PDA

View Full Version : கிளை தேடி..!



பூமகள்
14-12-2007, 10:59 AM
http://img30.picoodle.com/img/img30/5/12/14/poomagal/f_kilaithedi1m_0f82958.jpg

கிளை தேடி..!

கிளைகள் தேடும்
காற்றுப் பாதையில்
ஓர் விடுபட்ட இலை..!

தொலைத்த கிளையை
தேடும் விழியுடன்
தொலையா நினைவு..!

தெரிந்தே தேடும்
துன்பத்தின் வழியாக
தவிக்கும் பச்சிலை..!

துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!

குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!

ஆதி
14-12-2007, 11:17 AM
தமிழுக்கு நிறமுண்டு என்னும் தொகுப்பில் "இலை" என்கிற தலைப்பில் வைரமுத்து எழுதியக் கவிதை ஞாபகத்துக்கு வந்தது இதைப் படிக்கும் பொழுது..

சொற்பயண்பாடு அருமை.. சருகு போற் கவிதையிலும் பசுமை இல்லையோ என்பது என் ஐயம்..

இன்னும் கொஞ்சம் கருத்து செறிவை அதிகப்படுத்தி இருக்கலாமோ ?

வாழ்த்துகள் பூமகள்

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
14-12-2007, 12:02 PM
அற்புதமான கவிதை நச்சென்று இருக்கிறது. திரும்பத் திரும்ப அசை போட வைக்கிறது

பூமகள்
14-12-2007, 12:13 PM
சொற்பயண்பாடு அருமை.. சருகு போற் கவிதையிலும் பசுமை இல்லையோ என்பது என் ஐயம்..
இன்னும் கொஞ்சம் கருத்து செறிவை அதிகப்படுத்தி இருக்கலாமோ?
உண்மை தான் ஆதி.
சட்டென உதிக்கும் கவிதையினை சரியாக செதுக்காமலேயே மன்றத்தில் போட்டுவிடுவது என் அவசரக்குடுக்கை கை.
மிகச் சரியான விமர்சனம்.
நன்றிகள் ஆதி. :)

ஓவியன்
14-12-2007, 12:29 PM
இருக்குமிடத்தில் இருக்கும் போதே எல்லாவற்றையும் சாதித்து முடித்து விட வேண்டும். அந்த நிலை விட்டு தவறிய பின் வருந்தி பயனில்லை...

அந்த நிலையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேண்டுமென்று சொல்லி சென்ற பூமகள் கவி நன்று...

தாமரை
14-12-2007, 12:39 PM
கிளையின் தலைகோதி காற்றுக் கரங்கள் பறித்த பச்சிலை (காத்து பலமாத்தான் அடிச்சிருச்சி போல இருக்கு)

அட, தொலைத்த கிளையைத் தேடிய அதுவும் திரும்ப அடைய முடியாது எனத் தெரிந்தும் கண்கலங்க தேடும் பச்சிலை


துவண்டு விழுந்த போது எடுத்த அன்புக்கரங்கள்? என்ன செய்தன அந்த அன்புக்கரங்கள்.. அவையும் உதிர்த்து விட்டுப் போயினவோ? இல்லை ஒட்டி விட்டுப் போயினவோ? ஒட்டி விட்டுத்தான் போயிருக்க வேண்டும்.. ஏனென்றால்

கிளையின் சிநேகம் இல்லை என்று ஆகவில்லை செயற்கை என்றல்லவா ஆகிவிட்டது.

பிடுங்கி எறிந்தது மரமும் இல்லை, கிளையும் இல்லை. காற்று. கிளையின் மேல் வெறுப்பெதற்கு?

ஒட்டவைத்தவன் சாணமெனும் உரமிட்டிருந்தால் ஒட்டி இருக்குமோ?
உரமின்றிப் போனதாலோ, உரமாகும் முயற்சியில் சருகாய் காய்கிறது பச்சிலை?

இதில் யார் பவம் உண்டு? காற்றின் பாவமா? கிளையின் பாவமா? இலையின் பாவமா, கைகளின் பாவமா?

இன்னொரு பச்சிலை உதிர்ப்பு அந்த இலை உண்ணப்படலாம்..

ஆனால் தனிக்காட்டில் கேட்பாரற்று கிடக்கும் தனிமரத்தின் பச்சிலை
உதிர்ந்தாலும் சருகாய்த்தான்.

---------------------------------------------------------

சில ஆண்களும் அப்படித்தான். குடும்பத்தில் இருக்கும் போதும் உழைத்து கொட்டுவார்கள் (பச்சை இலை குளுக்கோஸ் தந்து மரத்துக்கு உணவு தருவதைப் போல) உதிர்ந்து போனாலும் உரமாய்ப் போவார்கள் (இன்ஸூரன்ஸ் பாலிசி).

