PDA

View Full Version : ஏ(ன்)மாற்றம்



சுகந்தப்ரீதன்
13-12-2007, 04:31 AM
எதிர்பார்ப்புகள்.........
ஏமாற்றிய பொழுதெல்லாம்
என்னை அரவணைத்து
ஏற்றுக் கொண்டதால்
இன்று....
என் மனம் நாடுவது
ஏமாற்றங்களைத்தான்
எதிர்பார்ப்புகளை அல்ல!

சிவா.ஜி
13-12-2007, 04:35 AM
எப்போதும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட கரங்கள்...ஏமாற்றிவிட்டால்.....
எதிர்பார்ப்புகள் இல்லாத நீங்கள் எதிர்பார்ப்பதே ஏமாற்றங்களையா...?
ஏற்றுக்கொள்ளும் இதயத்தையா..?
(காதலிக்கு ஐஸ் வைக்க இந்த காதலர்கள் என்னல்லாம் செய்றாங்கப்பா...)
வாழ்த்துகள் தம்பி.(ஏமாற்றம் உங்களை ஏமாற்றட்டும்)

ஆதி
13-12-2007, 04:38 AM
நெடியப் பாலைவனத்தில்
ஒரு நொண்டி ஒட்டகத்தை
நம்பி பயணப்பட்ட
என் அறிவைப்பற்றி
என்ன சொல்ல..

- கவிவேந்தர் மு.மேத்தா

நானிடறி விழுந்தஇடம்
நாளாயிரம்
- கண்ணதாசன்

இந்த வரிகளைப் போல் தோல்வியில் துவண்ட உள்ளத்தின் இன்னொரு குமுறல் இது..

புத்தர் சொல்லுவார்.. எதிர்ப்பார்ப்பு என்பதும் ஆசைதான் அதைவிட்டொழி எல்லாத் துன்பமும் உன்னைவிட்டு அகழும்..

வாழ்த்துக்கள் நண்பா..

-ஆதி

சுகந்தப்ரீதன்
13-12-2007, 06:31 AM
(காதலிக்கு ஐஸ் வைக்க இந்த காதலர்கள் என்னல்லாம் செய்றாங்கப்பா...)
வாழ்த்துகள் தம்பி.(ஏமாற்றம் உங்களை ஏமாற்றட்டும்)
காதலிக்கு எதுக்கு ஐஸ் வைக்கனும் அண்ணா.. வாங்கி கொடுத்தாலே போதுமே..? இது காதலியை நினைத்து வந்ததல்ல.. அன்றாட வாழ்வியல் ஏமாற்றங்களை பற்றியது.. ஆனாலும் காதலிக்கும் பொருந்தி வரத்தான் செய்கிறது நீங்கள் கூறிய பிறகு பார்த்தால்.... பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி அண்ணா..!

பூமகள்
13-12-2007, 06:46 AM
என்னங்க ப்ரீதா...!
இப்படி ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் குழந்தையாயிட்டீங்க???
ஏமாற்றம் வந்தால்.. தாய் மடி போன்ற தோழமை கிடைக்குமென்ற நப்பாசையோ??
ஏங்கிய அன்பு கிட்டும்.. அதற்காக ஏமாற்றத்தினை ஏன் வருத்தி அழைக்கிறீர்கள்??

கவிதை அருமை. கவிக்கருவில் எனக்கு உடன்பாடில்லை ப்ரீதா...!!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 07:23 AM
புத்தர் சொல்லுவார்.. எதிர்ப்பார்ப்பு என்பதும் ஆசைதான் அதைவிட்டொழி எல்லாத் துன்பமும் உன்னைவிட்டு அகழும்..

வாழ்த்துக்கள் நண்பா..

-ஆதி
மிக்க நன்றி நண்பா.. ஆசையை விடொழிக்கத்தான் எனக்கும் ஆசை.. நடக்காதிருக்குமா என் ஆசை நிராசை..?!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 07:27 AM
கவிதை அருமை. கவிக்கருவில் எனக்கு உடன்பாடில்லை ப்ரீதா...!!

மிக்க நன்றி பூ.. ஏமாற்றத்தில் எனக்கும் உடன்பாடில்லைதான்.. அதனால்தான் எனக்குள் ஏன்-மாற்றம் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்..?

