PDA

View Full Version : துப்பாக்கி முனையில் நான்!தாமரை
11-12-2007, 01:34 PM
அது 1997 ஆம் வருடம் பிப்ரவரி மாதம்..

நான் அமெரிக்கா சென்று பத்துப் பதினைந்து நாட்கள்தான் இருக்கும். தோழன் யூனிஸ் முஸ்தபா, சாயந்திரம் வருவதாகச் சொல்லி இருந்ததால் தனியாக இருந்த நான், டெல்லியில் இருந்த என்னோட ஃபிரண்ட்ஸ் க்கு ஃபோஓன் பண்ண முயற்சி செய்தேன்.. டயல் பண்ணும் போதே ரிங்க் பேக் வரவே கட் பண்ணிட்டு, மறுபடி டயல் செய்தேன்.. ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வச்சிட்டு, தூங்க ஆரம்பிச்சேன்..


நல்ல வேளை முழுசாத் தூங்கலை :rolleyes::rolleyes::rolleyes:

காலிங்க் பெல் அடிச்சது.. டொக் டொக்னு கதவைத் தட்டற சத்தமும் கேட்டுச்சி..

சே! யார்ரா அது தூக்கத்தைக் கெடுக்கறதுன்னு முனகிகிட்டே, பெர்முடாஸும் பனியனுமாய் போய் கதவைத் திறக்க...

அங்கே ஒரு பளபளக்கும் பிஸ்டல் என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது...

தொடரும்.

மதி
11-12-2007, 01:37 PM
தெரியும் எனக்குத் தெரியும்..
ஏற்கனவே சொல்லிட்டீங்க...!! ஹிஹி..

சிவா.ஜி
11-12-2007, 02:15 PM
எங்களுக்குத் தெரியாது....தெரியாது...சொல்லுங்க...ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருக்கே....

இதயம்
11-12-2007, 02:19 PM
வழ, வழன்னு இழுக்காம நச்சுன்னு சுருக்கமா சொல்லி, சஸ்பென்ஸோட தொடரும் போடறது தாமரையோட ஸ்டைல்..! யாருங்க அது..? ஒரு வேளை ரிவால்வர் ரீட்டாவா..??:D:D

தாமரை
11-12-2007, 02:34 PM
வழ, வழன்னு இழுக்காம நச்சுன்னு சுருக்கமா சொல்லி, சஸ்பென்ஸோட தொடரும் போடறது தாமரையோட ஸ்டைல்..! யாருங்க அது..? ஒரு வேளை ரிவால்வர் ரீட்டாவா..??:D:D

இப்போ மன்றத்தில யார் வழ வழன்னு இழுக்கறாங்கன்னு சொல்றீங்க.. இதயமே இல்லாம மதியை இப்படி சொல்றீங்களே இதயம்.. மதியை மதிங்க,, மதியிருந்தால் விதியையும் வெல்லலாம்.

மதி
11-12-2007, 02:40 PM
இப்போ மன்றத்தில யார் வழ வழன்னு இழுக்கறாங்கன்னு சொல்றீங்க.. இதயமே இல்லாம மதியை இப்படி சொல்றீங்களே இதயம்.. மதியை மதிங்க,, மதியிருந்தால் விதியையும் வெல்லலாம்.
என்னாதிது.....???

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
இதுக்கு தான் நான் எழுதவே மாட்டேன்னு சொன்னேன்.. இப்போ பாருங்க தப்பு தப்பா புரிஞ்சுக்கறாங்க....


:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

சூரியன்
11-12-2007, 03:09 PM
தாமரை அண்ணா இப்படி பாதில நிறுத்தீட்டா நாங்க என்னன்னு நினைக்கறது.

அமரன்
11-12-2007, 03:25 PM
உங்ககிட்ட சிக்கி முழிப்போருக்கு மத்தியில், நீங்கள் முழித்ததை படிக்கும்போது என்னமோ தெரியலைங்க.. மனது தானாக துள்ளுது..

