PDA

View Full Version : இளைஞரணிக்கு வாழ்த்துக்கள்....



உதயசூரியன்
14-12-2007, 04:10 PM
இளைஞரணிக்கு வாழ்த்துக்கள்....

தி.மு.க இளைஞரணி செயலாளர்.. தளபதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

முதல் மாநாடு நிகழ்ச்சிகள்


திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாடு நெல்லையில் நாளை தொடங்குகிறது
நகரமே விழாக்கோலம் பூண்டது இதுவரை காணாத பிரம்மாண்ட ஏற்பாடு


நெல்லை, டிச. 14: திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. மாநாட்டில் பங்கேறபதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி நாளை காலை நெல்லை வருகிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் பேரணி நடக்கிறது. நாளை மறுநாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் பேசுகின்றனர். மாநாட்டுக்காக வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திமுக இளைஞரணியினர் இதுவரை மாநில அளவில் மாநாட்டை நடத்தியது இல்லை. இந்நிலையில், முதல் முறையாக இளைஞரணியினரின் மாநில அளவிலான மாநாடு நெல்லையில் நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மாநாடு திறப்பு, 84 அடி உயர கம்பத்தில் மாநாடு கொடியேற்று விழா ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு 5 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இருந்து துவங்குகிறது. இந்த பேரணியை மத்திய அமைச்சர் ராசா துவக்கி வைக்கிறார்.

பேரணிக்கு தலைமை தாங்கி உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸடாலின் திறந்த ஜீப்பில் செல்கிறார். இதைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற 3 ஆயிரம் இளைஞர்களும், அவர்களைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 5 லட்சம் இளைஞர்களும் சீருடையில் பேரணியாக செல்கின்றனர்.

இந்த பேரணியை மகாராஜநகர் ரவுன்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் தேர் வடிவிலான தனி மேடையில் அமர்ந்து முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார்.

பின்னர் மாநாட்டு வளாகத்தில் காவிய கலைஞர் 84 என்ற ஒலி, ஒளி காட்சியையும் முதல்வர் தன மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்.

மாநாட்டின் 2ம் நாளன்று காலை 9.30 மணிக்கு வரவேற்பு குழு தலைவர் முத்துராமலிங்கம் பேசுகிறார். 10 மணிக்கு மாநாட்டு தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்து வழிமொழிகின்றனர்.

காலை 10.30 மணிக்கு மாநாட்டு திறப்பாளர் இள.புகழேந்தியும், 11 மணிக்கு கொடியேற்றி வைக்கும் தமிழச்சி தங்கபாண்டியனும், 11.30 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் பட திறப்பாளர் அசன் முகம்மது ஜின்னாவும், 12 மணிக்கு பேரணியை துவக்கி வைக்கும் மு.க.ஸ்டாலினும் பேசுகின்றனர். பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்வேறு சிறப்பு தலைப்புகளில் எம்.பி.க்கள் சிவா, கவிஞர் கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார். 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி நிறைவுரை ஆற்றுகிறார். அத்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

விழாக்கோலம்: மாநாட்டை முன்னிட்டு நெல்லை மாநகரம் வழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர் தங்கும் தாழையூத்து விருந்தினர் மாளிகை முதல் மாநாட்டு பந்தல் வரையிலான 20 கி.மீ. தூரத்திற்கு தி.மு.க கொடிகளும், டிஜிட்டல் பேனர்களும், அலங்கார வளைவுகளும், ஆர்ச்சுகளும், மினசார கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதலவர் மற்றும் ஸ்டாலினுக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், கட்சியின் கடந்த கால வரலாறுகள், நினைவுகளை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

முதல்வர் வருகை: மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து இன்று மாலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு நாளை காலை 7.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்தடைகிறார்.

ரயில்வே ஸ்டேஷனில அவருக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 56 குதிரைகள் புடை சூழ, தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் தாழையூத்து வருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் அங்கிருந்து 9 மணிக்கு மாநாட்டு துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாநாட்டு பந்தலுக்குச் செல்கிறார்.