IDEALEYE
13-12-2007, 08:19 AM
ஏமாற்றம்
தோல்வி
பின்னடைவு
எல்லாம்
இன்னொருபக்கத்தில்
முற்போக்காகவே கொள்ளப்படுகின்றது
இல்லை என்பது இல்லா உலகில்
இவை எல்லாம்- எதிர்மரை அடையாளங்கள் அல்ல
தோழர்களே...

சுகந்தப்ரீதன்
13-12-2007, 09:05 AM
இல்லை என்பது இல்லா உலகில்
இவை எல்லாம்- எதிர்மரை அடையாளங்கள் அல்ல
தோழர்களே...
மிக்க நன்றி நண்பரே.. நல்ல கருத்துள்ள பின்னூட்டமிட்டமைக்கு..!

வசீகரன்
13-12-2007, 09:40 AM
எல்லாமே.... நாம் நினைத்தது போல்தான்
நடந்து விடுகிறதா சுகந்த்.....!
காணும் கனவுகள் எல்லாமே பலித்துதான் விடுகிறதா....!

நல்ல நினைவுகளை ஏந்திக்கொள்வோம்....
நடக்காதவைகளை அனுபவமாக கொள்வோம்.....!

அதிக நேரம் ஆசைகளை மனதில் கொண்டு அலைவதை
தவிர்த்து....ஆயத்தமானவைகளை நினைத்து சென்று பாரேன்.....
உனக்கு வித்தியாசம் தெரியும்....!

நண்பனாக சொல்கிறேன்,,,!

வந்தா மல இல்லாங்காட்டி....!

மலர்
13-12-2007, 09:40 AM
சுகு.....
புரிதல் இல்லாதவரை ஏமாற்றம் இருக்கதான் செய்யும்...
என்னை பொறுத்தவரை
பிடித்தவர்கள் ஏமாற்றினால்...
ஏமாற்றம் கூட ஒரு சுகம் தான்...

சுகந்தப்ரீதன்
13-12-2007, 10:26 AM
நண்பனாக சொல்கிறேன்,,,!

வந்தா மல இல்லாங்காட்டி....!
நண்பா..உன்னோட பின்னூட்டம் கண்டு உண்மையிலேயே ஊக்கமடைந்தேன்... அதிலும் கடைசி வரிகள் கலக்கல்.. மிக்க நன்றி நண்பா...!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 10:32 AM
சுகு.....
புரிதல் இல்லாதவரை ஏமாற்றம் இருக்கதான் செய்யும்...
என்னை பொறுத்தவரை
பிடித்தவர்கள் ஏமாற்றினால்...
ஏமாற்றம் கூட ஒரு சுகம் தான்...
ஆமாம்.. நீ எப்ப தத்துவஞானி ஆன..? என்கிட்ட சொல்லவே இல்ல..! ஏமாற்றம் கூட ஒரு சுகம்தானா..? நல்லவேளை என்னை பொறுத்தவரைங்கிற வார்த்தைய சேர்த்ததால என்கிட்ட இருந்து தப்பிச்சுட்ட... இல்லன்ன உதை வாங்கியிருப்ப மலரு என்கிட்ட..!

மலர்
13-12-2007, 10:54 AM
நல்லவேளை என்னை பொறுத்தவரைங்கிற வார்த்தைய சேர்த்ததால என்கிட்ட இருந்து தப்பிச்சுட்ட... இல்லன்ன உதை வாங்கியிருப்ப மலரு என்கிட்ட..!கழுதை தான் உதைக்குமாம் எங்கேயோ படிச்சேன்.....:D:D:D

யவனிகா
13-12-2007, 10:59 AM
நல்லாருக்கு சுகு...
ஆனா ஏமாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது
ஆரோக்கியமான மனநிலை அல்லவே...கற்பனைக் கவிதையாக இருந்து விட்டுப் போகட்டும்...உனக்கு எதிர்பார்ப்புகள் எல்லாமே எட்டிவரட்டும்..

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 11:02 AM
எல்லாமே.... நாம் நினைத்தது போல்தான்
நடந்து விடுகிறதா சுகந்த்.....!
காணும் கனவுகள் எல்லாமே பலித்துதான் விடுகிறதா....!

நல்ல நினைவுகளை ஏந்திக்கொள்வோம்....
நடக்காதவைகளை அனுபவமாக கொள்வோம்.....!

