PDA

View Full Version : புத்தாண்டுக்கவிதை



ஆர்.ஈஸ்வரன்
15-12-2007, 01:47 PM
துப்பாக்கிகள் மரணமாகட்டும்
தோட்டாக்கள் மலடியாகட்டும்
அரிவாள்கள் சைவமாகட்டும்
சிறைகள் அனாதையாகட்டும்
தீவிரவாதிகள் மனம் மாறட்டும்
மதவெறி ஒழியட்டும்
மதநல்லிணக்கம் வளரட்டும்
மனித நேயம் தழையட்டுமென
வேண்டுவோம் வேண்டுவோம்
இப்புத்தாண்டிலே

ஓவியன்
15-12-2007, 03:20 PM
துப்பாக்கி தோட்டாக்கள் மறையவேண்டுமெனின் முதலில் மனிதனை மனிதனாக மதித்து அவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பழக வேண்டும்...

இந்த புத்தாண்டில் அந்த பண்பு எல்லோரிடதும் தளைத்தோங்கட்டும்....

IDEALEYE
15-12-2007, 04:00 PM
நிஜமான தாகம்தான்
ஆனாலும்
அதிகாரம், ஆனவம்,
என எல்லாம் இன்னும்
சீவிக்கும்வரை
எப்படியப்பா....
அன்புடன் ஐஐ

ஆதி
15-12-2007, 05:20 PM
இவையாவையும் இப்புத்தாண்டு கொணரும் எனில் மானுடம் காப்பாற்றப்படும்.. வீடுபேறு பூமியிலேயே கிடைத்துவிடும்..

நல்ல கருவுடன் புத்தாண்டின் வரவு நல்வரவாகட்டும் என நற்கவி நவின்ற ஈஸ்வரனுக்கு என் வாழ்த்துக்கள்..

-ஆதி

ஜெகதீசன்
16-12-2007, 07:33 AM
பிறக்கப்போகும் ஆங்கிலப்புத்தாண்டே
மனைவி எனும் மாயவலையிலிருந்து
வெளியேற்றி சுதந்திர வானில்
என்னை பறக்கவிடுவாயா ??????

இவண்
ஓரு சுதந்திரப் பிரியன் ஜெகதீசன்

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 10:05 AM
பிறக்கப்போகும் ஆங்கிலப்புத்தாண்டே
மனைவி எனும் மாயவலையிலிருந்து
வெளியேற்றி சுதந்திர வானில்
என்னை பறக்கவிடுவாயா ??????

இவண்
ஓரு சுதந்திரப் பிரியன் ஜெகதீசன்

மனைவி இல்லாமல் இரண்டு நாள் வீட்டிலிருந்து உங்கள் வேலைகளை நீங்களே செய்து பாருங்கள். அப்போது தெரியும்.

ஷீ-நிசி
17-12-2007, 03:35 AM
மனிதம் தழைக்கட்டும்!

வாழ்த்துக்கள்!

அமரன்
17-12-2007, 03:27 PM
மனிதர்களிடத்தில் மனிதத்தை நேசிக்கும் தன்மை அதிகரித்தால், அமைதியும் சுபீடசமும் நிறைந்த உலகைக் காணலாம். வரும் புத்தாண்டிலாவது இது நடக்கட்டும். வாழ்த்துகள்.