PDA

View Full Version : அவர்கள் அப்படித்தான்



சிவா.ஜி
12-12-2007, 10:32 AM
\"டே பார்த்தி....அந்த லாடு லபக்குதாஸு(கொஞ்சம் பந்தா பார்ட்டி) எங்கடா இன்னும் காணோம்\" கணேஷின் கேள்விக்கு,

\"அவனா..... சாரு ஜமாவுல சேர்றதுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகுமாம்....காலையில போன் பண்ணியிருந்தான்\" ஷாகுல் பதில் சொன்னான்.

\"ஏன் 9 மணிக்கு பில் கேட்ஸோட மீட்டிங் இருக்காமா...?\"

\"இல்லடா....அவங்கப்பா என்னமோ வேலை குடுத்திருக்காராம்,அத முடிச்சிட்டு வர்றதுக்கு நேரமாகுன்னு சொன்னான்\"

\"இதப் பார்றா...புள்ள அப்பன் பேச்சையெல்லாம் கேக்க ஆரம்பிச்சிடிச்சா....\"கணேஷ் நக்கலாக சொல்லி முடித்ததும் அந்த ஜமாவே சேர்ந்து ஒரு ஓ......ஹோ....போட்டார்கள்.

\"மச்சி....அப்டியே தலையை திருப்பாம நைஸா உன்னோட லெஃப்ட்ல பாரேன்\"சொண்டி என்கிற சுந்தரேசன் சொன்னதும் ஷாகுல் அப்படியே செய்தான்.

\"அட நம்ம மின்னலு....கூட யார்றா அது வடிவேலு...?\"

\"அய்யா மின்னலோட மாமாவாம்...துபாய் ரிட்டர்ன்...\'இன்று ஒரு தகவலாக தந்தது செழியன்,சுருக்கமாக செல்லு(அப்பா தமிழ் வாத்தியார்).

அது ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் டீக்கடை+பெட்டிக்கடை.இந்த குரூப்....ஆமாம்...நீங்கள் நினைப்பது சரிதான்.காலை முதல் மாலைவரை அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பொகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் கலாய்க்கும் இளைஞர்கள்.
இதில் கணேஷ்,செழியன்,ஷாகுல்,ரேமண்ட் ராஜா,பார்த்தி எல்லோரும் பட்டதாரிகள்.மும்முரமாக இல்லையென்றாலும்,தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள்.சொண்டி என்கிற சுந்தரேசன் வட்டிக்கடைக்காரரின் இரண்டாவது மகன்.

\"டே லபக்குதாஸு வர்றாண்டா\" சத்தமாக செல்லு சொன்னதும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

\"வாடா பரமேசு,என்னா காலங்காத்தால மொளகாப்பொடி அரைக்கப் போய்ட்டியா\"ஷாகுல்.

\"அட போங்கடா,நேத்து எங்கப்பா வண்டி வழியில மக்கர் பண்ணியிருக்கு,அதை ஃபிரெண்ட் வீட்ல விட்டுட்டு அவரு வண்டியை வாங்கிட்டு வந்திருக்காரு.அதான் காலங்காத்தால அவர் வேலைக்கு போறதுக்குள்ள என்னை போய் குடுத்துட்டு வரச் சொன்னார்.வண்டியை விட்டுட்டு,லொங்கு லொங்குன்னு அங்கருந்து நடந்து வரேன்\"

\"அது ஒண்ணும் இல்ல மச்சி....இந்த பண்ணாடைக்கு தொப்பை வுய்ந்திடிச்சி,அத அவங்கப்பா கவனிச்சிருப்பாரு....இதான் சோம்பேறியாச்சே தானா நடக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டு காலையிலேயே வாக்கிங் போக வெச்சிருக்காரு...கில்லாடிடா..உங்கப்பா\"ரேமெண்ட் அடித்த கமெண்ட்டுக்கு பரமேசு அவனைத் துரத்தினான்.

\"டம்....ச்சடார்...\"

சத்தத்தைக் கேட்டு எல்லோரும் திரும்பிப்பார்க்க....சாலையில் சிறிது தூரத்தில் ஒரு ட்டூவீலர் விழுந்திருந்தது.

