந்த போது அந்த கற்கள் எனக்கு நிரம்பவே உதவி இருக்கின்றன. ஆமாம் அப்போது எனக்கு நாய் என்றால் சரியான பயம் அதனால் பாடசாலை விட்டு வீதி வரும் போது இரண்டு கற்களைக் பொறுக்கி காற்சட்டைப் பைக்குள் வைத்தாலே எனக்கு அந்த வீதியிலிறங்க துணிவு வரும்:icon_rollout:. சில வேளைகளில் அந்த கற்களால் எறிந்து நண்பர்களுடன் விளையாட்டாக சண்டை போட்டு அது வினையாகி வீட்டில் அப்பா கையால் பூவரசந்தடியாலே அடி வாங்கி அழுத ஞாபகங்களும் உண்டு. பூவரசந்தடியாலே அடித்தால் அப்படியே பச்சை நிறத்தழும்பு வீங்கி கைகால்களிலே புடைத்திருக்கும், அதைப் பார்க்க அழுகை அழுகையா வரும். அந்த வீதிகளில் உள்ள குண்டு குழிகளில் மழையென்றால் நீர் நிரம்பி நிற்கும், அதனால் சைக்கிளோ, உந்தூர்தியோ அந்த வீதி வழி செல்வதென்றால் மிகக் கவனம் தேவைப்படும். ஆனாலும் நாமெல்லாம் வளர்ந்த பின்னர் அந்த குண்டு, குழிகளின் இருப்பிடம் மனதில் ஆணியாக பதிந்து விட கண்ணை மூடிக் கொண்டே நாம் வண்டி ஓட்டினோமாக்கும். :icon_b:

நம் கிராமத்தில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் கலந்தே இருந்தாலும் நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ வைபவங்களுக்கு இந்துக்கள் கிறிஸ்தவ நண்பர்களுடனிணைந்து விழாக்களில் பங்கு கொள்வதும், இந்து கோவில் திருப்பணிகளுக்கு கிறிஸ்தவர்கள் காணிக்கையாக நெல்மணிகளைக் அள்ளி வழங்குவதையும் பார்த்தால் ஆனந்தமாக இருக்கும். நம் கிராமத்தின் பெருமையாக கருதுவது இளைஞர் வட்டம் என்ற பெயர் கொண்ட கிராமட்த்தின் சனசமூக இயக்கம் தான். "சிறிதாய் வளரும் சின்னக் கிராமம் சிந்திக்க வைப்போம் அது எங்கள் இதயம்" என்ற எண்ணத்துடனியங்கிய அந்த கழகம் உண்மையில் ஒரு விளையாட்டுக் கழகமாவே ஆரம்பித்தது. நாளடைவில் இளைஞர்களின் வேறுபட்ட சிந்தனைகளால் சனசமூக இயக்கமாகி சமூக நலன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். சமூக நடவடிக்கைகளில் இறங்கினாலும் விளையாட்டுத் துறையிலும் அந்த இளைஞர்கள் புகழ் பெற்றே இருந்தனர். அவர்களது அணி காற்பந்து போட்டியிலிறங்கினால் மைதானத்தில் தீப்பொறி பறப்பது வழமை, அதை கண்கொட்டாமல் பார்த்து கைதட்டி மகிழ்வது நம் கடமை. எல்லோருமே விளையாட்டு வீரரானால் விளையாடுபவர்களை எப்படி உற்சாகப் படுத்துவது என்ற நன்நோக்கில் அந்தக் காலங்களில் நான் விளையாட்டு பக்கம் போவதில்லை. பின்னர் பல்கலைக் கழகத்தில் படித்த போது "ஜொண்டிரோட்ஸ்":D ஆனது வேறு கதை, அதை இன்னொரு நாள் கூறுகிறேன்.

இன்னமும் வேரைத் தே(நா)டுவேன்....

மதி
15-12-2007, 04:27 PM
ஆஹா..ஆட்டோகிராப் ஆரம்பமாகட்டும்...
மீதியைத் தொடருங்கள்... ஓவியரே..

அன்புரசிகன்
15-12-2007, 06:36 PM
என்னதான் இருந்தாலும் எங்கும் ஒரு விதிவிலக்கு இருக்கும் தானே. அது போலதான் குமரபுரத்திற்கு ஓவியன். :D

பூவரசம் இலையை அதன் நுனியை மடித்து உருட்டி நாதஸ்வரம் வாசிக்கும் இனிமை... அத்தனை இன்பம். சிறிய வயது என்ன. வளர்ந்த பிறகும் செய்திருக்கிறேன்.. நடந்து போகும் போதே வீதியில் அதுதான் சமிக்கை யாக இருக்கும். :D

தொடருங்கள்.

சிவா.ஜி
15-12-2007, 06:47 PM
இனிப்பான நினைவுகளை ஏகாந்தமாய் அசை போடுவதே ஒரு சுகம்.அதிலும்...அந்த நினைவுகளை நெருக்கமான இதயங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் சுகமோ அளவில்லாதது.தொடருங்கள்..ஓவியன்.நாங்களும் உங்களுடன் குமரபுரப் பயணத்தில் உடன் வருகிறோம்.

ஓவியன்
15-12-2007, 07:31 PM
குமரபுரத்தின் பொருளாதார வளங்களில் மிக முக்கியமானது விவசாயம். அதுவும் நெற்செய்கைதான் பிரதானமானது. இது மூன்று புறமும் வயல்களாற் சூழப்பட்ட ஒரு கிராமாகையால் இங்கு நெற்செய்கை பிரதானமாக இருந்ததில் வியப்பில்லைத் தானே. பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை இயங்கிய போது குமரபுரத்தவர்கள் நிறையப் பேர் அங்கே வெவ்வேறு தொழில் புரிந்து வந்தனர். ஆனால் பின்னர் தொடர்ந்த யுத்த நிலமைகளால் இரசாயனத் தொழிற்சாலை இயக்கமறந்து போக திடீரென வேலையில்லாது தவித்தவர்களை கரங்கொடுத்து தூக்கிவிட்டவள் இந்த நெல் களனித் தாய்தான். வன்னிப்பிராந்தியத்தின் பெரிய நீர்த்தேக்கமான இரணைமடு நீரை வழங்கி மகிழ, அதைப் பருகிய குமரபுரவயற்பரப்புக்கள் பச்சைக் கம்பளம் விரித்து அலை அலையாக அசைவதை நாள் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம். நாம் ஊரிலிருக்கும் போது ஒரு கிலோ அரிசி கூட கடையில் வாங்கியதாகச் சரித்திரம் இல்லை. அந்தளவு வீட்டிலே நெல்லும் அரிசியுமாக நிறைந்து கிடக்கும். குமரபுர நெற்காணிகளுக்கு இன்னும் ஒரு சிறப்புண்டு அதாவது குமரபுரத்தின் தென்பகுதி வயற்காணிகளுக்கே இரணைமடு நீர் கிடைக்கும் வடக்கு புறத்திலுள்ள காணிகள் பெரும்பாலும் வானம் பார்த்தவையே. அதனால் தென்பகுதி காணிகளில் இரு போகங்களாகவும் வடக்கு புறக் காணிகளில் ஒரு போகமாகவும் வெள்ளாமை செய்வார்கள். ஊரவர்களுக்கு பொதுவாக இருபக்கமும் சொந்தக் காணிகள் இருக்கும். இதில் இன்னுமோர் வசதியுண்டு அதாவது வடக்கு புறக் காணிகளை சிறுபோகத்தின் போது ஆடு, மாடுகளின் மேச்சல் நிலமாகப் பாவிப்பார்கள். இதனால் ஊரிலே பால், இறைச்சி போன்றவற்றுக்கும் குறையிருந்ததில்லை.