அறிஞர்
14-12-2007, 01:39 PM
[
குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!


இயற்கையோடு ஒத்துப்போக பழகினால்...
பிரச்சனையில்லை என சருகுப்புரிந்தது....

மனிதனுக்கு சரியாகப்புரிவது எப்போ...

அருமை பூ

ஷீ-நிசி
14-12-2007, 02:40 PM
நல்ல வித்தியாசமான கரு பூமகள்....

வாழ்த்துக்கள்!

தம்பி
14-12-2007, 05:23 PM
மரத்தை வைச்சவன்
தண்ணிதான் ஊற்றுவான்..
உரம்யார் போடுவான்..
அதனால்த்தான்
இலைக்கு கொடுத்தான்
உதிரும் வரம்..

தம்பி
14-12-2007, 05:34 PM
கிளையின் சிநேகம் இல்லை என்று ஆகவில்லை செயற்கை என்றல்லவா ஆகிவிட்டது.

கிளையுடனான
இலையின் சினேகம் இலை
என்றானாலும்..
இலை சினேக(ம்) செயல்'கைதானே

அக்னி
14-12-2007, 05:41 PM
பிரிக்கப்பட்டதா? பிரிந்ததால் பட்டதா?
சொரியப்பட்டதா? சொரிந்ததால் பட்டதா?
எது எப்படியோ
முடிந்துவிட்டது பந்தம்.
உரமாக இல்லாத பந்தம்
உரமாகினாலும்,
மீண்டு(ம்) வராது...
தேடி அலையும் சருகு,
ரசனையான கையில் சேர்கையில்,
முடிந்த பயணம் தொடங்கும்...
அலங்கரிக்கப்படும்... நிறமூட்டப்படும்... நிரந்தரமாக்கப்படும்...

பாராட்டுக்கள் பூமகள்...
செல்வரின் பின்னூட்டம் எண்ணப் பரப்பில் ஆயிரம் சருகுகளைப் பறக்க விடுகின்றது...

பூமகள்
15-12-2007, 06:44 AM
அற்புதமான கவிதை நச்சென்று இருக்கிறது. திரும்பத் திரும்ப அசை போட வைக்கிறது
நன்றிகள் ஈஸ்வரன். :)

இருக்குமிடத்தில் இருக்கும் போதே எல்லாவற்றையும் சாதித்து முடித்து விட வேண்டும். அந்த நிலை விட்டு தவறிய பின் வருந்தி பயனில்லை...
ஒவ்வொருவரும் ஒரு ஒரு புதிய கோணத்தில் கவிதையை பார்த்து அசத்திறீங்க...!
நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

பூமகள்
15-12-2007, 06:52 AM
துவண்டு விழுந்த போது எடுத்த அன்புக்கரங்கள்? என்ன செய்தன அந்த அன்புக்கரங்கள்.. அவையும் உதிர்த்து விட்டுப் போயினவோ? இல்லை ஒட்டி விட்டுப் போயினவோ?
அன்புக் கரங்கள், வலி போக்கும் இதில் இலைக்கே கிளை தெரியாத போது.... இயற்கைக்கு முரணாய் இலை ஒட்ட எப்படி உதவும் ? பிடுங்கிய காயம் ஆறும் வரை மருந்து போடும் கரங்கள்..! பின் தன் பாதை தேடும் அந்த இலை..!

சில ஆண்களும் அப்படித்தான். குடும்பத்தில் இருக்கும் போதும் உழைத்து கொட்டுவார்கள் (பச்சை இலை குளுக்கோஸ் தந்து மரத்துக்கு உணவு தருவதைப் போல) உதிர்ந்து போனாலும் உரமாய்ப் போவார்கள் (இன்ஸூரன்ஸ் பாலிசி).
மிக அழகான அர்த்தப்படுத்துதல். சூப்பர் தாமரை அண்ணா.
கலக்கிட்டீங்க..! :icon_b:
பின்னூட்ட விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள் தாமரை அண்ணா. :)

பூமகள்
15-12-2007, 06:58 AM
இயற்கையோடு ஒத்துப்போக பழகினால்...
பிரச்சனையில்லை என சருகுப்புரிந்தது.... மனிதனுக்கு சரியாகப்புரிவது எப்போ... அருமை பூ
அறிஞர் அண்ணா...!
கலக்கிட்டீங்க... கருத்து சூப்பர். :)
மிக்க நன்றிகள் அண்ணா. :)

