PDA

View Full Version : திரி பூட்டுதலுக்கு காரணம்சக்திவேல்
13-12-2007, 12:14 PM
பென்ஸ் குண்டு வெடிப்புகளும்- தமிழர் கைதுகளும் திரியை பூட்டியிருக்கின்றார். அதன் காரணம் என்ன என்று சொல்லி பூட்டியிருந்தால் விவரத்தை தெரிந்திருக்கலாம். என்ன காரணத்தினால் பூட்டப்பட்டது என்று விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

IDEALEYE
13-12-2007, 12:21 PM
குறித்த திரியிற்கு பதிலிட முன்னமே திரி பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்து போனேன், தயவு செய்து காரணத்தைக் கூறமுடியுமா பென்ஸ்.
அன்புடன் ஐஐ

பென்ஸ்
13-12-2007, 12:55 PM
4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

சுருங்கக்கூறின்


மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..

நான் இந்த திரியை பூட்டியது யாரையும் பதிவுகள் புண்படுத்த கூடாது என்பதால்தான், பூட்டியது புண்படுத்தினால் , வருந்துகிறென்...
ஆனால் ... நண்பர்களே, தமிழ் என்ற ஒரு மொழி மூலம் இங்கு இனைந்துள்ளோம், இங்கு ஆக்கபூர்வமான பதிவுகளை கொடுங்கள்.... விவாதங்கள் வளரட்டும், ஆனால் ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும்...
அடுத்தவர் நம்பிக்கையில் கைவைக்கும் அளவிலான காரியங்கள் பேசும் போது நாம் உணர்ச்சிவசபட்டு எழுத துவங்கி.... கடினமாகி... நண்பர்களே, நீங்கள் பதித்தது மட்டும் அல்லாது, முழு திரியையும் படித்து பாருங்கள்.... அது மன்ற விதியை மீறவில்லை என்று சொல்லுங்கள் திறக்கிறேன்....
தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி...

ஆதி
13-12-2007, 01:04 PM
அந்த திரியில் என் பதிவுகளில் யார் மனமாவது புண் படும்படி இருந்திருந்தால் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்..

-ஆதி

சக்திவேல்
13-12-2007, 01:06 PM
நன்றி பென்ஸ் அவர்களே, இத்திரியில் விதி மீறல் செய்தது யார், அதை குறிப்பிட்ட பதிவை கோடிட்டு காட்டினால் நலமாக இருக்கும். பின்ந்நாளில் நாங்கள் அதை தவிற்பதற்கு உதவும்.

பென்ஸ்
13-12-2007, 01:19 PM
சக்திவேல்...
நாம் யாரை குறிப்பிட வேண்டும்... ???
எந்த ஒரு பதிவு துவங்குவதாக இருந்தாலும் அதற்கான ஒரு உந்துதல் இருக்கும், அந்த உந்துதலுக்கான காரணம் என்ன???
நான் தவறுகளை கண்டுபிடிப்பதற்க்காகவோ, அதை தட்டி கேட்பதற்க்காகவோ இதை செய்யவில்லை நண்பரே, தவறு நேராமல் இருக்கவே....

சக்திவேல்
13-12-2007, 02:47 PM
சரிதான், புரிந்துகொன்டேன்.
நன்றி.

IDEALEYE
13-12-2007, 03:03 PM
பென்ஸ் உடைய விதிமுறைகள் சார்ந்த கருத்துக்களும், எதுவும் ஏடாகூடமாக நடக்காமல் இருப்பதற்காகவும் என்ற முன்னெச்சரிக்கையான நடவடிக்கை இது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது,
அத்திரியின் கர்த்தா என்றவகையில் நான் ஓரிரு வார்த்தைகள் சொல்ல விளைகின்றேன்,
குறித்த திரியினை தொடங்கியதன் முழுமையானதும் அப்பழுக்கற்ற நோக்கம்; யுத்தம் குறித்த எனது கருத்துக்களை மன்றத்தின் உறவுகளுடன் பகிர்வதற்கும் அவர்களது கருத்துக்களை கேட்டுக்கொள்ளவுமே, ஆனால் சில நண்பர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்ற சந்தர்ப்பங்களில் சாதி சார்ந்த தகவல்களை கொண்டுவருவது தவிர்க்க முடியாது போயிற்று, அத்துடன் மிகவும் நிதானமாகவே நான் கருத்துக்களை முன்வைத்தேன் இருப்பினும் எனது வார்த்தைப்பிரயேகங்கள் எவரையாவது பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன், உண்மையில் குறித்த பகுதியில் எவரையும் தாக்கும் எண்ணம் இருக்கவில்லை, அமரன் அண்ணாவின் பதிவொன்றுக்கு சற்று விசனத்துடன் பதில் எழுதியதாய் ஞாபகம், அமரன் அண்ணா என்னை மன்னிக்கவேண்டும்,

குறித்த திரியில் என்னால் மூழுமையாக பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றது, என்றாலு இன்னொரு திரி ஈழப்போர் விடயத்தில் இப்போதைக்குத்தொடங்கும் எண்ணம் இல்லை, ஏனெனில் சில தமிழ் அன்பர்கள் தமது நிலைகளில் இன்னமும் தீவிரமாக இருப்பதாகவே நான் உணர்கின்றேன், ஈழப்போராட்டத்தில் மாற்றுக்கருத்து குறித்த பக்குவம் இன்னும் ஏற்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன், எனவே பக்குவம் வரும்வரை காத்திருப்பது பொருத்தம் என எண்னுகின்றேன்,

மீண்டும் இத்தகைய கருத்தையும் விளக்கத்தையும் தந்தமைக்கு பென்ஸ்க்கும், இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியதற்கு சக்திவேலுக்கும் எனது நன்றிகள்

அன்புடன் ஐஐ

அறிஞர்
13-12-2007, 03:11 PM
தமிழர்களாக நாம் இணைந்திருக்கிறோம்..

ஈழத்தில் ஏற்படும் குழப்பங்களும், போர் சூழ்நிலைகளும் எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

அதினால் பாதிக்கப்பட்ட நம் தமிழ் உறவுகளை எண்ணுகையில் எங்கள் கண்கள் கலங்குகின்றன.

இலங்கை சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு, சிலர் எதிர்விதமாக பதில் கூறினால், அது பலருடைய உணர்வுகளை அது பாதிக்கும் என்பது உண்மை.

எனவே கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்.

உலகிலுள்ள எல்லா தமிழர்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.