PDA

View Full Version : தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

மயூ
12-12-2007, 03:49 AM
தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!

இத்திட்டத்தை முன்னின்று நடத்திய ரவிசங்கர் அவர்கட்கும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!

பாரதி
12-12-2007, 01:09 PM
நல்ல செய்தி மயூ! உங்கள் கூற்றுப்படியும் ரவிசங்கர் பாராட்டுக்குறியவரே. தடுமாறி நடக்கும் தமிழும் அழகுதான். விரைவிலேயே வீறு நடை போடுமென்பதிலும் ஐய்யமில்லை.

மயூ
12-12-2007, 01:37 PM
நல்ல செய்தி மயூ! உங்கள் கூற்றுப்படியும் ரவிசங்கர் பாராட்டுக்குறியவரே. தடுமாறி நடக்கும் தமிழும் அழகுதான். விரைவிலேயே வீறு நடை போடுமென்பதிலும் ஐய்யமில்லை.

இது கன்னி முயற்சி என்பதால் இவ்வகையான பிரைச்சனைகள் இருக்கத்தான் செய்யும்! ஆனாலும் இது தமிழரின் கூட்டுமுயற்சியின் பலத்தை எடுத்துக்காட்டும் ஒரு செயற்பாடு :)

அமரன்
12-12-2007, 03:21 PM
அங்கே இப்போதுதானே நடக்க ஆரம்பித்து இருக்கின்றது தமிழ். அதுகூட அழகாகத்தான் இருக்கும். விரைவில் இன்னும் மேம்பட வாழ்த்துக்கள். உழைத்த அனைவர்க்கும் நன்றி.

தேவிப்ரியா
12-12-2007, 03:34 PM
அருமையான செய்தி.

விரைவில் மேம்படும்.

தகவலுக்கு நன்றி.

செல்வா
12-12-2007, 09:57 PM
வாழத்தொடங்கிய (கணிணியில்) தமிழ் விரைவில் ஆளத்தொடங்கட்டும் (உலகோர் உள்ளங்களை)...

அறிஞர்
15-12-2007, 04:10 AM
அருமையான தகவல்...

இதை குறித்து இன்னும் அதிக தகவல் தர இயலுமா...

மற்றொரு பிளாக் மாதிரி மட்டுமே எனக்கு தெரிகிறது..

வித்தியாசம், பயன்... எதிர்கால நோக்கம் பற்றிக்கொஞ்சம் கூற இயலுமா..

மயூ
15-12-2007, 05:13 AM
பிளாக்கர் கூகிள் நிறுவனத்தாருடையது. எத்தனையோ தடவை தமிழ் இடைமுகம் கேட்டபோதும் வழங்கவில்லை. ஹிந்திக்கும் பல உலக மொழிகளுக்கும் வழங்கும் முன்னுரிமை தமிழுக்கு வழங்கவிலலை.

WordPress.org தளம் இலாப நோக்கற்ற திறந்த மூல வலைப்பதிவு மென்பொருளைத் தருகின்றது. உங்களிடம் வழங்கி இருந்தால் அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் 100 வீதம் உங்கள் கட்டுப்பாட்டில் வலைப்பதிவை உருவாக்க முடியும். இன்று பல முன்ணனி நிறுவனங்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்துகின்றன. இது 100 வீதம் இலவசமானது. எனது வலைப்பதிவு (http://mayuonline.com/blog) என்பபது கூட வேர்ட்பிரஸ் வலைப்பதிவே. பிளாக்கரை விட இது சிறந்தது என்றும் குறைந்தது என்றும் பல வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. என் பார்வையில் வெர்ட்பிரஸ் சிறந்தது.

இவ்வாறு பணம் கொடுத்து வழங்கி வைத்திருக்க முடியாதவர்கட்க wordpress.com கை நீட்டுகின்றது. இது பிளாக்கர் போல உங்களுக்கு ஒரு உப டொமைனுடன் ஒரு முகவரியைத் தரும். நாங்கள் மொழி பெயர்த்தது இந்தத் தளத்திற்காக. இங்கும் தனி வழங்கிகளில் பயன்படுத்தும் மென்பொருளும் ஒன்று என்பதால் அங்கிருந்து தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். வழுக்கள் முற்றாக நீக்கப்பட்டதும் .po கோப்பை எடுத்து எங்கள் வழங்கியில் பயன்படுத்துவதன் மூலம் தமிழ் இடைமுகத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழாக்கத்திற்கான முக்கீய காரணம் எதிர்காலத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் வலைப்பதிய வரப்போவது காலத்தின் கட்டாயம். அவர்கள் மொழி அறிவால் பின்தங்கிவிடக் கூடாது என்பதனால்தான் இவ்வாறு செய்தோம்.

இதைவிட உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால் கேளுங்கள் சொல்கின்றோம்!!!

அரசன்
29-01-2008, 07:18 AM
நல்ல தகவல் மயூ! தகவலுக்கு நன்றி

அரசன்
26-02-2008, 04:16 PM

வணக்கம் மயூ! எனக்கு ஒரு தகவல் வேண்டும். அதாவது நான் வேர்ட் பிரஸில் ஒரு வலைப்பூ தயாரித்துள்ளேன். எனது முகவரி: www.kuruviar.wordpress.com ஆனால் எனக்கு www.kuruviar.com என்று வேர்ட் பிரஸில் முகவரி வர வேண்டும். அது இலவசமாக செய்ய முடியும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் எப்படி செய்வது என்று புரியவில்லை. எனவே எனக்கு எப்படி மாற்ற வேண்டும் என்று கொஞ்சம் கூறுங்களேன்.