நல்ல வித்தியாசமான கரு பூமகள்....
வாழ்த்துக்கள்!
ஓ... மிக்க நன்றிகள் ஷீ..! கண நேரத்தில் எழுதிய கவி. கவியரசரின் பாராட்டு பார்த்து சந்தோசம். :)

சிவா.ஜி
15-12-2007, 08:05 AM
உயிரோடிருந்த இலை,உயிரற்ற சருகாகி,உரமாகிப் பின் மீண்டும் தாய்மரம் நுழைந்து உயிர் பெறும் விந்தை.
கிளையோடு ஒட்டவில்லையென ஏக்கமெதற்கு,சருகின் ஏதேனும் ஒரு துளி....மீண்டுமந்த கிளையில் துளிர்க்கும்...பச்சையாக....அழிவில்லா ஆன்மாக்கள்....எல்லாம் தரும் இந்த தருக்கள்.
வாழ்த்துகள் பூமகள்.

பூமகள்
15-12-2007, 08:08 AM
மரத்தை வைச்சவன்
தண்ணிதான் ஊற்றுவான்..
உரம்யார் போடுவான்..
அதனால்த்தான்
இலைக்கு கொடுத்தான்
உதிரும் வரம்..
உதிர்வது வழிவிட..
புத்திலை பிறக்க..!
உதிரும் சருகும்
தளிர் வளர
உரமாகும்..!!

நன்றிகள் அன்பர் தம்பி. :)

பூமகள்
15-12-2007, 08:12 AM
தேடி அலையும் சருகு,
ரசனையான கையில் சேர்கையில்,
முடிந்த பயணம் தொடங்கும்...
அலங்கரிக்கப்படும்... நிறமூட்டப்படும்... நிரந்தரமாக்கப்படும்...
அசத்தலான விமர்சன கவி அக்னி அண்ணா.
உங்களின் எண்ணமும் வாழ்த்தும் நிறைவேறட்டும். :)
மிகுந்த நன்றிகள் அக்னி அண்ணா. :icon_rollout:

இதயம்
15-12-2007, 08:14 AM
சின்னப்பொண்ணு எவ்ளோ பெரிய தத்துவத்தை கவிதையில அற்புதமா சொல்லிடிச்சி..! (சின்னப்பொண்ணா..? அசந்தா அல்லாரையும் தூங்கி முழுங்கிடும்பா..!!:eek::eek:).

கருத்து முதிர்ச்சி என்பது திறமைகளின் வெளியில் தென்படும் வளர்ச்சி.!! அந்த வகையில் பூமகளின் கருத்து முதிர்ச்சி இப்பொழுதே என் கண்ணை கட்டுகிறது. இனி வரும் காலங்களில் அவரை சமாளிக்க நாமெல்லாம் திணற வேண்டியிருக்கும்..!:D:D அந்த அளவுக்கு அவரது கவிக்குள் ஆழ்ந்த கருத்து அமைதியாய் உள்ளிருக்கிறது.

பாராட்டுக்கள் தங்கையே..!:icon_b::icon_b:

பூமகள்
15-12-2007, 08:19 AM
உயிரோடிருந்த இலை,உயிரற்ற சருகாகி,உரமாகிப் பின் மீண்டும் தாய்மரம் நுழைந்து உயிர் பெறும் விந்தை.
கிளையோடு ஒட்டவில்லையென ஏக்கமெதற்கு,சருகின் ஏதேனும் ஒரு துளி....மீண்டுமந்த கிளையில் துளிர்க்கும்...பச்சையாக....அழிவில்லா ஆன்மாக்கள்....எல்லாம் தரும் இந்த தருக்கள்.
கவிக்கருவை அசத்தலாக சொல்லிமுடித்துவிட்டீர்கள்
சிவா அண்ணா.:icon_b:
அது தான் சிவா அண்ணா ஸ்டைல்...!!:rolleyes:
மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)
"தருக்கள் தரும்
இளம் இலைக்காய்
உரமாகும் சருகுகள்..!

வாழ்க்கை துறந்த பின்பும்
வாழும் அவ்விலைகள் ஊடே...!!"

