PDA

View Full Version : பாரத விலாசில் பூ...!!-நிறைவு



பூமகள்
15-12-2007, 10:20 AM
பாரத விலாசில் பூ...!!


தலைப்பு வித்தியாசமா இருக்கு தானே...!! ஆமாம்.. பாரத விலாஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டீங்க..!:D
பல தரப்பட்ட மாநில மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு படம். இதில் பூவுக்கு எங்கே வேலை இருக்குன்னு தானே கேக்குறீங்க??:aetsch013:

அதைச் சொல்லத்தான் இந்த பதிவு.:icon_b:

பூவின் இப்போதைய பாகுபாடற்ற சகோதரத்துவத்தையும், அன்பையும் பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் வந்திருக்கும். அதற்கான அடித்தளம் ஏற்பட்டது அன்றைய என் வளர் பருவத்து சூழல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.:icon_ush:

ஒவ்வொரு குழந்தையின் எண்ணவோட்டமும், திறமையும் அந்தக் குழந்தை வளரும் சூழலையும் பொறுத்தது என்று சொல்வாங்க.

அந்த மாதிரி ஒரு அன்பான சூழலில் வளர்ந்தது தான் நான் செய்த பாக்கியம்.:)

நான் பிறந்து ஒரு 4 வயது வரை ஒரு ரூமில் கால் பங்கு தடுத்து சமையல் அறையாய் ஆகிய ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் தான் வளர்ந்தேன். பின்பு, வாடகை ஏற்றத்தால் அதே வீதியில் ஒரு மூன்று அறைகள் இருக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். (அதில் இரு அறைகளைச் சேர்த்தால் ஒரு அறை அளவு தான் வரும்). ஆயினும், அப்போது அதுவே அரண்மனை தான். அது 5 வீடுகள் தொகுப்பாய் கொண்ட ஒரு காம்பவுண்ட் வீடு. என் வீடு இருந்த வரிசையில் என் வீடோடு சேர்த்து இரு வீடுகள்.

எதிர்புறம்.. எங்க நான்கு வீடுகளுக்கும் உரிமையாளர் அதாவது ஓனர். அவர் வீடு ஒட்டி இரு வீடுகள். மொத்தத்தில் 5 வீடுகள். இரு வீடுகள் எதிரில் 3 வீடுகள்.

என் வீட்டுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு வயதான பாட்டி தாத்தா.. தெலுங்கு பேசுபவர்கள். நாரயணாவையே சதா துதிப்பவர்கள். இந்த பாட்டி தைத்துக் கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு சின்ன வேலை. இருவரும் அன்யோன்ய தம்பதிகள். இவர்களை எப்பவுமே "தையல் பாட்டி" என்று தான் சொல்வோம். இன்று வரை இந்த பாட்டியின் நிஜப்பேயர்
தெரியாது.

அப்புறம், எங்க வீட்டுக்கு நேரெதிரில் இருக்கும் வீட்டு உரிமையாளர் வீடு. எங்க இருவரின் கதவுகளையும் திறந்து அவங்க வீட்டிலிருந்து கடைசி அறையிலிருந்து பார்த்தால் எங்க வீட்டின் சமையல் அறை கடைசி வரை தெரியும். அவ்வளோ நேராக எதிரில் அமைந்த வீடு.

இவங்க கேரளாவிலிந்து வெகு நாட்கள் முன் வந்த மலையாளர்கள். அன்பான உள்ளங்கள். வீட்டுக்கார அக்காவினை நான் இன்று வரை "சேச்சிக்கா" என்று தான் அழைப்பேன்.

அவர்களின் வீட்டுக்கு ஒட்டிய வீடு எங்கள் போலவே ஒரு தமிழர் வீடு. அவர்கள் வீடு ஒட்டிய வீட்டில் ஒரு பேங்க் ஆபிசர் இருக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தினர் வீடு.

5 வீட்டு கணக்கும் கூட்டிக் கழிச்சி சரியா வந்திருக்கா பாருங்க??

அடுத்து எங்க தொகுப்பு வீட்டுக்கு அருகிலேயே அமைந்திருந்தது இன்னொரு மூன்று வீடுகள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த சுவர் இடைவெளியும் இல்லை. பிரதான கதவுகள் மட்டுமே தனித்தனியாய்..

அதில் முதல் வீட்டில் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். அந்த அற்புதமான தமிழ் மணத்துடன் அன்பான நபர்கள். அவர்களுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு 50 வயது நெருங்கும் வயோதிக கிருத்துவ தம்பதிகள். இவர்கள் குடிவருகையில் ஒளிந்து பார்த்து பின் மெல்ல மெல்ல பம்மிச் சென்று "பாட்டி" என்று அழைக்க, அவங்க தன்னை "மம்மி" என்று அழைக்கச் சொல்ல, இன்று வரை அன்பினால் பிணைந்து விட்டு நீங்காத அந்த தம்பதிகள் மம்மி-டாடி என்றே மனத்தில் நிலைத்துவிட்டனர்.

அடுத்து, அவர்களின் அருகில் இருக்கும் வீட்டில் எங்க வீதியில் மளிகைக் கடை வைத்து ஓஹோ என்று வியாபாரம் செய்த ஒரு புதுமண இஸ்லாமிய தம்பதிகள். செல்லமாய் இவர்கள் குடும்பத்தை "பாய்" வீடு என்றும் இவர் கடையை "பாய் கடை" என்றுமே அழைப்போம்.

இவ்வாறு மொழி, மதம் வேறுபாடுடைய வித்தியாசங்கள் நிறைந்த மனிதர்களோடு தான் என் வாழ்வின் மிக நீண்ட இடைவெளியாக 14 வருடங்கள் கூட்டுப்புழுவான நான் பட்டாம்பூச்சியாய் வளர்ச்சிதைமாற்றம் பெற அன்யோன்யமாய் தாய்-பிள்ளை போல வளர்ந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா??

இதனால், இந்த குடியிருப்பை செல்லமாய் நான் "பாரத விலாஸ்" என்று அழைப்பதில் பிழையும் உண்டோ...??!!


(விலாசமாகும் இன்னும்)

பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=312082&postcount=35)

பாகம் 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313082&postcount=72)

தாமரை
15-12-2007, 11:10 AM
நல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..

அமரன்
15-12-2007, 11:10 AM
(விலாசமாகும் இன்னும்)


ஓ...
உங்கள்
சகோதரத்துவத்தின் விலாசம்
பாரத விலாஸ்தானா..
பாராட்டுகள் பூமகள்..

விலாசம் விசாலமாவது
எப்போது

யவனிகா
15-12-2007, 11:12 AM
பிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

உன்னைப் போல தான் நானும்.நானும் என் தங்கையும் பள்ளியிலிருந்து வரும் போது என் அம்மா இருக்க மாட்டார்கள்.அம்ம வரும் வரை பக்கத்து வீட்டில் தான் இருப்போம். பக்கத்து வீட்டு அக்காவின் பெயர் ஜெயா. அவர்கள் வீட்டு சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் தான் இன்று
வரை எனக்கு அண்டைவீடு.

என் மூத்த மகனின் பிரசவத்தின் போது, நான் வலியில் அழுவது பார்க்க முடியாமல் என் அம்மா கூட லேபர் வார்டிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். கடைசி வரை என்னுடன் இருந்தது ஜெயா அக்கா தான். அதனாலோ என்னமோ என் மூத்தமகனை
3 வயது வரை வளர்த்ததும் அவர்கள் தான், இவனும் அங்கேயே பழியாய் கிடப்பான்...இப்பவும் ஊரிலிருந்து யார் வந்தாகும் அவர்களின் ஸ்பெசல் சாம்பார் பொடி, முறுக்கு இத்யாயிகள் இங்கே வந்து விடும். ஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா? பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.

மலரும் நினைவுகள் பகிரத் தூண்டிய பதிவு பூ இது, நன்றி.

தாமரை
15-12-2007, 11:14 AM
ஓ...
பாரத விலாஸ்தான்
உங்கள் சகோதரத்துவத்தின் விலாசமோ..
எப்போது
விலாசம் விசாலமாகும்..

என்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா?

அமரன்
15-12-2007, 11:16 AM
என்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா?
விசாலம்,அழகு, முகவரி எல்லாம் தெரிந்திருச்சு.:)
எனது விலாசம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா:lachen001:

சிவா.ஜி
15-12-2007, 11:21 AM
பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.


தங்கையே...உங்களை நினைத்து மிக மிகப் பெருமைப்படுகிறேன்.இப்படிப்பட்ட தங்கைகளை எனக்குக் கொடுத்த இந்த மன்றத்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.வாழ்த்துகள்.

அமரன்
15-12-2007, 11:25 AM
பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
பெருமைபடவைக்கும் விடயம். பாராட்டுகள்.. சின்னவனின் சின்னத்தனமொன்று..
மத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..

தாமரை
15-12-2007, 11:36 AM
பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.



என்னதான் 10 குழந்தை பெற்றிருந்தாலும் எந்தத் தாயும் தன் மகள் பிரசவத்தின் போது தைரியமாய் இருப்பதில்லை சகோதரி.. என் தாயும் அப்படித்தான், மாமியாரும் அப்படித்தான்..

அவர்களாய் அறிந்து கொண்டு கேட்கும் பொழுதுதான் கேட்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் ஆழமாய் பதியும். தவறின்றி உணரவும் முடியும். இல்லையெனில் கோவில் கடந்தால் கை வணங்க, கண் மூடி விட்டு காரியம் பார்க்கும் அனிச்சை செயலாகி விடும்.

அதனாலேயே பல நல்ல விஷயங்கள் அலட்சியப்படுத்தப் படுகின்றன.

ஒரு நல்ல விஷயம் பேசினால் பத்து நல்ல விஷயம் வெளியே வருகிறதே!

பூமகள்
15-12-2007, 11:57 AM
நல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..
முதல் பின்னூட்டமே மலர்களின் அரசரிடமிருந்து..!
மிகுந்த நன்றிகள் அண்ணா. :)

விலாசம் விசாலமாவது
எப்போது
எப்போதுமே அது விசாலமாகிட்டு தான் இருக்கு அமர் அண்ணா!!:D
உங்களுக்கு புலப்படாததா அண்ணா??:icon_b:

சிவா.ஜி
15-12-2007, 12:05 PM
படிக்கத்தூண்டும் மலரும் நினைவுகள்.ஒண்டுக்குடித்தனமென்பது பல விஷயங்களின் அனுபவங்கள் கிடைக்கும் ஒரு பல்கலைகழகம்.அப்படி அனுபவம் பெற்றவர்களில் ஒருவன் என்ற முறையில் என் நினைவுகளும் பின்னோக்கிப் போகக் காரணமாக இந்தத் திரி இருக்கிறது.சிறிய வீடுகளுக்குள் விசாலமான மனங்கள்,உயர்வான உறவுகள்.தொடரும்மா பூ....கூடவே வருகிறோம்.

