PDA

View Full Version : ஏளனச் சிரிப்பு!!!

சிவா.ஜி
11-12-2007, 05:49 AM
விசையூட்டிய பந்தைப்போல்
மிசை மீது அலைகிறேன்....
தேடும் பொருளின்
அந்தம் அறியாமல்
ஆதியை மறந்துவிட்டு......

மூளையின் ஏதோ ஒரு செல்
செல்வத்தை தேடிச் செல்
என்கிறது...........
உள்ளமோ.....
ஏளனமாய் சிரிக்கிறது.......

jpl
11-12-2007, 05:58 AM
ஓ ஆன்மீக கவிதையா சிவா.ஜி?
தேட வேண்டிய ஆதியை அனைவரும் மறந்து விடுகின்றோம்.

சிவா.ஜி
11-12-2007, 06:02 AM
சில சமயம் இப்படியெல்லாம் தோன்றுகிறது மேடம்.ஆனால் எனக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்.வாழ்க்கைப் பாடம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

தாமரை
11-12-2007, 06:18 AM
விசையூட்டிய பந்தைப்போல்
மிசை மீது அலைகிறேன்....
தேடும் பொருளின்
அந்தம் அறியாமல்
ஆதியை மறந்துவிட்டு......

மூளையின் ஏதோ ஒரு செல்
செல்வத்தை தேடிச் செல்
என்கிறது...........
உள்ளமோ.....
ஏளனமாய் சிரிக்கிறது.......

செல் சொன்ன செல்வம் செல்வனில்லையே! ;)
என்னைத் தேட வேண்டியதில்லை.

சிவா.ஜி
11-12-2007, 06:27 AM
செல்வனிடமிருக்கும் செல்வம் விலை மதிப்பற்றது...ஆனாலும் அனைவருக்கும் சொந்தமானது.தேடிப் பெறவேண்டியது.

யவனிகா
11-12-2007, 11:32 AM
அண்ணா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிட்டீங்க...அதுக்குன்னு தாமரைக்கு இப்படியா ஐஸ் வெக்கிறது...அவரு தும்ம ஆரம்பிச்சிட்டாரு பாருங்க...

அமரன்
11-12-2007, 11:35 AM
அண்ணா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிட்டீங்க...அதுக்குன்னு தாமரைக்கு இப்படியா ஐஸ் வெக்கிறது...அவரு தும்ம ஆரம்பிச்சிட்டாரு பாருங்க...
தண்ணியிலயே இருக்கும் தாமரையுடன் தும்மல் எப்படி சினேகம் கொள்ளும்..:confused:

யவனிகா
11-12-2007, 11:37 AM
ஆழ மூச்சை உள்ளிழுத்து
நினைவை நெற்றியில் நிறுத்தி
சங்கரங்கள் சரிபார்த்து மேலேறி
என்னை எனக்குள் தேடும் நேரம்...
அழைக்கிறது அலாரத்தின் அலறல்...

உள்ளே அமிழ்ந்தால் இலகுவில்
நீ வெளியே வருவது இல்லை...
உனக்குள் உன்னைத் தேடியது போதும்...
ஓவர்டைமில் பொருள் தேடப் புறப்படு என்று...

அமரன்
11-12-2007, 11:38 AM
உயிர்கூட்டின்
மனைவியும் கணவனும்
மூளையும் உளமும்.

பென்ஸ்
11-12-2007, 12:32 PM
சிவா..
ஆழமான கருத்து.... பாராட்டுகள்...
தேடல் .... புரியாத புதிர்

விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????

இதயம்
11-12-2007, 12:42 PM
விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????

நிதர்சன உண்மை.. நான் மனதில் சிந்தித்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நன்றி பென்ஸ்..!:icon_b:

சிவா.ஜி
11-12-2007, 12:54 PM
சிவா..
ஆழமான கருத்து.... பாராட்டுகள்...
தேடல் .... புரியாத புதிர்

விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????

விசையுறு பந்து என்பது வேகம் கூட்டிய பந்து...வாழ்க்கை முடிவதற்குள் தேடலை முடிக்க முடியுமா என வேகத்துடன் செல்லும் பந்தாக....
விசை கூட்ட்டிய பந்து இலக்கை நோக்கித்தான் போக வேண்டுமென்பதில்லையே பென்ஸ்.