பூமகள்
15-12-2007, 08:34 AM
சின்னப்பொண்ணு எவ்ளோ பெரிய தத்துவத்தை கவிதையில அற்புதமா சொல்லிடிச்சி..! (சின்னப்பொண்ணா..? அசந்தா அல்லாரையும் தூங்கி முழுங்கிடும்பா..!!:eek::eek:).
பாராட்டுக்கள் தங்கையே..!:icon_b::icon_b:
அதென்ன... இதயம் அண்ணா...!!
தத்துவம் தத்துவம்னு சொலறீங்க...!:icon_ush: ஆனா... என்ன தத்துவம்னே எனக்கும் விளங்கவே இல்லை.:confused::confused:

ஏங்க இதயம் அண்ணா, நீங்க வந்து அது என்ன தத்துவம்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் என் மரமண்டைக்கு புரியும்..!!:icon_ush::icon_ush:

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை அழ வைப்பது தான் இதயம் அண்ணா ஸ்டைல்...!!:rolleyes::D:D

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றிகள் அன்பின் இதயம் அண்ணா. :)

அமரன்
15-12-2007, 09:19 AM
துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!


உரமாகும் முயற்சியில்

இப்போது சருகு..!!

அருமையான கற்பனை..:icon_b:

சருகுகள் பொறுக்கி
பெருமை சேர்க்கும் தொழிலாளர்களை
தேடிச்சென்றன என்மனக்கண்கள்..

ஓய்வெடுக்க ஒதுங்கிய காற்றுக்கும்
காட்டிகொடுத்த பச்சிலைக்கும்
இடையான போராட்டப் பெறுதியாக...
குடும்பங்களுக்கு உரமானது சருகு.

பாராட்டுகள் பூமகள் பாவுக்கு..

மயூ
15-12-2007, 01:12 PM
அடுக்கடுக்காக விமர்சனம் எல்லாம் எழுதத் தெரியாது எனக்கு... ஆனாலும் வாசித்த உடன் பின்னூட்டம் போடத் துடித்து போட்டுவிட்டேன்.. அவ்வளவுதான்! :)

பூமகள்
16-12-2007, 06:00 AM
சருகுகள் பொறுக்கி
பெருமை சேர்க்கும் தொழிலாளர்களை
தேடிச்சென்றன என்மனக்கண்கள்..
ஓய்வெடுக்க ஒதுங்கிய காற்றுக்கும்
காட்டிகொடுத்த பச்சிலைக்கும்
இடையான போராட்டப் பெறுதியாக...
குடும்பங்களுக்கு உரமானது சருகு.
சூப்பர் கவி அண்ணா. முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கவி பார்த்து அசத்திட்டீங்க... அது தான் அமர் அண்ணா...!! :icon_b:

மிகுந்த நன்றிகள். :)

பூமகள்
16-12-2007, 06:01 AM
அடுக்கடுக்காக விமர்சனம் எல்லாம் எழுதத் தெரியாது எனக்கு... ஆனாலும் வாசித்த உடன் பின்னூட்டம் போடத் துடித்து போட்டுவிட்டேன்.. அவ்வளவுதான்! :)
உற்சாகம் கொடுக்க பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் மயூ அண்ணா. :)

நாகரா
14-04-2008, 05:35 AM
மண்ணில் எருவாகி
மீண்டும் கிளையில் சேர
இலையின் சருகுத் தவம்

கவிதை அருமை, வாழ்த்துக்கள் பூமகள். இக்கவிதையின் சுட்டி அளித்த தாமரைக்கு நன்றி.

பூமகள்
16-04-2008, 11:09 AM
மண்ணில் எருவாகி
மீண்டும் கிளையில் சேர
இலையின் சருகுத் தவம்
ஆஹா..!!
எனது அத்தனை வரிகளையும் முன்றே வரியில் அடக்கி ஆண்டுவிட்டீரே நாகராஜன் அண்ணா..!! :rolleyes::icon_rollout:
அசத்திட்டீங்க..!!:icon_b::icon_b:
தங்களின் அன்பான பின்னூட்ட ஊக்கத்துக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா. :)

shibly591
16-04-2008, 11:24 AM
அழகான கவிதை.வாழ்வியல் யதார்த்தம் நிரம்பவே செறிந்துள்ளது.விழுந்த பின்னும் நம்பிக்கையை தளரவிடாத மனத்தன்மை இலைகளுக்கு வாய்த்திருக்கிறது.நமது மனிதர்களிடம்தான் போதாது...இன்னும் தொடரட்டும் இது போன்ற அற்புத படைப்புக்கள்....

அனுராகவன்
17-04-2008, 07:59 AM
நல்ல கரு தோழியே...
வாழ்க்கைக்கு இலை ஒரு எடுத்துக்காட்டு..
இலையின் வாழ்க்கை மனிதனின் வாழ்க்கையும் ஒன்றே..!!
சில நிகழ்ச்சிகளை தவிர...
அழகான கவிதை நன்றி ....

பூமகள்
22-04-2008, 10:32 AM
பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் ஷிப்லி அண்ணா மற்றும் அனு அக்கா. :)