குமரபுரம் என்றால் இன்னும் ஒரு விடயம் சொல்லலாம், அது பாம்பு. ஆமாம் ஊரைச்சுற்றி வயல்வெளிகள் என்பதனாலோ என்னவோ ஊரிலே பாம்புத் தொல்லை கொஞ்சம் அதிகம் தான். குமரபுரத்தின் மிக அருகில் "பாம்புக் கமம்" என்று ஒரு இடம் உண்டு. அங்கே நாக அம்மனை மூல விக்கிரமாக வைத்து வழிபடுவோம். ஊரிலே ஒவ்வொருவரும் வயலில் நெல் விதைக்க புறப்படுகையில் நாக அம்மனிடம் இந்த வெள்ளாமையின் போது நமக்கு பாம்புகளால் எந்த துன்பமும் வரக் கூடாது என நேர்த்தி செய்துவிட்டுச் செல்வது ஐதீகம். பின்னர் வயல் அறுவடை முடிவடைந்து நெல்லை சூடடித்து நெல்மணிகளாக வீடு கொண்டு வந்த பின்னர் பாம்புக் கம அம்மனுக்கு நேர்திக்கடனாக ஒரு அபிடேகமும் நடக்கும். இன்னும் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும் பாம்புக் கம அம்மன் கோயில் வாசலில் ஒரு மிகப் பெரிய ஆலமரம் இருந்தது, பாம்புகள் போல நிறைய விழுதுகளைத் தாங்கி அடி முடி தெரியாமல் நிற்கும் அந்த ஆல மரத்தைப் பார்த்தாலே அடி வயறில் என்னவோ பிசையும். இரவு வேளைகளில் அந்தபாதையால் செல்ல வேண்டி இருந்தால் துவிச்சக்கர வண்டியை வேகமாக ஓடி வந்து அந்த ஆலமரத்தடியில் இரண்டு காலையும் மேலே உயர்த்திக் கொண்டே செல்லுவேன், ஆல மரம் கடந்த பின்னரே காலை கீழே வைப்பேன் அந்தளவுக்கு அந்த ஆலமரம் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது. :mini023:

ஊரிலே நம்ம குடும்பம் கொஞ்சம் செல்வாக்கானது அதனால் ஐயா எங்கே போனாலும் ஒரு சின்ன மரியாதை கிடைக்கும் :icon_ush:. அட தம்பியா என்ன இந்தப் பக்கம் என்று உதவ நிறையப் பேர் வருவார்கள். அது அந்தக் காலங்களில் எனக்கு மிகப் பெரிய இடையூறாக தென்பட்டது. பின்னே என்னங்க, ஊரிலே எங்காவது நான் நண்பர்களுடன் சேர்ந்து யார் வீட்டு மாமரத்தில் ஏறினாலோ இல்லை குளத்தில் மீன்பிடித்து விளையாடப் போனாலோ:icon_rollout: நான் வீடு திரும்ப முன்னர் அந்த சேதி வீடு சென்றிருக்கும். பிறகென்ன வீட்டு வாசலில் அப்பா பூவரசந்தடியுடன் நிற்பார்....!!. என்னதான் கண்டிப்பு என்றாலும் அப்பா இவ்வாறான விடயங்களுக்குத் தடை போடுவதில்லை ஆனால் எங்கேயாவது செல்ல முன்னர் அவரிடமோ அம்மாவிடமோ கூறிய பின்னரே செல்ல வேண்டுமென்பது அவரது கொள்கை. அப்படி சொல்லாமற் கொள்ளாமல் போனால் தான் செம பூசை கிடைக்கும்.

குமரபுரத்தின் நீர்வளமும் மிகப் பிரபலமானது, இருந்தாலும் ஊரிலேயே ஒரே ஒரு கிணற்று நீரே உப்புக் கரிக்கும், அது கூட பலருக்கு அதிசயம் எனென்றால் அந்த கிணறுக்கு அருகேயுள்ள கிணற்றுகளில் நீர் அமுதமாய் பெருக அந்தக் கிணற்று நீர் மட்டும் உப்புக் கரிக்கும். இங்கே ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன், அதாவது அது நடந்தது ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழு கடைசிப் பகுதியாக இருக்கும். அப்போது நமது பகுதியில் இந்திய இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர், திடீரென ஒரு நாள் இந்திய இராணுவத்தால் நம்மூர் முற்றுகையிடப்பட்டது. எங்கள் வீட்டுக்குள்ளும் இராணுவ வீரர்கள் வந்து சோதனையிட்டனர் தந்தையில் தொழிலைக் கேட்டவுடன் சோதனையை இடையில் முடித்துக் கொண்டு மரியாதையாகப் பேசினர். அப்போது ஒரு இந்திய இராணுவத்திலிருந்த ஒரு தமிழக நம் வீரர் வீட்டு முற்றத்திலிருந்த கிணற்று நீரை அள்ளிப் பருகிவிட்டு வந்தார். வந்தவுடன் அவர் கேட்ட கேள்வி இதுதான் " ஏன் சார், இப்படி அழகான வீடு வைச்சிருக்கே, வீட்டு முற்றத்திலே கங்கை இருக்கு, இப்படி எல்லாம் இருக்க ஏன் சார் சண்டை பிடிக்கிறே....??". அப்போது நம்மிடம் எல்லாம் இருக்கிறதுதான் ஆனால் நிம்மதி...?? என்று கேட்க அப்பா நினைத்திருப்பார் ஆனால் ஏனோ மெளனமாக இருந்துவிட்டார். இப்படியே காலமுருண்டு கொண்டிருக்கையில், இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளால் அல்லாடும் ஊர்களில் ஒன்றாகிப் போனது குமரபுரம்.