ஒரு அவசரத்தோடு அனைவரும் அங்கே ஓடினார்கள்.அதற்குள் கொஞ்சம் பேர் கூடிவிட்டார்கள்.அவர்களை விலக்கிப் பார்த்த கணேஷ் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் சங்கடப்பட்டான்.புதிதாகத் திருமணம் ஆனவர்கள் என்பது மஞ்சள் மினுக்கு மாறாத தாலியிலும்,அவள் அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது.பக்கத்தில் அவள் கணவன் சுய நினைவற்றுக் கிடந்தான்.அந்தப் பெண்ணின் முந்தானை சக்கரத்தில் சிக்கிக்கொண்டு ...அவளை விட்டு விலகியிருந்தது.கைகளை X குறியாக்கி தற்காலிகமாக தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள்.அந்த முகத்தில் பயமும் அழுகையும் அப்பட்டமாகத் தெரிந்தது.அருகில் இருக்கும் கணவனைக் காப்பாற்றவேண்டும் என்றாலும் புடவையை துறக்க வேண்டி வரும்.அதைச் செய்ய இயலாத பரிதாபத்திலிருந்தாள்.கணேஷ் கூடியிருந்தவர்களை கோபமாகப் பார்த்துவிட்டு,உடனே தன் ஜெர்க்கினை எடுத்து \"சிஸ்டர் இந்தாங்க இதைப் போட்டுக்குங்க...கவலைப் படாதீங்க நாங்க இருக்கோம்\"என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு..அவள் தயக்கத்துடன் அந்த ஜெர்க்கினை வாங்கி அணிந்து கொண்டதும் அவசரமாய் சேலையை முந்தானை வரைக் கிழித்து அவளுக்கு விடுதலைக் கொடுத்தான்.
அதற்குள் மற்ற நன்பர்கள் அவள் கணவனை சோதித்தார்கள்.
\"மச்சி தலையில பலமா அடிப் பட்டிருக்குடா..சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்...ஆட்டோவை கூப்புடுடா என்று ஷாகுல் அலறினான்.பரமேசு உடனே வெளியேறினான்.அந்தப் பெண் நடுங்கிக்கொண்டிருந்தாள்.

ஆட்டோ வந்ததும் ஆளுக்கொரு பக்கமாய் அடிபட்டவனைத் தூக்கி, ஆட்டோவில் முதலில் செல்லு அமர்ந்துகொள்ள ஷாகுலும்,பரமேசும் அவனை ஆட்டோவுக்குள் நுழைத்தார்கள்.

\"சிஸ்டர் நீங்க உக்காந்துக்குங்க பக்கத்துலதான் ஹாஸ்பிட்டல் சீக்கிரம் போயிடலாம்.கவலைப் படாதீங்க அவருக்கு ஒண்ணும் ஆகாது\" சொலிவிட்டு..\"டே மாப்ள சிக்கிரமா ARK க்கு கொண்டு போங்கடா...நாங்க பின்னாலேயே வறோம்.\" என்று ஷாகுலிடமும்,பரமேசுவிடமும் சொல்லிவிட்டு மற்றவர்களுடன் வேகமாக தங்கள் கலாய்ப்பு இடத்துக்குத் திரும்பினான் கணேஷ்.நிறுத்தியிருந்த பைக்குகளில் மருத்துவமணை நோக்கி பறந்தார்கள்

கொஞ்ச நேரத்தில் மருத்துவமணையில் இருந்தார்கள்.உடனடியாக அவசர முதலுதவிப் பிரிவில் அவரை சேர்த்தார்கள்.

\"சிஸ்டர் உங்க வீட்லருந்து யாரையாவது கூப்பிடனுமா...இந்தாங்க இந்த செல்-லருந்து கூப்பிடுங்க\" என்று அந்தப் பெண்ணிடம் தன் செல்போனை கொடுத்தான் கணேஷ்.

கையில் போனை வாங்கிய அந்தப் பெண் சிறிதுநேரம் எந்த எண்ணும் நினைவுக்கு வராமல் தயங்கிவிட்டு பின் அழுத்தினாள்.

உள்ளேயிருந்து அவசரமாய் வந்த நர்ஸ் \'அவருக்கு தலையில நல்ல அடி பட்டிருக்கு..ப்ளட் தேவைப்படும்\" என்றதும்,
\"நாங்க ஆறு பேர் இருக்கோம் சீக்கிரமா எந்த குரூப்புன்னு சொல்லுங்க யாராவது ஒருத்தர் ரெண்டு பேரோடது மேட்ச் ஆகும்....ப்ளட்டைப் பத்திக் கவலையில்லை....அவருக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே...\"ரேமெண்ட் ராஜாவின் கேள்விக்கு

\"ஸ்கேனுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க..அதுக்கப்புறந்தான் எதுவும் சொல்ல முடியும். ஹெட் இஞ்சூரிங்கறதால இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது\"நர்ஸின் பதிலைக் கேட்டு அந்தப் பெண்ணின் கண்களில் குபுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அதைக் கவனித்த சுந்தரேசன்\"சிஸ்டர் நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க...ஒண்ணும் ஆகாது.எல்லாம் சரியாயிடும்..நாங்க இருக்கமில்ல\"என்றதும் அந்தப் பெண் அவர்களைப் பார்த்து கைகூப்பினாள்.எல்லோருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.

