PDA

View Full Version : என் செல்வப்புன்னகையே...!



வசீகரன்
15-12-2007, 12:51 PM
நிஜமன்றி நீடித்தது நிமிடங்கள்....
நிழலிடை பாரித்தது நீர்த்துளிகள்....

இதயக்கூடு ஒருங்கே இனங்க மறுத்த
இணக்கமற்ற சூழல்...

ஆற்றாமை ஆர்ப்பறித்த அவல நிலை...
அழுகை நிலையில் என் தனிமை....!

சூடு சொற்களில் எனைசுட்டு விட்டாள்....

சூட்டின் வேகம் என் கைகள்....
அவள் கன்னத்தில் தீண்டிவிட்டது...!

வெடித்து சிதறி வெளிச்சென்று விட்டாள்
போடா நீயும் வேண்டாம்... உன் காதல்
புன்ணாக்கும் வேண்டாம்....!

போயே விட்டாள்... !

அகன்று சென்ற பிறகுதான்.... அருகாமையை
மனம் தேடியது....
மழலைமுகத்தை மனம் நாடியது....!

கோபம் சென்ற இடம் தெரியவில்லை...
கோர்வை காட்சிகள்
கோடிட்டிட முடியவில்லை...!

என்னுடன் என்றும் உரிமையாக
சண்டையிடுவாள்...
என் செல்லக்குறும்புகளை சேமித்து
வெட்கப்புன்னகைகளாய்
வெளித்தருவாள்...!

நான் சேமித்த செல்வமாக அவள்
புன்னகையை எண்ணியிருந்தேன்....!

வெற்று புன்னகைகளை பெற்றிருந்த
நேரங்களில்.... வேதனை புண்களை...
உற்றிருந்த காலங்களில்...!

முழுப்பெற்ற மலரது கொண்ட மலர்ச்சியை
முகம்தனில் நிறைந்து..... கடலென விரிந்த
கடாஷம் கண்களில் உறைந்து....

விரல்களால் தலைகோதி....
மனதினின்பாரம் மட்டினில்
மறைந்திட மார்போடு எனை
அனைத்துக்கொண்டவளே...!

மறந்து விடவில்லையடி மனம் நிறைத்த
மாலை வேலைகளை.... மறந்தனையோ....
மதியின் மடியில் மையல்
கதை பேசிய வேளைகளை....!

உனை கேட்டு உழலும் உள்ளம் உறைந்து
போகிறது..... உயிரே.... உடனே வந்து விடு...

என் இரு கைகள் விரித்து நின்று விடுகிறேன்....
உன் கோபம் குறையுமட்டும் என்னை....
கொடுங்கோல் புரிந்து விடு....!

கோபம் உனை வெல்லுமாயின்
எவ்வளவேணும் எனை வென்றுவிடு
தாங்கிக்கொள்கிறேன்.....!

தாபம் உனை வெல்லுமாயின்...
தயங்காமல் வந்துவிடு
இருகைகள் இணைகொண்டு இன்முகத்துடன்
ஏந்திக்கொள்கிறேன்....!

சிவா.ஜி
15-12-2007, 01:00 PM
மெல்லிய மலரொன்று அடிக்கும் காற்றையே தாங்காது,அடிக்கும் கரத்தையா தாங்கும்..?
என்னதான் கோபம் கொண்டு போய்விட்டாலும்,இத்தனை இறஞ்சுதலுக்குப் பிறகு வராமலா இருந்து விடுவாள்.அதற்காக இவ்வளவு முழுநீள இறைஞ்சுதல் தேவையா தம்பி.நீளத்தைக் குறைத்து....ஆழத்தை அதிகப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.சில சொற்பிழைகள் அர்த்தத்தையே மாற்றிவிடும்.கவனிக்கவும்.வாழ்த்துகள் வசீகரா.

சுகந்தப்ரீதன்
15-12-2007, 01:02 PM
உள்ளம் நிறைந்தவளுடன்.. உரிமையுடன் ஊடல்கொண்டு... பின் மனம் கலங்கி கூடலுக்கு ஏங்கும் சராசரி காதலனின் மனநிலையை.. அற்புதமாய் கவிதையில் கொண்டு வந்து விட்டாய் வசீகரா..! எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!

வசீகரன்
16-12-2007, 05:40 AM
நன்றி சிவா அண்ணா விமர்சித்ததற்க்கு.... அந்த நேரத்தில் என் மனம் இருந்த நிலையை
விளக்க நினைத்தேன்......! எழுத உட்கார்ந்தாள் நிறைய எழுதலாம்.....
ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது அறிவு மங்கித்தான் போய்விடுகிறது....
பின் அந்த செயலுக்காக வருந்தினேன்...... அவளை காம்ப்ரமைஸ் பண்ணதான் ரொம்ப
மெனக்கெட வேண்டியதாகிவிட்டது.......!

நன்றி அண்ணா...!

சிவா.ஜி
16-12-2007, 05:47 AM
பின் அந்த செயலுக்காக வருந்தினேன்...... அவளை காம்ப்ரமைஸ் பண்ணதான் ரொம்ப
மெனக்கெட வேண்டியதாகிவிட்டது.......!

நன்றி அண்ணா...!

சமாதானம் ஆகிவிட்டதல்லவா....இந்தக் கவிஞர்களே இப்படித்தான் வெகு சுலபமாய் உணர்ச்சிவயப்பட்டு விடுவார்கள்.என்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வசீகரா.