வேர்களை இன்னும் தே(நா)டுவேன்...

lolluvathiyar
16-12-2007, 06:03 AM
வேர்களை ஆவலாய் படித்து வந்து கொண்டு இருகிறேன். நீங்களும் விவசாய பின்னனியிலிருந்து வந்தவரா. அந்த வாழ்கையே தனி பாம்பை பற்றி எழுதி இருந்ததை படிக்கும் போது ஒரு விசயத்தை கேள்வி பட்டேன்.
இலங்கையில் பாம்பை அடித்து கொல்ல கூடாது என்று மக்கள் கடைபிடிக்கறார்களாம். அது உன்மையா?

மேலும் வேர்களை நோன்டுவீர்கள் என்று சொல்லி இருந்தீர்கள், இதுவரை இருந்ததை விட இனி வேர்கள் கனமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நாங்களும் கனத்த இதயத்தோடு காத்திருகிறோம்

பூமகள்
16-12-2007, 06:24 AM
குமரபுரத்தின் இயற்கையின் வாஞ்சையுடன் கலந்து சந்தோசப்பட்ட சமயத்தில் உங்களின் குறுப்பு கண்டு ரசித்து நிற்க, இறுதியில் நிம்மதி??? என்ற கேள்வியோடு கனத்த மனத்தை ஏற்படுத்திய பதிவு..!
அசத்தல் ஓவியன் அண்ணா..! :)
தொடர்ந்து கொடுங்க...!! :icon_rollout:
உங்கள் வேர்களின் தேடலில் ஆழமாய் நாங்களும் உங்களுடன் வருகிறோம்..!:icon_b:

அன்புரசிகன்
16-12-2007, 06:53 AM
ரொம்பத்தான் செல்வாக்கு உங்களுக்கு....

அப்புறம் அந்த தண்ணி விடையம். ஒன்று சொல்லலாம். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அநேக வடக்கு கிழக்கில் தண்ணிக்கு பஞ்சம் என்றும் வந்ததில்லை. தண்ணி ஒன்று தான் இலவசமாக வீட்டில் கிடைக்கும். துலாவில் குளிக்கும் ஆனந்தம் வேறு எங்கு? வீட்டு கிணறு இறைப்பு (குப்பை கஞ்சல் நீக்கல்) என்றால் அன்று வீட்டில் கொண்டாட்டம் தான். :D கிணற்றுக்குள் இறங்குவதற்கு போட்டி. அநேகமாக அரச உத்தியோகஸ்தர்கள் வீட்டில் அது சனிக்கிழமைகளில் நிகழும்.

ஓவியன்
16-12-2007, 10:34 AM
பாம்பை பற்றி எழுதி இருந்ததை படிக்கும் போது ஒரு விசயத்தை கேள்வி பட்டேன்.
இலங்கையில் பாம்பை அடித்து கொல்ல கூடாது என்று மக்கள் கடைபிடிக்கறார்களாம். அது உன்மையா?

அப்படி எல்லாம் இல்லை வாத்தியார், நம் ஊரிலே பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்றுவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள். ஆனால் பொதுவாக நாகப் பாம்பென்றால் அடிக்க கொஞ்சம் தயங்குவார்கள் ஆனால் விரியன் பாம்பென்றால் அடித்து விட்டுத்தான் பேச்சே இருக்கும்.

என்னவன் விஜய்
16-12-2007, 11:23 AM
ரொம்பத்தான் செல்வாக்கு உங்களுக்கு....

அப்புறம் அந்த தண்ணி விடையம். ஒன்று சொல்லலாம். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அநேக வடக்கு கிழக்கில் தண்ணிக்கு பஞ்சம் என்றும் வந்ததில்லை. தண்ணி ஒன்று தான் இலவசமாக வீட்டில் கிடைக்கும். துலாவில் குளிக்கும் ஆனந்தம் வேறு எங்கு? வீட்டு கிணறு இறைப்பு (குப்பை கஞ்சல் நீக்கல்) என்றால் அன்று வீட்டில் கொண்டாட்டம் தான். :D கிணற்றுக்குள் இறங்குவதற்கு போட்டி. அநேகமாக அரச உத்தியோகஸ்தர்கள் வீட்டில் அது சனிக்கிழமைகளில் நிகழும்.

பரந்தன் பகுதியில் கோடை காலத்தில் கிணறுகள் எல்லாம் வறண்டு விடும். அதோடு அது உப்பு தண்ணீர் வேற,சில சமயம் அது ஒறஞ்சு நிறத்தில் இருக்கும் அதுக்கு நீண்டதூரம் போய் எடுத்திருக்கிறம். அது ஒரு...............................

அன்புரசிகன்
16-12-2007, 11:27 AM
தெரியவில்லை. ஓவியன் வீட்டில் அவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இருக்கலாம். காரணம் கிளிநொச்சிப்பகுதியில் சவர்க்கார தண்ணி போல் அல்லது பாலில் தண்ணீர் கலந்தால் எவ்வாறோ அவ்வாறு இருக்கக்கண்டிருக்கிறேன். அத்துடன் மீசாலை மிருசுவில் பகுதியில் மஞ்சள் நிறத்தில் கண்டிருக்கிறேன்.

பொதுவாக கூறுவார்கள். வன்னியின் தண்ணி கனம் என்று. காரணம் அவ்வளவு கல்சியப்படிவுகள். கொதிக்க வைத்து வடித்தால் பெரிய படையாக கல்சியம் படியும். கேத்தல்ளை சுத்தப்படுத்த அலவாங்கு தான் வேண்டும்.

lolluvathiyar
16-12-2007, 11:45 AM
வன்னியின் தண்ணி கனம் என்று. காரணம் அவ்வளவு கல்சியப்படிவுகள்.

தன்னீரை சுத்தபடுத்த நமது மூதாதையார்களின் தொழில் நுட்பம் ஒன்று இருகிறது. அது வேறு ஒன்றும் இல்லை வெங்கல பாத்திரத்தில் தன்னீரை ஊத்தி இரன்டு நாள் வைத்தால் எந்த கெமிக்கலும் சத்து இழந்து வெறும் அடி வன்டல் ஆகிவிடும்

செல்வா
16-12-2007, 11:57 AM
கனமான கதை ஒன்று உருவாகிறது..... அதோடு கூட பலப்பல தகவல்களும் பரிமறப்படுகிறது.... வளர வாழ்த்துக்கள்...

என்னவன் விஜய்
16-12-2007, 12:18 PM
தெரியவில்லை. ஓவியன் வீட்டில் அவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இருக்கலாம். காரணம் கிளிநொச்சிப்பகுதியில் சவர்க்கார தண்ணி போல் அல்லது பாலில் தண்ணீர் கலந்தால் எவ்வாறோ அவ்வாறு இருக்கக்கண்டிருக்கிறேன். அத்துடன் மீசாலை மிருசுவில் பகுதியில் மஞ்சள் நிறத்தில் கண்டிருக்கிறேன்.

