PDA

View Full Version : எனது பதிவுகள்- பகிர்வதற்காய் மட்டும்-



IDEALEYE
13-12-2007, 12:34 PM
காதல் பற்றி எனக்குச்சொல்லித்தரப்பட்ட முதல் நிமிடங்களில் எனது பதிவுகள்- பகிர்வதற்காய் மட்டும்-
காதல் அன்பின்
மறுவடிவம் அல்ல
காதல் !
உறவின் வெளிப்பாடும்
உறவின்உரமும் அல்ல
உருக உருக
உழைத்துக்கொட்டி
எல்லாக்கடமைகளும்
சரிவரச்செய்யும் Ц
அன்புக்கனவன் - பலபொழுது
காதலனாக - இருப்பதில்லை
காலைமுதல்
மாலை வரை
ஓயாமல் உழைத்து -சமைத்து
கற்புக்காத்து
அவன் வாரிசுகள் சுமந்து
அவனுக்காகவே வாழும்
உத்தமியும் -பலபொழுது
காதலியாக - இருப்பதில்லை
ஏன்?
காதல் அன்பின்
மறுவடிவம் அல்ல
காதல் !
உறவின் வெளிப்பாடும்
உறவின்உரமும் அல்ல
காதல் Ц சுயம்
காதலில் நீ உன் சுயம்
தொலைக்க மாட்டாய்
காதல்- சுதந்திரம்
நீ அடிமையாக மாட்டாய்
காதல்- அமைதி
நீ ஏங்கித்தவிக்க மாட்டாய்
காதல்- வாழ்வு
நீ செத்துப்பிழைக்க மாட்டாய்
காதல்- யதார்த்தம்
நீ பேலியாக மாட்டாய்
காதல் அறிவு
நீ அறியப்படுவாய்
உன்னில், பிறரில்
காதல்- குருடு
காதல்- ஊமை
காதல்- செவிடு
சுயநலம், பொறாமை
நயவஞ்சகம்- பொய்
எதுவும் இங்கு
வாலாட்டமுடியாது
அடைவது காதல் அல்ல
அடையத்துடிப்பது காதல்
விட்டுக்கொடுப்பு காதல் அல்ல
விட்டுவிட நினைப்பது- காதல்
கவர்ச்சி காதல் அல்ல
காமம் காதல் அல்ல
உத்தமம் காதல்
உடலில் உள்ளதல்ல காதல்
உள்ளத்தில் உள்ளது காதல்
பத்திலும் - பத்தொன்பதில்
மட்டுமல்ல
முப்பதிலும் -அறுபதிலும்
காதல் வரும்
காதல் எப்பொழுதும்
வயதுக்கு வருவதில்லை
காதல்
ஒருவர் இன்னொருவரில்
சாரும் முடிவுப்புள்ளி
அல்ல - காதல்
இருவரும் இணையும்
ஒற்றைப்புள்ளி
உடல் இணைய வேண்டிய
அவசியமில்லா
உள்ளங்கள் மட்டும் இணைய வேண்டிய
நியதி
ஆனால் ஒரெயொரு
நியதிமட்டும்
இன்னும் இயற்கையாய்Е
காதல் -எதிர்ப்பால்
உறவுகொண்டது
தனிப்பால் Ц அல்ல
இங்குதான் காதல்
உத்தமமடைகின்றது
இவை அனைத்தையும்
தன்னுள் கொண்ட
நீண்ட நியதி- காதல்
இறுதியாய்
காதல்
ஒருவழிப்பயணம்
ஒருதடவை- மட்டுமே
செல்ல முடியும்
மீண்டும் செல்லவோ
மீள வரவோ முடியாது.
முடிந்தால் முயன்றுபார்
முக்தி நிலை காண்பாய்