பூமகள்
15-12-2007, 12:06 PM
பிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.
யவனி அக்கா...!!
நிஜமா உங்க அன்புக்கு நான் என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன். உங்களின் அன்பான ஊக்கமும் பாசமும் என்னவென்று சொல்லுவேன்...!
மனம் நெகிழ்ந்து கூப்பிடுகிறேன்.. "அக்கா........!!" மிக்க நன்றிகள் அக்கா. :)

ஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா? பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.
எத்தனை பெரிய மனது உங்களுக்கு!!!!:sprachlos020::)

இதைப் படிக்கும் போது வானம் அளவு என் மனத்தில் நீங்கள் உயர்ந்து விட்டீங்க அக்கா.. !!:icon_rollout:

மதத்தின் பெயரால் அடிச்சிட்டு, எல்லைக் கோடிட்டு பேசிப் பேசி தீராத ஒன்று, எவ்வளவு அழகாய் கையாண்டு அன்பின் மூலம் வென்றிருக்கிறீர்கள்...!! :icon_b:

கடவுள் ஒன்று தான். இதில் அவரவர் நம்பிக்கை படி விதவிதமாய் வழிபடுகிறோம். பிஞ்சுகளின் மனத்தில் அந்த வேறுபட்ட வழிபாடு கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் எண்ணப்படி, எல்லாக் கடவுள்களும் ஒன்றே..!

மிக சிறந்த குழந்தைகளாக உங்கள் குழந்தைகள் திகழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை அக்கா.

பூமகள்
15-12-2007, 12:12 PM
படிக்கத்தூண்டும் மலரும் நினைவுகள். சிறிய வீடுகளுக்குள் விசாலமான மனங்கள்,உயர்வான உறவுகள்.தொடரும்மா பூ....கூடவே வருகிறோம்.
மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)

விசாலமான அன்புள்ளம் கொண்ட அன்பு அண்ணாக்கள் இருக்கையில் எனக்கு என்றுமே கவலை இல்லை அண்ணா. :D

எனது மூவாயிரமாவது பதிவில் கேட்ட பாரதி அண்ணாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய திருப்தி. :icon_rollout:

ஓவியன்
15-12-2007, 01:06 PM
பூமகள்..!!

கடந்த காலங்களை அசைபோடுவதும் சுகம், அதை வரிகளாக்கி மற்றவரறிய வைப்பதும் சுகம்...
நல்ல ஞாபசக்தியுடன், தேர்ந்த நடையுடன் தொடங்கியுள்ள உங்கள் நினைவுப் பயணம் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்..!!

யவனிகா
15-12-2007, 01:25 PM
மத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..

அது தான் எப்படி என்று தெரியவில்லை...சரியான முரண்பாட்டு மூட்டை இந்த விசயம்.

சுகந்தப்ரீதன்
15-12-2007, 01:38 PM
கோவை சகோதரிகளை கும்பிடுவதா..? கொண்டாடுவதா..? என்று தெரியவில்லை.. உங்கள் இருவரின் பதிவிலும் உள்ளம் நெகிழ்கிறது.. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. என் அருமை சகோதரிகளே..!

தாமரை
15-12-2007, 01:40 PM
அது தான் எப்படி என்று தெரியவில்லை...சரியான முரண்பாட்டு மூட்டை இந்த விசயம்.

நான் சிறுவயதில் இருந்து கடைபிடித்து, இன்று என் குழந்தைகளுடனும் கடைபிடிக்கும் விஷயம், எல்லாவற்றையும் தெரிந்துகொள் என்பது. கீதையும் படி, பைபிளும் படி, குரானும் அறி, எல்லாவற்றையும் படி.. எல்லாமே மனிதர்களின் அனுபவங்கள்தான்...

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏன் என்ற கேள்வி மனதை அரிக்க ஆரம்பிக்கிறது... எதுசரி, எது உண்மை என்னும் கேள்விகள் அரிக்கும் பொழுது நம்பிக்கை உடைந்து நம்பிக்கை இன்மை ஆரம்பிக்கிறது. அது ஒரு தேடலை ஆரம்பித்து வைக்கிறது. ஒரு தெளிவு உருவாகிறது.. கடவுள் ஒன்றும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல, படித்து உணர்ந்துகொள்ள என. கடவுளைத் தேடி உள்ளம் ஓட ஆரம்பிக்கிறது.. படித்தவை தம்முள் மனதிற்குள் சண்டையிடுவது நின்று தெளிவு பிறக்கிறது.. அப்பொழுது கடவுளை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விடுகிறோம்.

மனசு அப்பொழுது சுத்தமாகி விடுகிறது.. ஒரே ஒரு பிரச்சனை, இந்த மாறுதல் நடக்கத் தொடங்கும்போது மரணபயம் ஒன்று வரும் பாருங்கள்.. அதுதான்.ஆனால் அந்த நிலையைக் கடந்து வந்து விட்டால் அதை விட நிம்மதியான உலகம் வேறொன்றுமில்லை.

புரிகிறதா?

IDEALEYE
15-12-2007, 01:50 PM
எப்படி முடிகின்றது பூ
இப்படியொரு காம்பினேஷன்...
வாழ்த்துக்கள்
ஐஐ

மயூ
15-12-2007, 02:10 PM
கலக்கலான தொடக்கம்... பல்லினச் சமூகத்தில் வாழ்வதே ஒரு கொடைதான்... !!! :)

lolluvathiyar
16-12-2007, 05:44 AM
முற்றிலும் உன்மை பூமகள் நீ வளர்ந்த இடம் பாரத விலாஸ்தான். நகர வாழ்கையில் தான் இதை அனுபவிக்க முடியும், நான் கிராமத்தில் வளர்ந்ததால் இதை அனுபவிக்க வில்லை. எங்களை சுத்தியும் எங்க சாதிகாரங்கதான் அதிகமா இருப்பாங்க. நீங்க சொன்ன அமைப்பு போல டவுனில் உள்ள உறவினர்கள் வீட்டுதான் போயிருக்கேன்.



என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா? பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.

நெகிழ்ந்து விட்டது யவனிக்கா, வளர வளர அவர்கள் தானாக தெரிந்து கொள்வார்கள். நாமாக வேற்றுமையை தினிக்க கூடாது.

பூமகள்
16-12-2007, 06:31 AM
நல்ல ஞாபசக்தியுடன், தேர்ந்த நடையுடன் தொடங்கியுள்ள உங்கள் நினைவுப் பயணம் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்..!!
வாழ்த்துக்கும் பின்னூட்டம் கொடுத்து தங்கையை ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

உங்கள் இருவரின் பதிவிலும் உள்ளம் நெகிழ்கிறது.. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. என் அருமை சகோதரிகளே..!
சகோதரர் ப்ரீதா..!!

உங்களின் அன்பு கண்டு மனம் மகிழ்கிறது. தமிழ்மன்றம் தந்த உங்களைப் போன்ற பல நல் வைரங்களுள் ஒரு வைரம் என் சகோதரி அன்பு யவனி அக்கா. இவர் மனம் பல கோணங்களில் என்னோடு ஒத்துப் போனது.. மிக அதிசயமான பந்தம். :D

உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள் ப்ரீதா..! :)

பூமகள்
16-12-2007, 06:34 AM
எப்படி முடிகின்றது பூ
இப்படியொரு காம்பினேஷன்...
வாழ்க்கை சில சமயம் பலதடவை நமக்கு கொடுக்கும் பல பொக்கிசங்களை சரியாக புரிந்து நடந்தோமென்றால் பல அற்புதங்களைக் காணலாம். அப்படித்தான் இதுவும் என்று நினைக்கிறேன் சகோதரர் ஐடியல் ஐ.

உங்களின் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

கலக்கலான தொடக்கம்... பல்லினச் சமூகத்தில் வாழ்வதே ஒரு கொடைதான்... !!! :)
மிகச் சரியான கூற்று மயூ. பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கற்று வளரும் குழந்தைகளுக்குள் யார் முனைந்தாலும் வேற்றுமை விஷத்தை விதைக்கவே முடியாது.:icon_b:

உங்களின் பாராட்டுக்கு நன்றிகள் மயூ. :)

மதி
16-12-2007, 06:39 AM
அட்டகாசமான ஆரம்பம்..பூமகள்..
உண்மையிலேயே பாரத விலாஸ் தான். இன்றும் சிறுவயது நினைவுகளை அசைப்போடுவது சுகம் தான்.. மேலும் தொடருங்கள்..

உங்கள் நினைவுகள் மேலும் பலரின் நினைவுகளைத் தூண்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. யவனி அக்கா உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவர்.

பூமகள்
16-12-2007, 06:40 AM
முற்றிலும் உன்மை பூமகள் நீ வளர்ந்த இடம் பாரத விலாஸ்தான். நகர வாழ்கையில் தான் இதை அனுபவிக்க முடியும், நான் கிராமத்தில் வளர்ந்ததால் இதை அனுபவிக்க வில்லை.
உண்மை தான் வாத்தியார் அண்ணா.

கிராமங்களில் தன் பிறப்பின் பெயரால் முதலிலேயே பிரித்துப் பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். ஆனால், நகரத்தில் அவை அந்த வீரியத்தில் இருக்காது என்பதும் உண்மை.

கிராமத்து மனிதர்களிடம் இன்று பேசினாலும், முதலில் கேட்பது, நீங்க எந்த கூட்டத்தைச் சேர்ந்தவங்க..? எந்த குலத்தைச் சேர்ந்தவங்க? என்று தான். அதன் பின் தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். அப்படியான அபத்தமான கேள்விகள் நகரத்தில் அதிகம் இருப்பதில்லை என்பது ஆறுதல்.

பூமகள்
16-12-2007, 06:56 AM
அட்டகாசமான ஆரம்பம்..பூமகள்..
உண்மையிலேயே பாரத விலாஸ் தான். இன்றும் சிறுவயது நினைவுகளை அசைப்போடுவது சுகம் தான்.. மேலும் தொடருங்கள்..
உங்கள் பதில் பார்த்து அகம் மகிழ்ந்தேன் மதி அண்ணா. அந்த சிறு வயது நினைவுகள் இன்னும் இன்னும் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. உங்களோடு பகிர்ந்து கொள்ள மனம் துள்ளுகிறது.

மிக்க நன்றிகள் மதி அண்ணா.:)

தங்கவேல்
16-12-2007, 07:11 AM
பூமகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வீட்டுக்காரரின் தொல்லையால் குடி வந்து ஒரு மாதத்திலேயே கசா முசாவாகி விட்டது.

பூமகள்
16-12-2007, 07:17 AM
பூமகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வீட்டுக்காரரின் தொல்லையால் குடி வந்து ஒரு மாதத்திலேயே கசா முசாவாகி விட்டது.
ஆமாம் னா..! நல்ல பொண்டாட்டி அமைவது மட்டுமல்ல... நல்ல வீட்டு ஓனர் அமைவதும் இறைவன் விதிப்படிதானோ??!!:icon_rollout:

என் அதிர்ஸ்டம். இது வரை இருந்த எல்லா வீட்டு ஓனர்களுமே குடும்பத்தினர் போலவே நடத்தினர். அது இன்னும் ஆறுதலான விசயம்.

ஆனால், நிறைய பேரின் நிலை தாங்கள் சொன்னது போல் தான் இருக்கிறார்கள். அதிகாரம் நிறைந்து குடியிருப்போரைப் பார்க்கும் பார்வை நிறைய பேருக்கு இன்னும் மாறவில்லை என்பது வேதனை அளிக்கிறது. :frown:

தங்கவேல்
16-12-2007, 07:27 AM
மாதம் 2750 ரூபாய் வாடகை. நல்ல தண்ணீருக்கு 200 ரூபாய். மோட்டாருக்கு ( அவர் வீட்டு கரண்டு பில்லுடன் இணைந்தது ) ரூபாய் 100 என்று மொத்தமாக 3050 ரூபாய் வாங்குகின்றார். அத்துடன் நல்ல தண்ணீரை அதிகம் பயன் படுத்தக் கூடாது என்று வேறு சொன்னார். நான் படுத்திய பாட்டில் மனிதர் மண்டை காய்ந்து விட்டார். இதன் விளைவு சொந்த வீட்டுக்கு குடியேற்றம் விரைவில்.

