PDA

View Full Version : புன்னகை

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 10:53 AM
உங்கள் முகத்தில்
புன்னகையைத் தவழ விடுங்கள்
ஒருபோதும் தவற விடாதீர்கள் புன்னகையை
மனம் வீசும் மலர்களெல்லாம் வாடி விடும்
ஆனால் புன்னகைப் பூக்களோ
பார்ப்பவரையும் மலரச் செய்யும்
புன்னகைக்க என்ன செலவா?
வேண்டியவர்களிடம் நேசிப்பு
வேண்டாதவர்களிடம் யோசிப்பா?
அழகான பெண்களைப் பார்த்தால் சுரந்துவிடும் புன்னகை
கடன் கேட்க வந்தவனைப் பார்த்தாலோ வரண்டுவிடும் புன்னகை
அடுத்தவன் வீழ்ந்தால்
எழுந்துவிடும் புன்னகையை வெட்டி விடுங்கள்
அணியும் அணிகலன்களிலே மிகவும் உயர்ந்தது புன்னகையே
புன்னகை பொன் நகையைவிட
அழகானது ஆபத்தில்லாதது ஆரோக்கியமானது
கழட்டுங்கள் முகமூடியை
அணியுங்கள் புன்னகையை
குழந்தையின் புன்னகையைப் போல் வெளிப்படுதுங்கள்
ஒவ்வொரு நொடியையும்

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:28 AM
சிரிப்பை பற்றிய சிந்தனை சிறப்பாக இருக்கிறது.. ஈஸ்வர்... புன்னகையுடன் வாழ்த்துகிறேன்..உங்களையும் உங்களின் புன்னைகையையும்..!

ஓவியன்
13-12-2007, 11:31 AM
பொன்னகை தேடி
ஓடியதில்
என் நகையைத்
தொலைத்தேன்
புன்னகையாக......

பாராட்டுக்கள் ஈஸ்வரன், வார்த்தைகளில் கொஞ்சம் வசனத் தன்மை அதிகமாகத் தென்படுவதாகத் தெரிகிறது. கொஞ்சம் முயன்றால் இன்னமும் கவிதை மெருகேறுமே........??

யவனிகா
13-12-2007, 12:13 PM
புன்னகை அழகான
விசயம் தான்...
நானும் ஆரம்பத்தில்
அழகாகக் சிரித்துக்
கொண்டிருந்தான் இருந்தேன்...
கல்மிசமில்லாத வெள்ளைச் சிரிப்பு...
சைக்கிளிருந்து விழுந்தாலும் சிரிப்பு...
நாய் துரத்தினாலும் சிரிப்பு...
தங்கை உதை வாங்கினாலும் சிரிப்பு...
பிள்ளைப் பருவத்தின் கொள்ளைச் சிரிப்பு...

எதுக்கெடுத்தாலும் ஏண்டி
ஈன்னு சிரிக்கிற? இது அம்மா...

பொம்பள சிரிச்சாப் போச்சு
பொகயில விரிச்சா போச்சு...இது பாட்டி.

பொண்ணுங்க அளவாத்தான் சிரிக்கணும்...அத்தை

எப்போதும் சிரிக்கும் பொண்ணா...
அணுகுதல் எளிது... அலுவலக ஆண்கள்

இதற்கு மேலும் வெள்ளைச் சிரிப்பா....சாத்தியமேயில்லை.

IDEALEYE
13-12-2007, 12:24 PM
சிரிப்பை பற்றிய சிந்தனை சிறப்பாக இருக்கிறது.. ஈஸ்வர்... புன்னகையுடன் வாழ்த்துகிறேன்..உங்களையும் உங்களின் புன்னைகையையும்..!

கவிதை சிறப்பாக இருக்கின்றது என்பது சரி
சுக புன்னகையுடன் வாழ்த்துதலில் எவருக்காவது புன்னகை தெரிகின்றதா??
அன்புடன் ஐஐ

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 12:24 PM
சிரிப்பை பற்றிய சிந்தனை சிறப்பாக இருக்கிறது.. ஈஸ்வர்... புன்னகையுடன் வாழ்த்துகிறேன்..உங்களையும் உங்களின் புன்னைகையையும்..!

புன்னகையுடன் நன்றி

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 12:29 PM
பொன்னகை தேடி
ஓடியதில்
என் நகையைத்
தொலைத்தேன்
புன்னகையாக......

பாராட்டுக்கள் ஈஸ்வரன், வார்த்தைகளில் கொஞ்சம் வசனத் தன்மை அதிகமாகத் தென்படுவதாகத் தெரிகிறது. கொஞ்சம் முயன்றால் இன்னமும் கவிதை மெருகேறுமே........??