என்ன்ன அன்புரசிகன் கடைசியில் நம்ம இடத்திற்க்கே வந்திட்டிங்க
ஆமா கூடுதலான கிணற்று தண்ணீர் அப்படிதான்,நாங்க எல்லாம் வெள்ளை நிறத்தில் எல்லாம் சட்டை போட மாட்டம்,பழுப்பு நிறத்தில்தான் போடுவோம்(இதுதான் நம்மூரில் வெள்ளை,பாலும் பழுப்புவெள்ளைதானே:lachen001:)

ஓவியன்
16-12-2007, 12:30 PM
பரந்தன் பகுதியில் கோடை காலத்தில் கிணறுகள் எல்லாம் வறண்டு விடும். அதோடு அது உப்பு தண்ணீர் வேற,சில சமயம் அது ஒறஞ்சு நிறத்தில் இருக்கும் அதுக்கு நீண்டதூரம் போய் எடுத்திருக்கிறம். அது ஒரு...............................

வாருங்கள் என்னவன் விஜய், பரந்தனில் உப்புத் தண்ணீரே இல்லை...
ஆனால் பரந்தனுக்கு அண்மையில் குஞ்சுபரந்தன், பெரியபரந்தன் என இரு இடங்கள் உண்டு அங்கு நீர் பிரச்சினை உண்டு. ஆனால் அங்குள்ள நீர் செந்நிறத்தில் இருக்காது ஆனால் உப்பாக இருக்கும். இதேவேளை பெரியபரந்தனுக்கு அருகே உள்ள இடமான எட்டாம்வாய்க்கால் எனப்படும் பகுதியில் தண்ணீர் செந்நிறமாக இருக்கும். அதுக்கு அங்கே நிறைந்துள்ள தென்னை மரங்களே காரணம்....

முதலில் நீங்கள் வன்னியில் எங்கே இருந்தீர்களென கூறுங்கள், நீங்கள் இருந்த இடத்தில் தண்ணீர் பிரச்சினையாக இருக்கலாம், அப்படி இருந்தால் அது நிச்சயமாக பரந்தன் இல்லை வேண்டுமானால் குஞ்சுபரந்தன் அல்லது பெரிய பரந்தனாக இருக்கலாம். அதனை விட கோரக்கன்கட்டு, முதலாம் கட்டை, முரசுமோட்டை என எல்லாம் இடங்களுண்டு அவை பரந்தனுக்கு அண்மையான ஊர்கள் ஆனால் பரந்தனில்லை...

அன்புரசிகன்
16-12-2007, 12:31 PM
தன்னீரை சுத்தபடுத்த நமது மூதாதையார்களின் தொழில் நுட்பம் ஒன்று இருகிறது. அது வேறு ஒன்றும் இல்லை வெங்கல பாத்திரத்தில் தன்னீரை ஊத்தி இரன்டு நாள் வைத்தால் எந்த கெமிக்கலும் சத்து இழந்து வெறும் அடி வன்டல் ஆகிவிடும்

தலைவா.. நீங்கள் சொல்லும் முறை நம்மூருக்கு நடைமுறைச்சாத்தியமற்றது. காரணம் அங்கு காலையில் எடுக்கும் தண்ணீர் மதியம் வரை தங்காது. அதற்குள் அதனை விரயப்படுத்திவிடுவர். சமையல் கழுவல் துடைத்தல் குழந்தைகளின் அட்டகாசம் என பல்வகை இதற்கு வழிவகுக்கும்.

என்னவன் விஜய்
16-12-2007, 12:32 PM
ஓவியன் நான் ஒரிரு முறை குமரபுரம் வந்த்திருக்கிறன். உங்கள் பதிவுகளை பார்க்கும் போது அதை ஞாபகப்ப்படுத்திக்கொள்ள கூடியதாக இருக்கிறது. எனக்கு பரந்தன் , உமையாள்புரத்தில் கமம் இருக்கு.அங்கெல்லாம் 1990 வர அடிக்கடிவருவேன்
தொடருங்கள்..............

ஓவியன்
16-12-2007, 12:36 PM
ஓவியன் நான் ஒரிரு முறை குமரபுரம் வந்த்திருக்கிறன். உங்கள் பதிவுகளை பார்க்கும் போது அதை ஞாபகப்ப்படுத்திக்கொள்ள கூடியதாக இருக்கிறது. எனக்கு பரந்தன் , உமையாள்புரத்தில் கமம் இருக்கு.அங்கெல்லாம் 1990 வர அடிக்கடிவருவேன்
தொடருங்கள்..............

ஆமாம், உமையாள் புரத்தில் தண்ணீர் உப்புத்தான், அது ஆனையிறவுக்கு மிக அண்மையான பகுதி, கடற்கரையை அண்டிய பகுதி அதனாலங்கு தண்ணீர் பிரச்சினை இயல்பு தானே...

என்னவன் விஜய்
16-12-2007, 12:41 PM
பரந்தன் சந்திக்கும் சோடபக்றி க்கும் இடயில்தான் எங்களுடைய வயல் இருக்கு, மற்றயது உமையாபுரம் 1 ஏக்கர், 4ஏக்கர் மற்றும் 10 ஏக்கர் பகுதியில். இவ்விடங்களில் எல்லாம் அப்படியில்லை என்றால் ,மன்னிக்கவும் 1990க்கு பின் மாறியிருக்கலாம்:confused:............................
நன்றி

ஓவியன்
16-12-2007, 12:51 PM
ஓவியன் இலகுவாக எடுத்துக்கொள்ளுங்க்கள். பரந்தன் சந்திக்கும் சோடபக்றி க்கும் இடயில்தான் எங்களுடைய வயல் இருக்கு, மற்றயது உமையாபுரம் 1 ஏக்கர், 4ஏக்கர் மற்றும் 10 ஏக்கர் பகுதியில்.

நான் இலகுவாகத் தான் எடுத்துக் கொண்டேன் நீங்கள் தான் மீள மீள தவறு செய்கிறீர்கள் பரந்தனுக்கும் சோடப்பக்றிக்கும் இடையுள்ள இடத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை, ஏனென்றால் அங்கே எனக்கும் வயற்காணி உண்டு :). உமையாள் புரத்தில் தண்ணீர் பிரச்சினை உண்டுதான் அதனை நான் மறுக்கவில்லையே....
ஆனால் அது பரந்தனில்லையே....! :icon_b:

அன்புரசிகன்
16-12-2007, 01:09 PM
சரி வுடுங்கப்பா... வேணும்னா நான் உடுவிலிலிருந்து தண்ணி அனுப்புகிறேன். தண்ணீர் மட்டும். இதர செலவுகள் உங்களது. :D :D :D

ஆமா ஓவியன் சோடா தொழிற்சாலை எங்கு இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஒன்றுதான். வேறும் உள்ளதா?