மலர்
11-12-2007, 03:37 PM
நல்ல வேளை முழுசாத் தூங்கலை :rolleyes::rolleyes::rolleyes:தொடரும்.
தூங்கலையா...
நீங்க தான் கும்பகர்ணன் தம்பியாச்சே...
எப்பிடி தூங்காமல் இருந்தீங்க,....

ஒருவேளை அப்போ முழுசா தூங்கியிருந்தால்...:eek::eek:

அமரன்
11-12-2007, 03:39 PM
தூங்கலையா...
நீங்க தான் கும்பகர்ணன் தம்பியாச்சே...
எப்பிடி தூங்காமல் இருந்தீங்க,....

ஒருவேளை அப்போ முழுசா தூங்கியிருந்தால்...:eek::eek:

வந்தவங்க தற்கொலை செய்திருப்பாங்க..

மலர்
11-12-2007, 03:41 PM
உங்ககிட்ட சிக்கி முழிப்போருக்கு மத்தியில், நீங்கள் முழித்ததை படிக்கும்போது என்னமோ தெரியலைங்க.. மனது தானாக துள்ளுது..
ஹைய்யா.....
என்னவோ தெரியலை அமரு...
எனக்கும் விவரிக்க முடியாத அளவுக்கு
ஓரெ சந்தோஷம்... :D:D

என்னால முடியாததை வேறு யாராச்சும் செய்யும் போது
இப்படித்தான்... :icon_rollout::icon_rollout::icon_rollout: :icon_rollout:

மதி
11-12-2007, 03:42 PM
தூங்கலையா...
நீங்க தான் கும்பகர்ணன் தம்பியாச்சே...
எப்பிடி தூங்காமல் இருந்தீங்க,....

ஒருவேளை அப்போ முழுசா தூங்கியிருந்தால்...:eek::eek:

கதவ உடச்சுட்டு உள்ள வந்திருப்பாங்க....

சூரியன்
11-12-2007, 03:42 PM
வந்தவங்க தற்கொலை செய்திருப்பாங்க..

வந்தவங்க எதுக்கு தற்கொலை செஞ்சிருப்பாங்க.
முழுசா சொல்லுங்க..

சூரியன்
11-12-2007, 03:43 PM
கதவ உடச்சுட்டு உள்ள வந்திருப்பாங்க....

கதவை உடச்சு அழகா தூக்கீட்டு போயிருப்பாங்க,

அமரன்
11-12-2007, 03:52 PM
வந்தவங்க எதுக்கு தற்கொலை செஞ்சிருப்பாங்க.
முழுசா சொல்லுங்க..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13609

அமரன்
11-12-2007, 03:54 PM
ஹைய்யா.....
என்னவோ தெரியலை அமரு...
எனக்கும் விவரிக்க முடியாத அளவுக்கு
ஓரெ சந்தோஷம்... :D:D

என்னால முடியாததை வேறு யாராச்சும் செய்யும் போது
இப்படித்தான்... :icon_rollout::icon_rollout::icon_rollout: :icon_rollout:
கவனிங்கண்ணா. சொன்னேன்ல.. உங்க மேல பலர் (குறிப்பா மலரு) கடுப்பாக இருக்காங்கன்னு..

மனோஜ்
11-12-2007, 04:24 PM
அச்சச்சே:eek: அப்பரம் என்ன அச்சு தாமரை அண்ணா:confused:

தாமரை
11-12-2007, 04:48 PM
அந்த மாமா (போலீஸ்) 6 அடிக்கு மேல் 120 கிலோவுக்கு மேல் இருப்பார். கதவு திறந்ததும் நான் திடுக்கிடுவதுக்கு பதில் அவர் திடுக்கிட்டார்னு தான் சொல்லணும்,. ஏன்னா என்னை ஹேண்ட்ஸ் அப் சொல்லவே இல்லை. இவ்வளவு சப்பையான ஒரு மேட்டரை எதிர்பார்க்கவில்லைங்கறது பார்வையிலயே புரிஞ்சுருச்சி..

சம்படி டயல்டு எமர்ஜென்சி ஃப்ரம் ஹியர்.. அவர் சொல்ல

ஓஹோ என்னாச்சுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி..