இதையே கொஞ்சம் திருத்தி தாருங்களேன்.
இக்கவிதையை ஒரு கவி அரங்கில் வாசிக்கலாம் என்றிருக்கிறேன்

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 12:35 PM
கவிதை சிறப்பாக இருக்கின்றது என்பது சரி
சுக புன்னகையுடன் வாழ்த்துதலில் எவருக்காவது புன்னகை தெரிகின்றதா??
அன்புடன் ஐஐ

இளம் புயல் அவர்களே தெரிகிறது. நீங்கள் சொல்வது

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 12:38 PM
புன்னகை அழகான
விசயம் தான்...
நானும் ஆரம்பத்தில்
அழகாகக் சிரித்துக்
கொண்டிருந்தான் இருந்தேன்...
கல்மிசமில்லாத வெள்ளைச் சிரிப்பு...
சைக்கிளிருந்து விழுந்தாலும் சிரிப்பு...
நாய் துரத்தினாலும் சிரிப்பு...
தங்கை உதை வாங்கினாலும் சிரிப்பு...
பிள்ளைப் பருவத்தின் கொள்ளைச் சிரிப்பு...

எதுக்கெடுத்தாலும் ஏண்டி
ஈன்னு சிரிக்கிற? இது அம்மா...

பொம்பள சிரிச்சாப் போச்சு
பொகயில விரிச்சா போச்சு...இது பாட்டி.

பொண்ணுங்க அளவாத்தான் சிரிக்கணும்...அத்தை

எப்போதும் சிரிக்கும் பொண்ணா...
அணுகுதல் எளிது... அலுவலக ஆண்கள்

இதற்கு மேலும் வெள்ளைச் சிரிப்பா....சாத்தியமேயில்லை.

அறிவே இல்லை
பூக்களுக்கு
எப்போதும் சிரிப்பு

இது அமுதபாரதியின் ஹைக்கூ

ஆதி
13-12-2007, 04:05 PM
உங்கள் முகத்தில்
புன்னகையைத் தவழ விடுங்கள்
ஒருபோதும் தவற விடாதீர்கள் புன்னகையை
மனம் வீசும் மலர்களெல்லாம் வாடி விடும்
ஆனால் புன்னகைப் பூக்களோ
பார்ப்பவரையும் மலரச் செய்யும்
புன்னகைக்க என்ன செலவா?
வேண்டியவர்களிடம் நேசிப்பு
வேண்டாதவர்களிடம் யோசிப்பா?
அழகான பெண்களைப் பார்த்தால் சுரந்துவிடும் புன்னகை
கடன் கேட்க வந்தவனைப் பார்த்தாலோ வரண்டுவிடும் புன்னகை
அடுத்தவன் வீழ்ந்தால்
எழுந்துவிடும் புன்னகையை வெட்டி விடுங்கள்
அணியும் அணிகலன்களிலே மிகவும் உயர்ந்தது புன்னகையே
புன்னகை பொன் நகையைவிட
அழகானது ஆபத்தில்லாதது ஆரோக்கியமானது
கழட்டுங்கள் முகமூடியை
அணியுங்கள் புன்னகையை
குழந்தையின் புன்னகையைப் போல் வெளிப்படுதுங்கள்
ஒவ்வொரு நொடியையும்

இந்த வரி அழகிய வரி.. மனதில் நிறுத்த வேண்டிய வரி.

கவிதையின் கரு அருமை.. ஆனால் கவிதயின் நடைச் சற்று உரைநடையாக உள்ளது.. வசதிக்கு ஏற்ப வரிகளை மேல் கீழாய் மாற்றினால் கவிதை நடை வரும் எடுத்துக்காட்டாக..

புன்னகையைத் தவழ விடுங்கள்
உங்கள் முகத்தில்
ஒருபோதும் தவற விடாதீர்கள்...

இன்னும் கொஞ்சம் வார்த்தைகளைச் செதுக்கி வடிவமைத்தால் கவிதை இன்னும் சிறப்பு பெறும் என்பதில் ஐயமில்லை..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
14-12-2007, 03:13 AM

நன்றி. மற்ற வரிகளையும் திருத்திக்கொடுத்திருந்தால் மிக்க நன்றியாயிருக்கும்

அமரன்
17-12-2007, 03:30 PM
வளமான வாழ்வின்
மந்திரச் சாவி..
புன்னகை....

பாராட்டுகள்.