PDA

View Full Version : இலவச கலர் டிவி விற்பனை மீது குண்டர் சட்டம



தேவிப்ரியா
11-12-2007, 10:09 AM
இலவச கலர் டிவிக்களை வாங்கி விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்
Tuesday, 11 December, 2007 01:42 PM
.
சென்னை, டிச.11: இலவச கலர் டிவிக்களை வாங்கி விற்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் தரகர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.
.
இதற்கிடையே, தனிப்படை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனைகளில் இலவச கலர் டிவிக்களை வாங்கியதாக 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கலர் டிவிக்கள், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப் பட்ட ஆட்டோ, ஆம்னி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிவி இல்லாத ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் இலவச கலர் டிவிக்களை மாநில அரசு வழங்கி வருகிறது. சென்னையில் இலவச கலர் டிவிக்களை வழங்கும் பொறுப்பை மாநகராட்சி ஏற்றுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் கலர் டிவிக்களை ஒரு கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு வருகிறது என்று புகார் எழுந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் டிவி வைத்துள்ளனர். எனவே, அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இலவச கலர் டிவியை வந்த விலைக்கு விற்றுவிடுவதாக வும், ஏழ்மைநிலையில் இருப்பவர்கள் பணத்திற்காக விற்பதாகவும் கூறப்படுகிறது.

இலவச கலர் டிவிக்களை வாங்கி விற்பதில் ஈடுபட்டதாக புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரில் வசிக்கும் செல்வி (வயது 35), அக்பர் அலி (வயது 40), செல்வம் (வயது 45) ஆகிய 3 பேரை புதுவண்ணாரப் பேட்டை போலீசாரும், அண்ணா சாலைப் பகுதியில் உள்ள ரிச் தெருவில் மின்னணு பொருட்கள் விற்கும் முருகன், முரளி என்ற 2 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசாரும் கைது செய்தனர்.

இவர்களை தவிர, மேலும் 4 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து 18 இலவச கலர் டிவிக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கிடையே, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இலவச கலர் டிவிக்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ கூடாது என்று பயனாளிகளிடம் கையெழுத்து வாங்கிய பிறகே அவர்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுகிறது.

அப்படியிருந்தும் கலர் டிவிக்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்' என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் கூறியதாவது:

டிவி இல்லாத ஏழை, எளியவர்களுக்கு தமிழக அரசு இலவச கலர் டிவி வழங்கி வருகிறது. ஒருசில இடங்களில் இடைத் தரகர்கள் ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தியும், ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் அவர்களிடம் இருந்து இலவச கலர் டிவிக்களை மிக குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய சோதனைகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 இலவச கலர் டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு ஆட்டோ, ஆம்னி வேன் ஆகியவையும் கைப்பற்றப் பட்டன.

இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் இலவச கலர் டிவிக்களை வாங்கும் வியாபாரிகள் மீதும், இடைத்தரகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

தமிழக அரசு வழங்கும் இலவச கலர் டிவிக்களை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் கூறினார்.

lolluvathiyar
12-12-2007, 06:14 AM
இலவச டீவி வாங்குபவன் அதை எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்த உரிமை வழங்க வேண்டும் அப்பதான் அதை இலவசம் என்று சொல்ல வேண்டும். டீவி கொடுத்து அதை கேபிள் மின்சார கட்டனம் கட்டி பார்த்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அதை வேறு ஒருவருக்கு விற்க அவனுக்கு உரிமை உள்ளது. அதை வாங்கி விற்கவும் இன்னொருவனுக்கு உரிமை இருகிறது, அதனால் மாட்டியவர்கள் கோர்ட் மூலம் விடுதலை பெற்றூ விடுவார்கள்.
இது ஒன்றும் குற்றமே அல்ல, அப்புரம் குன்டர் சட்டம் எதுக்கு

அறிஞர்
12-12-2007, 10:55 PM
வாத்தியார் சொல்வதும் யோசிக்க வேண்டிய விசயம் தான்....

சீக்கிரம் நீங்க பதவிக்கு வாருங்கள்.. எல்லாம் சரியாயிடும்.