PDA

View Full Version : கவிதை!



ஷீ-நிசி
11-12-2007, 04:24 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Kavithai.jpg

கவலைகளில்....
பலர் கண்ணீரில் அழுகிறார்கள்!
சிலர் கவிதையில் அழுகிறார்கள்!!

விழிகளின் வழியே அழுதால்
அது கண்ணீர் கோடுகள்!
விரல்களின் வழியே அழுதால்
அது கவிதை கோடுகள்!

மனம் கணக்கும் வார்த்தைகளோ!
மனம் மயக்கும் வார்த்தைகளோ!

இதழ் வழியே சிந்த விடாமல்,
விரல் வழியே சிந்தும் விந்தை....
கவிதை!!

எழுதுகோலும், எழுதுதாளும்!
சங்கமித்தால் வரிகள் பிறக்கும்!

இதயமும் துன்பமும்
சங்கமித்தால் வலிகள் பிறக்கும்!

வரிகளும் வலிகளும்
சங்கமித்தால் கவிதை பிறக்கும்!

கண்கள் கண்ட நிகழ்வை,
இதயம் பாதித்த ஒன்றை,
பல வரிகளில் படைத்தான்..
கவிஞன் ஒருவன்......

படைத்தவனை பாதித்தது....
படிப்பவனை பாதித்தால்,,,

"கவிதை"

பென்ஸ்
11-12-2007, 04:31 PM
படைத்தவனை பாதித்தது....
படிப்பவனை பாதித்தால்,,,

"கவிதை"

கவிதையை வாசிக்க ஆரம்பிக்கும் போதே என் மனதில் எழுந்த வரிகள் இவை ஷீ.... அதை கவிதையின் கடைசி வரிகளில் கண்ட போது ஒரு இன்ப அதிர்சி...
கவலை ஒரு உணர்வு....
கவிதை உணர்வுகளின் வடிவு....
கவலைகளின் வடிவு மட்டும் என்று சொல்ல முடியாதே...!!!

ஷீ-நிசி
11-12-2007, 04:35 PM
கவிதையை வாசிக்க ஆரம்பிக்கும் போதே என் மனதில் எழுந்த வரிகள் இவை ஷீ.... அதை கவிதையின் கடைசி வரிகளில் கண்ட போது ஒரு இன்ப அதிர்சி...
கவலை ஒரு உணர்வு....
கவிதை உணர்வுகளின் வடிவு....
கவலைகளின் வடிவு மட்டும் என்று சொல்ல முடியாதே...!!!


நன்றி பென்ஸ்!


கவிதை உணர்வுகளின் வடிவு....
கவலைகளின் வடிவு(ம்) தான்... என்றே கூற விழைந்திருக்கிறேன்!

சிவா.ஜி
12-12-2007, 03:21 AM
அசத்தலான ஆரம்ப வரிகளில் தொடங்கிய கவிதை முடிவில் முத்தாய்ப்பாய் நச்சென்று இதயத்தில் உட்கார்ந்துவிட்டது.

\"மனம் கணக்கும் வார்த்தைகளோ!
மனம் மயக்கும் வார்த்தைகளோ!

இதழ் வழியே சிந்த விடாமல்,
விரல் வழியே சிந்தும் விந்தை....
கவிதை!!\"
மிக உண்மையான வரிகள்.அனுபவித்து எழுதிய சொற்கள்.கவி எழுதும் உள்ளங்கள் அத்தனையையும் பிரதிபலிக்கும் சொற்றொடர்.
கவிதை அருமை ஷீ-நிசி.வாழ்த்துகள்.

ஷீ-நிசி
12-12-2007, 05:21 AM
நன்றி சிவா.ஜி!

சுகந்தப்ரீதன்
12-12-2007, 08:48 AM
விழிகளின் வழியே அழுதால்
அது கண்ணீர் கோடுகள்!
விரல்களின் வழியே அழுதால்
அது கவிதை கோடுகள்!
"
கவிஞ்ரே.. இந்த கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை...
கவிதை வசந்தத்தின் வார்த்தையாக மட்டும் இல்லாமல் வலிகளின் வடிகாலகவும் இருப்பதை எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பரே..!