ஏறக்குறைய ஆறு மணி நேரத்துக்குப் பிறகு,ரத்தம் எடுக்கப்பட்டு,கொடுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் சொல்லும்வரை அங்கிருந்து விட்டு அந்தப் பெண்ணுக்கும்,அவள் வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடமும் சொல்லிவிட்டு திரும்பினார்கள்.

அடுத்தநாள் காலை ஒன்பது மணி.அதே டீக்கடை+பெட்டிக்கடை.

\"மச்சி அங்கப் பார்றா மின்னலு வேற ஒரு ஆளு கூட வர்றா...இது யாரு சிங்கப்பூரு மாமனா...?\"
கூட்டமாக \"ஓ....ஹோ\" சத்தம் கேட்டது.

அவர்கள் அப்படித்தான்.

தாமரை
12-12-2007, 10:50 AM
அவர்கள் மட்டும் அப்படித்தான்..அவர்கள் மட்டும் அப்படித்தான்.. என்னவோ நிஜக் கதைகளா எழுதறீங்களே! சபாஷ் சிவாஜி!

சிவா.ஜி
12-12-2007, 11:07 AM
நன்றி தாமரை.நீங்கள் அழுத்திசொன்னது மிகவும் உண்மைதான்.எனக்கு இன்றைய இளைஞர்கள் மீது மிக மிக நல்ல எண்ணம் உள்ளது.அதன் வெளிப்பாடுதான் இது.

lolluvathiyar
12-12-2007, 11:16 AM
அவர்கள் அப்படிதான், வேல வெட்டி இல்லாம வெட்டியா பேசீட்டு இருப்பாங்க, ஆனா யாராவது பிரச்சனை வந்த மனிதாபிமான தலை தூக்கும் உதவிக்கு ஓடுவார்கள். பிறகு அடுத்த நாள் பழையபடி. அவர்கள் அப்படிதான். வெல் டன் சிவாஜி. கருவுக்கு அழகாய் பொருந்திய தலைப்பு

இதுல சில நேர்மாரான செயலும் இருக்கு. இப்படி சேரும் நாலு அப்பாவி நல்ல பசங்க கூட்டம் சில சமயத்துல தவறான செயலுக்கு துனை போவாங்க. அவர்களும் அப்படிதான்

சிவா.ஜி
12-12-2007, 11:21 AM
எல்லாத்துலயும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யுது வாத்தியாரே....அவங்க அப்படி...இவங்க இப்படி....பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி தலைவா.

அன்புரசிகன்
12-12-2007, 11:39 AM
மனிதாபிமானம் எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால் சிலருக்கு எட்டிப்பார்க்க மறுக்கிறது. இதற்கு நாட்டின் சட்டதிட்டங்களும் ஒருவகை காரணங்கள்.

இளைய சமுதாயத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சிவா....

யவனிகா
12-12-2007, 11:52 AM
நல்ல கதை அண்ணா...இள ரத்தம்... எல்லாமுமே இருக்கத்தானே வேண்டும்...என்னக் கேட்ட இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க...சில நேரம் நல்லவங்க மாதிரி நடிச்சிட்டு சில தாத்தாக்கள் செய்யிற ரவுசு தான் தாங்க முடியாது...மக மாதிரிம்மா நீயின்னு ஆரம்பிச்சு...பேச ஆரம்பிச்சு...மக கையாக பொது மாத்து வாங்கற வரைக்கும் பேசுவாங்க...ப*ச*ங்க* எவ்வ*ள*வோ தேவ*லை....

சிவா.ஜி
12-12-2007, 01:27 PM
மனிதாபிமானம் எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால் சிலருக்கு எட்டிப்பார்க்க மறுக்கிறது. இதற்கு நாட்டின் சட்டதிட்டங்களும் ஒருவகை காரணங்கள்.

இளைய சமுதாயத்தை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சிவா....

