PDA

View Full Version : அவளுடன் ஒரு உரையாடல்



ஆதி
14-12-2007, 09:02 AM
கொட்டிக் கிடக்கிற
கோடி மலர்களில்
எனக்குப் பிடித்தது
உன்னை மட்டும்தான்..

நிலாக் கல்வெட்டில்
நான் வடிக்க நினைப்பது
உன் அழகைத்தான்..

"உன்னைக் காதலிக்கிறேன்" என
என் காதலை
பிரகடனப் படுத்தியும்
ஒரு பதிலும் இல்லையே..
காதலி.

உன் இதழ்களில்
எனக்காக நீ
மிச்சம் வைத்திருப்பது
மௌனத்தை மட்டும்தானா ?

வண்ணத்திப் பூச்சிகளாய்
உன் நினைவுகள்
என்னை வட்டமிடுவது
என் கண்ணீரைக் குடிக்கவா ?

என் காதல்
நந்தவத்தின் விலக்கப்பட்ட கனி
நானா ?

உன் இதயத்தைப் போல்
என் காதலுமா
புரிந்துக் கொள்ள
முடியாத ஒன்று ?

உனக்கு தெரியாது..

உனக்குள் இருந்துதான்
காதல் என்னைப்
பார்த்தது..

உன்னை எழுதிய பிறகுதான்
என் கவிதைகள்
கௌரவப்பட்டன..

ஆகையால்தான்
என்னைக் காதலிப்பதில்லை
என நீ
எப்படி உறுதியாய் உள்ளாயோ
உன்னைக் காதலிப்பதில் நான்
அப்படி தெளிவாய் உள்ளேன்..

பாலைவன மழைப் போல
கேள்விக்குறியாய் உள்ள
உன் காதலுக்காய்
என் உயிரை அழவிடுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை..

உயிருக்கு வெளியேப்
போகிறேன்..
உலகத்தை துறந்து சாகிறேன்..

உனக்கு நேரமிருந்தால்
உன்னால் இயலுமானால்
ஒரு முறை
என் கல்லறைக்கு
வந்து போ..

அழு அல்லது
சிரி
தயவு செய்து
அங்கும் மௌனமாய்
இருந்துவிடாதே..

எதாவது ஒன்றில்
தொடுகை என்
சாமதியை
சமாதானப் படுத்தும்..

-ஆதி

IDEALEYE
14-12-2007, 10:59 AM
ஆதி என்ன இது....
காதலியின் மௌனம் கலைக்க
இப்படியும் ஒரு
உக்தியா???
கவிதை ஆரம்பத்தின் இனிக்கின்றது
இறுதியில் உதைக்கின்றது
வாழ்த்துக்கள்
ஆதி அண்ணா
அன்புடன் ஐஐ

ஆதி
14-12-2007, 11:10 AM
ஆதி என்ன இது....
காதலியின் மௌனம் கலைக்க
இப்படியும் ஒரு
உக்தியா???
கவிதை ஆரம்பத்தின் இனிக்கின்றது
இறுதியில் உதைக்கின்றது
வாழ்த்துக்கள்
ஆதி அண்ணா
அன்புடன் ஐஐ

கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதியக் கவி..

கவிவேந்தர் மு.மேத்தா அறிமுகமானக் காலம்..

இந்த கவிதைப் பிறந்த அன்று அவருடன் ஒரு சந்திப்பு இருந்தது..

கொஞ்சம் எளிமையா எழுதிவிட வேண்டும் என்று எழுதியக் கவிதை..

கல்லூரிமாணவர்களிடமும் கவிஞர் மு.மேத்தவிடமும் நல்ல பாராட்டு வாங்கி தந்த கவிதை..

இது எழுதிய தருணம் "physical chemistry" வகுப்பில் இருந்த தருணம் ரொம்ப வறட்சியானப் பாடம் அது..

இப்படி முடித்தால் எப்படி இருக்கும் என ஒரு சின்னச் சோதனைச் செய்துப் பார்த்தேன் அவ்வளவுதான்..

இதுவும் பறணெறிய என் பழைய கவிதைகளில் இருந்துதான்..

நன்றி ஐஐ! உங்கள் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்..


