PDA

View Full Version : உலக வரைபடத்தில் தமிழீழம்



அன்புரசிகன்
12-12-2007, 04:44 AM
நண்பர்களே... ஒரு நற்சேதி.

உலக வரைபடத்தில் தமிழீழத்தையும் குறித்துக்காட்டியுள்ளது தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை.

இத்தகவல் புதினம் இணையத்தளத்ததில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் த பொட்டம்லைன் வார ஏட்டினை மேற்கோள் காட்டி புதினம் இணையம் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி இங்கே. (http://www.puthinam.com/full.php?22ymUcc3oV34d71e202AOK4d3Yco0ag6D2e2RMC3b34ASe)

நம் வீரர்கள் சிந்திய குருதிக்கு பயன் ஒன்று கிடைத்துள்ளதென்றே நாம் கருத வேண்டும்.

http://www.puthinam.com/d/p/2007/DEC/20071212001.gif
நன்றி: புதினம் இணையம்.

மயூ
12-12-2007, 05:07 AM
என்றோ ஒருநாள் தனியாக SRi Lanka விற்குப் பக்கத்தில் Tamil Eelam என்று வரத்தான் போகுது :)

IDEALEYE
12-12-2007, 05:11 AM
நல்ல செய்தி.....
ஐஐ

தீபன்
12-12-2007, 08:03 AM
நானும் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி நண்பா. மகிழ்ச்சியான செய்தி.

ஆதி
12-12-2007, 08:57 AM
வரைபடம் கண்டு நானும் மகிழ்ந்தேன், சிந்தியக்குருத்திக்கு ஒருச் சின்ன பயன் கிட்டியுள்ளது.. பேருரிமையும் அடைவோம் என்கிற நம்பிக்கையுடன்.

-ஆதி

அறிஞர்
12-12-2007, 10:54 PM
ஈழத்திற்கு ஒரு அங்கீகாரம் அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான விசயம்.

சக்திவேல்
13-12-2007, 11:43 AM
ஆகா நல்ல செய்தி. உரிமைகளின் அங்கீகாரம் ஆரம்பித்துவிட்டது.
அது சரி, அந்த படத்தில் ஏன் குஜராத்தை வேறுபட்ட நிறத்தில் காட்டியிருக்கிறார்கள்?

சுகந்தப்ரீதன்
13-12-2007, 12:04 PM
ஆகா நல்ல செய்தி. உரிமைகளின் அங்கீகாரம் ஆரம்பித்துவிட்டது.
அது சரி, அந்த படத்தில் ஏன் குஜராத்தை வேறுபட்ட நிறத்தில் காட்டியிருக்கிறார்கள்?
ஆமாம் இல்ல..? என்ன காரணமாயிருக்கும்..?

மலர்
13-12-2007, 04:44 PM
நல்ல மகிழ்ச்சியான செய்தி...
பகிர்வுக்கு நன்றி அன்பு..


அந்த படத்தில் ஏன் குஜராத்தை வேறுபட்ட நிறத்தில் காட்டியிருக்கிறார்கள்?
தெரியலையே அண்ணா..
தெரிந்தால் சொல்லுங்களேன்...

உதயசூரியன்
14-12-2007, 03:27 PM
ஈழத்து நண்பர்களே..

வாழ்த்துக்கள்.....

வாழ்க தமிழ்

ramanan4u
14-12-2007, 04:57 PM
ஆகா நல்ல செய்தி. உரிமைகளின் அங்கீகாரம் ஆரம்பித்துவிட்டது.
அது சரி, அந்த படத்தில் ஏன் குஜராத்தை வேறுபட்ட நிறத்தில் காட்டியிருக்கிறார்கள்?

உலகு எங்கும் மிகவும் பிரபல்யம் பெற்ற "தி எக்கொனமிஸ்ற்" என்ற சஞ்சிகை முதற்தடவையாக தமிழீழத்தின் வரைபடத்தை உலக வரைபடத்தில் குறிப்பிட்டு வரைந்துள்ளது.

இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" என்ற வார ஏடு வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தி எக்கொனமிஸ்ற்" சஞ்சிகையின் டிசம்பர் 6 ஆம் நாளுக்கான பதிப்பில் ஈழத்தை இறைமையுள்ள நாடாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வரைபடத்தில் உள்ள ஏனைய இறைமையுள்ள நாடுகளைப் போன்று ஈழத்திற்கும் வர்ணம், அளவுகள், அமைப்புக்கள் கொடுத்து வரையப்பட்டுள்ளன.

முன்னர் அப்பகுதி "விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்படும் பகுதி" என தெரிவிக்கப்படுவது உண்டு.

குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் நடத்தக் கோருவது தொடர்பாகவே "இந்தியப் படுகொலைகளை குறிப்பிடவில்லை" என்ற தலைப்பில் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இக் கட்டுரை அச்சஞ்சிகையின் 47 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இப்பக்கத்தில் தான் ஈழத்தின் வரைபடமும் வரையப்பட்டுள்ளது.

pathman
15-12-2007, 05:01 AM
அப்படியே மத்திய மாகாணத்தை தமிழ் மலைநாடு என்று அடையாள படுத்தினால் நன்றாக இருக்கும்

அமரன்
15-12-2007, 07:01 AM
அப்படியே மத்திய மாகாணத்தை தமிழ் மலைநாடு என்று அடையாள படுத்தினால் நன்றாக இருக்கும்
இலங்கைத்தீவில் தமிழனுக்கு ஒரு நாடு போதுமே..