என்ன பிரச்சனை என்றால் ஒன்றாம் தேதியே வாடகை தந்து விடவேண்டும் என்று அகராதி பேசினார். நாம சும்மா இருப்போமா, சரியான ரவுசு விட்டதில், மனிதருக்கு ஆடிப்போய்விட்டது. அடங்கி ஒடுங்கி போய் நொந்தபடி திரிகின்றார் இப்போது. இது எப்படி இருக்கு !!

இதயம்
16-12-2007, 07:31 AM
மத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..

முரண்படுகிறது அமரன்..! நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை தான் மதங்கள் என்பதால் மதங்களுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் வேறுபாடு இல்லை.!!

(பூவின் இப்பதிவு தொடர்பான பின்னூட்டம் விரைவில் இடுகிறேன்).

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 10:15 AM
எதையும் எதார்த்தமாக எழுதும் உங்களிடத்தில் எப்படி பிழை கண்டுபிடிப்பது

பூமகள்
16-12-2007, 04:17 PM
(பூவின் இப்பதிவு தொடர்பான பின்னூட்டம் விரைவில் இடுகிறேன்).
விரைவில் எதிர்பார்க்கிறேன் இதயம் அண்ணாவ்..!!:)

பூமகள்
16-12-2007, 04:32 PM
எதையும் எதார்த்தமாக எழுதும் உங்களிடத்தில் எப்படி பிழை கண்டுபிடிப்பது
நன்றிகள் ஈஸ்வரன். :)

ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்களின் பெரும்பான்மையான பதிவுகளில் முழுதையும் கோட் செய்து பதிலிடுகிறீர்கள். அது பல சமயங்களில் அவசியமற்றது என்பது மன்ற பொறுப்பாளர்களின் கருத்து மற்றும் அது வெறுமனே இடத்தை தான் அடைத்துக் கொண்டு இருக்கும்.
இங்கு கூட உங்க கருத்தை மட்டும் இடுங்கள். தேவைப்படும் வரிகள் மட்டும் கோட் செய்து பதிலிட விரும்பின் பதிலிடுங்கள்.

நுரையீரல்
17-12-2007, 07:42 AM
ஆகா... ஆகா... என்னவொரு அருமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் அன்புத் தங்கை...

எனக்கு தமிழறிவு கம்மி என்பதால், என் ஸ்டைலிலேயே பின்னூட்டம் அளிக்கிறேன் பூமகள்..

பாரதவிலாஸ் படம் வரும்போது நம்முள் இருந்த பிரிவினையைக் காட்டிலும் இன்று அதன் கோரம் ஓங்கியிருக்கிறது.. அறிவியல் வளர்ச்சி, அடுத்தவன் வளர்ச்சி மேலுள்ள பொறாமை ஆகியவை நம்முள் ஆற்றாமையாய் வளர்கிறது... இந்த இயலாமையை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் வழி தான் மதக்கலவரமோ என்று பல நாள் யோசித்திருக்கிறேன்...

உங்களுடைய கதைக்கரு, அது நகரும் இலக்கு இரண்டையும் புரிந்தமட்டில் - பதிப்பு நவீன காலத்தில் வாழும் மக்களுக்குள் மத வெறியை அழிக்க பாடுபட்டாலும், மனிதனின் வெறி ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே தானிருக்கும்...

ஆசையே துன்பத்திற்கு காரணம்... ஆசைகளை அடக்கிக் கொள்ளக்கூட ஆசைப் பட வேண்டும் போல் ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

விரைவில் பாரதவிலாசின் அடுத்த பாகத்தை தொடரவும்... உங்க பதிப்பை லேட்டா படிச்சாலும், லேட்டஸ்டா பின்னூட்டம் கொடுத்த சந்தோஷம் எனக்குண்டு... ரொம்ப நல்ல இருக்கு உங்க அனுபவப் பகிர்வு...

பூமகள்
17-12-2007, 08:50 AM
மிக்க நன்றிகள் ராஜா அண்ணா.
என் பதிவுக்கு உங்களின் பதில் கண்டதுமே ஒரு பெரிய சந்தோசம் என்னுள் ஏற்பட்டது. :)

உங்களின் ஒவ்வொரு கருத்தும் ஏற்புடையதே..!

அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார போராட்டமும் மனிதரிடையே வளர்த்துவிட்டது போட்டியையும் பொறாமையையுமே தான்.
அன்புக்கு நேரமின்றி காலத்தை காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

இந்த காலகட்டத்தில் வாழும் சிறப்பான அடித்தளத்தை எப்படி என் மழலைப் பருவம் எனக்கு கற்றுக் கொடுத்தது என்று இங்கு விவரிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

உங்களின் அன்பு வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுகிறேன் அண்ணா.

இப்போது தான் எழுதிட்டே இருக்கேன்.


அன்புத் தங்கை,

பூமகள்
17-12-2007, 01:35 PM
பாரத விலாசில் பூ..!! - 2



இந்த மாதிரி ஒரு பலவிதங்களில் மாறுபட்ட மனிதர்களோடு தான் என் இளமைப் பருவம் செதுக்கப்பட்டது. அப்போது எங்க காம்பவுண்டில் என்னை விட இளைய குட்டீஸ்கள் அதிகம். பெரிய பசங்களும் அதிகம். எங்க தொகுப்பு வீடு தான் அந்த வீதிக்கே ஒரு முன்மாதிரியாக இருந்தது.


சதா ஏதோ ஒரு காரணங்களுக்காக அக்கம் பக்கத்தோடு பிரச்சனை செய்து பேசாமலே இருக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்..! ஆனால், எங்கள் காம்பவுண்டில் இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வராதது ஆச்சர்யம் மட்டுமல்ல வரமும் தான்..!

அப்பவெல்லாம் எங்க ஊரில் எல்லா இடத்துக்கும் வருவது சிறுவாணித் தண்ணீர் தான்.(இப்ப பில்லூர் டேம் தண்ணியும் சில ஏரியாக்கு விடுறாங்க..!) அதுவும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும். 5 வீடும் அந்த தண்ணீரை சண்டையே இல்லாமல் பிடித்துக் கொள்வது ஆச்சர்யம் தானே??


எங்க ஊரு சிறுவாணித் தண்ணியை ஒரு தடவ குடிச்சி பார்த்தீங்கன்னா... அப்புறம்.. ஊருக்கே போகவே மாட்டீங்க...! இங்கையே தங்கிடுவீங்க..!! அந்த அளவு கற்கண்டு இனிப்போடு ஃப்ரிஜ் வாட்டர் கணக்கா ஜில்லுன்னு இருக்கும்..!!

எங்க 5 வீட்டு தொகுப்பில் என் வீட்டு வரிசையில் இரு வீடுகள் தான் இருந்ததால்.. ஒரு வீட்டு அளவு காலியிடம் இருந்தது. அதில் அடுப்பு மூட்டி எங்க வீட்டு ஓனர் "சேச்சிக்கா", சாதம் வடிப்பது முதல் சுடுநீர் வைப்பது வரை விறகு கொண்டு செய்து வந்தார். அவர்கள் கேரளா என்பதால் பெரும்பாலும் பலாப்பழத்துக்கும் அதன் கொட்டைக்கும் அவங்க வீட்டில் பஞ்சமிருக்காது. பழத்துடன் தேன் ஊற்றி சாப்பிட்டா.. அப்பப்பா.. சூப்பரோ சூப்பர் தான்..!!


அந்த பலாக் கொட்டைகளை காலி இடத்தில் இருக்கும் அடுப்புக்குள் போட்டு சுட்டு, சாதம் வடித்து இறுதியில் தணல் குறைந்ததும் எடுத்து ஊதி ஊதி எங்க காம்பவுண்ட் வாண்டுகள் அத்தனை பேரும் சாப்பிடுவோம் பாருங்க.. இந்த கால பீசா எல்லாம் அந்த சைட் நிக்கனும்.. முருகன், ஔவையாருக்கு சொன்ன, சுட்ட பழம் இது தானோ என்று ஒரு கணம் நினைக்க வைக்கும்..!!:rolleyes::rolleyes:


இன்னிக்கும், பலாக் கொட்டை கிடைச்சா.. மைகோதியில் கொட்டையை சொறுகி, கேஸில் சுட்டு சாப்பிட்டாலும் அந்த சுவை வரவே மாட்டீதுங்க....!!:icon_rollout::frown::frown:


உங்க கற்பனைக்கு இமேஜின் பண்ண எங்க தொகுப்பு வீடுகள் பற்றி தெளிவா ஒரு அவுட் லைன் தந்து விளக்குகிறேன். எங்க காம்பவுண்ட் வாசல் L வடிவில் இருக்கும். இதில் Horizontal கோடுக்கு இந்தப் புறம் 2 வீடுகளும் அந்தப் புறம் 3 வீடுகளும் மொத்தம் 5 வீடுகளும் அடங்கும். Vertical கோடு தான் வீதிக்கு செல்லும் பிரதான கதவு இருக்கும் இடம். ஆகவே, அந்த "L" வடிவ வாசல், ஏதும் பண்டிகைனா.. களை கட்டிவிடும்.

குறிப்பா.. ஏதும் சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் வாசல் முழுக்க எல்லா வீட்டு பெண்களூம் சேர்ந்து வாசல் மெழுகிவிட்டு, அழகாக கோலம் போட மட்டும் என்னைத் தான் அழைப்பர். (அப்போவே..பூ எவ்வளோ பெரிய வி.ஐ.பி பாருங்க.. !! :D:D) அழகாய் மாக்கோலம் போட்டு, அழியாமல் பாதுகாப்பது எங்க காம்பவுண்ட் வாண்டுகளின் முக்கிய பணி.

இப்படிச் செய்வதோடு நின்றுவிடாமல், எல்லா வீட்டுக்காரங்களும் சேர்ந்து காசு போட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்து ஒன்றாக திண்ணையில் அமர்ந்து சாப்பிடுவோம்..! அது என்றுமே மறக்க முடியாத நினைவு..!!

இது மட்டுமா..! முக்கியமாக ஒரு நிகழ்வை வருடம் தவறாமல் செய்வோமே..! அதை அடுத்த பாகத்தில் தருகிறேன்..!!



(சர்க்கரைப் பொங்கல் தித்திப்பு தொடரும்..!)

பாரதி
17-12-2007, 01:39 PM
மிகவும் அருமை பூ. என் வேண்டுகோளை ஏற்றமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் கூறியவை உண்மையே. நல்ல மனிதர்களின் அண்மையும் பழக்கமும் ஏற்படவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அந்த வகை வாழ்க்கை மிக மிக உதவியாக இருக்கும். பணத்திற்காக மட்டுமின்றி நிறைந்த மனத்திற்காக ஏங்குபவர்களும் அநேகம். சொந்த வீடாக கருதி, பதினைந்து வருடங்கள் வாழ்ந்த இரண்டு குடும்பங்களை நானறிவேன். சொந்தக்காரர்களையும் விட மனதில் நிற்பவர்கள் அவர்கள் என்றால் மிகையாகாது. அருமையான நினைவுகளை அசை போட வைத்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள் பூ.

