PDA

View Full Version : ஹைக்கூ - அம்மாவின் அன்பு



ஆர்.ஈஸ்வரன்
11-12-2007, 10:55 AM
வெளிநாட்டில் நான்
பாதுகாக்கிறது
அம்மாவின் அன்பு

யவனிகா
11-12-2007, 11:26 AM
கடல் தாண்டி வந்தாலும்
அவள் கவனம் முழுதும் என்மேலே...

ஒழுங்கா சாப்பிடு...
நல்லாத் தூங்கு...
தலைக்கு எண்ணய் வைக்கறயா?
கன்னா பின்னான்னு முடிய வெட்டாதே...
மருமகன் கூட சண்டை போடாதே...
பிள்ளைங்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு குடு...

போதும்மா...
சொன்னதையே சொல்லாதே...
வாய் தான் சொல்கிறது வார்த்தைகளை...
கேட்கும் காதுக்கு இனிப்பாய்த் தான் இருக்கிறது...

அம்மாவை நினைவு கூற வைத்த ஈஸ்வரனின் கவிதைக்கு நன்றி.

அமரன்
11-12-2007, 11:33 AM
வெளிநாட்டில் எனக்கு
வழி காட்டுகின்றது
அன்னையின் அன்பு.