PDA

View Full Version : ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் .. சத்தியநார



தேவிப்ரியா
15-12-2007, 12:39 PM
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் .சத்தியநாராயணா அறிவிப்பு
December 15th, 2007

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆவல் பிரதிபலித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார், மதிப்பு வைத்திருக்கிறார்.

ஆனால் நமது சூப்பர் ஸ்டாரின் விருப்பம் அரசியல் அல்ல. நமது எண்ணங்களை அவர் மீது திணிக்க முடியாது.

விஜயகாந்த் அல்லது பிற நடிகர்களின் அரசியல் கட்சிகளையும், வளர்ச்சியையும், சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்த் வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதில் அர்த்தம் இல்லை.

விஜயகாநத்தின் கடும் உழைப்பு, அயராத முயற்சி ஆகியவை அவரது வளர்ச்சிக்குக் காரணம். ஆனால் நமது சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் எண்ணம் இல்லை. எனவே விஜயகாந்த் போல சூப்பர் ஸ்டாரும் அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பாரப்பது சரியாக இருக்காது.

மேலும் அரசியலில் நுழைந்தால் தேவையில்லாத மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டி வரும், இப்போது விஜயகாந்த் சந்தித்து வருவதைப் போல. இதையல்லாம் கருத்தில் கொண்டே இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் சத்யநாராயணன்.

AOL/tamil//