முதல்வரின் வருகையால நெல்லை மாவட்ட முழுவதிலுமுள்ள தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
நன்றி. தினகரன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

virumaandi
14-12-2007, 04:14 PM
வாழ்த்துக்கள்

விழா நிகழ்ச்சி குறித்த கட்டுரை.
யாகூ வுக்கு நன்றி

பர*ணி பாயு*ம் *திருநெ*ல்வே**லி மாவ*ட்ட*த்*தி*ல் *திரா*விட மு*ன்னே*ற்ற*க் கழக*த்*தி*ன் முதலாவது மா*நி*ல இளைஞர*ணி மாநாடு சனிக்கிழமை ( 15 ம் தேதி ) கோலாகலமாக துவ*ங்கு*கிறது.

இதனை முன்னிட்டு நெல்லை நகரமே அலங்காரங்கள், தோரணங்கள் என திரும்பிய திசையெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நெல்லை முழுவதும் அலங்கார வளைவுகளும், வரவேற்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க தயார் நிலையில் உள்ளன. வரவேற்பு கோபுரங்கள் அலங்கார விளக்குகளால் இரவு நேரங்களில் ஜொலிக்கின்றன.

மாநாட்டுக்குக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள பந்தல் அரங்கை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இதுவரை திரை*ப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த அரங்க அமைப்பை நேரில் பார்க்கும் நெல்லை மக்கள் பிரமிப்புடன் திரும்பி செல்கின்றனர்.

டிச*ம்ப*ர் 15,16 இர*ண்டு நா**ட்க*ள் நடைபெறு*ம் இ*ந்த மாநா*ட்டி*ற்கு நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் *சுமா*ர் 5 ல*ட்ச*ம் பே*ர் அமரு*ம் வகை*யி*ல் *பிர*ம்மா*ண்ட இரு*ம்பு ப**ந்த*ல் அமை*க்க*ப்ப*ட்டு*ள்ளது.

ப**ந்த*ல் முக*ப்*பி*ல் அர*ண்மனை போ***ன்ற கோ*ட்டை நுழைவு வா*யி*லு*ம், உ*ள்புற*ம் த*ர்பா*ர் ம*ண்டப*ம் போலவு**ம், மேடை*யி*ல் இரு*க்கைக*ள் மகாராஜா*க்க*ள் அமரு*ம் இட*ம் மா**தி**ரியு*ம் ** பிளா*ஸ்ட**ர் ஆ*ப் பா*ரி*ஸ் மூல*ம் ச*ி*னிமா ஆ*ர்*ட் டைர*க்ட*ர்களா*ல் மிக*ப்*பிரமா*ண்டமாக உருவா*க்க*ப்ப*ட்டு*ள்ளது.

மாநாட்டு மேடை மட்டும் ஒரே நேரத்தில் 100 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பந்தலின் உள்புறம் ஆற்று மணல் பரப்பி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் இருக்கைகள் போட*ப்ப*ட்டு*ள்ளது.

மாநா*ட்டி*ல் கல*ந்து கொ*ள்வத*ற்காக முதலமை*ச்*ச*ர் கருணா*நி*தி இன்று செ*ன்னை*யி*ல் இரு*ந்து அன*ந்தபு*ரி எ**க்*ஸ்*பிர*ஸ் மூ*ல்ம் நெ*ல்லை வருகிறா*ர்.

ரெ*யி*ல் *நிலைய*த்*தி*ற்கு வெ*ளியே அவரை வரவே*ற்க *பிரமா*ண்டமான ஏ**ற்பாடுக*ள் செ*ய்ய*ப்ப*ட்டு*ள்ளது.அவரது காரு*க்கு மு*ன்பு 56 கு*திரைக*ளி*ல் த*ிமுக இளைஞர*ணி*யின*ர் வெ*ள்ளை ராணுவ *சீருடை*யி*ல் க*ம்**பீரமாக அ*ணிவகு*த்து செ*ல்க*ி*ன்றன*ர். த*ிமுக தொ**ண்ட*ர்களு*ம், பொதும*க்களு*ம் அவரு*க்கு உ*ற்சாக வரவே*ற்பு அ*ளி*க்*கி*ன்றன*ர்.