அதிக நேரம் ஆசைகளை மனதில் கொண்டு அலைவதை
தவிர்த்து....ஆயத்தமானவைகளை நினைத்து சென்று பாரேன்.....
உனக்கு வித்தியாசம் தெரியும்....!

நண்பனாக சொல்கிறேன்,,,!

வந்தா மல இல்லாங்காட்டி....!

பொதிகை மின்னல் வசீகரன் தானே

ஓவியன்
13-12-2007, 11:24 AM
எந்த ஒரு விடயத்திலும் அதிக எதிர்பார்ப்பையும் அதிகமான ஏமாற்றத்தினையும் எதிர்பார்க்க கூடாது. மாறாக கடும் உழைப்பை அந்த விடயத்திற்காக வழங்கிவிட்டு அமைதியாக இருந்தால் போதும்.

எதிர்பார்பின்றியே ஏற்றங்கள் நம்மைத் தேடி வரும் நம்மை ஏமாற்றாமலேயே......

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:32 AM
கழுதை தான் உதைக்குமாம் எங்கேயோ படிச்சேன்.....:D:D:D
நானும் படிச்சிருக்கேன்.. ஆனா உன்ன மாதிரி கழுதைகிட்ட உதை வாங்குன அனுபவமெல்லாம் என்கிட்ட கிடையாது..:wuerg019:

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:34 AM
நல்லாருக்கு சுகு...
ஆனா ஏமாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது
ஆரோக்கியமான மனநிலை அல்லவே...கற்பனைக் கவிதையாக இருந்து விட்டுப் போகட்டும்...உனக்கு எதிர்பார்ப்புகள் எல்லாமே எட்டிவரட்டும்..
அக்கா..எப்ப எப்ப பின்னூட்டம் இட்டாலும் தம்பிக்கு அது ஊக்கமாகத்தான் வந்து அமையும்... மிக்க நன்றி அக்கா..!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:37 AM
பொதிகை மின்னல் வசீகரன் தானே
வசீகரன் மின்னல அல்ல நண்பரே... தென்றல்.. பொதிகை தென்றல்.. வசீகரமான வரிகளுக்கு சொந்தகாரர்...வசீகரன்..!

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:40 AM
எதிர்பார்பின்றியே ஏற்றங்கள் நம்மைத் தேடி வரும் நம்மை ஏமாற்றாமலேயே......
ஏமாற்றத்தில் மாவை எடுத்தாலே மாறிவிடுகிறது..அது ஏற்றமாய்.. இன்னும் எதுக்குடா மடையா இந்த மாதிரி இருக்குறன்னு சொல்லுறாரு எங்க அண்ணன்... இனி எல்லாமே மாற்றம்தான்.. மிக்க நன்றி அண்ணா..!

அமரன்
15-12-2007, 09:33 AM
வைரமுத்து வரிகளில் சொன்னது..
இதனால்த்தான்
வைர முத்துகளாக மின்னுது..

"சாயம்போன வார்த்தைகளுக்கு
புதுச்சாயம் பூசிப்பார்ப்பது
கவிஞர்களுக்கு நாட்டமானது.."

இதனால்த்தான்
நட்டங்களிலும் நாட்டம்கொள்கின்றது
கவிஞனின் மனது..

எதிர்பார்புத் தூக்கியடித்ததால்
எமாற்றங்களை அரவணைப்பாக்கிவிட்டாய்...
பரவாயில்லை..
ஏமாற்றம் தள்ளிபோட்ட வெற்றிதான்..

தாயடித்தால்
யார்பின்னாலோ ஒளியும் குழந்தை
தாய்மடியைத் தேடுவதில்லையா..

நீயும் தாய் மடிசேருவாய்
தாயும் உனக்கு மடிதருவாள்..
அதுவரை,
பத்திரமாக இருந்துகொள்.

சுகந்தப்ரீதன்
16-12-2007, 08:37 AM
தாயடித்தால்
யார்பின்னாலோ ஒளியும் குழந்தை
தாய்மடியைத் தேடுவதில்லையா..

நீயும் தாய் மடிசேருவாய்
தாயும் உனக்கு மடிதருவாள்..
அதுவரை,
பத்திரமாக இருந்துகொள்.
மிக்க நன்றி அண்ணா.. உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.! பின்னூட்ட கவிதை அருமையாக இருக்கிறது.. எனது வாழ்த்துக்கள்..!