சொல்லவே இல்ல......... அங்க நெக்டோ ஒரேஞ்கிரஷ் போட்டலோ ஒலே எல்லாம் உண்டோ? :D :D :D

ஓவியன்
16-12-2007, 01:11 PM
சொல்லவே இல்ல......... அங்க நெக்டோ ஒரேஞ்கிரஷ் போட்டலோ ஒலே எல்லாம் உண்டோ? :D :D :D

சோடாத் தொழிற்சாலை தான்......

ஆனா, ஆனா
அது ஊத்தைச்சோடா.....!! :lachen001:

அன்புரசிகன்
16-12-2007, 01:18 PM
சோடாத் தொழிற்சாலை தான்......

ஆனா, ஆனா
அது ஊத்தைச்சோடா.....!! :lachen001:

உங்க ஊருக்கு அதிகம் தேவைப்பட்டது போலும். :p :icon_wink1: :icon_03: :080402cool_prv: :icon_dance: :sport-smiley-018:

என்னவன் விஜய்
16-12-2007, 01:31 PM
அட விடுங்கப்பா ..............
ஒவியன் நீங்க தொடருங்க

ஓவியன்
16-12-2007, 01:32 PM
உங்க ஊருக்கு அதிகம் தேவைப்பட்டது போலும்.

ஆமா, நீங்க வந்து போன பின்பு........!! :icon_rollout::D:D

என்னவன் விஜய்
16-12-2007, 01:36 PM
ஏம்பா உங்களுக்கு என்று சொல்லுங்கவேன்
ஊருக்கென்று சொல்லி எங்களையும் இழுக்காதங்கப்பா(ஹஹஹ)

அமரன்
16-12-2007, 06:41 PM
ரொம்பத்தான் செல்வாக்கு உங்களுக்கு....

அப்புறம் அந்த தண்ணி விடையம். ஒன்று சொல்லலாம். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அநேக வடக்கு கிழக்கில் தண்ணிக்கு பஞ்சம் என்றும் வந்ததில்லை. தண்ணி ஒன்று தான் இலவசமாக வீட்டில் கிடைக்கும். துலாவில் குளிக்கும் ஆனந்தம் வேறு எங்கு? வீட்டு கிணறு இறைப்பு (குப்பை கஞ்சல் நீக்கல்) என்றால் அன்று வீட்டில் கொண்டாட்டம் தான். :D கிணற்றுக்குள் இறங்குவதற்கு போட்டி. அநேகமாக அரச உத்தியோகஸ்தர்கள் வீட்டில் அது சனிக்கிழமைகளில் நிகழும்.

ஆமாய்யா கிணறுதூர்வாரமுன்னர், நம்மை தூர்வாருவதுக்கு அடிபிடிபடுவதை மறக்கத்தான் முடியுமா? அந்த அடிபிடியில் அப்பா அத்தா பிடரியில் அடிப்பதையும், அடுத்தவன் வீட்டுக்கிணத்துல கள்ளமாக் குதித்து குளித்து, பூவரசம் கொத்துடன் அப்பன் ஆத்தா சாமி ஆடுவதையும் மறக்க முடியுமா?

அமரன்
16-12-2007, 06:45 PM
அப்படி எல்லாம் இல்லை வாத்தியார், நம் ஊரிலே பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்றுவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள். ஆனால் பொதுவாக நாகப் பாம்பென்றால் அடிக்க கொஞ்சம் தயங்குவார்கள் ஆனால் விரியன் பாம்பென்றால் அடித்து விட்டுத்தான் பேச்சே இருக்கும்.
அடிக்காமல் விட்டால் பேச முடியாதில்ல அதுதான் சாரே இந்த அவசரம்.. ஆனாலும் நாம பரந்தாமன் மதிரி பாம்புமேல படுத்த ஆளுங்கப்பா? அதையும் சொல்லி இருக்கலாமே...

அமரன்
16-12-2007, 06:48 PM
தன்னீரை சுத்தபடுத்த நமது மூதாதையார்களின் தொழில் நுட்பம் ஒன்று இருகிறது. அது வேறு ஒன்றும் இல்லை வெங்கல பாத்திரத்தில் தன்னீரை ஊத்தி இரன்டு நாள் வைத்தால் எந்த கெமிக்கலும் சத்து இழந்து வெறும் அடி வன்டல் ஆகிவிடும்
வாத்தியாரே.. அன்புரசிகன் சொன்ன கேத்தல் வெண்கலத்தாலானதுதான்.. அதன் அடியில் படிந்திருக்கும் கால்சியப்படிமத்தை சுரண்டத்தான் கடப்பாரை வேண்டும் என்றிருக்கின்றார். எங்கள் வீடுகளுக்கு கிட்டவாக எந்த ஒரு அரசியல்வாதியும் இல்லாததன் தாக்கம் அப்போதுதான் தெரிந்துகொண்டேன்..

அமரன்
16-12-2007, 06:52 PM
குமரபுரம்; குமரன் என்றாலே அழகு என்று அர்த்தமாமே, அதாவது அங்கே உள்ளவர்கள் எல்லாமே அழகாக இருப்பார்களாம் என்று என்னோட பாட்டி அடிக்கடி சொல்லுவா.


சோடாத் தொழிற்சாலை தான்......

ஆனா, ஆனா
அது ஊத்தைச்சோடா.....!! :lachen001:
அழுக்கில்லாவிட்டால் அழகு தானாகவே வந்திடும்தானே..
என்ன ரசிகரே நாஞ்சொல்றது கரீக்டுதானே...

வேரின் படரல் வளமாக இருக்கு ஓவியா.. அப்பட்டமாக அடுத்த நாடலையும் சொல்லிடுக்க..

தாமரை
17-12-2007, 12:18 AM
பழைய நினைவுகளை மெல்லக் கிளற நினைக்கிறயள். இலங்கையில இன்னும் நம்ம கால்பட்டதில்லை. மனசு மட்டும் பட்டிருக்கு,

தண்ணியத் தெளியவைக்க ஒரு கொட்டை இருக்கு. அதைப் போட்டா தண்ணி தான ஒரு இரண்டு மணி நேரத்தில தெளிஞ்சிரும்.. அம்மா கிட்ட கேட்டா பேரு தெரியும்..

புற நானூத்தில சொல்லீ இருப்பாங்க

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி
சேறொடு பட்டச் சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்..