ஐ மைட் ஹாவ் டயல்டு இட் பை மிஸ்டேக். ஸாரி என்று சொல்ல..

ஐ நீட் டு ஸர்ச் த ஹௌஸ்னு சொல்லிட்டு உள்ள வந்தாரு.. சுத்தமா நொந்து போயிருப்பாரு.. ஏன்னா வீட்ல இரண்டு கம்ஃபர்டர் (அதாங்க குவில்ட், அதாங்க ரஜாய், கம்பளம் மாதிரி). ஒரு தலையணை, ஒரு பெட்டி தவிர வேற ஒண்ணுமே இல்லைன்னா.. ஒரே நிமிஷத்தில ஷோ மீ யுவர் ஐ டி ன்னு வெளிய வந்தாரு.. பாஸ்போர்ட் எடுத்துக் குடுத்தேன்.. பார்த்திட்டு ஸாரி ஃபார் தெ இன் கன்வீனியன்ஸ் னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அதாங்க,, டெல்லி கால் பண்ணினேன் இல்லியா அதான் மேட்டர். ஐ.எஸ்,டி க்கு யூ எஸ்ல 011 டயல் பண்ணனும் அப்புறம் கண்ட்ரி கோட் அப்புறம் எஸ்.டி.டி கோட் அப்புறம் நம்பர்..

இந்தியா கண்ட்ரி நம்பர் 91. டெல்லியோட எஸ்.டி.டி கோட் நம்பர் 11.

நான் 011 அடிக்காம டைரக்டா 9111 அப்படின்னு டயல் பண்ண 911 எமர்ஜென்ஸி கால் போயிருக்கு, ரிங் பேக் வந்தவுடன் கட் பண்ணிட்டதால, போலீஸூக்கு டவுட்டு.. பிஸ்டலைத் தூக்கிகிட்டு வந்துட்டாங்க..

இதிலிருந்து கத்துக்க வேண்டியது என்னன்னா, இப்படி அவசர உதவி நம்பரை தவறாக் கூப்டுட்டா, கட் பண்ணிறாதீங்க.. தயவு செஞ்சு பேசிடுங்க.. இல்லைன்னா அதுவும் ஏற்கனவே வெறுத்துப் போன இதே போலீஸ் வந்ததுன்னா எதாச்சும் ஏடாக் கூடமானா நான் பொறுப்பில்லை.

முற்றும்

அமரன்
11-12-2007, 04:51 PM
ஏன்ணா... நீங்க தவறுதலா செய்தாலும் இப்படியா ஆகனும்? பாவம் அந்தப் பொலிஸ்கார்.

தாமரை
11-12-2007, 04:53 PM
ஹைய்யா.....
என்னவோ தெரியலை அமரு...
எனக்கும் விவரிக்க முடியாத அளவுக்கு
ஓரெ சந்தோஷம்... :D:D

என்னால முடியாததை வேறு யாராச்சும் செய்யும் போது
இப்படித்தான்... :icon_rollout::icon_rollout::icon_rollout: :icon_rollout:

தங்கைகளின் ஆசையை நிறைவேற்றுவது அண்ணனின் கடமை இல்லையா!

மலர்
11-12-2007, 04:55 PM
கவனிங்கண்ணா. சொன்னேன்ல.. உங்க மேல பலர் (குறிப்பா மலரு) கடுப்பாக இருக்காங்கன்னு..
என்ன ஒரு வில்லத்தனம்...
கையில வச்சிருக்கது கிடாரு
ஆனா பாக்குறது மட்டும் நாரதர் வேலை....

நல்லாயிருங்கப்பு....

மலர்
11-12-2007, 05:01 PM
ஏற்கனவே வெறுத்துப் போன இதே போலீஸ் வந்ததுன்னா எதாச்சும் ஏடாக் கூடமானா நான் பொறுப்பில்லை.
பாவம் அந்த போலிஸ்காரர்...
நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பார்..