அன்புடன் ஆதி

பூமகள்
14-12-2007, 11:28 AM
கவி வரிகள்...!
சொல்லாடல் அற்புதம்..!

கொட்டிக் கிடக்கிற
கோடி மலர்களில்
எனக்குப் பிடித்தது
உன்னை மட்டும்தான்..

நிலாக் கல்வெட்டில்
நான் வடிக்க நினைப்பது
உன் அழகைத்தான்..
நல்ல கற்பனை. வாழ்த்துகள் ஆதி.
பூக்காடுடன் ஆரம்பித்து இடுகாடுடன் முடித்துவிட்டீரே...??!!

ஆதி
14-12-2007, 11:52 AM
கவி வரிகள்...!
சொல்லாடல் அற்புதம்..!

நல்ல கற்பனை. வாழ்த்துகள் ஆதி.
பூக்காடுடன் ஆரம்பித்து இடுகாடுடன் முடித்துவிட்டீரே...??!!



உண்மைதான் முன் சொன்னதுப் போல் "physical chemistry" பாடம் மிக கொடுமையான பாடங்க அது.. ஆசிரியரும் அதுமாதிரியேதான்.. அவர் வகுப்புனா எனக்கு பேய் படம் பாக்குர மாதிரி இருக்கும் பயந்து பயந்து எழுதுன கவிதை.. இப்படியும் முடித்து பார்ப்போம் என்று முடித்து..

ஒரு சின்ன வேண்டுகோள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=311023#post311023

இந்த கவிதையை படித்து பார்க்க நேரமிருந்தால் படித்துப் பார்க்க..


வேண்டுகோளுக்கு நிச்சயம் காரணம் சொல்கிறேன்..


பின்னூட்டத்திற்கு நன்றி..

-ஆதி

ஷீ-நிசி
14-12-2007, 03:02 PM
என் காதல்
நந்தவத்தின் விலக்கப்பட்ட கனி
நானா ?


-ஆதி


விலக்கப்பட்ட கனிதானே
ஏவாளால் புசிக்கபட்டது...

வாழ்த்துக்கள் ஆதி!

உணர்வுகளை நன்றாய் வெளிப்படுத்தின கவிதை!

ஆதி
14-12-2007, 03:07 PM
விலக்கப்பட்ட கனிதானே
ஏவாளால் புசிக்கபட்டது...

வாழ்த்துக்கள் ஆதி!

உணர்வுகளை நன்றாய் வெளிப்படுத்தின கவிதை!


ஆமாம் ஷீ அதேதான்..

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷீ..

-ஆதி

அமரன்
14-12-2007, 06:21 PM
கவிதை ரசிக்கக்கூடியதாக இருந்தாலும், கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை ஆதி.
காதலியின் உதட்டில் உறைநிலையில் மொழி இருக்கு என்றால், மரணம் மட்டும்தான் முடிவா?
இந்த ஒரு விடயத்தை விடுத்துப் பார்க்கும்போது கவிதை உணர்வுகளை உதாசீனப்படுத்த முடியவில்லை...

தம்பி
14-12-2007, 08:45 PM
உன் இதழ்களில்
எனக்காக நீ
மிச்சம் வைத்திருப்பது
மௌனத்தை மட்டும்தானா ?...
......................................
.................................
அழு அல்லது
சிரி
தயவு செய்து
அங்கும் மௌனமாய்
இருந்துவிடாதே..

எதாவது ஒன்றில்
தொடுகை என்
சாமதியை
சமாதானப் படுத்தும்..

-ஆதி

இதழ்களில் தேனாக
உறைந்திருக்கும்
காதல்மொழி புரியாத உனக்காக
கண்மலர்கள்
கள் வடிக்க மாட்டா..

சாமதிக்காக
சமாதியில்
நகைபூக்களை வேண்டுமானால்
சிந்தி விடுகின்றேன்.

ஓவியன்
15-12-2007, 02:01 AM
காதலின் அழகு ஆரம்பத்தி வரிக்கு வரி அழகாக இழைக்கப்பட்டு, வார்த்தைகளின் கன கச்சிதத்தால் கவிதை அழகு பெற்றுகிறது....