மயூ
17-12-2007, 01:41 PM
ம்.. மலரும் நினைவுகள்.. அதுவும் பல்லினச் சமூகத்தில்...!!!

இலங்கையில் ஆகக்கூடினால் 3 சமூகங்களுக்கு மேல் இல்லை.. இந்தியா போன்்ற ஒரு தேசத்தில் வாழ நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!!! :)

சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டீங்களா??? ஹி.. ஹி.. அடுத்த பாகத்தையுமம்் விரைவில் எழுதிவிடுங்க

பூமகள்
17-12-2007, 01:47 PM
மிகவும் அருமை பூ. என் வேண்டுகோளை ஏற்றமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் கூறியவை உண்மையே. நல்ல மனிதர்களின் அண்மையும் பழக்கமும் ஏற்படவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடருங்கள் பூ.
அன்பு பாரதி அண்ணா,

என் எழுத்து கொண்ட ஒவ்வொரு படி வளர்ச்சிக்கும் உங்களின் தொடர் ஊக்கம் தான் மிகப் பெரிய பலம்..!

என் ஒவ்வொரு பதிவிலும் மறவாமல் வந்து பின்னூட்டம் இட்டு குறை நிறைகளைச் சுட்டிக் காட்டும் பாங்கு அற்புதம் அண்ணா. :)

உங்களின் வழி நடத்துதலுக்கு மிக மிக நன்றிகள் பாரதி அண்ணா. :icon_rollout:

பூமகள்
17-12-2007, 01:50 PM
ம்.. மலரும் நினைவுகள்.. அதுவும் பல்லினச் சமூகத்தில்...!!!இலங்கையில் ஆகக்கூடினால் 3 சமூகங்களுக்கு மேல் இல்லை.. இந்தியா போன்ற ஒரு தேசத்தில் வாழ நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!!!
உண்மை தான் மயூ அண்ணா.

இந்தியாவின் சிறப்பே வேறுபட்ட மாநில மக்களின் தனிச்சிறப்புகளை ஒருங்கே கொண்டது தான். :)

அடுத்த பாகம் விரைவில் தருகிறேன் மயூ அண்ணா.
உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள்.

அன்புரசிகன்
17-12-2007, 02:33 PM
நான் இந்த பாரத விலாஸ் கேள்விப்படவில்லை. ஏதோ ஒரு கடை என்று தான் நினைத்தேன். பலவகைப்பட்டோருடன் இருந்திருக்கிறீர்கள்.

மற்றும் ஒவ்வொரு வருடமும் செய்வது.... அது உங்கள் அனைவரினதும் குளியல் தானே..

யவனிகா
17-12-2007, 02:47 PM
பூவு நானே இந்த வருசம் ஊருக்கு வர முடியாம வருத்தத்தோட இருக்கேன். நீ எழுதறதப் பாத்தா இப்பவே ஊருக்கு வரணும்னு தோணுது.

நீ சொன்ன எல்லாமும் நானும் அனுபவிச்சிருக்கேன். மார்கழி மாசம் தான் எனக்குப் பிடிச்ச மாசம். பக்கத்து கோயில் லவுட் ஸ்பீக்கர் வழியா வினாயகர் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி விடுவார்.காலைலயே விதவிதமா கோலம் போட ஆரம்பிச்சிருவாங்க. எனக்கு நடந்து கொண்டே படிக்கும் பழக்கம் இருந்தது. திண்ணை லைட்டை போட்டுட்டு வெளியே வராந்தாவில் படித்தபடி பராக்குப் பாப்பேன்.கோயிலுக்கு போய் வருபவர்கள் எல்லாம் எனக்கும் தொன்னையில் பொங்கல் கொண்டு வருவார்கள்...புள்ள கஷ்டப்பட்டு படிக்குதில்லை...

பூவு நிஜமாவே ஊர் ஞாபகம் வந்தா....இப்பவே ஊருக்கு வரணும்ன்னு தோணும்....அம்மா கையால சாப்பிட்டு, தங்கச்சி கூட சண்டை போட்டு, தங்கச்சி குழந்தைகளும் என் பசங்களும் சேர்ந்து விளையாடறதை பாத்துட்டு, இஷ்டம் போல தூங்கி,பல்விளக்காம அம்மா...காபின்னுகிட்டு.....என்று வருமோ அந்த வசந்த காலம்?

அழகான... நினைவுகளைக் கிளறி விடும் பதிவு இது..அடுத்த பதிவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பூமகள்
17-12-2007, 02:58 PM
மற்றும் ஒவ்வொரு வருடமும் செய்வது.... அது உங்கள் அனைவரினதும் குளியல் தானே..
அன்பு அண்ணா,
ஏதோ பதிவு பத்தி சொல்லுவீங்கன்னு பார்த்தா... இந்த கலாய்ப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. :redface:

இருங்க இருங்க.. என்னிடம் மாட்டாமையா போவீங்க...அப்போ பார்த்துக்கறேன்..!! :sauer028::sauer028:

பூமகள்
17-12-2007, 03:02 PM
பூவு நானே இந்த வருசம் ஊருக்கு வர முடியாம வருத்தத்தோட இருக்கேன். நீ எழுதறதப் பாத்தா இப்பவே ஊருக்கு வரணும்னு தோணுது. அழகான... நினைவுகளைக் கிளறி விடும் பதிவு இது..அடுத்த பதிவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
அச்சச்சோ... என்னக்கா.. இந்த வருசம் வர முடியாதா???!! :sprachlos020::eek: :frown::frown:
இந்தப் பதிவு உங்களை அழ வைக்குதா??? (ஏங்கக்கா.. அந்த அளவு நான் மோசமாவா எழுதறேன்..??:rolleyes::confused:)

கவலைப்படாதீங்க அக்கா..! எல்லாம் சரியாகி விசா கிடைச்சி சீக்கிரமா வருவீங்க..!! சியர் அப் அக்கா..!;):p:icon_b:

பூ இருக்க பயமேன்..!!:icon_rollout:

அன்புரசிகன்
17-12-2007, 03:06 PM
பூவு நிஜமாவே ஊர் ஞாபகம் வந்தா....இப்பவே ஊருக்கு வரணும்ன்னு தோணும்....அம்மா கையால சாப்பிட்டு, தங்கச்சி கூட சண்டை போட்டு, தங்கச்சி குழந்தைகளும் என் பசங்களும் சேர்ந்து விளையாடறதை பாத்துட்டு, இஷ்டம் போல தூங்கி,பல்விளக்காம அம்மா...காபின்னுகிட்டு.....என்று வருமோ அந்த வசந்த காலம்?


ஓ.... பல்லுவிளக்காம காப்பி குடிக்கிறது தான் வசந்தகாலமோ? இது தெரியாம நான் எவ்வளவு வசந்த காலத்தை வீணடித்துவிட்டேன். :p

தங்கவேல்
18-12-2007, 01:24 AM
கொடுத்து வச்ச ஆளு பூ நீங்க. நமகெல்லாம் எங்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது ? கொடுமை...

மதி
18-12-2007, 01:49 AM
அருமை பூமகள்..
உங்க நினைவுகளைப் படிக்கையில் எங்கேயோ மனதில் புதைந்து கிடந்த சிறு வயது காலனி நினைவுகள் எழுகின்றன.

வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்..

செல்வா
18-12-2007, 02:59 AM
உங்கள் ... எழுத்து நடை என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.... பூமகள் அவர்களே... அதோடு நீங்கள்... தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள்..கருத்துக்களும் அருமை..தொடருங்கள்......

நுரையீரல்
18-12-2007, 03:35 AM
பூவின் இரண்டாவது பதிவு படித்தேன்... பலாக் கொட்டை மேட்டரு சூப்பர்.. பலாப்பழம் வாங்கிட்டு வந்து, அதை கஷ்டப்பட்டு அறுத்து, கையில எண்ணெய் தடவி - பலாச்சுளைகளை சாப்பிட்டு... பலாச்சுளைகள் போக மீதமான கொட்டைகளை நான்கு பாகமாகப் பிரித்து, அதில் மூன்று பாகத்தை குழம்பில் போட்டும், ஒரு பாகத்தை சுட்டும் சாப்பிடுவோம்..

எனக்கு மிகவும் பிடித்த பலாக் கொட்டையை ஞாபகப் படுத்தின பூமகளுக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
18-12-2007, 04:03 AM
இளமையில் கல் என்பார்கள்.அது பள்ளிக்கூட பாடம் மட்டுமல்ல....அன்றாடம் கிட்டும் வாழ்க்கைப் பாடமும்தான்.பூவுக்குக் கிடைத்த அந்த பாரதவிலாஸ் என்னும் பல்கலைக் கழகம் நிறையவே அவரைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.மனிதனைப் படிப்பவர் நல்ல மனிதராகவே வாழ்கிறார்.பூவுக்கும் அப்படிப்பட்ட அற்புதமான சந்தர்பம் கிடைத்திருக்கிறது. பின்னோக்கிய பார்வை வெகு அழகான பாதையில் பயணிக்கிறது.உடன் பயணம் செய்யும் எங்களையும் கால இயந்திரத்தில் அமர வைத்து அந்த இடத்துக்கே அழைத்துப் போகிறது.விவரிப்பு அருமை.பலாக்கொட்டையின் சுட்ட ருசி அறியாதவர் அந்த சமயத்தில் யாரும் இருந்திருக்க முடியாது.இன்றைய தலைமுறை இழந்து கொண்டிருக்கும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்களுக்கு சொந்தங்கள் மிக அதிகம்.அந்நியோன்யம் அளவின்றி கிட்டும் அற்புத உறவுகள்.காலங்கள் கடந்தும் நெஞ்சில் இனிக்கின்ற நினைவுகள். தொரட்டும் பூவின் இந்த இனிய தொகுப்பு.வாழ்த்துகள் தங்கையே.

தாமரை
18-12-2007, 07:58 AM
பழந்தின்னு கொட்டை போடறவங்களைப் பத்திக் கேள்விபட்டிருக்கேன்
பழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....

நுரையீரல்
18-12-2007, 08:44 AM
பழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....
கொட்டையை சுட்டு தின்றதாக பூமகள் மீது குற்றம் சாட்டும் தாமரை ஒழிக, ஒழிக..

பழத்தைகாசு கொடுத்தும், கொட்டையை சுட்டும் திண்பதாக சொல்கிறீர்களா?

சுட்டு என்றால் லவட்டுவது தானே? இல்லை வேற ஏதாச்சும் அர்த்தம் இருக்கிறதா தாமரை அவர்களே...

பூமகள்
18-12-2007, 08:45 AM
கொடுத்து வச்ச ஆளு பூ நீங்க. நமகெல்லாம் எங்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது ? கொடுமை...
ஆமாம் அண்ணா. இன்றைய கால கட்டத்தில் அப்பார்ட்மெண்ட், தனிவீடுகள் தான் அதிகம். இந்த சூழல் கிடைப்பது மிக அரிது தான்.
பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள். :)

அருமை பூமகள்..உங்க நினைவுகளைப் படிக்கையில் எங்கேயோ மனதில் புதைந்து கிடந்த சிறு வயது காலனி நினைவுகள் எழுகின்றன. வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்..
இங்கு பலரது பால்ய பருவத்தை என் பதிவு நினைவூட்டிவிட்டது நன்றாகவே புலப்படுகிறது. மிகுந்த நன்றிகள் மதி அண்ணா. :)

பூமகள்
18-12-2007, 08:49 AM
உங்கள் ... எழுத்து நடை என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.... பூமகள் அவர்களே... அதோடு நீங்கள்... தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள்..கருத்துக்களும் அருமை..தொடருங்கள்......
விமர்சித்து வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றிகள் சகோதரர் செல்வா. :)

பூமகள்
18-12-2007, 08:56 AM
பூவின் இரண்டாவது பதிவு படித்தேன்... பலாக் கொட்டை மேட்டரு சூப்பர்.. எனக்கு மிகவும் பிடித்த பலாக் கொட்டையை ஞாபகப் படுத்தின பூமகளுக்கு மிக்க நன்றி.
ஆஹா.. எங்க அண்ணனுக்கு இது தான் பிடிக்குமா??