மாநாட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று திமுக இளைஞரணி பொறுப்பாளரும், அமைச்சருமான ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று அனைத்து பணிகளையும் பார்வையிட்டார்.

மாநாடு வெற்றிகரமாக நடப்பது குறித்து த*ிமுக வினருடன் அவ*ர் ஆலோசனை நடத்**தி வரு*கிறா*ர். சுமார் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுக முக்கிய நிர்வாகிகளும், தொ*ண்ட*ர்க*ளு*ம் நெல்லை*யி*ல் கு*வி*ந்து*ள்ளனர்.

முத*ல் நா*ள் *நிக*ழ்*ச்*சி*யி*ல் மாநாட்டின் தொடக்கமாக அமைச்சர் தங்கபாண்டியனின் தங்கையும்,கவிஞருமான தமிழச்சி தங்க பாண்டியன் மாநாட்டு திடல் முன்பு திமுக கொடியேற்றுகிறார். திமுக இளைஞரணி துணை செயலாளர் புகழேந்தி மாநாட்டு பந்தலை திறந்து வைக்கிறார்.

பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பாளை வ.உ.சி. மைதானத்திலிருந்து மாபெரும் பேரணி தொடங்குகிறது. பேரணியை மத்திய அமைச்சர் ராஜா தொடங்கி வைக்கிறார்.

பேரணியின் முன் ஸ்டாலின் இளைஞரணியின் வெள்ளை சீருடை அணிந்து, திறந்த ஜீப்பில் அணி வகுத்து செல்*கிறா*ர். அவருக்கு முன்பு ஸ்டாலி*னி*ன் வயதை கு*றி*ப்*பிடு*ம் வகை*யி*ல் 56 குதிரைகளில் இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் குதிரைப்படை அணி வகுப்பு போல் செல்கிறா*ர்கள்.

ஸ்டாலின் பின்னால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பயிற்சி பெற்ற இளைஞர் அணியினர் தலா 100 பேர் வீதம் 3,000 பேர் அணிவகுத்து செல்கிறா*ர்கள்.

அவர்களுக்கு பின்னால் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை மாநிலங்களை சேர்ந்த இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் பேரணியாக செல்வார்கள்.

சுமார் 4 லட்சம் இளைஞர்கள் இந்த பேரணியில் வெள்ளை சீருடையுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியை பாளை. அரசு மருத்துவமனை அருகே உள்ள தனி மேடையில் நின்று முதலமை*ச்ச*ர் கருணாநிதி பார்வையிடுகிறார். திமுகவின் முதுபெரும் தலைவர்கள் அமர்ந்து பேரணியை பார்வையிடுவதற்காக அதன் அருகே தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்பட பல வீர விளையாட்டுக்களும் இடம் பெறுகிறது.

இர*ண்டா**ம் நா*ள் *நிக*ழ்*ச்*சி*

16ம் தேதி காலை திமுக இளைஞரணி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

9.30 மணிக்கு நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை மேயர் முத்துராமலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் பேசுகிறார்கள்.

12.30 மணிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பின்னர் இளைஞர்களுக்கான முக்கிய தலைப்புகளில் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்*ளி*ட்ட 28 பேர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மாலை 6 மணிக்கு மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியான சிறப்புக் கூட்டம் நடை பெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேசுகிறார்கள். இறுதியாக கருணாநிதி மாநாட்டு பேருரையாற்றுகிறார்.

மாநா*ட்டையொ**ட்டி பல**த்த போ*லீ*ஸ் பாதுக*ா*ப்பு போ*ட*ப்ப*ட்டு*ள்ளது. போ*லீ*ஸ் உயர*திகா**ரிக*ள் நெ*ல்லை*யி*ல் முகா*மி*ட்டு பாதுகா*ப்பு ஏ*ற்பாடுகளை கவ*னி*த்து வரு*கி*ன்றன**ர்.