தெளிய வச்சு கு(அ)டிக்கறதில தமிழனுக்கு இணை தமிழன் தான்

ஆனால் அப்பன் மகன் கவிதை மாதிரி -

குடிக்க முடியாத தண்ணீர் கொண்ட கடலை நாடி யாரும் போவது கிடையாது கிடையாது என்பதை தவறாக்கி,

கடல் நீரைக் குடிநீர் ஆக்கி குடிக்கலாம் என்கிறபோது

இந்த தமிழ்தகப்பன் நாம சொன்னது தப்பா போச்சேன்னு யோசிக்காம மகன் சாதிச்சுட்டான் எனப் பெருமைப் படறான்.

அதே சமயம் அதை வச்சே ஊழல் பண்ணறாங்கன்னு தெரிஞ்சதும், மறுக்க வழமையா செய்யறது மாதிரி திட்ட ஆரம்பிச்சுட்டான்.

அன்புரசிகன்
17-12-2007, 02:56 AM
வாத்தியாரே.. அன்புரசிகன் சொன்ன கேத்தல் வெண்கலத்தாலானதுதான்.. அதன் அடியில் படிந்திருக்கும் கால்சியப்படிமத்தை சுரண்டத்தான் அலவாங்கு வேண்டும் என்றிருக்கின்றார். எங்கள் வீடுகளுக்கு கிட்டவாக எந்த ஒரு அரசியல்வாதியும் இல்லாததன் தாக்கம் அப்போதுதான் தெரிந்துகொண்டேன்..
அரசியலைப்பற்றி தெரிந்துகொண்டதே 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் தான். அதற்கு முன்னர் வெரித்தாஸ் பிபிசி. அவ்வளவே.... காரணம் அனைத்து ரணங்களும் பழகிப்போனவை.



அழுக்கில்லாவிட்டால் அழகு தானாகவே வந்திடும்தானே..
என்ன ரசிகரே நாஞ்சொல்றது கரீக்டுதானே...


சாலச்சரி. அழுக்கில்லையென்றால் அதுவே ஒரு தனியழகு தானே. :icon_b:

தாமரை
17-12-2007, 03:20 AM
அழுக்கும் அழகுதான் ஆதவன் போல..

சிவா.ஜி
17-12-2007, 05:52 AM
அழுக்கும் அழகுதான் ஆதவன் போல..

எங்கே அந்த அழுக்குப் பையன்...??

தாமரை
17-12-2007, 05:53 AM
எங்கே அந்த அழுக்குப் பையன்...??

போயிருக்கிறார் தன்னை துவைத்துக் கொள்ள!

சிவா.ஜி
17-12-2007, 05:56 AM
அகமும் புறமும் துவைத்து ஆதவனாய் வரட்டும்.

தாமரை
17-12-2007, 05:59 AM
அகமும் புறமும் துவைத்து ஆதவனாய் வரட்டும்.

ம்ம்ம்.. சோப்லெட் சாப்பிடப் போறார்னா சொல்றீங்க?:lachen001:

சிவா.ஜி
17-12-2007, 06:01 AM
அய்யய்யோ அப்ப ஆதவா...பாதியாத்தான் வரனும்...என்னங்க தாமரை இது அந்த உடம்பு தாங்குமா....

தாமரை
17-12-2007, 06:08 AM
அய்யய்யோ அப்ப ஆதவா...பாதியாத்தான் வரனும்...என்னங்க தாமரை இது அந்த உடம்பு தாங்குமா....

பாதியாவா இல்லை பேதியாவா?

சிவா.ஜி
17-12-2007, 06:14 AM
பாதியாவா இல்லை பேதியாவா?

அதே அதே....

நுரையீரல்
17-12-2007, 07:14 AM
யப்பா சாமி.. படிக்க படிக்க மனசுக்குள்ள ஒரு துள்ளல் - குமரபுரத்து பாம்புக் கோயில், பரந்தன்.. அது இதுன்னு உங்க பகுதிக்கே கூட்டிப் போயிட்டீங்கய்ய... என்னமோ அங்கயே போய் நேரில பார்ர்குற மாதிரி இருக்கு உங்க காட்சி விவரிப்பு... சூப்பரப்பு...

வாழ்க்கையில் ஒரு தடவையாவது அங்கே வர வேண்டும் என்ற ஆசை வேறு...

சுகந்தப்ரீதன்
17-12-2007, 07:59 AM
அன்பு அண்ணா.. நீங்களும் விவசாய குடும்பமா..? கிராம வாழ்க்கை வாழ்ந்தவரா..? இப்போது நாடுதாண்டி வாழ்வை தேடுபவரா..?- இப்படி எல்லா இடங்களிலும் அண்ணனின் கால்சுவடுகளை பின்பற்றுபவனாகவே நான் இருந்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் உள்ளம் மகிழ்கிறது... ஆனால் அப்பா கேட்க நினைத்து கேட்காமல் போன நிம்மதியை நினைத்தால் எல்லாமே இல்லாமல் போய்விடுகிறது..! பயணம் தொடரட்டும்...வாழ்த்துக்கள் அண்ணா..!

அமரன்
17-12-2007, 09:58 AM
யப்பா சாமி.. படிக்க படிக்க மனசுக்குள்ள ஒரு துள்ளல் - குமரபுரத்து பாம்புக் கோயில், பரந்தன்.. அது இதுன்னு உங்க பகுதிக்கே கூட்டிப் போயிட்டீங்கய்ய... என்னமோ அங்கயே போய் நேரில பார்ர்குற மாதிரி இருக்கு உங்க காட்சி விவரிப்பு... சூப்பரப்பு...

வாழ்க்கையில் ஒரு தடவையாவது அங்கே வர வேண்டும் என்ற ஆசை வேறு...
அண்ணாச்சி நாங்களும் அதுக்காகத்தான் விருப்புடன் காத்திருக்கோம்..
ஒரே ஒரு வித்தியாசம் நங்கள் காத்திருப்பது மறுபார்வைக்காக..

அன்புரசிகன்
17-12-2007, 10:05 AM
அன்பு சுகந்தா.... ஓவியனினது குடும்பம் சைட் பிஸ்னஸ் ஆக செய்வது தான் விவசாயம். ஓவியனது தந்தை ஒரு கல்லூரிக்கு அதிபராக இருந்து தற்சமயம் திட்டமிடல் அலுவலராக இருந்தவர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாரா தெரியாது. ஓவியரின் தாயார் ஒரு சமாதான நீதவான். அத்துடன் ஓவியனின் தாயாரின் தாய் தந்தையர் (அதாவது அம்மம்மா அம்மப்பா அல்லது தாத்தா பாட்டி) ஊரில் மிகப்பிரபல்யம். பயங்கர செல்வாக்கு என்று முதல் பதிவில் கூறியிருக்காரே. அந்த செல்வாக்கின் காரண கர்த்தாக்கள் அவர்கள் தான். எனது தாய் கற்பித்த காலத்தில் அவரின் தாத்தா அதிபராக இருந்திருக்க வேண்டும். இவரது குடும்பம் எனது குடும்பம் மற்றும் இன்னொரு குடும்பம். மூன்றிற்கும் ஒரு தெரியாத தொடர்பு சங்கிலி இருந்திருக்கிறது. ஆனால் அது எனக்கு 2004ம் ஆண்டு தான் தெரியவந்தது. ஆனால் எனக்கு ஓவியனை 2002ல் இருந்தே தெரியும்.