நன்றி!

மயூ
27-02-2008, 01:32 AM
வணக்கம் மயூ! எனக்கு ஒரு தகவல் வேண்டும். அதாவது நான் வேர்ட் பிரஸில் ஒரு வலைப்பூ தயாரித்துள்ளேன். எனது முகவரி: www.kuruviar.wordpress.com (http://www.kuruviar.wordpress.com) ஆனால் எனக்கு www.kuruviar.com (http://www.kuruviar.com) என்று வேர்ட் பிரஸில் முகவரி வர வேண்டும். அது இலவசமாக செய்ய முடியும் என்று கேள்விப்பட்டேன். ஆனால் எப்படி செய்வது என்று புரியவில்லை. எனவே எனக்கு எப்படி மாற்ற வேண்டும் என்று கொஞ்சம் கூறுங்களேன்.

நன்றி!
அவ்வாறு செய்ய பணம் செலுத்த வேண்டும். வேர்ட்ப்ரஸ் காரங்களுக்கு பணம் செலுத்தி டொமைனை வாங்க வேண்டும்.
அல்லது godaddy.com போன்ற தளங்களில் டொமைனை வாங்கி இதனுடன் இணைக்க வேண்டும்.

அரசன்
27-02-2008, 04:55 AM
அவ்வாறு செய்ய பணம் செலுத்த வேண்டும். வேர்ட்ப்ரஸ் காரங்களுக்கு பணம் செலுத்தி டொமைனை வாங்க வேண்டும்.
அல்லது godaddy.com போன்ற தளங்களில் டொமைனை வாங்கி இதனுடன் இணைக்க வேண்டும்.

நன்றி மயூ!

நான் வேர்ட்பிரஸில் தீம்ஸ் மற்றும் சில பிளக்கின்ஸ் இன்ஸ்டால் செய்ய fireftp இன்ஸ்டால் செய்தேன். ஆனால் அதை இயக்க என்னால் முடியவில்லை. அதாவது எனது அக்கவுண்டை open செய்து connect கொடுத்தால் connect ஆகவில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை. அதை எப்படி இயக்க வேண்டும் என்று கூறுங்கள். நன்றி!

வேர்ட் பிரஸில் ஒரு ஆர்டிக்கில் பதியும்போது அந்த ஆர்டிக்கிலை எழுதிய ஆத்தரின் பெயரையும் பதிய வேண்டும் அல்லவா. ஆனால் அதற்கு ஆப்ஸன்ஸ் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே. எவ்வாறு ஆத்தரின் பெயரை பதிவது. சிரமம் பாராமல் பதில் கூறவும். நன்றி!

மயூ
27-02-2008, 07:52 AM
இதற்கும் பணம் செலுத்த வேண்டும். உங்களிடம் உங்கள் சொந்த வழங்கியில் (Server) நிறுவப்பட்ட வேர்ட்பிரஸ் (Self Hosted WP) இருந்தால் எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் பதிவேற்றலாம்.

எழுதியவரின் பெயர் கட்டாயம் வரும்... நீங்கள் பயன்படுத்தும் வார்ப்பருவில் (Theme) பிரைச்சனை இருக்கலாம்.
http://uspresident08.wordpress.com
இந்த தளத்தைப்பாருங்கள் இங்கே எழுதியவரின் பெயர் இருக்கின்றதல்லவா....
மேலும் விளக்கம் தேவையானால் தயங்காமல் கேளுங்கள்

அரசன்
28-02-2008, 06:27 PM

ரொம்ப நன்றி மயூ! மேலும் வொர்க் பண்ணும்போது சந்தேகம் வரும். அப்பொது தங்களிடம் மீண்டும் கேட்கிறேன். சிரமம் பாராமல் உதவியதுக்கு மிக்க நன்றி மயூ.

அரசன்
29-02-2008, 06:09 AM
மயூ!
நான் ஏற்கனவே www.karuvai.blogspot.com என்ற ப்ளாக்கிற்கு google analytics account create பண்ணி பயன்படுத்தி வருகிறேன். அதேபோல் wordpress account-ற்கும் ஒரு கூகுள் அனல்டிக்ஸ் ஓபன் பண்ண வேண்டும். எவ்வாறு ஓபன் செய்வது? கூகுள் அனல்டிக்ஸ் ஓபன் பண்ணும்போது அது ஒரு code தரும். அதை நமது பிளாக்கின் html editor-ல் சென்று பாடிக்கு(/body)முன் இட சொல்லும். அது வேர்ட் பிரஸில் எங்கு, எவ்வாறு இட வேண்டும்?

srisha
29-02-2008, 07:09 AM
தகவலுக்கு நன்றி

அரசன்
06-03-2008, 05:38 AM
மயூ!
வேர்ட் பிரஸில் பேஜ் என்று ஒன்று உள்ளது. அதை எதற்கு பயன்படுத்தலாம். ஏனெனில் ரைட் பகுதியில் தான் நாம் நமது பதிவுகளை இடுகிறோம் அல்லவா. பிறகு எதற்கு பேஜ் என்ற பகுதி என்று கொஞசம் விளக்கவும்.

மயூ
06-03-2008, 05:43 AM
பக்கங்களை உருவாக்கி TAP போலப் பாவிக்கலாம்.!!!
எனது தளத்தைப் பாருங்கள் (http://mayuonline.com/blog) அதில் மேலே டப் போல இருப்பது PAGE அல்லது பக்கங்களே!