நாமெல்லாம் பலாகொட்டை பேமலியாய்யா ராசாண்ணா??!! :D:D
சொல்லவே இல்ல..!! :aetsch013::lachen001::icon_b:

ரொம்ப நன்றி அண்ணா. :icon_rollout:

இளமையில் கல் என்பார்கள்.அது பள்ளிக்கூட பாடம் மட்டுமல்ல....அன்றாடம் கிட்டும் வாழ்க்கைப் பாடமும்தான். பூவுக்குக் கிடைத்த அந்த பாரதவிலாஸ் என்னும் பல்கலைக் கழகம் நிறையவே அவரைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்களுக்கு சொந்தங்கள் மிக அதிகம்.அந்நியோன்யம் அளவின்றி கிட்டும் அற்புத உறவுகள்.காலங்கள் கடந்தும் நெஞ்சில் இனிக்கின்ற நினைவுகள். தொரட்டும் பூவின் இந்த இனிய தொகுப்பு.வாழ்த்துகள் தங்கையே.
மிக அழகாக சொன்னீங்க சிவா அண்ணா.:icon_b:]

எனக்கு எழுதவே தெரியாது. ஏதோ உங்க எல்லாருடைய புண்ணியத்திலும் எனக்கு தெரிஞ்ச தமிழை தட்டிட்டு இருக்கேன். என் படைப்பாற்றலை இவ்வளோ தூரம் ஊக்கப்படுத்துவது மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது.

மிக மிக நன்றிகள் சிவா அண்ணா. :)

தாமரை
18-12-2007, 08:57 AM
எங்க 5 வீட்டு தொகுப்பில் என் வீட்டு வரிசையில் இரு வீடுகள் தான் இருந்ததால்.. ஒரு வீட்டு அளவு காலியிடம் இருந்தது. அதில் அடுப்பு மூட்டி எங்க வீட்டு ஓனர் சேச்சிக்கா, சாதம் வடிப்பது முதல் சுடுநீர் வைப்பது வரை விறகு கொண்டு செய்து வந்தார். அவர்கள் கேரளா என்பதால் பெரும்பாலும் பலாப்பழத்துக்கும் அதன் கொட்டைக்கும் அவங்க வீட்டில் பஞ்சமிருக்காது. பழத்துடன் தேன் ஊற்றி சாப்பிட்டா.. அப்பப்பா.. சூப்பரோ சூப்பர் தான்..!![/COLOR][/SIZE][/FONT]


அந்த பலாக் கொட்டைகளை காலி இடத்தில் இருக்கும் அடுப்புக்குள் போட்டு சுட்டு, சாதம் வடித்து இறுதியில் தணல் குறைந்ததும் எடுத்து ஊதி ஊதி எங்க காம்பவுண்ட் வாண்டுகள் அத்தனை பேரும் சாப்பிடுவோம் பாருங்க இந்த கால பீசா எல்லாம் அந்த சைட் நிக்கனும்.. முருகன், ஔவையாருக்கு சொன்ன, சுட்ட பழம் இது தானோ என்று ஒரு கணம் நினைக்க வைக்கும்..!!:rolleyes::rolleyes:

இன்னிக்கும், பலாக் கொட்டை கிடைச்சா மைகோதியில் கொட்டையை சொறுகி, கேஸில் சுட்டு சாப்பிட்டாலும் அந்த சுவை வரவே மாட்டீதுங்க....!!:icon_rollout::frown::frown:






எவ்வளவு தெளிவா அம்மிணி சுட்டு சாப்பிட்டேன்னு சொல்லி இருக்காங்க பாருங்க ராசா.. :icon_rollout:

பூமகள்
18-12-2007, 09:02 AM
பழந்தின்னு கொட்டை போடறவங்களைப் பத்திக் கேள்விபட்டிருக்கேன். பழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....
பாருங்க பாருங்க..!! :p:cool:

கொட்டையை சுட்டு தின்றதாக பூமகள் மீது குற்றம் சாட்டும் தாமரை ஒழிக, ஒழிக.. சுட்டு என்றால் லவட்டுவது தானே? இல்லை வேற ஏதாச்சும் அர்த்தம் இருக்கிறதா தாமரை அவர்களே...
ராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா?:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா?? :confused::confused::confused:

அமரன்
18-12-2007, 09:14 AM
போரில்லாமல் ஒரு குடியிருப்பா..
சுத்த போரப்பா..
ஆனாலும் பதிவு கன ஜோரப்பா..
ஔவையாருக்கே தெரியாத சுட்டபழ இரகசித்தை, "பலாப்பழ"த்துடன் "புட்டுப்புட்டு" வைத்த பூவுக்கு ஒரு சபாஷ்...

(( ரசிகன் ஓடி வருவாரு பாருங்க)

தாமரை
18-12-2007, 09:16 AM
பாருங்க பாருங்க..!! :p:cool:

ராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா?:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா?? :confused::confused::confused:

பலாக் கொட்டையை அவிச்சு சாப்பிடலாம், அவிச்ச பலாக்கொட்டையை பொடிமாஸ் மாதிரி செஞ்சும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம். பலாக்கொட்டை குழம்பு வச்சும் சாப்பிடலாம்.


பலாகொட்டை மாவை அரைத்து அதில வடை செஞ்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இப்படி அதிரடி வகைகள் பல இருக்க ஆதிவாசி மாதிரி நெருப்பில வாட்டிதான் சாப்பிடுவேன்னு சொல்றீங்களே.. ஞாயமா?:icon_rollout:

நுரையீரல்
18-12-2007, 09:17 AM
ராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா?:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா?? :confused::confused::confused:
உன்ன வச்சி தாமரை காமெடி பண்றாரு, சப்போர்ட் பண்றது நான் என்று சொல்லலை பூவு..

தாமரைய நம்பாதம்மா அதுல தண்ணிய ஊத்துனாக் கூட, நிற்காம கீழே விழுந்திடும்.. தண்ணி கூட தாமரைய நம்புறதில்ல..

தாமரைக்கும் தண்ணிக்கும் ஆகாது, அதனால தான் ஒட்டுறது இல்லனு பதில் பின்னூட்டம் விடுவாறு அதையும் நம்பாதே...

அதுக்கும் நாங்க எதிர்க் கேள்வி கேட்பமில்ல... தண்ணிக்குள்ள தானே தாமரை வளருது, பின்ன எப்படி..

நுரையீரல்
18-12-2007, 09:21 AM
வாட்டிதான் சாப்பிடுவேன்னு சொல்றீங்களே.. ஞாயமா?:icon_rollout:
சுட்டு என்ற நவீன தமிழ் சொல்லுக்கு வாட்டி என்றொரு பொருளும் இருக்கிறதோ தாமரை...

இதென்ன கன்னடத் தமிழா? நாங்களும் விஜயா நகர்ல கொஞ்ச நாள் இருந்திருக்கோம்.. வாட்டி என்றால் நவீன தமிழ் வார்த்தை சுட்டு என்று தானே பொருள்...

தாமரை
18-12-2007, 09:27 AM
உன்ன வச்சி தாமரை காமெடி பண்றாரு, சப்போர்ட் பண்றது நான் என்று சொல்லலை பூவு..

தாமரைய நம்பாதம்மா அதுல தண்ணிய ஊத்துனாக் கூட, நிற்காம கீழே விழுந்திடும்.. தண்ணி கூட தாமரைய நம்புறதில்ல..

தாமரைக்கும் தண்ணிக்கும் ஆகாது, அதனால தான் ஒட்டுறது இல்லனு பதில் பின்னூட்டம் விடுவாறு அதையும் நம்பாதே...

அதுக்கும் நாங்க எதிர்க் கேள்வி கேட்பமில்ல... தண்ணிக்குள்ள தானே தாமரை வளருது, பின்ன எப்படி..


தண்ணிக்குத் தெரியாத அருமை வண்டுக்குத் தெரியுதே ராசா! என்னதான் தாமரை தண்ணியில் இருந்தாலும் ஸ்டெடிதான் (செடிதான்). ஏன்னா அது தலை நிமிர்ந்து நிக்கும். தண்ணியில முழுகாது..

தண்ணியில தான் தாமரை இருக்கும் இல்லியா? அண்ணிக்கு கல்யாணத்துக்கு முன்னால நான் எழுதின ஒரு கதை ஞாபகம் வருது..

தாமரையும் மீனும் தண்ணியிலதான் இருக்கு.
அன்புங்கறது தான் தண்ணி.. நம் இல்லறக் குளத்தில அன்புங்கற தண்ணி இருக்கிற வரை, தாமரை தலை நிமிர்ந்து நிக்கும், மீன் துறுதுறுன்னு வளைய வரும், தண்ணி வத்திட்ட்டா, அந்த அன்பு காணாம போயிட்டா, தவளையும் கொக்கும் பொயிடற மாதிரி நான் எங்கயுமே ஓடிட மாட்டேன்.
உன்னோடவே உனக்காகவே..

என்னைத் தின்று என்னைச் சுத்தம் செய்பவளே ......

ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்..:icon_ush:

தாமரை
18-12-2007, 09:31 AM
சுட்டு என்ற நவீன தமிழ் சொல்லுக்கு வாட்டி என்றொரு பொருளும் இருக்கிறதோ தாமரை...

இதென்ன கன்னடத் தமிழா? நாங்களும் விஜயா நகர்ல கொஞ்ச நாள் இருந்திருக்கோம்.. வாட்டி என்றால் நவீன தமிழ் வார்த்தை சுட்டு என்று தானே பொருள்...

தீயில் வாட்டுதல்.. ஒரு கம்பியில் குத்தி அனலில் காட்டிச் சுடுதல்.
சுடுதல் பலவகைப்படும்.. அப்படியே நெருப்பில் போட்டும் சுடலாம். தோசைக்கல் மேலே இட்டும் சுடலாம் (தோசை சுடுவீங்க தானே)..

இது அக்மார்க் தமிழ் வார்த்தை!
வாட்டம், வாடுதல் எல்லாம் இதன் சொந்தக்கார வார்த்தைகள்.:icon_rollout:
எனை வாட்டுவதேனோ?:icon_rollout:

நுரையீரல்
18-12-2007, 09:32 AM
தண்ணிக்குத் தெரியாத அருமை வண்டுக்குத் தெரியுதே ராசா! என்னதான் தாமரை தண்ணியில் இருந்தாலும் ஸ்டெடிதான் (செடிதான்). ஏன்னா அது தலை நிமிர்ந்து நிக்கும். தண்ணியில முழுகாது..

தண்ணியில தான் தாமரை இருக்கும் இல்லியா? அண்ணிக்கு கல்யாணத்துக்கு முன்னால நான் எழுதின ஒரு கதை ஞாபகம் வருது..