யவனிகா
17-12-2007, 10:06 AM
அழகாகக் போகிறது ஓவியன்..ஆட்டோ பயாகிராஃபி எழுதும் போது ஏற்படும் மனனிறைவே தனிதான்...தொடருங்கள்....நேரமின்மை காரணமாக அதிகமாகப் பின்னூட்டம் எழுத இயலவில்லை. எழுதி முடித்து அச்சிடும் முன் நான் தான் அணிந்துரை குடுப்பேனாக்கும்...

என்னவன் விஜய்
17-12-2007, 10:25 AM
சரி வுடுங்கப்பா... வேணும்னா நான் உடுவிலிலிருந்து தண்ணி அனுப்புகிறேன். தண்ணீர் மட்டும். இதர செலவுகள் உங்களது. :D :D :D

ஆமா ஓவியன் சோடா தொழிற்சாலை எங்கு இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஒன்றுதான். வேறும் உள்ளதா?

சொல்லவே இல்ல......... அங்க நெக்டோ ஒரேஞ்கிரஷ் போட்டலோ ஒலே எல்லாம் உண்டோ? :D :D :D


நாம் அதனை உள்ளூர் தமிழில் சோடா பக்றி என்றுதான் சொல்லுவோம்,இரண்டும் ஒன்றுதான்

அன்புரசிகன்
17-12-2007, 10:38 AM
நாம் அதனை உள்ளூர் தமிழில் சோடா பக்றி என்றுதான் சொல்லுவோம்,இரண்டும் ஒன்றுதான்

ஐயனே நானும் யாழ்ப்பாணம் தான். 2002 வரை அங்கு தான் இருந்தேன். பின் பல்கலைக்கழகம் வந்தாலும் 2006 வரை அங்கு சென்று வந்தேன்.

நான் :D என்று போட்டதை கவனிக்கவில்லையா? நகைச்சுவைக்காக போட்டேன்.

என்னவன் விஜய்
17-12-2007, 10:46 AM
நான் :D என்று போட்டதை கவனிக்கவில்லையா? நகைச்சுவைக்காக போட்டேன்.

அப்படியா..... கவனிக்க தவறி விட்டேன்

அமரன்
17-12-2007, 11:44 AM
அப்படியா..... கவனிக்க தவறி விட்டேன்
சிரிக்கிறவங்களைக் கவனிக்கனும்.
அடிக்கடி சிரிக்கிறவங்களை ஆழமாகக் கவனிக்கனும்..

இரண்டையும் செய்யாவிட்டால் தப்பாயிடும்

சுகந்தப்ரீதன்
17-12-2007, 12:22 PM
அன்பு சுகந்தா.... ஓவியனினது குடும்பம் சைட் பிஸ்னஸ் ஆக செய்வது தான் விவசாயம்...

விவசாயத்த சைட் பிஸ்னஸ்சா பண்ணுறத நான் இப்பதான் அண்ணா முதல் முதல்ல கேள்விபடுறேன்...எல்லாம் நல்லா விளைஞ்சா சரிதான்..!


எனது தாய் கற்பித்த காலத்தில் அவரின் தாத்தா அதிபராக இருந்திருக்க வேண்டும். இவரது குடும்பம் எனது குடும்பம் மற்றும் இன்னொரு குடும்பம். மூன்றிற்கும் ஒரு தெரியாத தொடர்பு சங்கிலி இருந்திருக்கிறது. ஆனால் அது எனக்கு 2004ம் ஆண்டு தான் தெரியவந்தது. ஆனால் எனக்கு ஓவியனை 2002ல் இருந்தே தெரியும்.

அன்பு அண்ணா.. அப்ப இதைவச்சி நீங்களும் ஒரு திரியை ஆரம்பிக்கலாமே.. எங்களுக்கு உங்கள் எழுத்தின் மூலமாகவும் தமிழீழத்தை கண்ட திருப்தி கிட்டுமே..?!

அன்புரசிகன்
17-12-2007, 12:55 PM
விவசாயத்த சைட் பிஸ்னஸ்சா பண்ணுறத நான் இப்பதான் அண்ணா முதல் முதல்ல கேள்விபடுறேன்...எல்லாம் நல்லா விளைஞ்சா சரிதான்..!

அந்த நெற்செய்கையை மையமாக வைத்து ஒரு காதல் காவியமே உண்டு நண்பரே... ஓவியன் அதனை நிச்சயமாக சித்தரிப்பார் என நம்ப மாட்டேன்




அன்பு அண்ணா.. அப்ப இதைவச்சி நீங்களும் ஒரு திரியை ஆரம்பிக்கலாமே.. எங்களுக்கு உங்கள் எழுத்தின் மூலமாகவும் தமிழீழத்தை கண்ட திருப்தி கிட்டுமே..?!

என் எழுத்தின் மூலம் தமிழீழத்தையா? அவ்வப்போது தருகிறேன். இந்த ஈத் லீவில் எனது சென்னைப்பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். :lachen001: அப்புறம் பார்ப்போம்.

ஓவியன்
18-12-2007, 02:14 AM
விவசாயத்த சைட் பிஸ்னஸ்சா பண்ணுறத நான் இப்பதான் அண்ணா முதல் முதல்ல கேள்விபடுறேன்...எல்லாம் நல்லா விளைஞ்சா சரிதான்..![/COLOR]

எப்படிச் சொல்ல சுகந்தா, எனது பெற்றோரின் பெற்றோரும் அரசாங்க ஊழியர்களாகவே இருந்தனர், இருந்தாலும் அவர்கள் விவசாயத்தையும் செய்து கொண்டே இருந்தனர். எல்லோரும் பாடசாலைகளில் வேலை செய்தமையால் மதியம் இரண்டு மணியுடன் வேலை முடிவடைந்துவிடும். பிறகென்ன ஒரேயடியாக வயலில் இறங்கிவிடுவார்கள், அத்துடன் நெற்பயர்ச்செய்கை செய்த வயற்பரப்புக்களின் அளவு அதிகமாக இருந்தமையால் தொழிலாளர்களை வைத்தே புல்லுப் பிடுங்குதல், நாற்று நடுதல், மருந்து விசிறுதல், உரமிடுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்தோம். அங்கே நாம் அதிகமாகப் பார்த்த வேலை கவனமாக நீர்ப்பாசனம் செய்வதும் பயிர்களுக்கு வரும் நோய்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தான். அதானால் வேறு தொழிலுடன் சேர்த்து செய்வது கடினமாக இருக்கவில்லை.