ஆமாம் அன்பு....மனிதாபிமானம் எட்டிப் பார்ப்பதற்குக்கூட சட்ட திட்டங்கள் சில சமயம் தடையாகத்தானிருக்கிறது.இருந்தும் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.சமயத்துக்கு உதவுகிறார்கள்.நன்றி அன்பு.

சிவா.ஜி
12-12-2007, 01:28 PM
.ப*ச*ங்க* எவ்வ*ள*வோ தேவ*லை....

நூத்துக்கு நூறு சரிதாம்மா...சில பெருசுங்க சில சமயம் ரொம்ப வில்லங்கம் புடிச்சவங்க....நிறைய பார்த்திருக்கேன்.
பாராட்டுக்கு நன்றிம்மா!

lolluvathiyar
13-12-2007, 05:09 AM
நல்லவங்க மாதிரி நடிச்சிட்டு சில தாத்தாக்கள் செய்யிற ரவுசு தான் தாங்க முடியாது..

அம்மா யவனிகா இந்த மன்றத்துல இதயம், புள்ளி ராஜா, ஆதவா போன்ற நிரைய தாத்தாகள் இருக்காங்க. ஏன் நம்ம சிவா ஜி யே ஒரு தாத்தாதான். அவுங்கள் நீங்க இப்படி திட்டரது கொஞ்ச கூட நல்லா இல்ல.
இப்படிக்கு
தாத்தாக சார்பாக பேசும் இழைஞர்கள் சங்க தலைவன்

இதயம்
13-12-2007, 05:22 AM
அம்மா யவனிகா இந்த மன்றத்துல இதயம், புள்ளி ராஜா, ஆதவா போன்ற நிரைய தாத்தாகள் இருக்காங்க. ஏன் நம்ம சிவா ஜி யே ஒரு தாத்தாதான். அவுங்கள் நீங்க இப்படி திட்டரது கொஞ்ச கூட நல்லா இல்ல.
இப்படிக்கு
தாத்தாக சார்பாக பேசும் இழைஞர்கள் சங்க தலைவன்

நீங்க சில, பல தாத்தாக்களோட என்னையும் சேர்த்து சொன்னதக்கூட நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா, உங்களை இழைஞர்களின் சங்கத்தலைவன்னு சொன்னத தான் என்னால ஜீரணிக்க முடியல வாத்தியார்..! :traurig001::traurig001:

என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா..?-ன்னு நீங்க அடிக்கடி போய் கேட்டு கட்டை தொரைக்கிட்ட, பட்டை கழண்டு வர்றது எல்லாருக்கும் தெரியும். வரைஞ்ச மீசை வச்சிக்கிட்டே இப்படி வகை தொகையா பேசறீங்களே.. நீங்க உண்மையிலேயே இளைஞரா இருந்தா.???!! கற்பனை பன்னி(!) பார்த்தா ரொம்ப திகிலா இருக்கு வாத்தியார்..!!:traurig001::traurig001:

சிவா.ஜி
13-12-2007, 05:23 AM
ஆதரவுக்கு நன்றி தலைவா....ஆனா...இதயம்,புள்ளிராசா,ஆதவா...இவங்க வரிசையில என்னை சேர்த்தது கொஞ்சம்கூட நல்லால்ல.....அவங்க வயசென்ன..அனுபவமென்ன...அவங்களோடப் போயி.....சின்னப் பையனை....வெட்கப்படவெக்காதீங்க தலைவா.

மதி
13-12-2007, 07:48 AM
சத்தியமாய் நூத்துக்கு நூறு உண்மை.. அவர்கள் அப்படித் தான். சிவாண்ணா.. உண்மையிலேயே பாராட்டுக்குரிய தலைப்பு.

சிவா.ஜி
13-12-2007, 09:22 AM
நன்றி மதி.எல்லாம் உங்களைப்போல இளைஞர்களைப் பார்த்துதான்...இதெல்லாம்.

மதி
13-12-2007, 12:05 PM
நன்றி மதி.எல்லாம் உங்களைப்போல இளைஞர்களைப் பார்த்துதான்...இதெல்லாம்.

தன்யனானேன்... இளைஞன் என்று சொன்னதால்...