நம்ம ஊரா போலிஸா இருந்திருந்தால் கோவத்தில் ரெண்டு போட்டிருப்பார்....

பென்ஸ்
11-12-2007, 05:01 PM
அந்த மாமா (போலீஸ்) 6 அடிக்கு மேல் 120 கிலோவுக்கு மேல் இருப்பார்.
அங்க எல்லோரும் இப்படிதான் இருக்கிறங்க தாமரை....:mad:
அது என்னா ஒற்றுமை பாருங்க நம்ம இருவருக்கும்...:cool::D

மதி
12-12-2007, 03:15 AM
அங்க எல்லோரும் இப்படிதான் இருக்கிறங்க தாமரை....:mad:
அது என்னா ஒற்றுமை பாருங்க நம்ம இருவருக்கும்...:cool::D
ஒய் ப்ளட்..

சேம் ப்ளட்.. :D:D:D:D:D:D:D

தாமரை
12-12-2007, 03:50 AM
கவனிங்கண்ணா. சொன்னேன்ல.. உங்க மேல பலர் (குறிப்பா மலரு) கடுப்பாக இருக்காங்கன்னு..

போட்டு வாங்கற உங்களைப் போடறேன் முதலில்... :icon_nono:

சிவா.ஜி
12-12-2007, 04:29 AM
அடடா...என்னமோ நடக்கப்போகுதுன்னு நெனைச்சேன்,போன் பன்னதால போலீஸ் வந்துடிச்சா? இதே நம்ம ஊரு போலீஸுன்னா...மானாவாரியா திட்டு குடுத்துட்டு துட்டு வாங்கிட்டு போயிருப்பாங்க.நல்ல அனுபவம்தான்.

தாமரை
12-12-2007, 04:32 AM
அங்க இதுதிரி வந்த போலீஸ் சட்டுன்னு சுட்டுப் போட்ட நிகழ்ச்சளும் உண்டு.. ஒரு பெண், ஒரு கறுப்பினத்தவர் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனக்குத் தெரிந்து

சிவா.ஜி
12-12-2007, 04:36 AM
உண்மைதான் தாமரை நானும் நிறைய இதைபோன்ற செய்திகளைக் கேள்வி பட்டிருக்கிறேன்.யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பதாலும்,அடிப்படையில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருப்பதாலும் அவசரப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகிறது.

தாமரை
12-12-2007, 04:45 AM
காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த ஆசியப் பெண்ணை சுட்டுக் கொன்றது போலீஸ்.. கேட்டால் பயங்கர ஆயுதம் கையில் இருந்ததாம்

சிவா.ஜி
12-12-2007, 04:58 AM
அடப் பாவிங்களே....இவங்க கிட்ட இல்லாத பயங்கர ஆயுதமா....விட்டா மீசை வெட்டுற கத்திரிக்கோல் வெச்சிருந்தாலும் சுட்டுடுவாங்க போலருக்கு.

IDEALEYE
12-12-2007, 06:54 AM
தாமரை அண்ணா,
தூங்கி முளிச்சுப்பார்த்தீர்களா அல்லது தூக்கத்திலேயே பார்த்தீர்களா??
ஐஐ

அமரன்
12-12-2007, 07:06 AM
காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த ஆசியப் பெண்ணை சுட்டுக் கொன்றது போலீஸ்.. கேட்டால் பயங்கர ஆயுதம் கையில் இருந்ததாம்
அய்யகோ... இங்கே பள்ளிப்பசங்க கத்தியோடு திரிகின்றாங்களே.. அவங்க என்ன செஞ்சாலும் கண்டுக்கிறதே இல்லை பொலிஸ்கார். நானும் 18 வயது எட்டாமலேயே இருந்திருகலாமோ என்று நினைப்பேன்.

தாமரை
12-12-2007, 07:07 AM
அய்யகோ... இங்கே பள்ளிப்பசங்க கத்தியோடு திரிகின்றாங்களே.. அவங்க என்ன செஞ்சாலும் கண்டுக்கிறதே இல்லை பொலிஸ்கார். நானும் 18 வயது எட்டாமலேயே இருந்திருகலாமோ என்று நினைப்பேன்.