தாமரை
11-12-2007, 12:56 PM
விசையுறு பந்து என்பது வேகம் கூட்டிய பந்து...வாழ்க்கை முடிவதற்குள் தேடலை முடிக்க முடியுமா என வேகத்துடன் செல்லும் பந்தாக....
விசை கூட்ட்டிய பந்து இலக்கை நோக்கித்தான் போக வேண்டுமென்பதில்லையே பென்ஸ்.

அதாவது கண்மூடித்தனமாக உதைக்கப்பட்ட பந்து..:icon_b:

ஆனால் விசை என்பது வேகம் மட்டுமே அல்ல.:icon_p:

பென்ஸ்
11-12-2007, 01:02 PM

விசையுறு பந்து காற்றினால் இலக்கை தப்புமேயன்றி... அலைக்களிக்கபடாதே...
காற்றில் காகிதம் இன்னும் சரியாய் வருமோ???

சிவா.ஜி
11-12-2007, 01:04 PM
அதாவது கண்மூடித்தனமாக உதைக்கப்பட்ட பந்து..:icon_b:

ஆனால் விசை என்பது வேகம் மட்டுமே அல்ல.:icon_p:

ஆம் தாமரை விசை என்பது சக்தியையையும் குறிக்கும்.
உ.ம்.புவியீர்ப்புவிசை
வேறு அர்த்தம் எனக்குத் தெரியவில்லை.விளக்கினால் தெரிந்துகொள்வேன்.

இதயம்
11-12-2007, 01:07 PM
ஆனால் விசை என்பது வேகம் மட்டுமே அல்ல.:icon_p:
ஆம்.. விசை என்பதற்கு வேகம் என்பது மட்டுமல்ல.. அது சக்தியையும் குறிக்கும்..! தாமரை சொன்னது போல் இலக்கு பற்றி சிந்திக்காது உதைக்கப்பட்ட அல்லது எறியப்பட்ட பந்து என்றால் இந்த கவிதைக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்..!! அடித்துச்செல்லும் வெள்ள நீரில் மிதந்து செல்லும் பொருட்களை உருவகப்படுத்தி சொல்லலாமா..? காரணம், அதன் திசையை வேகத்தை யாரும் தீர்மானிப்பதில்லை.

பென்ஸ்
11-12-2007, 01:11 PM
இருக்கலாம் இதயம்...
கற்றில் பறக்கும் காகிதம், தண்ணீரில் மிதக்கும் மிதவை எல்லாம் அவை இருக்கும் மண்டலத்தாலும், சார்ந்த மண்டலத்தாலும் கட்டுபடுத்தபடுகின்றன...
நாம் இருக்கும் மண்டலம் குடும்பம்... :)

சிவா.ஜி
11-12-2007, 01:11 PM
பென்ஸ் சொல்வதும்,இதயம் சொல்வதும் மிகச் சரியாகத்தானிருக்கும்.அந்த நேரத்தில் எனக்கு பதினோரு பேரால் அலைக்கழிக்கப்படும் பந்துதான் நினைவுக்கு வந்தது.ஆனால் இருவரின் பின்னூட்டம் பார்த்த பிறகு அவையே மிகச் சரியாக இருக்குமென்றே தோன்றுகிறது.மிக்க நன்றி பென்ஸ் மற்றும் இதயம்.

பென்ஸ்
11-12-2007, 01:17 PM

அட நான் இதை விட்டுவிட்டேனே...
"வச்சி புட்பால் ஆடிபுட்டாங்க" என்று சொல்லுவது இதனால் தானோ???:p:p:D:D

சிவா.ஜி
11-12-2007, 01:20 PM
அட நான் இதை விட்டுவிட்டேனே...
\"வச்சி புட்பால் ஆடிபுட்டாங்க\" என்று சொல்லுவது இதனால் தானோ???:p:p:D:D

வடிவேலுவை வகை தொகையில்லாம ஆடுவாங்களே அப்படித்தானே பென்ஸ்......

ஷீ-நிசி
11-12-2007, 02:40 PM
மூளையின் ஏதோ ஒரு செல்
செல்வத்தை தேடிச் செல்

இந்த வரியமைப்பு பிரமாதம் சிவா.ஜி!

சிவா.ஜி
11-12-2007, 04:17 PM
மிக்க நன்றி ஷீ-நிசி.

ஓவியன்
19-12-2007, 09:05 AM
பாதி தெரிந்தும்
பாதி தெரியாமலும்
வி(வீ)தியின் வழி
மீதிக்காக பயணிக்கிறோம்
ஒரு
போதியைத் தேடி......!!