வசீகரன்
16-12-2007, 05:59 AM
சமாதானம் ஆகிவிட்டதல்லவா....இந்தக் கவிஞர்களே இப்படித்தான் வெகு சுலபமாய் உணர்ச்சிவயப்பட்டு விடுவார்கள்.என்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வசீகரா.


நன்றி அண்ணா.... கவிஞர்கள் என்றாலே..... உணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களா.....!
நான் மிக விரைவிலெல்லாம் கோபப்பட்டு விட மாட்டேன் அண்ணா... எந்த விஷயத்திலும்.....! மிக பாந்தமானவன் என்று அவளே நிறைய தடவை கூறி இருக்கிறாள்....!
நேற்று என்னமோ தெரியவில்லை போங்கள்.....!

வசீகரன்
16-12-2007, 06:23 AM
உள்ளம் நிறைந்தவளுடன்.. உரிமையுடன் ஊடல்கொண்டு... பின் மனம் கலங்கி கூடலுக்கு ஏங்கும் சராசரி காதலனின் மனநிலையை.. அற்புதமாய் கவிதையில் கொண்டு வந்து விட்டாய் வசீகரா..! எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!

நன்றி சுகந்தா....! சிவா அண்ணன் சொன்னது போல இரஞ்சுதல் அதிகமாகத்தான்
போய்விட்டது என நினைக்கிறேன்.....!

மனதில் எண்ணங்களின் வேட்கைகள் அதிகமாக இருந்தது காரணமாகிவிட்டது....

நன்றி சுகந்த்....!

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 06:21 AM
நம்பிக்கை வையுங்கள். காலம் உங்களுக்கு கை கொடுக்கும்

அமரன்
19-12-2007, 06:55 AM
காதல் ஒரு உணர்வு..

முதலில் அது உறைந்திருக்கும்
ஏகாந்தம் அங்கே பிறந்திருக்கும்.

பின்னர் அதற்கு நா முளைக்கும்
கூடல் பிரசவமாக ஊடல் கருத்தரிக்கும்..

அதன்பின் அடிக்கடி பல்முளைக்கும்.
அப்போது அங்கே ஊடல் பிரசன்னமாகும்..

அடிக்கடி என்பது வன்முறையமே.
அடியும், கடியும் வன்முறைதானே
மெல்லுணர்வில் எதற்கு வன்முறை?
சிந்தித்து செயல்பட்டு தித்திப்பு ஆக்குங்கள்.

வசீகர வரிகள் சொக்கவைக்கின்றன.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

செல்வா
19-12-2007, 07:18 AM
அகன்று சென்ற பிறகுதான்.... அருகாமையை
மனம் தேடியது....
மழலைமுகத்தை மனம் நாடியது....!

கோபம் சென்ற இடம் தெரியவில்லை...
கோர்வை காட்சிகள்
கோடிட்டிட முடியவில்லை...!

இதெல்லாம் தினசரி நமக்கும் நடக்குறது தான்... ஹி..ஹி...
அடிப்பது தவறு எனக்கொண்டால்... மன்னிப்பு கேட்பதும் தவறில்லை...
ஆனால் அடிப்பதும் அணைப்பதும்... காதலில் சகஜமப்பா.....

ஆதி
19-12-2007, 09:43 AM
உணர்ச்சியின் முழுவெளிபாட்டுக்காய் கட்டமைப்பில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை எனக்கருதுகிறேன்..

கவிதை அருமை.. வசீகரன்... வாழ்த்துக்கள்..

-ஆதி

வசீகரன்
19-12-2007, 10:31 AM
காதல் ஒரு உணர்வு..


அடிக்கடி என்பது வன்முறையமே.
அடியும், கடியும் வன்முறைதானே
மெல்லுணர்வில் எதற்கு வன்முறை?
சிந்தித்து செயல்பட்டு தித்திப்பு ஆக்குங்கள்.

வசீகர வரிகள் சொக்கவைக்கின்றன.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பாராட்டியமைக்கு நன்றிகள் அமறரே....! அதிக
உணர்வுப்பாடுகளில் விழும்போது
மெல்லுணர்வில் வல்லுணர்வும் தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது.....!

வசீகரன்
19-12-2007, 10:37 AM
இதெல்லாம் தினசரி நமக்கும் நடக்குறது தான்... ஹி..ஹி...
அடிப்பது தவறு எனக்கொண்டால்... மன்னிப்பு கேட்பதும் தவறில்லை...
ஆனால் அடிப்பதும் அணைப்பதும்... காதலில் சகஜமப்பா.....

உண்மைதான் நண்பரே.....!

நன்றிகள் கருத்திட்டமைக்கு....!

வசீகரன்
19-12-2007, 10:44 AM
உணர்ச்சியின் முழுவெளிபாட்டுக்காய் கட்டமைப்பில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை எனக்கருதுகிறேன்..

கவிதை அருமை.. வசீகரன்... வாழ்த்துக்கள்..

-ஆதி

மிக்க சரி கவித்தென்றல் ஆதி அவர்களே.....! எனது உணர்வு வெளிப்படுகளை
மட்டும் சொல்லியிருந்தேன்.... கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை....!
மன்னிக்கவும்....!

கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள்...!