அப்புறம் நீங்க இப்ப செய்யற செட்டையெல்லாம் செய்ய முடியாதே அமரா!

மயூ
12-12-2007, 02:03 PM
அதிரடியாகத் தொடங்கி சப்பை மாட்டாகப் போயிட்டுது... கொழும்பு கோட் கூட 011 தான் ஆனால் இலங்கை நாட்டுக் குறியிலக்கம் 94 என்பதால் தப்பிவிட்டோம்!!!!
இவ்வளவு வினைத்திறனாக அமெரிக்க பொலீசார் தொழிற்படுகின்றார்களா??? :)

அமரன்
12-12-2007, 04:08 PM
அப்புறம் நீங்க இப்ப செய்யற செட்டையெல்லாம் செய்ய முடியாதே அமரா!
போங்கண்ணா.. வீட்டுல அடிக்கடி ஆவலுடன் கேட்கிறாங்க... பெரிய பசங்க சேட்டை எல்லாம் பண்ணமாட்டாயான்னு... நானா மாட்டேங்கிறேன்.. அதுவா வரமாட்டேன்னு அடம்பிடிக்குது..

ஷீ-நிசி
12-12-2007, 04:22 PM
பரவாயில்லை... அங்கே இவ்வளவு அலர்ட்டாக இருக்கிறார்களே போலீஸ்காரர்கள்...

lolluvathiyar
13-12-2007, 06:11 AM
தமரைக்கு நிரைய அனுபவம் இருக்கும் போல இருக்கு, நல்ல வேல நீங்க என்பதால் கம்முனு போயிட்டாங்க, இதே அந்த இடத்துல புள்ளி ராஜா இருந்திருந்தா வலிச்சுட்டு போயிருப்பாங்க. என்ன செய்வாங்கனு நான் சொல்ல மாட்டேன், அவரு வ*ந்து சொல்லுவாரு.

ஓவியன்
14-12-2007, 06:24 AM
முதல் பதிவைப் பார்த்ததும் எதோ பக்கத்து வீட்டு குழந்தைகள் தான் பொம்மை பிஸ்டலைக் காட்டி பயமுறுத்தி இருப்பாங்கனு நினைத்தால் இப்படி ஆயிட்டுதே.....!!. :rolleyes:

ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பிற்காக இத்தனை வேகத்தில் வீடு தேடி வந்த காவல்துறையினரின் வேகம், எச்சரிக்கை உணர்வு நம் நாடுகளில் கிடைக்குமா.........??

இது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமே...!!

ஓவியன்
14-12-2007, 06:26 AM
பாவம் அந்தப் பொலிஸ்கார்.

அட காருக்காகக் கூட கவலைப் பட ஒரு ஜீவன் இந்த மன்றத்திலே இருக்குதே......!! :rolleyes:

தாமரை
14-12-2007, 06:28 AM
அட காருக்காகக் கூட கவலைப் பட ஒரு ஜீவன் இந்த மன்றத்திலே இருக்குதே......!! :rolleyes:

கார் - ஐ கண்டுபிடிச்சது ஆந்திராவில:lachen001:

பூமகள்
14-12-2007, 07:21 AM
தலைப்பு பார்த்து பயந்துட்டு வந்தா.... இங்கே தாமரை அண்ணாவைப் பார்த்து அந்த போலீஸே பயந்து நடங்கிட்டு போயிட்டாரே..!
ஏங்கண்ணா.. உங்க முன்னாடி, அவரு அஞ்சி நிமிஷம் கூட தாக்குப்பிடிக்க முடியலையா..??!! :D:D

நல்லதொரு படிப்பினையாக இருந்தது. நன்றிகள் தாமரை அண்ணா. :)

செல்வா
14-12-2007, 09:16 AM
கலக்குறீங்க தாமரை... சின்ன சின்ன சம்பவங்கள ரொம்ப சுவையா குடுக்குறதுல... உங்களுக்கு நிகர் நீங்க தான்....