தாமரையும் மீனும் தண்ணியிலதான் இருக்கு.
அன்புங்கறது தான் தண்ணி.. நம் இல்லறக் குளத்தில அன்புங்கற தண்ணி இருக்கிற வரை, தாமரை தலை நிமிர்ந்து நிக்கும், மீன் துறுதுறுன்னு வளைய வரும், தண்ணி வத்திட்ட்டா, அந்த அன்பு காணாம போயிட்டா, தவளையும் கொக்கும் பொயிடற மாதிரி நான் எங்கயுமே ஓடிட மாட்டேன்.
உன்னோடவே உனக்காகவே..

என்னைத் தின்று என்னைச் சுத்தம் செய்பவளே ......

ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்..:icon_ush:
தண்ணீரில் தான் மீன் அழுதால் கண்ணீரைத் தான் யார் அறிவார்.. உங்க குளத்துல மீன் அழுகுது சொல்ல வரல, சும்மா தமாசுக்கு பதில் பின்னூட்டம் கொடுக்கிறேன். Please Never Mind

தாமரை
18-12-2007, 09:35 AM
தண்ணீரில் தான் மீன் அழுதால் கண்ணீரைத் தான் யார் அறிவார்.. உங்க குளத்துல மீன் அழுகுது சொல்ல வரல, சும்மா தமாசுக்கு பதில் பின்னூட்டம் கொடுக்கிறேன். Please Never Mind

அன்பு சில சமயம் அழவும் வைக்கும் ராசா, கண்ணுக்கழகா தாமரையப் பார்க்கிறவங்களுக்கு அந்தக் குளம் தெளிவா அழகா இருக்க அந்த மீன் அழுக்கை திங்கறதும் ஒரு காரணம் என்று தெரியாமலும் இருக்கும் இல்லியா?:icon_b:

நுரையீரல்
18-12-2007, 09:53 AM
அன்பு சில சமயம் அழவும் வைக்கும் ராசா, கண்ணுக்கழகா தாமரையப் பார்க்கிறவங்களுக்கு அந்தக் குளம் தெளிவா அழகா இருக்க அந்த மீன் அழுக்கை திங்கறதும் ஒரு காரணம் என்று தெரியாமலும் இருக்கும் இல்லியா?:icon_b:
சிவா.ஜியும், இதயமும் ஜித்தா ஏர்போர்ட்டில் இருந்து எங்க ஊருக்கு வருவதற்காக இருக்கும் வேளையில், திடிரென்று பிளைட் கேன்சல் ஆகி அப்புறம் சண்டை போட்டு, வேறொரு பிளைட்டில இப்பத்தான் ஏறப்போறாங்க..

அவங்களுடைய தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து சகஜ நிலைக்கு கொண்டு வர உங்களுடைய பின்னூட்டங்களும், கலாய்ப்புகளும் தான் பயன்பட்டது (கன்டின்யஸா போனில பேசிட்டு இருக்காங்க)

உங்கள விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க.. உங்க குளம், மீன், தாமரை, தண்ணி, தவளை, நாரை போன்றவைகளுக்கு இதயம் வந்து பதில் பின்னூட்டம் விடுவார் என்பதை தெரிவிக்கச் சொன்னார்.

தாமரை
18-12-2007, 10:01 AM
சிவா.ஜியும், இதயமும் ஜித்தா ஏர்போர்ட்டில் இருந்து எங்க ஊருக்கு வருவதற்காக இருக்கும் வேளையில், திடிரென்று பிளைட் கேன்சல் ஆகி அப்புறம் சண்டை போட்டு, வேறொரு பிளைட்டில இப்பத்தான் ஏறப்போறாங்க..

அவங்களுடைய தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து சகஜ நிலைக்கு கொண்டு வர உங்களுடைய பின்னூட்டங்களும், கலாய்ப்புகளும் தான் பயன்பட்டது (கன்டின்யஸா போனில பேசிட்டு இருக்காங்க)

உங்கள விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க.. உங்க குளம், மீன், தாமரை, தண்ணி, தவளை, நாரை போன்றவைகளுக்கு இதயம் வந்து பதில் பின்னூட்டம் விடுவார் என்பதை தெரிவிக்கச் சொன்னார்.

பின் குத்தினா இதயத்துக்கு வலிக்காதோ?:lachen001:

அதுசரி,, நாங்கள்ளாம் அரட்டை அடிச்சே கடைசி ட்ரெய்ன் வரைக்கும் காலம்தள்ளினது ஞாபகம் வருது..

ஒரு முறை அப்படித்தான்.. ஒரு ஃபிரெண்டை மும்பை குர்லா ஸ்டேஷன்ல ட்ரெய்ன்ல அனுப்பி வைக்கப் போயிருந்தோம்.

அங்க என் ஆஃபிஸ் ஃப்ரெண்ட் மெரினா ஜான் இருந்தாங்க. அட ஊருக்கு போறீங்களா, எந்த ட்ரெய்ன், எப்படி ஒண்ணரை நாள் சமாளிப்பிங்கன்னு பேசிகிட்டிருக்க ட்ரெய்ன் கிளம்பி பொயிருச்சு.

ட்ரெய்ன்ல மெரினாவோட தங்கை மட்டும் மாட்டிகிட்டாங்க. உடனே மெரீனாவோட அண்ணன் அடுத்த ட்ரெய்ன்ல ஏறிப் போனார்.


ஸ்டேஷன்ல இருந்து கல்யாண் ஸ்டேஷனுக்கு அறிவிப்பு கொடுத்தோம்.
அவங்க லோகல் ட்ரெய்ன் பிடிச்சு த்ஹிரும்பி வர, குர்லா லோகல் ஸ்டேஷனுக்குப் போய் அவங்களைப் பிக்கப் பண்ணி வீட்டுக்கு திரும்பக் கொண்டுபோய் விட்டோம்.

பாவம் என் ஃப்ரெண்ட். எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துட்டு சொன்னான், பாவி என்னோட ட்ரெய்னும் போயிடுச்சேடா!

அனுபவமெல்லாம் இருக்கு. இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.

நுரையீரல்
18-12-2007, 10:10 AM
பின் குத்தினா இதயத்துக்கு வலிக்காதோ?:lachen001:
பின் என்றால் pin (கொண்டை ஊசி) / pin (zip code) (அ) பின் (back / after)?
ஏன் இப்படி? எதுவுமே புரியலையே!!! ஏதாவது புரியற மாதிரி சொல்லுங்க...

தாமரை
18-12-2007, 10:13 AM
பின் என்றால் pin (கொண்டை ஊசி) / pin (zip code) (அ) பின் (back / after)?
ஏன் இப்படி? எதுவுமே புரியலையே!!! ஏதாவது புரியற மாதிரி சொல்லுங்க...

எப்படின்னாலும் இதயத்துக்கு வலிக்கத்தான் செய்யும். :lachen001:

பின் குத்தினாலும்
பின்னால குத்தினாலும்
பின்னால பின்னால குத்தினாலும்
பின் கோடு போட்டாலும்
பின்னால பின் கோடு போட்டாலும்
பின்னால பின்னால பின் கோடு போட்டாலும் :icon_b:

ஆர்.ஈஸ்வரன்
18-12-2007, 10:15 AM
இப்போதே தங்களின் வரலாறு படைக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

அறிஞர்
18-12-2007, 02:46 PM
அருமை பூமகளே...

நாட்டில் எத்தனை வித்தியாசமான மக்கள்.... அனைவருடனும் இணணந்து பழகுவது நல்ல அனுபவமே...
---
இங்கு பல நாட்டினருடன் என் மகன் படிப்பது புது அனுபவமே. அவனது வகுப்பில் அமெரிக்கர, இந்திய, சீன, ஆப்பிரிக்க, வியட்நாம், மெக்சிகோ, பிரேசில் நாட்டு வழி வந்த குழந்தைகள் படிக்கின்றன. எதிர்காலத்தில் அவனும் உம்மை போல் எழுதுவான் என எண்ணுகிறேன்.

அன்புரசிகன்
20-12-2007, 11:54 AM
( ரசிகன் ஓடி வருவாரு பாருங்க)
எதுக்கு???

பூமகள்
03-01-2008, 08:48 AM
பாரத விலாஸில் பூ..! - 3


அது என்ன வருடம் தவறாமல் செய்யும் விசேசம் என்று கேக்குறீங்களா? அது தாங்க.. தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம். எல்லாரும் முருகருக்கு தேர் இழுத்து, முருகர் கோயில் சென்று வழிபடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதைப் பத்தி பெரியவங்க தாமரை அண்ணா சொல்லுவாரு.. நான் நம்ம மேட்டருக்கு வாரேன்..!

தை அமாவாசை அடுத்து மூன்றாவது நாளில் ஆரம்பிக்கும் "நிலா வழிபாடு".. ஆமாங்க.. அதாவது, எல்லார் வீட்டிலும் கை படாமல் மிகுந்த சிரத்தையோடு சமைத்து வைப்பர்.

வாசலில் சாணமிட்டு, பக்தியுடன் கோலமிட்டு(இத்து ஸ்பெசலிஸ்ட் பூ தாங்க..!! :D:D) அந்த கோலத்தின் மேல் சாணத்தில் கைப்புள்ளையார் செய்து வைப்பாங்க..! அப்புறம்.. அந்த பிள்ளையாருக்கு மஞ்சள், குங்குமம், அருகம்புல் வைத்து அலங்காரம் செய்வாங்க.

இந்த பிள்ளையாரைச் சுற்றி எங்க ஐந்து குடும்பமும் (விடுபட்ட வீடுகளில் இருவர் வேற்று மதத்தவரும்.. ஒரு வீடு தையல் பாட்டி வீடும்..!) செய்த சமையலை சுடச்சுட வைத்து, பின்பு ஆரம்பிக்கும் பாருங்க கொண்டாட்ட கச்சேரி.. எங்க வீதியே சும்மா அதிருமில்ல..!!

என்ன மாதிரி கொண்டாட்டம்னு யோசிக்கிறீங்களா? அதாங்க.. ! எங்க காம்பவுண்டில் எத்தன பேருக்கு நடனம் வரும்னு அப்ப தெரிஞ்சிடும்.. இன்னுமா கண்டுபிடிக்கல.. அது கும்பியடிக்கிற கொண்டாம்ங்க..!

உடனே,
"கூத்தடி கூத்தடி சைலக்கா..
குனிஞ்சி குத்தடி சைலக்கா" -- அப்படின்னு "கில்லி" பட கும்மி அடிக்கிற சீன் நினைவுக்கு வருதா..! அந்த மாதிரி எல்லாம் அடிக்கலைங்க.. இது நிசமான கும்மி ஆட்டம்..!
அப்பவெல்லாம், விஜயலஷ்மி நவநீத கிருஷ்ணன் என்ற ஒரு பிரபல நாட்டுப்புற பாடகர்கள் இருந்தாங்க..!!

அவங்க பாட்டு தான் எந்த திக்கும் பள்ளியிலும், திருவிழா கொண்டாட்டத்திலும் கேட்டுட்டு இருக்கும்..! அவங்க பாட்டு தான் எங்க கும்மி அடிக்கும் நடனத்துக்கு உத்வேகம்..!

எங்க வீட்டு ஓனரு ரொம்ப நல்லவங்க.. அவங்க வீட்டு டேப்பு இதுக்குன்னே திண்ணைக்கு வந்துடும்..! உள்ள பாடுற கேசட் எங்க ஸ்பான்சர்..!