ஆனால், கவிதையின் கரு........!!!

ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆதி,
காதலுக்காக சாதல் என்பது, ஒருவகையில் சுயநலமே...
அதாவது தன்னை மட்டும், தன் சுகத்தை மட்டும்
மனதில் கொண்டு எடுக்கப்படும் ஒரு முடிவு....

தன்னைச் சூழ உள்ளவர்கள், பெற்றோர், உறவினர்களை
ஒரு கணம் சிந்தித்தால்.....
இந்த முடிவுக்கு ஒருவனும் வரவே மாட்டானே...!!

யவனிகா
15-12-2007, 04:13 AM
நல்ல கவிதை ஆதி...அழகான வரிகளில், அழ வைக்கும் காதலை சொல்லியிருக்கிறீர்கள். காதலில் சில நேரம் மௌனமும் அழகு தான். அழகான காதல்...அழகான கவிதை...வாழ்த்துக்கள்.

ஆதி
15-12-2007, 05:41 PM
கவிதை ரசிக்கக்கூடியதாக இருந்தாலும், கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை ஆதி.
காதலியின் உதட்டில் உறைநிலையில் மொழி இருக்கு என்றால், மரணம் மட்டும்தான் முடிவா?
இந்த ஒரு விடயத்தை விடுத்துப் பார்க்கும்போது கவிதை உணர்வுகளை உதாசீனப்படுத்த முடியவில்லை...


ஒப்புக் கொள்கிறேன் அமர்.. கவிதையின் முடிவு ஏற்குக்கொள்ளும் படியாக இல்லை.. இப்படி முடித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என ஒரு சின்னச் சோதனை அவ்வளவுதான் வேறு எந்த நோக்கமும் இல்லை..

பின்னூட்டத்திற்கு நன்றி அமர்..

-ஆதி

ஆதி
15-12-2007, 05:42 PM
இதழ்களில் தேனாக
உறைந்திருக்கும்
காதல்மொழி புரியாத உனக்காக
கண்மலர்கள்
கள் வடிக்க மாட்டா..

சாமதிக்காக
சமாதியில்
நகைபூக்களை வேண்டுமானால்
சிந்தி விடுகின்றேன்.

கவிதைப் பின்னூட்டத்திற்கு மிக நன்றி தம்பி அவர்களே..

அன்பன் ஆதி

ஆதி
15-12-2007, 05:45 PM
காதலின் அழகு ஆரம்பத்தி வரிக்கு வரி அழகாக இழைக்கப்பட்டு, வார்த்தைகளின் கன கச்சிதத்தால் கவிதை அழகு பெற்றுகிறது....

ஆனால், கவிதையின் கரு........!!!

ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆதி,
காதலுக்காக சாதல் என்பது, ஒருவகையில் சுயநலமே...
அதாவது தன்னை மட்டும், தன் சுகத்தை மட்டும்
மனதில் கொண்டு எடுக்கப்படும் ஒரு முடிவு....

தன்னைச் சூழ உள்ளவர்கள், பெற்றோர், உறவினர்களை
ஒரு கணம் சிந்தித்தால்.....
இந்த முடிவுக்கு ஒருவனும் வரவே மாட்டானே...!!


உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் ஓவியரே..

காதல் போயின் சாதல்

மகாகவியின் வரி.. அதுப் போல ஒரு முடிவுக்கொடுத்து முயன்றுப் பார்த்தேன் அவ்வளவுதான்..

பின்னூட்டத்திற்கு நன்றி ஓவியரே..

-ஆதி

ஆதி
15-12-2007, 05:47 PM
நல்ல கவிதை ஆதி...அழகான வரிகளில், அழ வைக்கும் காதலை சொல்லியிருக்கிறீர்கள். காதலில் சில நேரம் மௌனமும் அழகு தான். அழகான காதல்...அழகான கவிதை...வாழ்த்துக்கள்.

உணர்ச்சிகளை எளிமையாக எழுத முயற்சித்தேன்.. அலங்காரமுமில்லாமல் சில உணர்ச்சிகளைச் சொல்ல முயற்சித்தேன்..

அழகான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள் யவனிகா அக்கா..

-ஆதி