ஆதி
12-12-2007, 09:01 AM
ஷீ.. எல்லா வரிகளும் எனக்குப் பிடித்துபோனதால் நான் மேற்கோல் எதுவும் காட்டவில்லை..

அருமையான கவிதை ஷீ.. வாழ்த்துக்கள்.

-ஆதி

ஷீ-நிசி
12-12-2007, 09:56 AM
நன்றி ப்ரீதன்... நன்றி ஆதி!

ஷீ-நிசி
15-12-2007, 08:23 AM
நண்பர்களுக்கு அதிக பணிப்பளு காரணம் என்று நினைக்கிறேன்...

இந்த கவிதைக்கு மறுமொழி அதிகம் இல்லாததை காணும்பொழுது..

இதுவரை என் கவிதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

பூமகள்
15-12-2007, 08:44 AM
கவலை ஒரு உணர்வு....
கவிதை உணர்வுகளின் வடிவு....
கவலைகளின் வடிவு மட்டும் என்று சொல்ல முடியாதே...!!!
இதையே தான் நானும் சொல்ல விழைந்தேன். பென்ஸ் அண்ணா முந்திக் கொண்டார். நன்றிகள் பென்ஸ் அண்ணா.

கவிதை அனைத்து உணர்வுகளின்
சங்கமம்..!
இதில் அதிகம் துயர் நிறம்
பூசிக் கொள்வது மனித மனம்..!

எல்லா வரிகளுமே அருமை..! பாராட்டுகள் ஷீ..!!


விரல்களின் வழியே அழுதால்
அது கவிதை கோடுகள்!
இதை

விரல்களின் வழியே கசிந்தால்
அது கவிதை கோடுகள்..!

இவ்வாறு மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் அனைத்து உணர்வுகளும் விரல் வழியே கசிந்து வடிப்பது தானே கவிதை..??!! :)

ஆர்.ஈஸ்வரன்
15-12-2007, 09:09 AM
கவிதை நல்ல சிந்தனையைத் தருகிறது

அமரன்
15-12-2007, 09:45 AM
கவிதை எழுதகற்றுக்கொள்
கவலைகளை நீயும் கொல்.

கவலைகள் பங்கெடுக்கும்போது
தீவிரம் குறைகின்றது..
மகிழ்வுகள் பகிரபடும்போது
நிறைவு நிறைகின்றது.

கவிதைகள்
இரண்டையும் செய்கின்றன..

உடலின் கண்களில் வடியும் நீர்
உலகை வளமாக்கினால்
உள்ளத்தின் கண்கள் வடிக்கும் நீர்
வளத்தை வளமாக்குகின்றது...

உள்ளத்தின் கண்கள் வடிக்கும் நீர்
கவிதைகளில் உணர்வாக்கப்படுகின்றது..
வாசகர்களுக்கு உணவாக்கப்படுகின்றது..
அதனால்
செழிப்புக் கொழிக்கும் சமூகம்போல்..
கவிதைபற்றிச் சொன்ன ஷீயின்
கவிதையும்...:icon_b::icon_b::icon_b:



இதழ் வழியே சிந்த விடாமல்,
விரல் வழியே சிந்தும் விந்தை....
கவிதை!!


அழுத்தி எழுதுகையில்
பதிந்த ரேகைகளால்
பிரபஞ்சத்தின் ரேகைகள்
மாற்றப்பட்ட சரித்திரம்
என்னுள் சதிராடுகின்றது..

ஓவியன்
19-12-2007, 10:36 AM
படைத்தவனை பாதித்தது....
படிப்பவனை பாதித்தால்,,,

"கவிதை"

படித்த என்னை பாதித்தது
இதில் படிக்க உனக்கு
பல உண்டென
விளக்கமாகப் போதித்தது...

பாராட்டுக்கள் ஷீ...!!

meera
20-12-2007, 03:05 AM
நீஈஈஈஇண்ட இடைவெளிக்கு பின் உங்களை பார்த்தது போல் இருக்கிறது ஷி.

அழகிய வரிகள்.

கனமான மனதை
லேசாக்கும் கருவி
இந்த கவிதை.

ஷீ-நிசி
20-12-2007, 04:50 PM
நன்றி நண்பர்களே!