பூமகள்
13-12-2007, 03:30 PM
ரொம்ப நல்ல கதை சிவா அண்ணா.
டீக்கடையில் அமர்ந்து இப்படி நிதம் பேசுபவர்களை "வெட்டி பசங்க!" என்று ஊரே திட்டும் இவர்களினுள் எத்தகைய மனிதாபிமானமும் பொறுப்புணர்வும்...!
அந்த மருத்துவமனைக் காட்சி கண்களை மட்டுமல்ல, நெஞ்சையும் நெகிழ வைத்து பனிக்க வைத்து விட்டது. அழகான நடை, தேர்ந்த வடிவமைப்பு, விவரிப்பு.
நல்ல பொறுத்தமான தலைப்பு. அசத்தல் சிவா அண்ணா. :)

மலர்
13-12-2007, 04:00 PM
அவர்கள் அப்படித்தான்...
கதைக்கு ஏற்ற தலைப்பு...
இளைஞர்களின் மனதை அப்படியே கதையாக மாற்றிய சிவா அண்ணாவுக்கு ஒரு ஓ....
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
பள்ளியில் படித்து கொண்டிருக்கும் சிவாஅண்ணாவுக்கு இந்த கால இளைஞர்களை பத்தியெல்லாம் தெரியுது...

இப்போ எத்தனை பேருக்கு அல்சர் இல்லாம வயிறு எறியுதோ...

சிவா.ஜி
14-12-2007, 03:43 AM
நன்றி பூமகள்.ஒன்றுக்கும் உதவாது என்று நினத்த எத்தனையோ நிறைய விஷயத்துக்கு உதவுகிறது.அதைப்போலத்தான் இவர்களும்.கலாய்ப்பு நேரத்தில் கலாய்ப்பு,நல்ல மனிதர்களாக மாறவேண்டிய நேரத்தில் அப்படி.

சிவா.ஜி
14-12-2007, 03:44 AM
அபள்ளியில் படித்து கொண்டிருக்கும் சிவாஅண்ணாவுக்கு இந்த கால இளைஞர்களை பத்தியெல்லாம் தெரியுது...
[/COLOR]

எதிர்கால இளஞனுக்கு அவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா...(என் தங்கச்சின்னா தங்கச்சிதான்...ரொம்ப டேங்ஸும்மா)

மலர்
14-12-2007, 06:09 PM
என் தங்கச்சின்னா தங்கச்சிதான்...ரொம்ப டேங்ஸும்மாஹீ..ஹீ... நான் எப்பவும் உங்க கட்சி தான்..

சுகந்தப்ரீதன்
15-12-2007, 01:56 PM
எதிர்கால இளஞனுக்கு அவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா...(என் தங்கச்சின்னா தங்கச்சிதான்...ரொம்ப டேங்ஸும்மா)
டங்கச்சிக்கு டேங்ஸ் சொல்லி.. உண்மைய மறைக்க பாக்குறீங்களே அண்ணாச்சி..! மலரு சொன்ன பள்ளி.. முதியோர் பள்ளி... நீங்க குழந்தை பள்ளின்னு சொன்னா நாங்க ஏமாந்துடுவமா..? அவர்கள் அப்படித்தான்னு அனுபவமில்லாம இப்படி அழுத்தி சொல்ல முடியாதே.. (நீங்க எப்பவுமே இப்படித்தான்.. சிவாஜி மாதிரி ஸ்டைல வேசம் போடுறதே வேலையா போச்சு...) அசத்தல் அண்ணா.. கதையும் கருவும்.. வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
15-12-2007, 06:37 PM
நன்றி சுகந்த்.கொஞ்ச நேரம் சந்தோஷப் பட விடமாட்டாய்ங்க இந்த பயபுள்ளைய்ங்க....உடனே முதியோர்பள்ளி அது இதுன்னு சொல்லிக்கிட்டு.....போங்கப்பா....

MURALINITHISH
02-09-2008, 07:58 AM
இளைஞன் இப்படிதான் தேவை படும்போது உதவியும் செய்வான் அவனுக்கு வேலையில்லாதா போது உபத்தரவும் செய்வான் இருந்தாலும் இவனும் நல்லவனே

தீபா
02-09-2008, 08:21 AM
கண்களில் நீர்... எதை எதையோ நினைத்தவாறு.

அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு என் மனமாழ்ந்த நன்றி.

திரு.சிவா.ஜி அவர்களுக்கும் கண்ணீர் மல்கிய பாராட்டுக்கள்.

சிவா.ஜி
03-09-2008, 06:25 PM
நன்றி முரளி. நன்றி தென்றல். இன்றைய இளைஞர்களின் பிரதிநிதிகளான உங்களின் பின்னூட்டம் ஊக்கமளிக்கிறது.