PDA

View Full Version : வானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை..



rambal
26-06-2003, 02:38 PM
வானவில் காலம்..(அத்தியாயம் 3) தொடர்கதை..


தலையணை கட்டி..
தலைமுடி கோத
இருவிரல் தேடி...
கன்னம் கிள்ளி
விளையாட காத்திருந்து..
கனவுகள் வந்து இம்சிக்க..
தூக்கம் இல்லா முழித்து..
கண்கள் சிவந்து போவது
வாடிக்கையானால்
அது வானவில் காலம்...


அடுத்த நாள் காலை போனில் கேசவனுடைய அக்கா என்று மீரு எழுப்பிய பிறகுதான் எழுந்தாள்.
கார்ட் லெஸ்ஸை எடுத்து காதில் பொருத்த கேசவன் லைனில் இருந்தான். குழப்பத்துடன் பேச ஆரம்பித்தாள்..
"கௌரி.. சாரி.."
"அதான் கார்ட்லையே சொல்லிட்டீங்களே.. பின்ன எதுக்கு இப்ப போன்.."
"அந்த கார்டுக்காகத்தான் போன் பண்ணேன்.. கார்ட் கொடுத்தது ஒன்னும் தப்பு இல்லையே..."
இப்படி ஆரம்பித்த அந்த உரையாடல் சுமார் ஐந்து நிமிடம் சமீபத்தில் ரிலீசான ரன்.. இத்யாதிகளோடு
ஒரு வழியாய் முடிவிற்கு வந்தது. கௌரிக்கு ஒரு பக்கம் ஆனந்தம். மறுபக்கம் குழப்பம். இது காதலா? இல்லை அட்ராக்சனா?
தான் செய்வது சரியா? தவறா? அடுத்த நாள் எந்த போனும் வராமல் போகவே கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.
திங்கட்கிழமை முதல் அனந்துவிற்கு அண்டர் 16 டிஸ்ட்ரிக்ட் செலக்சனுக்கு பிராக்டிஸ் இருக்கிறது என்று சொல்லி
அவன் பள்ளிப் பயணத்தை சைக்கிளில் தொடர்ந்தான். கௌரி அனந்து துணையில்லாமல் தனியாக
செல்வது இதுதான் முதல் தடவை. கொஞ்சம் சந்தோசம் தொற்றிக் கொண்டது. கௌரி தனக்கு துணையாக நித்யா இருப்பதாக சொல்ல
எந்த குழப்பமும் இல்லாமல் பஸ் பிரயாணம் குதுகலமாக ஆரம்பமானது. அன்று பஸ்ஸில் நித்யாவிடம் கடந்த இரு நாட்களாக
நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பித்து தனக்கு கேசவன் மேல் இருப்பது என்ன? என்று கேட்டாள்.
"இங்க பாரு கௌரி.. இது அனுபவிக்கிற வயசு, இந்த வயசுல அனுபவிக்காம வேற எந்த வயசுல அனுபவிக்கிறது?"
அனுபவிக்கிறது என்ற வார்த்தையின் அர்த்தம் மட்டும் கௌரிக்கு விளங்கவில்லை. அதற்குள் பஸ் அவுட்போஸ்ட் வர
அங்கு கேசவன் நின்றதை பார்த்ததும் கௌரிக்கு இதயம் கொஞ்சம் அதிகமாக துடிக்க ஆரம்பித்தது.
"ஏய் கௌரி என்னடி ஆச்சு? ஏன் திடீர்னு என்னவோ போல ஆயிட்ட?"
"அங்க அவன் நிக்கிறாண்டி.."
"யாரு?"
"அதான் சொன்னேனே.. கேசவன்.."
"ஏய் ஆளைக் கொஞ்சம் காமிடி.. நானும் பாத்துக்கிறேன்.."
"அதோ அந்த மெரூன் கலர் சர்ட். காக்கி கலர் பேண்ட்.."
"சும்மா சொல்லக்கூடாது.. நல்லத்தாண்டி இருக்கான்.."
"ஏண்டி இப்படி பேசுற? யாராவது கேட்டா தப்பா நினைக்கப் போறாங்க.."
"கேட்டா கேக்கட்டுமே.. எனக்கென்ன பயம்?... ஏய் அவன் நம்ம பஸ்லதாண்டி ஏறுறான்.."
"என்னது நம்ம பஸ்லையா?"
"ஆமாண்டி.." இதை சொல்லி முடிப்பதற்குள் கேசவன் கௌரிக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டிருந்தான்...
"ஹலோ.." பதிலுக்கு கௌரியும் சொன்னாள்..
"அப்புறம்.. போன் வரும்னு எதிர்பார்த்தேன்.."
"எதுக்கு?"
"எதுக்கா? அதான் அன்னிக்கு பேசுனோமே. முதல்ல நான் பண்ணேன். அப்புறம் நீதான் பண்ணனும். இதெல்லாம் சொல்லியா தருவாங்க.."
"இங்க பாருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி நான் கிடையாது. அதுக்கு வேற எவளாவது இருப்பா.. அவகிட்ட உங்க லொள்ளை வைச்சுக்கோங்க.."
"பரவாயில்லையே.. நீ இவ்வளவு பேசுவியா? எனக்குத் தெரியாதே.."
"பின்ன பேசாம.. என்னைய என்ன ஊமைன்னு நினைச்சீங்களா?"
"சரி. உங்கூட கொஞ்சம் தனியா பேசனும்.. இன்னிக்கு சாயங்காலம் இதே பஸ் ஸ்டாப்ல சரியா 4.30க்கு வந்துரு.. என்ன?"
"நான் வர மாட்டேன்.."
"நாலரை மணி.."
"மாட்டேன்"
"இதே பஸ்ஸ்டாப்.."
"முடியாது.."
"பை.." அவன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இறங்கிவிட்டான்..
"என்னடி.. இன்னிக்கு சாயங்காலம் நாலரை மணியா.. அப்ப வீட்டுக்கு நான் தனியாகத்தான் போகணுமா?"
"ஏய். அவன் தான் பைத்தியம் கணக்கா உளற்றான்னா.. நீயுமா? நான் போக மாட்டேன்.."