முதல்ல கொஞ்சம் ஒரு பாஸ்ட் பாட்டு போட்டு, ஆடுவோம்..! அப்ப தானே கொண்டாட்டம் களை கட்டும்..!!

இதுல நான், என் அண்ணன், எங்க தொகுப்பு வீட்டில் இருக்கும் என் வயது வாண்டுக, என்னை விட குட்டீஸ்க... அப்புறம்.. என்னை விட பெரிய அண்ணாக்கள் . அக்காக்கள் இப்படி ஒரு படையே சேர்ந்து 15 பேர் பக்கம் கும்மி அடிப்போம்..!

அடுத்து இடையில் ஒரு ஸ்லோ சாங் போட்டு, கொஞ்சம் வயதானவங்கள உள்ள விட்டுட்டு நாங்க ரெஸ்ட் எடுப்போம்..!

இந்த கும்மி அடி ஆட்டம் இரவு 7 மணி சுமாருக்கு ஆரம்பிச்சி சும்மா 9 மணி வரை நடக்கும்.. அப்ப தான் வீட்டுக்கு களைச்சி வந்த அப்பாக்களை நாங்க விட்டுடுவமா என்ன? அவுங்க ஜாலியா எங்கள திண்ணையில உட்காந்து வேடிக்கை பார்க்க, அவர்களை இழுத்து, வீட்டில் சிங்கங்களை ஆட விட்டு சிரி சிரி என்று சிரிப்போம்..!

அப்புறம் கடைசி பாட்டு, இன்னும் நினைவிருக்கு.. இப்ப எங்க முறை வந்திருக்கும்.. நாங்க உள்ளார போய் தான் ஆட்டத்துக்கு சுபம் போடுவோம்.

"ஏ வளவி கட ஓரத்திலே...வளவி ஒன்னாங்க.. வளவி ரெண்டாங்க.. வளவி மூனாங்க.. வாங்கச்சொன்னேன்.. .சிங்ச்சா.. சிங்ச்சா..சிங்ச்சா சிங்..
அத வாரி விட்டாக்கா.. வரவழைச்சாக்கா.. வழி தெரிஞ்சாக்கா.. வாரேன் போங்க....

இந்த பாட்டு போட்டு தான் இறுதியா முடிப்போம்..! இதுல பைனலா ஒரு வேகம் வரும் பாருங்க..! அதை சமாளிக்கவே முடியாது. சின்ன பொடுசிக நாங்களே வேக வேகமா கும்மி அடிச்சி.. சுத்தி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்..! அப்புறம்.. சிரிப்பு வேறு பயங்கரமா வந்து... கடைசில வேகம் குறையும் பாட்டு.. .அப்போ நாங்க ஸ்லோ மோசனில் கும்மி அடிப்போம்.. சுத்தி இருக்கவங்க... எங்கள் பார்த்து சிரிக்க, நாங்களே எங்க ஆட்டத்தை பார்த்து சிரிக்க.. ஒரே காமெடி டைமே அங்கு நடக்கும்..!!

இத்தனையும் எதுக்குன்னு யோசிக்கிறீங்களா? எல்லாம் அங்க வைச்சிருக்க எல்லார் வீட்டு சாப்பாட்டையும் ருசிக்கத்தாங்க..!! :D:D முதல் நாள் ஆட்டம் முடிவில் எல்லார் வீட்டிலிருந்து சர்க்கரைப் பொங்கல்(அதுவும் விதவிதமான சுவையோடு.. ஒன்னு இனிப்பு கூட இருக்கும்.. ஒன்னு இனிப்பு சரியா இருக்கும்), அப்புறம்.. அவுலில் நனைத்து வெல்லம் போட்டு செய்தது, இப்படி பல தரப்பட்ட இனிப்பு வகைகள் இருக்கும்.. பூவுக்கு தான் இனிப்புன்னாவே அவ்வளவு விருப்பமாச்சே.. ஒரு பிடி பிடிப்பேன்..! :D

அப்புறம்... அடுத்த நாள் முதல் தை மாதம் பவுர்ணமி வரை தொடர்ந்து எல்லாவீட்டிலும் என்னென்ன இரவு உணவு செய்வாங்களோ அதனை படைத்து கும்மி அடிப்போம். முடிவில் எல்லார் வீட்டு சாப்பாடும் அமுதமாக உள்ளே போகும். இதுல ஒரு சந்தோசம் என்னன்னா, எல்லாரும் திண்ணையில் வரிசையாய் உட்காந்து, எல்லார் வீட்டு பெண்களும் அவங்கவுங்க சமைத்ததை பாரபட்சமின்றி எல்லாருக்கும் கொடுப்பாங்க..! இதுல மத, இன வேறு பாடு எல்லாம் எங்க இருக்குன்னே தெரியாம ஓடிடும்..!

எல்லா வாண்டுகளும் உட்காந்து நிலாவை ரசிச்சிட்டே, வானத்தை பார்த்துட்டு இன்னும் இன்னும் னு கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு ...சூப்பரா இருக்கு கா.. நாளைக்கும் இதையே செய்யுங்க-ன்னு சொல்லி சொல்லி சிரிப்போம்..! இறுதி நாள் வந்தா தான் மனம் ரொம்ப கஸ்டமாயிடும்.. இந்த கொண்டாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்துடும்..! மீண்டும் அந்த கும்மி அடிப்பு விழா எப்போ வரும்னு ஒரு ஏக்கம் பரவ.. அடுத்த சில நாட்கள் முதலே அம்மாவை நச்சரிக்க ஆரம்பிப்பேன்.. "அம்மா.. வாரத்துக்கு ஒருதடவையாவச்சும் இப்படி செஞ்சா என்ன? தைப்பூசம் பண்டிகைக்கு மட்டும் தான் இப்படி கொண்டாடனுமா?" என்று அப்பாவித்தனமாய் கேட்டாலும், இன்று நினைக்கையில் பண்டிகைகள் என்பது மனிதர்களின் அன்பு பரிமாறுதலுக்கும் சந்தோசத்துக்கும் தான் உருவாக்கப்பட்டது என்பது எந்த அளவு உண்மை என்று விளங்குகிறது.

இது படிச்சிட்டு பலருக்கு வயிற்றில் ஒரு லிட்டர் கந்தக அமிலம் சுரந்ததாக தெரியுது.. ஆனாலும், உங்க பூ, இதையெல்லாம் அனுபவிச்சதே சந்தோசம்னு மனச தேத்திக்கோங்க..!! :lachen001::lachen001:

இதுக்கு அடுத்ததா ஒன்னு சொல்லப்போறேன்..அதைப் படிச்சா.. இன்னும் வயிற்றில் சுனாமி வரும்..!! :rolleyes:

அடுத்த பாகத்தில் அதை பார்க்க வருகிறேன்..!! :)

(கும்மியடி ஆட்டம் தொடரும்)

நுரையீரல்
06-01-2008, 07:04 AM
அப்ப கைவசம் நிறைய வித்தைகளை வைத்திருக்கும் பூமகள், பெரிய சகலகலாவல்லி என்று அழைக்கலாம்.

பூமகள்
12-03-2008, 02:43 PM
நன்றிகள் நுரை அண்ணா. இப்போ தான் பார்த்து பதிலிடுகிறேன். மன்னிச்சிக்கோங்க அண்ணா. :)

பூமகள்
12-03-2008, 02:49 PM
பாரத விலாசில் பூ - நிறைவு


இப்படி தை பூசம் மாதிரி ஒவ்வொரு பண்டிகையும் விசேசமா கொண்டாடுவது வழக்கம் எங்க தொகுப்பு வீட்டில்..!!

ரம்ஜான் என்றாலே.. பாய் அண்ணா வீட்டில் பெரும் உறவினர் கூட்டமே கூடிவிடும். அது மட்டுமல்லாமல் எங்க தொகுப்பு வீட்டில் அனைவருக்கும் விடுமுறை என்பதால் அன்று ஒரே கோலாகலமாக இருக்கும். பாய் அண்ணா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் பெரிய பெரிய அடுப்பு கூட்டி, விறகு வைத்து ரம்ஜான் ஸ்பெசல் பிரியாணி செய்வாங்க பாருங்க.. அதைப் பார்க்கவே குட்டீஸ் எல்லாரும் ஓடி ஓடி போய் பார்த்துட்டு இருப்போம்.. அன்புடன் எல்லார் வீட்டுக்கும் அவங்க நிறைய நிறைய பிரியாணி கொண்டு வந்து தருவாங்க.. அன்பும் சேர்த்துக் கொடுத்ததாலோ என்னவோ.. அந்த பிரியாணி சுவையில் வேற எந்த பிரியாணியையும் இதுவரை நான் அங்கண்ணன் கடையில் கூட சாப்பிட்டதில்லை..!! (யவனி அக்கா, நம்ம வீட்டு பிரியாணிக்காகத் தான் வெயிட்டிங்..:D:D)

அதே போல, கிருஸ்துமஸ் அன்று.. மம்மியும் டாடியும் வித விதமா கேக் செய்து.. எல்லார் வீட்டுக்கும் கொடுப்பாங்க.. எங்க வீட்டுக்கும் மம்மிக்கும் ஒரு அன்யோன்யமான பந்தம். அதனால், மம்மி எனக்கு மட்டும் சாப்பிடுவதற்கு ஸ்பெசலாக ஏதும் தருவாங்க..! இப்ப வரையிலும்,.. இவுங்க.. நட்பு எங்களுக்கு ஒரு மாறாத பாசப்பிணைப்பாகவே இருந்துவருகிறது. தனது ஐந்து மகள்களுக்கும் திருமணம் முடித்து.. பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் மலேசியாவில் ஒரு மகளோடு இருந்தாலும் இந்தியா வந்தால், இன்றும் எங்க வீட்டில் வந்து தங்காமல் செல்லவே மாட்டார்கள். கடந்த மாதம் கூட வந்து இருந்துட்டு.. எனக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள். டாடி இறந்த பின்.. மம்மிக்கு கை கொடுத்தது அவரது கை வேலை தான். அழகழகாக கூடை., ஸ்வெட்டர்.. ஸ்கார்ப்.. இப்படி எதுனாலும் ரொம்ப அழகா செய்வாங்க..! எனக்கும் ஒரு ஸ்வெட்டர் அன்புடன் செய்து கொடுத்தாங்க..!

மழை விட்டாலும் தூரல் விடாது பெய்யும் அடை மழை போல.. அப்பப்போ என் வாழ்க்கையினை இனிமையாக்குவதும்.. ரம்மியமாக்குவதும் எனது இந்த பாரதவிலாஸ் பருவம் தான்.

இல்லத்தரசிகள் திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாவே வெட்டிக் கதையும் வம்பும் தான் என்ற நிலையை மாற்றி அப்போதே புதுப்புது உபயோகமான செயல்களைப் பற்றி திட்டமிட ஆரம்பிச்சிருந்தாங்க எங்க தொகுப்பு வீட்டு இல்லத்தரசிகள். அப்படி உதித்தது தான்.. கோதுமை மாவு எல்லாருக்கும் சேர்ந்து ஒன்றாக வாங்கும் பழக்கம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..!! - என்ற பழமொழிக்கு உதாரணமாக தனித்தனியே காசு கொடுத்து தரம் குறைந்த மாவு வாங்குவதற்கு பதில், எல்லாரும் சேர்ந்து தரமான மாவினை அருகில் இருக்கும் ஃப்ளவர் மில்லிலிருந்தே வாங்கலாம் என்ற உயர்ந்த திட்டத்தை வகுத்தோம்.