பாராட்டுக்கள் சிவா....!!

தம்பி
19-12-2007, 09:28 AM
செல் சொன்ன செல்வம் செல்வனில்லையே! ;)
என்னைத் தேட வேண்டியதில்லை.

ஆமாமா...
செல் சொன்ன செல்வம்
செல்வரிலில்லையே..
செல்வரிலிருப்பது
தேட வேண்டியதில்லை..

சிவா.ஜி
19-12-2007, 06:19 PM
மிக்க நன்றி ஓவியன்.

என்னுடைய கவிதைக்கு உங்களின் இந்த முதல் பின்னூட்டத்திற்கு நன்றி தம்பி.

ஆதி
19-12-2007, 06:41 PM
செல்லெனச் செல் சொல்ல துவங்கியது
தெரிநிலை தெரியாத ஒரு தேடல்
உள்ளம் சிரித்தது 'கொல்'லென ஏளனமாய்..

எதைத் தேடுகிறோம் எனத் தெரியாமல் தேடுவது அஞ்ஞானம்..

எதைத் தேடுகிறோம் எனத் தெரிந்தப்பின் தேடாமல் விடல் மெய்ஞானம்...

ஞானக்கவிதைக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்..

-ஆதி

சிவா.ஜி
12-04-2008, 08:40 PM

நாட்கள் கடந்துவிட்டன. நன்றிகூற என் விரல்கள் தவறிவிட்டன. தட்டச்சும் விரல்கள்தானே மனதைப் பிரதிபலிக்கின்றன.மிக்க நன்றி ஆதி.

எண்ணம்
15-04-2008, 02:29 PM
ஆழ மூச்சை உள்ளிழுத்து
நினைவை நெற்றியில் நிறுத்தி
சங்கரங்கள் சரிபார்த்து மேலேறி
என்னை எனக்குள் தேடும் நேரம்...
அழைக்கிறது அலாரத்தின் அலறல்...

உள்ளே அமிழ்ந்தால் இலகுவில்
நீ வெளியே வருவது இல்லை...
உனக்குள் உன்னைத் தேடியது போதும்...
ஓவர்டைமில் பொருள் தேடப் புறப்படு என்று...

-----------

பசி வந்தால் ஞானம் பறந்தி்டும் என்பார்கள், பொருளும் தேவையே வாழ்வினில், ஆனால் தேவைக்கு அதிகமாக அல்ல...............

நாகரா
15-04-2008, 03:31 PM
அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம் அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
"செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14345)
செல்வத்துள் எல்லாம் தலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14345)"

உம் உள்ளத்தின் ஏளனச் சிரிப்புக்கு நன்றி சிவா

விகடன்
15-04-2008, 08:09 PM
சலித்துப்போய் எழுதிய கவிதையாக எனக்குத்தோன்றுகிறது.
எது எப்படியோ கவிதை அழகே.

இடையில் ஆங்கிலச் சொல் வந்திருப்பதுதான்.....

எப்படித்தான் இப்படியான வேளைகளிலும் கவிதை எழுதத்தூண்டுகிறதோ உங்களுக்கெல்லாம்!!!

சிவா.ஜி
16-04-2008, 04:27 AM
அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம் அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
\"செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை\"

உம் உள்ளத்தின் ஏளனச் சிரிப்புக்கு நன்றி சிவா
மிக அழகான விளக்கம். தெளிவான சிந்தனை. நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நாகரா.

சிவா.ஜி
16-04-2008, 04:32 AM
சலித்துப்போய் எழுதிய கவிதையாக எனக்குத்தோன்றுகிறது.
எது எப்படியோ கவிதை அழகே.

இடையில் ஆங்கிலச் சொல் வந்திருப்பதுதான்.....

எப்படித்தான் இப்படியான வேளைகளிலும் கவிதை எழுதத்தூண்டுகிறதோ உங்களுக்கெல்லாம்!!!

ஒருவிதத்தில் சரிதான் விராடன். பொருள்தேடும் பயணத்தில் இடையில் இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும்போது சிறிது சலிப்படையும் மனது. கொஞ்ச நேரம்தான். பின்னர் சரியாகிவிடும். அந்த நேரத்தில் தோன்றும் சில வரிகள்தான் இப்படி கவிதையாய் விளைந்து விடுகிறது.

நன்றி விராடன்.