ஸ்கூலில் மதியம் கடைசி பீரியட். பிஸிக்ஸ் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. மிஸ்.கிளாரா பாடம் எடுக்க இரண்டாவது
பெஞ்சில் இருந்து கிசு கிசுப்பான பேச்சொலி கேட்டது.
"ஏய் கௌரி.."
"என்ன?"
"நாலரை மணி"
"மண்ணாங்கட்டி... கிளாஸை கவனி"
"அது கத்துறதெல்லாம் யார் கேக்கிறது.. சொல்லுடி.. நீ போறியா.. இல்லையா.."
"போறேன்.."
"ஹேய்" என்று உற்சாகமாய் குரலெழுப்பிவிட அவள் கத்தலில் கிளாரா அரண்டு போக ஒரு நொடி சுதாரித்துக் கொண்டு..
"நித்யா.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்? திஸ் இஸ் எ கிளாஸ் ரூம் ஆர் வாட்"
"சாரி மேம்.."
"திஸ் இஸ் த பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் பார் யு.. அண்டர்ஸ்டேண்ட்.."
"யெஸ் மேம்."
"வாங்கிக் கட்டினியா.."
"இதுக்கெல்லாம் பயந்தா வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியுமா?"

ஒரு வழியாக ஸ்கூல் முடிந்து வழக்கம்போல் பஸ்ஸில் ஏறி சென்றனர்.
"நித்யா நீயும் கொஞ்சம் துணைக்கு வாடி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."
"அதான் அவன்கிட்ட முடியாதுன்னு சொன்னேல்ல.. போகாத.."
"ஏய்.. இது வேறடி. அவன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.."
"அதைத்தான் நானும் சொல்றேன். அவன்கூட நீ போய் பேசுறதுக்கு நான் என்ன மாமியா?"
"ச்சீ. உனக்கு எப்ப பார்த்தாலும் இதே நினைப்புதாண்டி.. நான் சொன்ன வேறங்கிறது வேற.."
"சரி.. உன்னைப் பாத்தா பாவமா இருக்கு.. அதனால துணைக்கு வற்றேன்.."
"தேங்க்ஸ்டி.."
பஸ் அவுட் போஸ்ட்டை நெருங்கியதும் அவன் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்தாள்.
அவன் இல்லை. சரி வந்தது வந்தாச்சு. இறங்கிதான் பார்ப்போம் என்று இறங்கினார்கள்.
அந்த பஸ் ஸ்டாப்பிலேயே அவன் வருகைக்காக காந்திருந்தனர்.
மணி ஐந்தை நெருங்க நெருங்க கௌரிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
"என்னடி அவனைக் காணோம்?"
"அதுக்கு நான் என்ன பண்றது."
"சரி கிளம்புவோமா.. வீட்ல அம்மா தேடுவாங்க"
"உன் இஷ்டம்."
"ஹேய் கௌரி." அழைத்தது கேசவன் தான்..
"வர மாட்டேன் முடியாதுன்னு சொன்ன.. இப்ப என்னடான்னா எனக்காக அரை மணி நேரமா காத்துகிட்டிருக்கிற..
பரவாயில்லை... நீ புத்திசாலி ஸ்டூடண்ட்தான்.."
கௌரி மௌனம் காத்தாள்..
"எப்படின்னு கேக்க மாட்டியா?"
"எப்படி?"
"காதல்ல முதல் பாடமே காத்திருக்கிறதுதான்.. கப்புன்னு பிடிச்சுகிட்டியே.."
"இங்க பாரு கேசவ்.."
"ஐயோ.. என் பேரை செல்லமா மாத்திட்டியா? பரவாயில்லை... நீ சொல்லும் போது அழகாத்தான் இருக்கு.."
"இங்க பாருங்க.. நான் சொல்ல வந்ததை சொல்லிற்றேன்.."
"சொல்லு.. என்ன ஐ லவ் யூ தான.."