உதயசூரியன்
14-12-2007, 05:33 PM
இளைஞரணி மானாடு பற்றிய செய்திகள்

மாநாட்டு பந்தலை பார்க்க
குவிந்த மாணவ, மாணவிகள்

நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டுக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ள நுழைவு வாயில், பந்தல் அலங்காரங்களை தினமும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர்.
ஹவாய் தீவிலிருந்து கல்விச் சுற்றுலா பயணமாக தூத்துக்குடி வந்துள்ள நவோமி, ஹாரி ஆகியோர் நேற்று காலை புதுக்கோட்டை இமயம் பள்ளி முதல்வருடன் நெல்லை வந்தனர். பின்னர் இருவரும் மாநாட்டு பந்தல் மற்றும் கலை நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகளைக் கண்டு வியந்தனர். இதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளும் வந்து மாநாட்டு பந்தலை பார்வையிட்டுச் சென்றனர். இதனால் மாநாட்டு பந்தல் காலையிலேயே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

உதயசூரியன்
14-12-2007, 05:37 PM
மக்கள் வெள்ளத்தால் மாநாடு முன்னதாகவே தொடங்கியதாக எண்ணுகிறேன்


மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி


நெல்லை, டிச. 14: "திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக வந்துள்ள மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது, மாநாடு தொடங்கிவிட்டதைப் போலவே எண்ணுகிறேன்" என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நெல்லையில் திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு நாளை துவங்குகிறது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடை முழுவதும் கிரானைட் கற்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேடையில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் படங்களும், மேடைக்கு மேல் பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
மேடையை சுற்றிலும் பெங்களூர் குரோட்டன்ஸ் மற்றும் பல வண்ண பூந்தொட்டிகள் வைத்து அழகுபடுத்தப்படுகிறது. மாநாட்டுக்காக 950 அடி நீளத்தில் கலைநயத்துடன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், வி.ஐ.பி.க்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமருவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநாடு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக மு.க.ஸ்டாலின் நெல்லை வந்துள்ளார். நேற்று காலை மாநாட்டு மேடை, முதல்வர் வரும் வழிப் பாதை, ஒலி ஒளி நிகழ்ச்சி நடைபெறும இடம், இந்த நிகழச்சியை முதல்வர் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லையில் 2 நாட்கள் மாநாடு என்றாலும் இங்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. முன்னதாகவே மாநாடு துவங்கி விட்டது போன்று தெரிகிறது. இங்கு வரும் தொண்டர்கள் எப்படி முறைப்படுத்துவது, ஒருங்கிணைப்பது என்பது குறித்து திட்டம் தீட்டி வருகிறோம்.
மாநாட்டு பேரணியை சிறப்பான முறையில் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறேன். திமுக தொண்டரணியினரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர் மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், வரவேற்பு குழு தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அறிஞர்
14-12-2007, 06:25 PM
மாநாடு அமைதியான முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

உதயசூரியன்
14-12-2007, 06:38 PM
திரியில் வந்து வாழ்த்திய அறிஞருக்கு...
என் நன்றி

அறிஞர் அவர்களே..
மானாட்டு முகப்பு பந்தலின் தொழில் நுடபம் எல்லோரும் பார்க்கும் வண்ணம்.. அந்த படத்தை இங்கு வெளியிட எனக்கு தெரிய வில்லை..
பல முறை முயற்சித்து தோற்று விட்டேன்..

முடிந்தால்.. அந்த படத்தை யாராவது பிரசுரிக்க உதவுங்கள்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தேவிப்ரியா
15-12-2007, 12:53 AM
நெல்லையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்வுகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பப் படவிருக்கின்றன.

http://www.dmkyouthwing.in/ எனும் தளத்தில் இதைக் காணலாம்.

அறிஞர்
15-12-2007, 03:39 AM
நண்பரே செய்தியாக மட்டும் இங்கு தருவதை அனுமதிக்கிறோம்.

மன்றம் எந்த கட்சியையும் சார்ந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்....

உதயசூரியன்
16-12-2007, 03:12 PM
நெல்லையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்வுகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பப் படவிருக்கின்றன.

http://www.dmkyouthwing.in/ எனும் தளத்தில் இதைக் காணலாம்.தளம் தந்து உதவிய நண்பருக்கு நன்றி...

ஆனால் நேரடி ஒளி பரப்பு தெரிய வில்லை...
வாழ்க தமிழ்