அடுத்து மிக முக்கியமான விடயம் வேறு தொழில்களால் அன்றாட செலவுகளுக்கு மாத்திரமான பணத்தையே பெற முடிந்தது, ஆனால் சேமித்தல் பிற செலவுகளுக்கு நிச்சயமாக விவசாயத்தையே நம்ப வேண்டி இருந்தது.

ஓவியன்
18-12-2007, 02:18 AM
இவரது குடும்பம் எனது குடும்பம் மற்றும் இன்னொரு குடும்பம். மூன்றிற்கும் ஒரு தெரியாத தொடர்பு சங்கிலி இருந்திருக்கிறது. ஆனால் அது எனக்கு 2004ம் ஆண்டு தான் தெரியவந்தது. ஆனால் எனக்கு ஓவியனை 2002ல் இருந்தே தெரியும்.
நிச்சயமாக நாமே அறியாது பின்னிப் பிணைந்த உறவது,(2002 இன் பின்னரே நாமறிந்தது) மூன்று வீட்டிலும் ஒருவரின் பெயர் பொதுவாக இருந்தமையே போதும் அதனை விளங்கிக் கொள்ள....:)

நுரையீரல்
18-12-2007, 07:06 AM
[/COLOR]
அந்த நெற்செய்கையை மையமாக வைத்து ஒரு காதல் காவியமே உண்டு நண்பரே... ஓவியன் அதனை நிச்சயமாக சித்தரிப்பார் என நம்ப மாட்டேன்
ஓவியன் எப்பவுமே எதையுமே மறைக்காமச் சொல்வார். அந்தக் காதல் காவியத்தின் இடையே டூயட் சாங்கெல்லாம் இருக்கா ஓவியன்?

கண்டிப்பா கடைசியில ஒரு சோகப்பாட்டு உண்டு என்பது நிச்சயம். இடையில மட்டும் ஒரு ரீ-மிக்ஸ் டூயட் சாங் போட்டு அசத்துவார் ஓவியன் என்ற நம்பிக்கையில்...

ஓவியன்
18-12-2007, 07:44 AM
ஓவியன் எப்பவுமே எதையுமே மறைக்காமச் சொல்வார்.ஆமா, நீங்க அப்படியா என்னை நம்பிக்கிட்டிருக்கீங்க........??? :D

அந்தக் காதல் காவியத்தின் இடையே டூயட் சாங்கெல்லாம் இருக்கா ஓவியன்?ஏன் இடையே தான் போடண்ணுமா, முன்னே பின்னே போடக் கூடாதா......??? :aetsch013:

கண்டிப்பா கடைசியில ஒரு சோகப்பாட்டு உண்டு என்பது நிச்சயம். இடையில மட்டும் ஒரு ரீ-மிக்ஸ் டூயட் சாங் போட்டு அசத்துவார் ஓவியன் என்ற நம்பிக்கையில்...
:lachen001::lachen001::lachen001:

நுரையீரல்
18-12-2007, 07:53 AM
ஆமா, நீங்க அப்படியா என்னை நம்பிக்கிட்டிருக்கீங்க........??? :D
நான் உங்களை நம்புறேன் என்று நீங்க நம்புறீங்களா...


ஏன் இடையே தான் போடண்ணுமா, முன்னே பின்னே போடக் கூடாதா......??? :aetsch013:
என்ன ஜொல்ல வர்றீங்க...
:lachen001::lachen001::lachen001:

ஓவியன்
18-12-2007, 07:57 AM
என்ன ஜொல்ல வர்றீங்க...
:lachen001::lachen001::lachen001:

அட, இந்தளவு புரிஞ்சுக்குற அளவுக்கு எப்படி முன்னேறீனீங்க ராஜா......?? :aetsch013:
என்னாலே இதை நம்பவே முடியலையே....!!:mini023:

யாரோ சொல்லிக் கொடுத்து எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன் :icon_rollout:

நுரையீரல்
18-12-2007, 08:01 AM
அட, இந்தளவு புரிஞ்சுக்குற அளவுக்கு எப்படி முன்னேறீனீங்க ராஜா......?? :aetsch013:
என்னாலே இதை நம்பவே முடியலையே....!!:mini023:

யாரோ சொல்லிக் கொடுத்து எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன் :icon_rollout:
என்னாலயும் தான் நம்ப முடியல..

உங்க முன்னாடி நானெல்லாம் சாதாரண....

காதல் கதையின் கடைசியில வருகிற சோகப்பாட்டு எப்படி இருக்கும்?

ஓவியன்
18-12-2007, 08:10 AM
காதல் கதையின் கடைசியில வருகிற சோகப்பாட்டு எப்படி இருக்கும்?
அட, சோகமாத்தான் இருக்குமுங்க......!! :aetsch013:

நுரையீரல்
18-12-2007, 08:23 AM
அட, சோகமாத்தான் இருக்குமுங்க......!! :aetsch013:
சோகத்தையும் வேகமாச் சொல்லணுமுங்க...

சுகந்தப்ரீதன்
20-01-2008, 09:40 AM
ஓவிய அண்ணா...! மின்னிதழ் வேலைகள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்..!

சற்று ஓய்வுக்கு பிறகு மறுபடியும் உங்கள் பயணத்தை தொடரலாமே..! ஆவலுடன் அம்பி நான்..!

ஓவியன்
14-06-2008, 04:19 PM
என் சொந்த ஊரைப் பற்றி இன்றைய செய்தி..!!


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 10 க்கு மேற்பட்ட குடியிருப்புகள் நாசமாகியுள்ளன.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பரந்தன் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பல குண்டுகள் வயல்வெளிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மக்கள் பதுங்குழிகளில் பாதுகாப்புத் தேடி நுழைந்ததால் பலரது உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

செய்தி - பதிவு.காம் (http://www.pathivu.com/?p=1190)

:frown: :frown: :frown: :frown:

சிவா.ஜி
15-06-2008, 11:54 AM
ஓவியன் உங்கள் மனதின் பாரத்தை இந்தப் பதிவு அறியத்தருகிறது. போரற்ற அமைதிக்காலையில் கண்விழித்தெழ சொற்ப உயிர்களேனும் மிஞ்சுமா எனத் தவிக்க வைக்கிறது. இருந்தும் நாம் நம்பிக்கையை இழந்துவிடமாட்டோம். நல்ல விடியலைக் காண்போம்.