"இல்ல. ஏதோ அன்னிக்கு என் சைக்கிளை இடிச்சிங்க.. ஹாஸ்பிட்டல் பில் கட்டுனீங்க.. வீட்டில மாவிளக்கு எடுக்கணும்னு சொன்னீங்க.
அத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு.. இதையே சாக்கா வைச்சுகிட்டு சும்மா அக்காவை விட்டு போன் பண்றது. அப்புறம் நீங்க பேசுறது..
பின்னாலையே வற்றது.. சுத்தறது.. இங்க வா.. அங்க வான்னு சொல்றது.. இதெல்லாம் வேண்டாம்.. நல்லா இல்ல..
வீணா மனசுல ஆசைய வளத்துக்காதீங்க.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.."
"அவ்வளவுதானா? சொல்லிட்டியா? உன் பின்னாடி நான் வரக்கூடாதுன்னா இன்னிக்கு நீ வராம இருந்திருக்கலாம்.. இதை சொல்றதுக்கா
இங்க வந்து அரை மணி நேரமா காத்திருந்து.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. உனக்கு பயம்.. என்னை லவ் பண்ணிடுவோமான்னு
பயம்.. அதான் ஆளுக்கு முந்திகிட்டு உனக்கு நீயே கவசம் போட்டுக்கிற.."
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..."
"இல்லை அப்படித்தான்.."
"ஐயோ ஈஸ்வரா.. உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே.."
"சரி ஒன்னு பண்ணலாம்.. நாளைக்கு பேஸ்ட்ரீ கார்னருக்கு இன்னிக்கு இங்க வந்தியே.. இதே நேரத்துக்கு அங்க வந்துடு.."
"வரலைன்னா"
"உனக்கு என் மேல காதல் இருக்குன்னு அர்த்தம்.. வந்துட்டேன்னா இல்லைன்னு அர்த்தம்.. பை.."
அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்..
"இப்ப என்னடி பண்றது?"
"என்னைக் கேட்டா? அவன் சொல்றதுக்கு முன்னாடி நீயா தத்து பித்துன்னு என்னென்னவோ சொல்லிட்ட.. இப்ப வம்புல
மாட்டிகிட்டு முழி.."
"என்னடி நீயும் சேம் சைடு கோல் போடுற? பேசாம இந்த மேட்டரை எங்க அப்பாகிட்ட சொல்லப் போறேன்.."
"ஆமாண்டி.. உன்னைய இடிச்சதுக்கே அவன் அண்ணன் பைக்கை பிடிங்கிட்டாரு..
இத சொன்னேனா அவ்ளோதான்.. அவனை உரிச்சுருவாரு.."
"நீ ரொம்ப குழப்புற"
"நான் ஒன்னும் குழப்பலை.. பேசாமல் வீட்டுக்குப் போ.. இன்னுக்கு ராத்திரி தூங்கு.. நாளை கதைய நாளைக்கு பேசிக்கலாம்.."

(தொடரும்)

இளசு
26-06-2003, 08:52 PM
ஆர்வம் கூட்டி கதை வளர்கிறது....
பாராட்டுகள் ராம்...

சுவையான சம்பவங்கள்...
இயல்பான உரையாடல்...

வாழ்த்துகள்....

பாரதி
27-06-2003, 07:52 AM
அன்பு ராம் பால்... நன்றாக உள்ளது. மனத்தில் இன்னும் ஒரு முறை மெளன ராகம் படம் ஓடியது போல இருந்தது.

karikaalan
27-06-2003, 03:22 PM
விறுவிறுப்பு கூடினாமாதிரி இருக்குது ராம்பால்ஜி!
தொடருங்கள்.

===கரிகாலன்

Mathu
12-04-2004, 10:45 PM
முதலிரண்டு பாகங்களும் எங்கெங்கோ தொட்டு எதை எதையோ நினைவு படுத்தினாலும்,
மூன்றாவது பாகம் பளிச்சென்று மனதை தொட்டுவிட அதே நினைவுடன் கீழே வந்தால்,
என் எண்ண ஓட்டத்துடனேயே பாரதியும், நீண்டநாள் தவற விட்டுவிடேன்.