இதற்கு இல்லத்தரசிகளுடன் அந்தந்த இல்லத்தரசர்களும் முன் வந்து ஃப்ளவர் மில் சென்று 90 கிலோ அதாவது ஒரு மூட்டை மாவினை வாங்கி அதை சரியாக தொகுப்பு வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து, பெரிய தராசு வைத்து.. எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சரி சமமாக பகிர்ந்து கொடுத்து.. அந்தந்த அளவிற்கான காசினை மொத்த விலையிலிருந்து கணக்கிட்டு வாங்கி, எல்லாமே மிக நேர்மையான முறையில் நடந்தேறியது. இது போன்ற செயல்கள் ஒவ்வொரு மாதமும், எங்களை போன்ற குட்டீஸ்களுக்கு ஒரு புது திருவிழா கொண்டாட்டம் போல இருக்கும். ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து நோக்கி வாய் பிழந்து ரசித்திருக்கிறேன்.

அப்போதே என்னுள் எங்கள் தொகுப்புவீடு பற்றிய அளவில்லா பெருமையும் பெருமிதமும் அன்பும் மிகுதியாகிக் கொண்டே போனது.

அந்த வீதிக்கே செல்லக் குழந்தையான நான், எதார்த்தமாக வேறு வீடுகளில் இந்த கோதுமை மாவு டிஸ்டிபூசன் பற்ற சொல்ல..அவர்களும் இதையே பின்பற்றி வாங்கினர். இப்படி அந்த வீதிக்கே முன் மாதிரியாக எங்கள் தொகுப்பு வீடு இருந்தது.

இப்படி பல்வேறு விதவிதமான மனிதர்களைக் கொண்டு நான் வளர்ந்த சூழல்.. என்னை இன்னும் இன்னும் வித்தியாசமான பெண்ணாகத் தான் ஆக்கியிருப்பதாக நம்புகிறேன்.

பாரத விலாஸ் இப்படியாக என் உணர்வுகளோடு ஒன்றிப் போன ஒரு அழகிய காலம்.

இன்றும் அந்த நட்புகளும் அவர்களின் அன்பு பரிமாணங்களும் மாறவே இல்லை. எனது இனிய இந்த வளர்பருவத்து சூழல், படிக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.


(முற்றும்)

மதி
12-03-2008, 03:15 PM
அற்புதமானதொரு பகுதியினில் வாழ்ந்திருக்கிறீர்கள்..
உண்மையிலேயே இது பாரத விலாஸ் தான்.
கொடுத்து வைத்தவர் நீங்கள்..

யவனிகா
12-03-2008, 03:40 PM
எல்லாம் சரி பூ...ஏன் இப்படி திடீருன்னு முடிச்சிட்ட?
பால்ய வயதில் எல்லாமே சந்தோசம் தான்...
கவலை எதுவும் தெரியாத வயது...அதோட இது போல சுற்றுப்புறமும் இருந்தால் வேறென்ன வேணும்...
பூவு கூடவே போயி அஞ்சாறு நாள் இருந்த மாதிரி...இதுக்கே உனக்கு ஸ்பெசல் பிரியாணி தர்றேன்...
வாழ்த்துக்கள் பூ.

பூமகள்
12-03-2008, 04:54 PM
கொடுத்து வைத்தவர் நீங்கள்..
உண்மை தான் மதி. :rolleyes:
நிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்து வைத்திருக்கிறேன்..!! :D:D

உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள் மதி. :)

பூமகள்
12-03-2008, 05:00 PM
எல்லாம் சரி பூ...ஏன் இப்படி திடீருன்னு முடிச்சிட்ட?
அக்கா... நிறைய குட்டி குட்டி சுவையான சம்பவங்கள் சொல்லனும்னு தான் ஆசை.. ஆனா ரொம்ப பேசி என் வண்டவாளம் எல்லாம் வெளிய வந்துட்டதுன்னா அப்புறம் எல்லாரும் என்னை ஓட்ட ஆரம்பிச்சிருவீங்களே... அதான் அடக்கி வாசிச்சேன்..ஹீ ஹீ..!! :D:D
அதுமட்டுமில்லாம... எனது நினைவாற்றல் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே..!! :icon_ush:
இனி மேல் ஏதும் நினைவு வந்தா தொடரா கொடுக்கிறேன் அக்கா. :icon_ush:
கவலைப் படாதீங்க..!! :icon_b:

பூவு கூடவே போயி அஞ்சாறு நாள் இருந்த மாதிரி...இதுக்கே உனக்கு ஸ்பெசல் பிரியாணி தர்றேன்...
வாழ்த்துக்கள் பூ
அக்கா.. எனக்கு டவுட்.. சாதா பிரியாணிக்கும் ஸ்பெசல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்??!!! :confused: :D:D
ஆனா எப்படியும் எனக்கு ஸ்பெசல் பிரியாணி கன்பார்ம்.. :rolleyes::)இல்லாங்காட்டி.. நானே பிரியாணி செஞ்சி உங்களை சாப்பிட வைச்சிடுவேன்.. :lachen001::lachen001:

வாழ்த்தியமைக்கு நன்றிகள் அக்கா. :)

பாரதி
12-03-2008, 05:13 PM
அனைவருக்கும் அது போன்ற பாரதவிலாஸில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது உண்மைதான். வாழ்க்கையில் பலவித அனுபவங்களை சிறு வயதிலேயே பெற்றதும், அதுவும் நல்ல உறவுகளைப் பெற்றதும் கொடுப்பினைதான் பூ.. இனிய உறவுகளின் தொடர்பு என்றென்றைக்கும் தொடரட்டும். இனிய தொடர் தந்ததற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

பூமகள்
12-03-2008, 05:25 PM
உண்மை தான் பாரதி அண்ணா.
இது போன்ற சூழல் எல்லாருக்கும் கிட்டிவிடுவதில்லை. ஆனால், என் மூலம் உங்கள் அனைவருக்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்தியதே எனக்கு பெரும் மகிழ்ச்சி.

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் பாரதி அண்ணா. :)

சிவா.ஜி
13-03-2008, 04:32 AM
http://www.tamilmantram.com:80/vb/

அக்கா.. எனக்கு டவுட்.. சாதா பிரியாணிக்கும் ஸ்பெசல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்??!!! http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/


சாதா பிரியாணி..பாத்திரத்துல ஒட்டாம இருக்கும்...ஸ்பெஷல் பிரியாணி..பாத்திரத்தோடு அன்னியோன்யமாகி...பிரிக்க முடியாமல் நிறம் மாறியிருக்கும்..அதான் உனக்கு அக்க செஞ்சி குடுக்கப் போறாங்களாம் பூவு....ஹி...ஹி...

அருமையான சூழலில் வாழ்ந்திருக்கிறீர்கள்.இப்படிப்பட்ட சூழல் நிறை கற்றுத்தரும்.எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமையாது.ஒற்றுமையாய் இருந்தால் எவ்வளவு நன்மைகள் என்பது இந்த பதிவின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட..நாம் இருவருமே ஒரே சூழலில் வாழ்ந்திருக்கிறோம்...அதனால் என்னால் அந்த நிகழ்வுகளை...அப்படியே உணரமுடிகிறது.
அருமையான பிள்ளைப்பருவ அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
13-03-2008, 05:03 AM
.

ஏ வளவி கட ஓரத்திலே .வளவி ஒன்னாங்க.. வளவி ரெண்டாங்க வளவி மூனாங்க வாங்கச்சொன்னேன்.. .சிங்ச்சா.. சிங்ச்சாசிங்ச்சா சிங்..
அத வாரி விட்டாக்கா வரவழைச்சாக்கா.. வழி தெரிஞ்சாக்கா.. வாரேன் போங்க..

இது படிச்சிட்டு பலருக்கு வயிற்றில் ஒரு லிட்டர் கந்தக அமிலம் சுரந்ததாக தெரியுது ஆனாலும் உங்க பூ, இதையெல்லாம் அனுபவிச்சதே சந்தோசம்னு மனச தேத்திக்கோங்க..!! :lachen001::lachen001:
ம்...தேத்திக்குறோம்..பூவு..!!


நீ குழந்தையா இருக்கச்சே...இப்படி கும்மியடிச்சத நினைச்சி பாத்தேன்... சந்தோசம் இரட்டிபாயிருச்சு எனக்கு.. நல்லாவே வாழ்க்கையை அனுபவிச்சி வாழ்ந்திருக்கீங்க...:icon_b::icon_rollout:


அந்த வீதிக்கே செல்லக் குழந்தையான நான், எதார்த்தமாக வேறு வீடுகளில் இந்த கோதுமை மாவு டிஸ்டிபூசன் பற்ற சொல்ல..அவர்களும் இதையே பின்பற்றி வாங்கினர். இப்படி அந்த வீதிக்கே முன் மாதிரியாக எங்கள் தொகுப்பு வீடு இருந்தது.

அந்த சின்ன வயசிலியே ஆரம்பிச்சுட்டீங்களா..? உங்களோட பொதுசேவையை... ஆனாலும் உங்களுக்கு மனசு ரொம்ப பெருசு பூவு..!! உங்களோட பாரதவிலாஸ் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை உரக்க சொல்லுது... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை கட்டுரையாக எங்களுக்கு கொடுக்க வேண்டுகிறேன்.. தொடருங்கள்..பூ..!!

பூமகள்
14-03-2008, 03:11 PM
சாதா பிரியாணி..பாத்திரத்துல ஒட்டாம இருக்கும்...ஸ்பெஷல் பிரியாணி..பாத்திரத்தோடு அன்னியோன்யமாகி...பிரிக்க முடியாமல் நிறம் மாறியிருக்கும்..அதான் உனக்கு அக்க செஞ்சி குடுக்கப் போறாங்களாம் பூவு....ஹி...ஹி...
அப்போ உங்களுக்கு ரெண்டு ப்ளேட் ஸ்பெசல் பிரியாணி இப்பவே செய்து வைக்க சொல்லிடறேன் சிவா அண்ணா..!! :D:D

கிட்டத்தட்ட..நாம் இருவருமே ஒரே சூழலில் வாழ்ந்திருக்கிறோம்...அதனால் என்னால் அந்த நிகழ்வுகளை...அப்படியே உணரமுடிகிறது. அருமையான பிள்ளைப்பருவ அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.வாழ்த்துகள்.
உண்மை தான் சிவா அண்ணா.
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா.

உங்களோட பாரதவிலாஸ் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை உரக்க சொல்லுது... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை கட்டுரையாக எங்களுக்கு கொடுக்க வேண்டுகிறேன்.. தொடருங்கள்..பூ..!!
ரொம்ப நன்றி சுகந்தப்ரீதன்..
தொடர்ந்தா??? :sprachlos020::eek::eek::eek:
இப்பவே பலருக்கு கண்ணக் கட்டுதாம்... :rolleyes:
பெட்டர் அமைதியா இருக்கறதுன்னு முடிவு கட்டிட்டேன்.:icon_ush:
நீங்க வேற சுகந்தப்ரீதன்.. :confused::icon_ush:
உங்க தொடர் ஊக்கத்துக்கு நன்றிகள்.

பாரத விலாஸ் படிச்சி..... என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.